Wednesday, March 19, 2025

How to make jasmine coffee....மல்லி காபி செய்வது எப்படி




மல்லி காபி செய்வது எப்படி....

தேவையானவை:  

தனியா - 150 கிராம், சுக்கு - 50 கிராம், மிளகு - 10 கிராம், திப்பிலி - 10 கிராம், சித்தரத்தை - 10 கிராம், சதகுப்பை - 10 கிராம், பனை வெல்லம் - தேவையான அளவு.

செய்முறை: 

பனை வெல்லம் நீங்கலாக மற்ற பொருட்களை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து, ஆற வைத்து, மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும். இந்தப் பொடியை காற்றுப் புகாத, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைக்கவும். தேவையானபோது ஒரு டம்ளர் தண்ணீருக்கு இரண்டு டீஸ்பூன் பொடி, தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, இறக்கி வடிகட்டினால்... மணமான மல்லி காபி ரெடி!
குறிப்பு: சித்தரத்தையை நன்கு தட்டி உடைத்த பின் வறுக்கவும்.


Valparai - The 7th HeavenTamil Nadu

Valparai - The 7th Heaven

Tamil Nadu ♥️🇮🇳

தேனி போடிநாயக்கனூர் போடிமெட்டு பூப்பாறை மூணார்....

தேனி போடிநாயக்கனூர் போடிமெட்டு பூப்பாறை மூணார்....

தேனியிலிருந்து தினசரி மூணாறுக்கு ஐந்து முறைக்கு மேல் பேருந்து செல்கிறது....

இந்தப் பாதை தேசிய நெடுஞ்சாலை ஆகும்...

மூணாறுக்கு தமிழ்நாட்டிலிருந்து இரண்டு முக்கியமான வழிகள் உள்ளன...

1. உடுமலைப்பேட்டை வழியாக மூணார் செல்வது இந்த வழி அடர்ந்த காட்டு வழி போன்றது இந்த வழியில் சென்றால் நிறைய யானைகள் உட்பட பல விலங்குகளை பார்க்கலாம்...
2. தேனி போடிநாயக்கனூர் போடிமெட்டு வழியாக மூணார் செல்வது இந்த வழியில் சென்றால் அழகிய தேயிலைத் தோட்டங்களையும் ஏலக்காய் தோட்டங்களையும் பார்த்து ரசிக்கலாம்...

மூன்றாவதாக தமிழ்நாட்டிலிருந்து கம்பம்மெட்டு வழியாகவும் மூணாறு செல்லலாம்...
முக்கால்வாசி பேர் இந்த வழியை அதிகம் பயன்படுத்த மாட்டார்கள்.

Monday, March 17, 2025

சுருக்குனு ஸஹர்க்கு ஒரு சிக்கன் சால்னா வைத்து பாருங்க

 

நல்ல சல சலன்னு இந்த மாறி சுருக்குனு ஸஹர்க்கு ஒரு சிக்கன் சால்னா வைத்து பாருங்க

ஒரு கடாயில் தாராளமாக எண்ணெய் ஊற்றி
அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் அல்லி போட்டு
10 சின்னவெங்காயம் , 1 பெரியவெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிவிடவும்
அதுலே காஞ்சமிளகை ,கருவேப்பிலை, இஞ்சிபூண்டுபேஸ்ட் ,
சேர்த்து நல்ல சுருங்கி வந்தபிறகு
பொடியா நறுக்கின தக்காளி ,உப்பு, பச்சைமிளகாய் ஒன்று சேர்த்து ஒருமுறை வதக்கிய பின்னு ,
2 ஸ்பூன் மிளகு இடித்து பொடிசெய்து சேர்த்து வதக்கிவிடவும்
கடைசியில் சிக்கனை சேர்த்து என்னைப்பிரிந்து வெந்து வரும்பொழுது
பாதி டம்பளர் தண்ணீர் ஊற்றி கிரேவி பதம் வந்தவுடன் இறக்கி சாப்பிட்டு பாருங்கள்

பிராணவாயு அதிகளவு தரும் மூங்கில் மரங்கள்

 

பிராணவாயு அதிகளவு தரும் மூங்கில் மரங்கள்

ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படுவது 800 கிராம் எனக் கணக்கிட்டுள்ளது.
ஒரு மூங்கில் குத்து ஓர் ஆண்டில் 309 கிலோ உயிர்க் காற்றைத் தருகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 850 கிராம் ஆக்சிஜனை வெளியிடுகிறது அதனால் மூங்கில் மரம் வளர்த்தால் அதிகமான ஆக்ஸிஜன் பெறலாம்.

பயணிகள் கவனத்திற்கு வண்டி எண் 22621 ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 22621 ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி வாரம் மும்முறை (சனி, திங்கள் மற்றும் புதன்) ஆகிய தேதிகளில் ராமேஸ்வரம் :9:00pm

மண்டபம் :9:30pm
ராமநாதபுரம்:9:55pm
பரமக்குடி :10:19pm
மானாமதுரை:10:48pm
மதுரை :11:45pm
விருதுநகர் :12:23Am
திருநெல்வேலி :2:20Am
நாகர்கோயில் :3:32Am
கன்னியாகுமரி :4:15Am குறிப்பு ( தற்பொழுது மண்டபத்தில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்டு செல்லும் ) என்பது குறிப்பிட்டதக்கது மறு மார்க்கம் கால அட்டவணை கீழ கொடுக்கப் பட்டது 👇🏼👇🏼👇🏼👇🏼 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 22622கன்னியாகுமரி இருந்து ராமேஸ்வரம் அதிவேக விரைவு ரயில் வாரத்தில் மமூன்று நாட்கள் (ஞாயிறு, செவ்வாய், மற்றும் வியாழன் ) ஆகிய தினங்களில் மட்டும் உள்ளது கன்னியாகுமரி :10:15pm
நாகர்கோயில்:10:27pm
வள்ளியூர்:10:59pm
திருநெல்வேலி :11:55pm
விருதுநகர்:1:28Am
மதுரை :2:35Am
மானாமதுரை :3:13Am
ராமநாதபுரம்:3:53Am
மண்டபம் :4:50Am குறிப்பு இந்த ரயில் ரயில் தற்பொழுது மண்டபம் வரை இயக்கப்படுகிறது விரைவில் ராமேஸ்வரம் செல்லும் ) தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

Nadukani, The Nilgiris

 

Nadukani, The Nilgiris

Featured Post

பிருங்கி முனிவர்

பிருங்கி முனிவர் உலகிலேயே மூன்று கால்களை உடைய பிருங்கி முனிவர் சிவபெருமானை தவிர பிற தெய்வத்தை வழிபட மாட்டேன் என்கிற கொள்கை கொண்ட...