Thursday, March 31, 2022

திண்டீச்சரம் (திண்டிவனம்) Thindeechuram (Tindivanam)

 திண்டீச்சரம் (திண்டிவனம்) Thindeechuram (Tindivanam)

🙏இறைவர் திருப்பெயர்:
திந்திரிணீஸ்வரர்.
🙏இறைவியார் திருப்பெயர்:
மரகதவல்லி, மரகதாம்பாள்
தல மரம்:
🙏புளியமரம்
தீர்த்தம் :
🙏வழிபட்டோர்:
வால்மீகி, வியாசர், டிண்டி, முண்டி,கில்லி, கில்லாலி ஆகிய முனிவர்கள்
Sthala Puranam
🙏தற்போது திண்டிவனம் என வழங்கும் ஊராகும்.
🙏கோயில் உள்ள தெருவுக்கு ஈசுவரன் கோயில் தெரு என்றே பெயர்.
🙏மக்கள் 'ஈசுவரன் கோயில்' என்றும் 'திந்திரிணீஸ்வரர் கோயில்' என்றும் வழங்குகின்றனர்.
🙏திந்திருணி, புளிதிந்திருண்வனம் - புளியமரக்காடு, இச்சொல் மருவி வழக்கில் திண்டிவனம் என்றாயிற்று. புளியமரக் காடுகளால் சூழப்பட்ட பகுதி என்று பெயர்.
🙏வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - 1. தெள்ளும் புனற்கெடில (6-7-8),
2. திண்டீச்சரஞ் சேய்ஞலூர் (6-70-9).
Specialities
🙏இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
🙏மூலவர் சுயம்பு மூர்த்தி; சிவலிங்கத் திருமேனி.
🙏பெரிய கோயில்; கீழ்ப்புறம் கருங்கல்லாலும் மேற்புறம் செங்கல்லாலும் கட்டப்பட்ட கட்டுமானமுடையது.
🙏இத்தலம் வால்மீகி, வியாசர், டிண்டி, முண்டி, கில்லி, கில்லாலி ஆகிய முனிவர்களால் பூசிக்கப்பட்டது.
🙏இக்கோயிலின் விமானம் வியாச முனிவரால் தாபிக்கப்பட்டது.
🙏இச்சிவாலயக் கல்வெட்டில் இவ்வூர் "ஓய்மாநாட்டு..... திருத்தீண்டீஸ்வரம்" என்று குறிக்கப்பட்டுள்ளது.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் செல்லும் எல்லா பேருந்துகளும் திண்டிவனம் வழியாகச் செல்கின்றன







வஜ்ராயுத லிங்கம்,உப்பு லிங்கம்

 அனைத்து சிவ சொந்தங்களுக்கும் இனிய காலை வணக்கம் ...! ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் ஹரஹர மகாதேவா #உப்பு_லிங்கம் !

#ராமேஸ்வரம்ராமநாதர் #கோவிலில்உப்பு #லிங்கம்*_
#இதை_வஜ்ராயுத
#லிங்கம்_என்று
#அழைப்பர்.
காசிக்கு நிகராக போற்றப்படும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சீதை உருவாக்கிய சிவலிங்கம், அனுமன் கொண்டு வந்த காசி லிங்கம், தவிர வேறு ஒரு சிவலிங்கமும் சிறப்பாக போற்றப்படுகிறது. அதுதான் உப்பு லிங்கம்!
இது அதிக சக்தி வாய்ந்தது; அபூர்வமானதும்கூட. சுவாமி சந்நதிக்குப் பின்புறம் இந்த லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெற்றாலும் லிங்கம் கரைவதில்லை. அதனால் இந்த லிங்கம் ‘வஜ்ராயுத லிங்கம்’ எனவும் போற்றப்படுகிறது. இவரை வழிபட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. ராமேஸ்வரத்தில் சிவராத் திரி அன்று காலை திறக்கும் கோயிலை மறுநாள் பிற்பகலில்தான் மூடுவார்கள். இரவு முழுவதும் ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகள் நடக்கும். தேவராரம், திருவாசகம், ருத்ர, சமக பாராயணங்கள் தொடர்ந்து ஒலிக்க நான்கு ஜாமங்களிலும் தனித்தனி அலங்காரத்தில் சுவாமி திருவுலா வந்து அருட்பாலிப்பார்.
#உப்புலிங்கம்*
ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில், ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் உப்பு லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
இந்த லிங்கம் வந்ததற்கு ஒரு கதை கூறப்படுகிறது.
ஒரு முறை சிலர், ‘இந்தக் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள்.
அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை.
‘அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாதபோது, காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் என்ன அதிசயம் இருக்கிறது’ என்று கூறினார். அவர் செய்த உப்பு லிங்கத்தை இப்போதும் நாம் தரிசனம் செய்யலாம்...
முப்பொழுதும்... நற்றுணையாவது நமசிவாயவே அருள்மிகு ஸ்ரீ பிரகலாதீஸ்வரர் சமேத லோகநாயகி அம்மாள் திருவடிகள் போற்றி போற்றி*
அடியேன்: ஞானன்
ஞானக்கண் அருட்பணி மன்றம் இ.துரைசாமியாபுரம் என் கடன் பணி செய்து கிடப்பதே. இறைப்பணி செய்வோம். இன்பமாக வாழ்வோ
May be an image of 1 person



நம் வம்சம் வாழையடி வாழையாய் வளர அமாவாசையில் குலதெய்வ வழிபாடு !

 நம் வம்சம் வாழையடி வாழையாய் வளர அமாவாசையில் குலதெய்வ வழிபாடு !

இன்று பங்குனி 17, மார்ச் 31/3/2022
சிறப்பு: அமாவாசை விரதம்
வம்சத்தை வாழையடி வாழையாய் வளர செய்யும் குல தெய்வத்தையும் அமாவாசை நாளில் வழிபடுவது சிறப்பு.ஒவ்வொரு அமாவாசைக்கும் இந்த பிரபஞ்சம் முழுவதும் விசேஷமான சக்திகள் நிறைந்து காணப்படும் என்பது நியதி.அமாவாசையில் வழிபடும் வழிபாட்டு முறைகள் விசேஷமான பலன்களைத் கொடுக்கின்றன.
பங்குனி அமாவாசையில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவதும் அல்லது அவருடைய படத்தை வீட்டில் வைத்து தூப, தீப, ஆரத்தி காண்பித்து வழிபடுவதும் குலதெய்வ சாபத்தையும், தோஷத்தையும் போக்கும்.
அமாவாசையில் உணவேதும் உண்ணாமல் தினமும் மந்திரங்களை உச்சரித்து விரதமிருந்து வழிபட்டு வந்தால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். அமாவாசை விரதம் இருக்க சிறந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவது என்பது விசேஷ சக்திகளை கொடுக்கும். இது உங்களிடம் இருக்கும் கெட்ட சக்திகளை விலகி ஓட செய்யும்.
வீட்டை சுத்தம் செய்ய அன்றைய நாளில் தண்ணீருடன் சிறிது அளவு கல் உப்பு சேர்த்து துடைத்து எடுக்கலாம். காலை, மாலை இருவேளையும் பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும்.
அமாவாசை நாளில் விரதம் இருப்பவர்கள், விரதம் இல்லாதவர்கள் என்று யாராக இருந்தாலும் புலால் உணவைத் தவிர்ப்பது நல்லது. பூண்டு, வெங்காயம் போன்ற பொருட்களை சேர்த்த சைவ உணவை சேர்த்து தவிர்க்க வேண்டும். அமாவாசை தினத்தில் சாப்பிட கூடாத பொருட்கள் இது ஆகும்.
குலதெய்வ அருள் பெறவும் அமாவாசை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க அமாவாசை நாளில் மந்திர ஸ்லோகங்களை உச்சரிப்பதும் அல்லது ஒலிக்க விடுவதும் செய்ய வேண்டும்.
உங்களுக்கு தெரிந்த சிறு சிறு மந்திரங்களை கூட அமாவாசை நாளில் உச்சரித்து பாருங்கள். நல்ல பலன்கள் எல்லாம் கிடைக்கும். பொன், பொருள் சேரவும், சகல சம்பத்தும் கிடைக்கும்.
அமாவாசை நாளில் முன்னோர்களின் ஆசி பெறுவது, குல தெய்வத்தை வணங்குதல், தினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால், வீட்டில் இருக்கும் தரித்திர நிலை நீங்கும். திருமண தாமதம், ஏழ்மை விலகி உங்கள் அனைத்து முயற்சிக்கும் நல்ல வெற்றி ஏற்படும்.
No photo description available.



வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்கவேண்டிய சிவஸ்தலம்..!

 வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்கவேண்டிய சிவஸ்தலம்..!

சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்.
ஒரு வருடம் பழமும்,
ஒரு வருடம் சருகும்,
ஒரு வருடம் தண்ணீரும்,
ஒரு வருடம் அதுவும் கூட
இல்லாமல் விரதமிருந்தார்கள் அந்தக் கால ரிஷிகள்..
ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சிவஸ்தலம் இருக்கிறது.
எதுவுமே இங்கு தேவையில்லை.
ஒரே ஒரு வேளை பட்டினி இருந்து இத்தலத்து இறைவனை வணங்கினாலே போதும்.
பல நூறு யாகங்கள் செய்த பலன் கிடைத்து விடும்.
இங்கு ஒரு நாள் தங்கினால்
முற்பிறவியில் செய்த பாவமும்,
இரண்டு நாள் தங்கினால்
இப்பிறப்பில் செய்த பாவமும்,
மூன்று நாள் தங்கினால் மறுபிறவியில் பாவமே செய்ய இயலாத மன நிலையும் ஏற்படும்..
ஞாயிறன்று இங்கு சூரியனை
மனதில் நினைத்து விரதமிருப்பவர் கண் வியாதியின்றி இருப்பர்.
திங்களன்று சந்திரனை நினைத்து விரதமிருப்பவர் வாழ்வுக்குப் பின் சிவலோகம் அடைவர்.
செவ்வாயன்று விரதமிருப்பவர் நோய் மற்றும் சனிதோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறுவர்.
புதனன்று விரதமிருப்பவர் கல்வியில் சிறப்பாகத் திகழ்வர்.
வியாழனன்று விரதமிருந்தால் ஆசிரியர் பதவி பெறலாம்.
வெள்ளியன்று விரதமிருப்போர் இந்திரனைப்போல் செல்வவளத்துடன் வாழ்வர்.
சனிக்கிழமை விரதமிருப்பவர் பொறாமை முதலிய துர்குணங்கள் நீங்கப்பெறுவர்.
இந்த ஸ்தலத்திற்கு வந்தால் போதும் கொடிய பாவங்கள் நீங்கிவிடும்.
இக்கோயிலில் புற்றுமண்ணே பிரசாதம். இதை அத்தலத்து இறைவனே தருகிறார் என்ற பெருமைக்குரிது இத்தலம்.
இதற்கு புன்னைவனம் சீரரசை
என்றும் பெயருண்டு.
இங்கே ஒரு சிவனடியாருக்கு தானம் செய்தால் மற்ற தலங்களில் லட்சம் சிவனடியார்களுக்கு சேவை செய்த பலன் கிடைக்கும்...
இங்குள்ள குளத்தில் நீராடினால் குழந்தை பாக்கியம் உண்டு...
இங்கே தன் மகளுக்கு திருமணம் முடித்தால் கூட ஆயிரம் கன்னிகா தானம் செய்த பாக்கியம் கிடைக்கும்...
இவற்றை வேதவாக்கியமென நம்புவோர் மோட்சம் அடைவர் என்கிறார்
புராணக்கதைகளை உலகுக்கு அளித்த சூதமுனிவர்.
சங்கரனாகிய சிவனும்
நாராயணனாகிய திருமாலும் இணைந்திருக்கும் சங்கர நாராயணர் கோயில் தான் அது.
உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி.1022 ( கோவிலமைப்பு ). இக்கோவிலில் ஆடித் தவசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது
கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோயில்…
இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன்
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது சங்கரநயினார் கோவில்.
இத்தலத்திற்கு
எப்படி செல்வது?
சங்கரன்கோவில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ளது..
No photo description available.



மடிச்சங்கு

 மடிச்சங்கு

சங்குகள் பலவகைப்படும்; அவற்றுள் வலம்புரிச்சங்கு உயர்ந்ததாகும்; அதனை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது '' மடிச்சங்கு ''. இச் சங்கின் மேற்புறம் விரல் போன்ற நீண்ட நாளம் என்ற அமைப்புகள் இருக்கும்.
இவற்றில் நீண்ட குழல் போன்ற துவாரங்களும் இருக்கும். இச்சங்கில் பாலை ஊற்றினால், அது மழை போன்று மெல்லிய தாரையாக நாளத்தின் வழியே வெளிப்படும். அப்போது அந்தச் சங்கு, பார்ப்பதற்கு பசுவின் மடி தோன்றும், அதன் மேலுள்ள நாளங்கள் பசுவின் மடிக்காம்புகள் போன்றும் காட்சியளிக்கும்.
இச்சங்கை சிவலிங்கத்தின் திருமுடி மேல் பிடித்துக் கொண்டு அதில் பாலை வார்த்து அபிஷேகம் செய்வார்கள். இப்படி அபிஷேகம் செய்யும் காட்சி, பசு தானே இறைவன் மீது பாலைப் பொழிவது போல இருக்கும் ! அப்போது அமிர்தவர்ஷிணி ராகம் இசைப்பர் ; பசுபதி திருவிருத்தம் ஓதுவர்; இச்சங்கை '' கோமடிச்சங்கு '' என்றும் கூறுவர் ; இதைக் கொண்டு இறைவனை முழுக்காட்டுவது, கோடி மடங்கு நன்மை தரும் என்பர் ;
வலம்புரிச் சங்கினை திருமகளாக போற்றுவதைப் போல , மடிச்சங்கினை பார்வதி தேவியாக போற்றுகின்றனர் !
No photo description available.


இன்று வரை உயிரியல் ரீதியாக அழியாத (immortal) ஒரே உயிரினம்:

 இன்று வரை உயிரியல் ரீதியாக அழியாத (immortal) ஒரே உயிரினம்:

ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் ஆகியோர் அரக்க சகோதரர்கள். இவர்கள் மூவரும் தங்களுக்கென தனித்தன்மையான வரத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கில் பிரம்ம தேவரை நினைத்து கடுமையான தவம் இருக்க முடிவு செய்தனர்.
உங்களின் தவத்தால் என்னை மகிழ்ச்சி அடையச்செய்த உங்களுக்கு வரம் தர பிரம்மா வந்துள்ளேன். கண்களைத் திறக்கவும் என்றார்.
இதில் ராவணன் “எனக்கு மரணமில்லாத, அழியாத வரம் வேண்டும் ஐயனே” என்றான்.
அதற்கு பிரம்மா, “மகனே நீ விரும்பும் எத்தனை வரங்கள் வேண்டுமானாலும் என்னால் தர முடியும் ஆனால் சாகா வரம் மட்டும் தன்னால் அளிக்க முடியாது. அதற்கு பதிலாக வேறு ஏதேனும் வரத்தைக் கேள்” என்றார்.
பிரம்மன் கூட அளிக்க முடியாத வரத்தை இங்கு பூமியில் உள்ள ஒரு உயிரினம் பெற்றிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம் உள்ளது "Turritopsis dohrnii"
அது எப்படி சாத்தியம் என்று உங்களுக்கு தோன்றலாம்
வயதாகிவிடும் எண்ணத்தை யாரும் விரும்புவதில்லை. வயதான செயல்முறையிலிருந்து தப்பிக்க அல்லது தாமதப்படுத்த நமது பல மனித முயற்சிகள் இருந்தபோதிலும், இது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகத் தெரிகிறது.இருப்பினும், ஒரு சில இனங்கள் வயதான செயல்முறையிலிருந்து முற்றிலும் தப்பிக்க முடியும்.
செல்லுலார் அளவில் , செல்கள் பிளவுபடுவதை நிறுத்தி இறுதியில் அவை இறந்துவிடுகின்றன.
இந்த வயது மூப்பு என்பது ஒரு உயிரினத்துக்கு அல்ல தோல் தசை போன்ற செல்களால் ஆன அனைத்திற்கும் பொருந்தும்.
நீங்கள் நினைப்பது போல் சாகாம் வரம் பெறவில்லை மாறாக உயிரியல் ரீதியாக
இந்த உயிரினத்துக்கு இறப்பு என்பது கிடையாது.
இந்த சிறிய, தெளிவாகத் தோற்றத்தை கொண்ட இந்த ஜெல்லி பிஷ் Turritopsis dohrnii வகைதான் நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் உயிரினம் உலகெங்கிலும் உள்ள கடல்களில் காணப்படுகிறது , மேலும் அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியின் முந்தைய கட்டத்திற்கு திரும்புவதன் மூலம் எல்லையற்ற முறை வாழ்வை திருப்ப முடியும்.
ஒரு புதிய ஜெல்லிமீன் வாழ்க்கை கருவுற்ற முட்டையுடன் தொடங்குகிறது, இது ஒரு பிளானுலா எனப்படும் லார்வா கட்டமாக வளர்கிறது. விரைவான நீச்சலுக்குப் பிறகு, பிளானுலா ஒரு மேற்பரப்பில் (ஒரு பாறை, அல்லது கடல் தளம், அல்லது ஒரு படகின் ஹல் போன்றவை) ஒட்டிக்கொள்கிறது, அங்கு அது ஒரு பாலிபாக உருவாகிறது: ஒரு முனையில் ஒரு வாயுடன் ஒரு குழாய் வடிவ அமைப்பு மற்றும் ஒரு வகையான கால் கொண்டுள்ளது மறுபுறம். இது சில நேரம் இடத்தில் சிக்கிக் கொள்கிறது , பாலிப்களின் ஒருவருக்கொருவர் உணவுக் குழாய்களைப் பகிர்ந்து கொள்ளும் சிறிய காலனியாக வளர்கிறது.
இறுதியில், ஜெல்லிமீன் இனங்களைப் பொறுத்து, இந்த பாலிப்களில் ‘மொட்டு’ என்று அழைக்கப்படும் ஒரு வளர்ச்சியை உருவாக்கும், அல்லது அது ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள தனித்தனி பிரிவுகளை உருவாக்கிக்கொள்ளும், பின்னர் அவை காலனியின் மற்ற பகுதிகளிலிருந்து பிரிந்து செல்லக்கூடும். இந்த செயல்முறை ஜெல்லிமீன் வாழ்க்கைச் சுழற்சியின் அடுத்த கட்டங்களுக்கு காரணமாக அமைகிறது.எபிரா (ஒரு சிறிய ஜெல்லிமீன்) மற்றும் மெடுசா, இது பாலியல் இனப்பெருக்கம் செய்யக்கூடிய முழுமையான வயதுவந்த நிலை பெற்றிருக்கும்.
மற்ற ஜல்லி மீன்களுக்கு இதுவே கடைசி ஆகும்.
ஆனால் நமது உயிரினத்துக்கு அப்படி கிடையாது.
இது பட்டினி அல்லது காயம் போன்ற ஒருவித சுற்றுச்சூழல் அழுத்தத்தை எதிர்கொள்ளும்போது, ​​இதன் திசுக்களின் ஒரு சிறிய குமிழியாக மாறக்கூடும், பின்னர் அது வாழ்க்கையின் முதிர்ச்சியடையாத பாலிப் கட்டமாக மாறுகிறது. இது ஒரு பட்டாம்பூச்சி மீண்டும் ஒரு கம்பளிப்பூச்சியாக மாறுவது போன்றது.
இதன் வாழ்க்கை சுழற்சி முறை பதிவில் உள்ள படத்தில் இணைத்துள்ளேன்
அவை இன்னும் வேட்டையாடுபவர்களால் இறையாக அல்லது வேறு வழிகளால் கொல்லப்படலாம். இருப்பினும், சுற்றுச்சூழல் அழுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக வாழ்க்கை நிலைகளுக்கு இடையில் முன்னும் பின்னுமாக மாறுவதற்கான அவைகளின் திறன், கோட்பாட்டில் என்றென்றும் வாழ முடியும் என்பதாகும்.

ஆண்டி சுனையின் மகிமையையும் ...அதில் ஏன் குளிக்க வேண்டாம்

 அன்பு ஆன்மீக உடன் பிறப்புக்களுக்கு வணக்கம்

🙏...நான் ஈசன் மகன் சிம்பு...நான் கூறியவாறு வெள்ளியங்கிரி ஆண்டி சுனையின் மகிமையையும் ...அதில் ஏன் குளிக்க வேண்டாம் எனவும் விளக்கியுள்ளேன்...இது இப்படியே தொடருமாயின்...என் என்னப்படி வரும் சித்ரா பௌர்ணிமியன்று பல லட்சக்கணக்கான பக்தர்கள் மலையேறுவர் அவர்கள் தாகத்தால் தவிக்கும் நிலை ஏற்படின்...அதன் விளைவு யாரை சாறும்...எனவே ஆண்டி சுனையை தாகசாந்திக்காக பயன்படுத்துவோம்...மலையை பாதுகாப்போம் தூய்மையாக வைத்திருப்போம்...நீரின்றி அமையாது உலகு...
சிவாய நம...
அதிகம் பகிருங்கள்...🙏



Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...