Articles on Interesting things in science, tamil culture and traditions and national updates,தமிழர்களின் கலாச்சாரம் கட்டுரை,வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்,புவி அறிவியல்,பிரபஞ்ச அறிவியல்
Tuesday, April 26, 2022
இராமகிருஷ்ணர் சொல்கிறார்
Sunday, April 24, 2022
ஒருவரின் ஆன்ம தேடலை தருவதும் எட்டாம் பாவகம்..ஜோதிட சிந்தனைகள்
8 - ம் பாவகம் சொல்லும் நேர்மறை சூட்சுமங்கள் ..









உதாரணமாக ஒருவருக்கு மகர லக்னம் என்று எடுத்துக்கொண்டால் அவருக்கு எட்டாம் பாவகம் சிம்மம் அப்படி என்றால் அவருடைய தேடல் என்னவாக இருக்கும் என்றால், சிம்மம் என்பது கால புருஷனுக்கு ஐந்தாம் பாவகம் ஐந்தாம் பாவகம் ஆசையை தூண்டும் இடமாக இருக்கும். இயல்புக்கு மாறான அல்லது தன் நிலைக்கு மாறான விஷயங்களுக்கான தேடல்களை குறிக்கும் ..






வரம் வாங்கி வந்தால் மட்டும்
*வரம் வாங்கி வந்தால் மட்டும் கிடைக்கக் கூடியவை..
1. நிறைய சகோதரர் சகோதரிகளுடன் பிறப்பது.. மற்றும் கடைசி வரை உடன்பிறந்தவர்களுடன் நல்உறவு..!
2. பெற்றோர்களின் வறுமையைப் பார்க்காத இளமை..!
3. எந்த வயதிலும் எந்த கல்வி கலையையும் கற்கும் வாய்ப்பு..!
4. பள்ளி, கல்லூரி நட்புகள் கடைசி காலம் வரை கூடவே பயணிப்பது மற்றும் பிரியமான நண்பர்கள் வாய்ப்பது..!
5. நம் மனசுக்கு பிடித்தவருடன் திருமண வாழ்க்கை..!
6. நாம் ஆசைப்பட்டதை வாங்கி சாப்பிடும் சுதந்திரம்..!
7. அடிப்படைத் தேவைகளுக்கான சொத்து சுகத்தோடு இருப்பது..!
8. எதற்கும் ஏங்காத பிள்ளைவரம்..!
9. தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாதிருத்தல் மற்றும் தர்மநியாயங்களுக்கு கட்டுப்பட்டு வாழும் உயர் பண்புகள்..!
எல்லாவற்றிற்கும் மேலாக,
10. *கடைசி காலத்தில் படுக்கையில் படுக்காமல் சாகும்வரை தன் வேலைகளை தானே செய்து கொள்ளும் வரமும்*..!
வரம் வாங்கிப் பிறந்தால் மட்டுமே கிடைக்கக் கூடியவை கடவுளிடம் நான் வேண்டுவதும் இவையே நம்பிக்கையுடன் நீங்களும் வேண்டிடுங்கள்
திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் சுவாமி ஆலயதரிசனம்.
அ
சிவாயநம
நமசிவாய
எல்லாம்வல்ல எம்பெருமான் ஈசன் திருவருளால் உலகசிவனடியார்கள் திருக்கூட்ட சிவனடியார்களுடன் திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் சுவாமி ஆலயதரிசனம்.
திருவள்ளூர் மாவட்டம் சென்னை நகரில் அமைந்துள்ள சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல் மிக பழமை வாய்ந்த,
தொண்டை நாட்டுத்தலங்களில் 20 வது தலமாகவும்
தேவாரபாடல் பெற்ற 274 தலங்களில் 253 வது தலமாகவும் விளங்கும்
பிரளயம் வேண்டாத பிரம்ம தேவர் சிவபெருமானிடம் தன்னுடைய கோரிக்கையை வைக்க யாகம் செய்தார். அந்த யாகத்தின் பலனால் சிவபெருமான் தோன்றி பிரளயத்தினை நிகழ்த்தாமல் தடுத்தார்.
இதனால் இத்தலம் பிரளயத்தினை ஒற்றச் செய்தல் (விலகச் செய்தல்) எனும் பொருளில் திருவொற்றியூர் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் திருத்தலங்கள் உட்பட எல்லா ஊர்களுக்கும் இறை (வரி) விதித்து, அரசன் சுற்றோலை அனுப்பியபொழுது, அரசனுக்கும் ஓலைநாயகத்திற்கும் தெரியாதபடி, இறைவனருளால் ஓலையில் வரி பிளந்து, "இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாக கொள்க" என்று அவ்வோலையில் எழுதப்பட்டிருந்ததை வியந்து, அவ்வூருக்கு ஒற்றியூர் (விலக்கு அளிக்கப்பட்ட ஊர்) என்றும், இறைவனுக்கு "எழுத்தறியும் பெருமான்" என்றும் பெயர் ஆயிற்று. இச்செய்தி பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
உபமன்யு முனிவரிடத்து சிவதீட்சை பெற்றுத் தம்மை வழிபட்ட வாசுகியைத் தம் திருமேனியில், இறைவன் ஐக்கியம் செய்து கொண்டமையால், "படம்பக்கநாதர் " என்ற திருநாமத்தையும் பெற்றார். அப்பாம்பின் வடிவத்தை (சுவடு) இறைவன் திருமேனியில் இன்றும் காணலாம்.
சுந்தரர், சங்கிலியாரை திருமணம் செய்து கொண்டு, இத்தலமரமான மகிழ மரத்தின் முன்னால், "நான் உன்னைப் பிரியேன்" என்று சங்கிலியாரிடம் சத்தியம் செய்து, இத்தல எல்லையைத் தாண்டியதும், தன் கண்பார்வையை இழந்தார்.
'வட்டப்பாறை அம்மன் ' (காளி) சந்நிதி - இந்த அம்மன் ஒரு காலத்தில் மிக்க உக்கிரத்துடன் விளங்கி, பலிகளைக் கொண்டதாகவும், ஸ்ரீ ஆதிசங்கரர் இங்கு வந்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்துச் சாந்தப்படுத்தியதாகவும் தலவரலாறு கூறும்
தலமாக திகழும்
மூவரால் பதிகம் பாடப் பெற்ற தலமாகவும் விளங்கும்
திருவொற்றியூர்
என்னும் ஊரில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்தரும் வடிவுடையம்மை (வட்டப்பாறையம்மன்)
உடனுறை அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் (படம்பக்கநாதர்) சுவாமி ஆலயத்தை
தரிசிக்கும் பாக்கியத்தை எம்பெருமான் ஈசன் அடியேனுக்கு அளித்துள்ளார்.
மேலும் அனைத்து அடியார்களும் இங்குவந்து இந்த ஈசனை தரிசனம் செய்து அவரின் திருவருளை பெற இறைவனிடம் விண்ணப்பம் செய்கிறோம்.
திருச்சிற்றம்பலம்.
2010 வருட கணக்கின் படி கலியுகம் 5111 வருடம் முடிந்து விட்டது
பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான
சகாதேவன் சாஸ்திரத்தில் வல்லவர். 



















தாமரை இதழ்களை எட்டு அடுக்கி ஒரு
நுட்பமான ஊசிக்கொண்டு துவாரம் பண்ணுவதற்கு ஆகும் நேரமே ஒரு க்ஷணமாகும்.
02 க்ஷணம்கள் 01 இல்லம்
02 இல்லம்கள் 01 காஷ்டை
02 காஷ்டைகள் 01 நிமேஷம்
02 நிமேஷங்கள் 01 துடி (15 விதற்பரைகள்)
02 துடிகள் 01 துரிதம் (30 விதற்பரைகள்)
02 துரிதம்கள் 01 தற்பரை (60 விதற்பரைகள் )
60 தற்பரைகள் 01 வினாழிகை
60 வினாழிகைகள் 01 நாழிகை
60 நாழிகைகள் 01 நாள்
07 நாட்கள் 01 வாரம்
(ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன்,வெள்ளி,சனி இவையே ஏழு நாட்கள்)



(ப்ரதமை,த்வீதியை,த்ரீதியை,சதுர்த்தி,பஞ்சமி,ஷஷ்டி,ஸப்தமி,அஷ்டமி,நவமி,
தசமி,ஏகாதசி,த்வாதசி,த்ரயோதசி,சதுர்தசி,பௌர்ணமி.இது சுக்லபக்ஷம்)
(ப்ரதமை,த்வீதியை,த்ரீதியை,சதுர்த்தி,பஞ்சமி,ஷஷ்டி,ஸப்தமி,அஷ்டமி,நவமி,
தசமி,ஏகாதசி,த்வாதசி,த்ரயோதசி,சதுர்தசி,அமாவாசை.இது க்ருஷ்ணபக்ஷம்.)
இரண்டு பக்ஷங்கள் ஒரு மாதம்












மாதங்கள் இரண்டுவகைப்படும்












01 சந்திரமானம்

02 ஸௌரமானம்

01 சைத்திரம்
02 வைசாகம்
03 ஜேஷ்டம்
04 ஆஷாடம்
05 ச்ராவணம்
06 பாத்ரபதம்
07 ஆஸ்வீயுஜம்
08 கார்திகம்
09 மார்கசிரம்
10 புஷ்யம்
11 மாகம்
12 பால்குனம்
என இப்பன்னிரெண்டும் சாந்திரமான மாதங்கள் இவை சூரிய சந்திர்கள் கூடி பிரிதல் மூலம் எற்படுவதாம்.

01 மேஷம் (சித்திரை)
02 ரிஷபம் (வைகாசி)
03 மிதுனம் (ஆனி)
04 கடகம் (ஆடி)
05 சிம்மம்(ஆவணி)
06 கன்னி (புரட்டாசி)
07 துலா (ஐப்பசி)
08 வ்ருச்சிகம் (கார்திகை)
09 தனுஸு (மார்கழி)
10 மகரம் (தை)
11 கும்பம் (மாசி)
12 மீனம் (பங்குனி)
என இப்பன்னிரெண்டு மாதங்கள் ஸௌரமான மாதங்களாகும்.

இவை ஸூரியனுடைய ஓட்டத்தால் மட்டுமே ஏற்படுவதாகும்.

இரண்டு மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது














01 வஸந்தம், (சித்திரை,வைகாசி)

02 க்ரீஷ்மம்,(ஆனி,ஆடி)

03 வர்ஷம்,(ஆவணி புரட்டாசி)

04 சரத்,(ஐப்பசி,கார்த்திகை)

05 ஹேமந்தம்,(மார்கழி,தை)

06 சிசிரம்.(மாசி,பங்குனி)

என ருதுக்கள் ஆறு வகைப்படும். 

ருதுக்கள் மூன்று சேர்ந்த்து ஒரு அயணம்,
01 உத்ராயணம்,

02 தக்ஷிணாயம்
என அயணங்கள் இரண்டு வகைப்படும்.

இரண்டு அயணங்கள் சேர்ந்தது ஒரு வருஷம்.

இவ்வாறு பக்ஷங்கள்லும்,மாதங்களாலும்,ருதுக்களாலும்,அயணங்களாலும், உருவான வருடங்கள் மொத்தம் அறுபதாகும் (60)
அவயைாவன
01 ப்ரபவ,02 விபவ 03 சுக்ல 04 ப்ரமோதூத 05 ப்ரஜோத்பத்தி 06 ஆங்கீரஸ 07 ஸ்ரீமுக 08 பவ 09 யுவ 10 தாது 11 ஈஸ்வர 12 வெகுதான்ய
13 ப்ரமாதி 14 விக்ரம் 15 விஷூ 16 சித்திரபானு 17 ஸுபானு 18 தாரண 19 பார்திப 20 விய 21 ஸர்வஜித் 22 ஸர்வதாரி 23 விரோதி
24 விக்ருதி 25 கர 26 நந்தன 27 விஜய 28 ஜய 29 மன்மத 30 துன்முகி 31 ஹேவிளம்பி 32 விளம்பி 33 விகாரி 34 ஸார்வாரி 35 பிலவ
36 சுபக்ருது 37 சோபக்ருது 38 க்ரோதி 39 விசுவாவசு 40 பராபவ 41 பிலவங்க 42 கீலக 43 ஸௌம்ய 44 ஸாதாரண 45 விரோதிக்ருது
46 பரிதாபி 47 ப்ரமாதீச 48 ஆனந்த் 49 ராக்ஷஸ 50 நள 51 பிங்கள் 52 காளயுக்தி 53 ஸித்தார்தி 54 ரௌத்ரி 55 துன்மதி 56 துந்துபி
57 ருத்ரோத்காரி 58 ரக்தாக்ஷி 59 க்ரோதன 60 அக்ஷய. என்பனவையே 60 வருடங்களாகும்.







2400 தேவ வருடம் ஒரு த்வாபரயுகம் (864000 மனித வருடம்)

3600 தேவ வருடம் ஒரு த்ரேதாயுகம் (1296000 மனித வருடம்)

4800 தேவ வருடம் ஒரு க்ருதயுகம் (1728000 மனித வருடம்)

மேற்கூறப்பட்ட நான்கு யுகங்கள் ஒன்று சேர்ந்தது 12000 தேவயுகமாகும்.(4320000 மனித வருடமாகும்)இதை ஒரு சதுர்யுகம் அல்லது ஒரு மஹாயுகம் என்று கூறப்படுகிறது.



இது ஒரு மனுவினுடைய காலமாகும்.

மனுக்கள் மொத்தம் பதினான்கு(14)பேர்களாவார்.

01) ஸ்வயம்புவ மனு 02) ஸ்வாரோசிஷ மனு 03) உத்தம மனு 04) தாமஸ மனு 05) ரைவத மனு 06) ஸாக்ஷூஸ மனு 07) வைவஸ்வத மனு 08) ஸாவர்ணி மனு 09) தக்ஷஸாவர்ணி மனு 10) ப்ரம்மஸாவர்ணி 11) தர்மஸாவர்ணி 12) ருத்ரஸாவர்ணி 13) தேவஸாவர்ணி 14) இந்த்ரஸாவர்ணி
போன்றவைகளே பதினான்கு மனுக்களின் பெயர்களாகும்.

சந்தி வருடங்களுடன் கூடிய இம்மொத்த மனுக்களின் காலமும் ஒன்று சேர்ந்த்து ஒரு கல்பமாகும். 



ஒரு கல்பம் என்பது ப்ரம்மாவிற்கு அரை நாளாகும்.

இரண்டு கல்பம் சேர்ந்த்து ப்ரம்மாவிற்கு ஒரு நாளாகும்.

பகலில் ப்ரம்மாவிழித்திருந்து இரவில் உறங்குவார்.

ப்ரம்மாவின் பகல் பொழுதிலேயே ஸ்ருட்டிகள் நடக்கும் இரவில் ப்ரபஞ்சத்தை ஒடுக்கிக்கொண்டு தூங்குவார்.

ப்ரம்மாவின் மாதத்தில் முப்பது(30) பகல் பொழுதும் முப்பது (30) இரவு பொழுதும் அடங்கும்,

01) வாமதேவ கல்பம் 02) ஸ்வேதவராஹ கல்பம் 03) நீல லோஹித கல்பம் 04) ரந்தர கல்பம் 05) ரௌரவ கல்பம் 06) தேவ கல்பம் 07) ப்ருகத் க்ருஷ்ண கல்பம் 08) கந்தர்ப கல்பம் 09) ஸத்ய கல்பம் 10) ஈசான கல்பம் 11) தம கல்பம் 12) ஸாரஸ்வத கல்பம் 13) உதான கல்பம் 14) காருட கல்பம் 15) கௌரம கல்பம் 16) நாரஸிம்ம கல்பம் 17) சமான கல்பம் 18) ஆக்னேய கல்பம் 19) ஸோம கல்பம் 20) மானவ கல்பம் 21) தத்புருஷ கல்பம் 22) வைகுண்ட கல்பம் 23) லக்ஷ்மி கல்பம் 24) ஸாவித்ரீ கல்பம் 25) கோர கல்பம் 26) வராஹ கல்பம் 27) வைராஜ கல்பம் 28) கௌரீ கல்பம் 29) மஹேஸ்வர கல்பம் 30) பித்ரு,என ஸ்ருஷ்டிகள் நடக்கும் ப்ரம்மாவின் பகல் பொழுதின் பெயர்களாகும்.

இரவு காலத்தில் ப்ரம்மா உறங்குவதால் அந்தந்த கல்பத்தின் இரவாகவே கொள்ளப்படும்.

அறுபது கல்பம்(60) சேர்ந்த்து ப்ரம்மாவிற்கு ஒரு மாதமாகும்,

எழு நூற்று இருபது (720) கல்பம் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு வருடமாகும், 

இந்த கணக்கின் படி ப்ரம்மா (100) ஆண்டு காலம் வாழ்வார்,

பிரம்மாவின் பூர்ண ஆயுள் எழுபத்திரெண்டாயிரம் (72000) கல்பகாலமாகும்.

இனி பிரம்மாவின் ஸ்ருஷ்டி முதல் சென்ற நாட்களை எவ்வாறு கணக்கிட வேண்டும் என்பதை கூறப்போகிறேன் கவனமாக கேட்கவும்.

வாமதேவ கல்பம் முடிவடைந்து ஸ்வேதவராஹ கல்பத்தில் இதுவரை ஆறு மனுக்களின் காலமும் அவர்களின் சந்திவருடங்களும் முடிவடைந்து தற்சமயம் ஏழாவது மனுவான வைவஸ்வதமனுவின் காலத்தில் இருபத்துஏழு சதுர்யுகங்கள் முடிந்து இருபத்து எட்டாவது சதுர்யுகத்தில் நான்காவது யுகமான கலியுகம் நடந்துக்கொண்டிருக்கிறது.

2010 வருட கணக்கின் படி கலியுகம் 5111 வருடம் முடிந்து விட்டது..

இது சகாதேவன் சாஸ்திரத்தில் இருக்கிறது
Subscribe to:
Posts (Atom)
Featured Post
சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்
"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...
-
ரசவாதம் -தங்கம் தயாரிக்கும் முறைகள் ரசவாதம் -தங்கம் (மூலிகைத் தங்கம்) தயாரிக்கும் முறைகள் Rasavatham ரசவாதம் – Alchemy in Siddha Syste...
-
அருள்மிகு ஸ்ரீ ஐந்து வீட்டு சுவாமி (செட்டியாபத்து) பெரிய சுவாமி குரு இருக்க பயமேன் ஹரி ஓம் ராமானுஜா யா