Sunday, April 10, 2022

பாதரச லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும் பலன்கள்

பாதரச லிங்கத்தை பூஜிப்பதால்  கிடைக்கும் பலன்கள்.

கோடிக்கணக்கான சிவலிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலன்களைவிட,

பாதரச லிங்கத்தை பூஜிப்பதன் மூலம் பல மடங்கு பலன்களை எளிதில் பெற முடியும் என்கின்றன சாஸ்திர புராணங்கள்.

பிரம்மபுராணத்தின் கருத்துப்படி, மனதிலுள்ள ஆசைகளையெல்லாம் பூர்த்தி செய்யும் பாதரச லிங்கத்தை பூஜிக்கும் மனிதன் தன்யனாகிறான்.

யார் வேண்டுமானாலும் பாதரச லிங்கத்தை பூஜித்து எல்லா பவுதிக சுகங்களையும் அனுபவித்து, பரமபதத்தை அடைய முடியும். பிரம்மவைவர்த்த புராணம் சொல்லுவது என்னவென்றால் பாதரலிங்கத்தை விதிப்படியும் முறைப்படியும் ஒரே ஒரு முறை பூஜிப்பவர்கள்கூட சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை அளவில்லா சுகத்தைப் பெற முடியும்!

சிவ நிர்ணய ரத்னாகரம் என்ற நூலின் கருத்துப்படி கல்லாலான சிவலிங்கத்தை பூஜிப்பதைவிட கோடி மடங்கு நற்பலன், தங்கம் வேயப்பட்ட சிவலிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். 

அதைவிட பன்மடங்கு பலன் ரத்தினங்கள் பதித்த லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். 

ஆனால் அதைவிட பலப்பல மடங்கு பலன், பாதரச லிங்கத்தின் பூஜை அல்லது தரிசனத்தாலேயே கிடைக்கும். 

பாதரச லிங்கத்தைவிட உயர்வான சிவலிங்கம் உலகில் இருந்ததுமில்லை; இருக்கப்போவதுமில்லை!

சிவபுராணத்தின் கூற்றுப்படி, பசு வதை செய்த பாவியும், நன்றிகெட்ட மனிதனும், வீரனைக் கொலை செய்தவனும், கர்ப்பத்தலுள்ள சிசுவைக் கொன்றவனும், தாய் தந்தையரைக் கொன்றவனும்கூட, பாதரச லிங்கத்தை பூஜித்து வந்தால், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு, முக்தியை அடைய முடியும்! வாய்விய சம்ஹிதையின் கருத்துப்படி நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வரியம் மற்றும் நம் வாழ்வில் வேண்டுவதையெல்லாம் பெறுவதற்கு ஒரே சிறந்த சுலபமான வழி பாதரச லிங்கத்தை பூஜித்து வழிபடுவதுதானாம்.

சர்வதரிசன சங்கிரகம் என்ற நூலில் பாதரசத்தை திடப்பொருளாக்கி, அதை லிங்கமாக்கி பூஜிப்பவர்களுக்கு, எப்போதுமே மரணபயம் இருப்பதில்லை. 

தவிர எந்த ஒரு காலத்திலும் அவர்கள் வீட்டில் வறுமை எட்டிப் பார்ப்பதில்லை என்று சிவபெருமான் பார்வதியிடம் கூறியிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ரசார்ணவ தந்திரம் என்ற நூலின் கருத்துப்படி எந்த ஒரு மனிதனும் ஒரே ஒருமுறை பாதரசலிங்கத்தை பூஜித்து விட்டாலே போதும், அவனுக்கு வாழ்கையில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற சித்திகள் கிடைத்துவிடுகின்றன.

பிரசித்திபெற்ற ஆயிரம் லிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலனைவிடக் கோடி மடங்கு நற்பலன், பாதரச லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கிறது. 

ரசமுச்சயம் என்ற நூலில், பாதரசலிங்கத்தைத் தொடர்ந்து ஆராதித்து வருவதால், எல்லாவித நோய்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது.

வயதான காலத்தில், மனிதனை நோயின்றி வைத்துக் கொள்வதற்கு வேறெந்தத் தரவரத்திற்கோ, உலோகத்திற்கோ சக்தியில்லை. 

ஏனெனில் அவை எல்லாமே தண்ணீரில் கரைந்து போகக்கூடியவை; வெப்பத்தால் காய்ந்து போகக்கூடியவை. ஆனால் பாதரசம் ஒன்றுதான் எதனாலும் பாதிக்கப்படுவதில்லை. 

பாதரசத்தை விசேஷச் செயல்பாடுகள் மூலம் திடபதார்த்த மாக்குவதால், அது அமிர்தமாகி விடுகிறது.

அப்படி திடப்படுத்தப்பட்ட பாதரசத்தில் சிவலிங்கத்தை உருவாக்கி, அந்த லிங்கத்தை வழிபடும் பக்தர்களுக்கு கல்வி, அறிவு, செல்வம், சொத்து, சுகம், அமைதி, செழிப்பு, ஐஸ்வர்யம், மக்களன்பு முதலிய எல்லாப் பலன்களும் தானாகவே வந்தடைகின்றன. 

பாதரசம் நோய்களை அகற்றி புத்துயிரும் புது இளமையையும் கொடுக்கிறது. 

அதோடு அஷ்டசித்திகளையும் நவநிதிகளையும் அளிக்கிறது.

சாதாரணமாக பாதரசத்தில் அழுத்தங்கள் நிறைய இருக்கும். அதை புடம் போட்டு அசுத்தங்களை அகற்றிய பிறகுதான் அது திடபதார்த்தமாக்கப்படுகிறது.

அதிலிருந்து வடிவமைக்கப்படும் சிவலிங்கம் முழுப் பலன்களையும் அளிக்கவல்லது.

விதிமுறைப்படி தினந்தோறும் அனுஷ்டானங்கள் செய்து பூஜை, அர்ச்சனை, ஆரத்தி முதலிய சேவைகள் செய்து ஆராதிக்கக்கூடியவர்கள் மட்டும் பாதரச லிங்கத்தை வீட்டில் ஸ்தாபிக்க வேண்டும். 

வெறும் லிங்கத்தைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விடுவதால் மட்டும் பலன் கிடைப்பதில்லை!

Friday, April 8, 2022

காஞ்சி மகா பெரியவருக்கு அருளிய அம்பிகை

*"காஞ்சி மகா பெரியவருக்கு அருளிய அம்பிகை"*

(குழந்தை உருவத்தில் ஒரு சிறுமி கையில் தண்ணீர் சொம்புடன் மகா பெரியவர் முன்பாக வந்து, "இந்தாருங்கள்.... தண்ணீர் கேட்டீர்களே" என்று கூறி கொடுத்தாள்- இது நங்கநல்லூர் அதிசயம்).

பல வருடங்களுக்கு முன்பு நடந்த அதிசயம் இது.

அப்போது ஒருநாள், காஞ்சி மகா பெரியவர் சென்னை பரங்கிமலையில் இருக்கும் ஸ்ரீ நந்தீஸ்வரரை தரிசிக்கும் பொருட்டு, தனது பக்தர்களுடன் பாத யாத்திரையாக வந்து கொண்டிருந்தார். வரும் வழியில், திரிசூலம் சென்று அங்கு திரிசூலநாதரையும் திரிபுரசுந்தரியையும் தரிசித்தார்.

வரும் வழியில், பழவந்தாங்கலில் ஓரிடத்தில் சற்று ஓய்வு கொள்ள எண்ணம் கொண்டவராக,அங்கிருந்த அரச மரத்தடியில் அமர்ந்தார்.

அப்போது அவருக்கு சற்றே நாவறட்சி ஏற்பட்டு, தண்ணீர் பருக வேண்டும் என்று தோன்ற தனது சிஷ்யர் ஒருவரை அழைத்தார். மகா பெரியவா கேட்டது சிஷ்யர் காதில் விழவில்லை.

சிறிது நேரத்தில் ஒரு சிறுமி கையில் தண்ணீர் சொம்புடன் மகா பெரியவர் முன்பாக வந்து, "இந்தாருங்கள்.... தண்ணீர் கேட்டீர்களே" என்று கூறி கொடுத்தாள். அதை வாங்கிப் பருகிவிட்டு சொம்பை திருப்பிக் கொடுக்க சிறுமியை அவர் தேடியபோது அங்கு அவளை காணவில்லை.

உடனே தனது சிஷ்யரை அழைத்து விவரத்தைக் கூறி, "யார் அந்த சிறுமி, தண்ணீரை நீங்கள் தான் சிறுமியிடம் கொடுத்து அனுப்பினீர்களா?" என்று கேட்க, அவர்களோ, "இல்லையே... அந்த சிறுமி யாரென்றே தெரியாது" என்று வியப்புடன் கூறினார்களாம்.

தொடர்ந்து மகா பெரியவர் சற்றே கண்மூடி அமர்ந்திருந்தார். வந்தது சாட்சாத் அந்த அகிலமெல்லாம் காக்கும் அம்பிகையான ஸ்ரீ ராஜராஜேஸ்வரியே என்பதை உணர்ந்து, அன்றைய கிராமமான பழவந்தாங்கல் கிராம பெரியவர்களையும், ஊர் மக்களையும் அழைத்து, "இந்த இடத்தில் அம்பிகை எங்கோ புதைந்து கிடக்கிறாள். உடனே தோண்டி கண்டு பிடியுங்கள்" என்று சொல்லிவிட்டு ஸ்ரீ நந்தீஸ்வரரை தரிசிக்க சென்றுவிட்டார்.

மகா பெரியவர் கூறியபடி, கிராமப் பெரியவர்கள்
அந்த இடத்தைத் தோண்ட, முதலில் அம்பிகையின் குழந்தை வடிவிலான விக்ரகமும், தொடர்ந்து ஸ்ரீ சண்டிகேஸ்வரி விக்ரகமும் கிடைத்தது.

இந்தத் தகவல் மகா பெரியவருக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் மகிழ்வுற்று, அந்த இடத்தில் திரும்பவும் விக்ரக பிரதிஷ்டை செய்து, அந்த அம்பிகைக்கு 'ஸ்ரீவித்யா ராஜராஜேஸ்வரி' என்ற திருநாமத்தை வைத்தார். இதுதான், நங்கநல்லூரில், பழவந்தாங்கல் நேரு காலனியில் அமைந்துள்ள ஸ்ரீவித்யா ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில்.

இங்கு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, சிறுமி வடிவத்தில் அருள் பாலிப்பது சிறப்பு. இந்தக் காட்சியை வேறு எங்கும் காண்பது அரிது.

ஜய ஜய சங்கர ஹரஹர சங்கர 
காஞ்சி சங்கர காமகோடி சங்கர 
Vani Jayaraman 
01.04.2022

வாழ்வில் என்றும் சுபிட்சத்தை பெற உதவும் மீனாட்சி அம்மன் காயத்ரி மந்திரம்

#வாழ்வில் என்றும் சுபிட்சத்தை பெற உதவும் மீனாட்சி அம்மன் காயத்ரி மந்திரம் 🌺

 தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோவில்கொண்டு இவ்வுலகையே காத்து ரட்சிக்கும் அன்னை மீனாட்சி அம்மனை வழிபடுவதன் பலனாக நாம் பல அற்புத நன்மைகளை பெற முடியும். தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக் கோயிலாக உள்ளது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். அதோடு 248 சக்தி பீடங்களில் ஒன்றாக இந்த கோவில் உள்ளது. அகிலத்தை காக்கும் மீனாட்சி அம்மனை வழிபடுவோருக்கு வாழ்வில் என்றும் சுபிட்சம் நிலைக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் மீனாட்சி அம்மனை வழிபடும் சமயத்தில் அவளுக்குரிய காயத்ரி மந்திரம் அதனை கூறுவது நமக்கு சிறப்பு சேர்க்கும்.

🌺 மீனாட்சி அம்மன் காயத்ரி மந்திரம் 🌺

ஓம் உந்நித்ரியை வித்மஹே ஸுந்தப ப்ரியாயை தீமஹி தந்நோ மீனாதேவீ ப்ரசோதயாத் 

 செவ்வாய் மற்றும்
வெள்ளிக்கிழமைகளில் இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பலனாக பெண்களுக்கு அழகு கூடும், அற்புதமான கணவன் அமைவார், வீட்டில் சுபிட்சம் பெருகும், மன நிம்மதி அதிகரிக்கும். 

 மீனாட்சி அம்மன் வழிபாடு :

மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டியன் மன்னனுக்கு சக்தியாகிய பார்வதி தேவி மகளாக பிறந்தார். அவருக்கு மீனாட்சி என்கிற பெயரை சூட்டி வளர்த்தார் மலையத்துவஜ பாண்டியன். திருமண வயதை அடைந்த மீனாட்சி வீரத்தில் சிறந்து விளங்கினார். அனைத்து நாட்டு மன்னர்களையும் போரில் வென்று இறுதியில் கைலையிலிருக்கும் சிவபெருமானிடம் போரிட்டபோது, அந்த சிவனே தனது வருங்கால மணாளன் என்பதை உணர்ந்தார். மீனாட்சியிடம் அந்த சிவபெருமானும் தோற்றார். இருவரும் மனமொத்து மதுரை மாநகரில் திருமணம் செய்த பிறகு, மீனாட்சி – சுந்தரேஸ்வரர் என்கிற பெயரில் மதுரை நகரிலேயே கோவில் கொண்டுள்ளனர். சக்தியின் வடிவமான மீனாட்சியை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் அனைத்து மங்களங்களும் உண்டாகிறது என்பது பக்தர்களின் அனுபவ பூர்வமான உண்மையாக இருக்கிறது. 

மீனாட்சி அம்மன் வழிபாட்டிற்குரிய தினங்கள் :

மங்களங்கள் வழங்கும் தேவியான மீனாட்சியை அனைத்து தினங்களிலும் வழிபடலாம் என்றாலும் வாரத்தில் வருகின்ற புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். மேலும் சித்திரை மாதத்தில் வருகின்ற சித்ரா பௌர்ணமி தினத்தில் மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபடுவது வாழ்வில் நன்மைகள் அதிகம் ஏற்பட செய்யும் ஒரு சிறந்த வழிபாடாக இருக்கிறது. 

மீனாட்சி அம்மன் வழிபாடு பலன்கள்:

 மீனாட்சி அம்மன் நவகிரகங்களில் புதன் கிரகத்தின் அம்சம் கொண்டவராக இருக்கிறார். எனவே ஜாதகத்தில் புதன் கிரக தோஷங்கள் இருப்பவர்கள் மீனாட்சி அம்மனுக்குரிய காயத்ரி மந்திரங்களை ஜெபித்து, வழிபாடு செய்வதால் தோஷங்கள் நீங்கி, நன்மைகள் உண்டாகும். வறுமை நிலை நீங்கி செல்வங்கள் பெருகும். தொழில், வியாபாரங்களில் நஷ்டங்கள் ஏற்படாமல் நல்ல வருமானமும் உண்டாகும். கல்வி, கலைகளில் சிறந்து விளங்க முடியும். திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த வாழ்க்கைத்துணை அமையப் பெறுவார்கள். மன அமைதி கிடைக்கும்...🌺

Thursday, April 7, 2022

விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?

*விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?*

1950-களில் ஒருநாள் ஒரு வானொலி நிருபர் ஸ்ரீமஹாபெரியவாளை பேட்டிகண்டு அதனை டேப்ரிகார்டரில் பதிவு செய்துகொண்டிருந்தார். 

திடீரென்று பெரியவா அவரிடமும், அங்கு இருந்தவர்களிடமும்,மிகவும் பழைய காலத்து வாய்ஸ் ரிகார்டர் எதுவென்று யாருக்காவது தெரியுமா” என்று கேட்டார். 

யாரும் பதில் சொல்லவில்லை.

பெரியவா மற்றொரு கேள்வியைக் கேட்டார், ”விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?”

யாரோ ஒருவர்,”விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பீஷ்மர் நமக்குத் தந்தார்” என்றார். 

அனைவரும் “ஆம்” என்று ஒப்புக்கொண்டனர். 

பெரியவா சிரித்துக்கொண்டே தலையசைத்து விட்டு, மற்றொரு கேள்வியை வீசினார், 

”குருக்ஷேத்திரத்தில் அனைவரும் பீஷ்மர் சொன்ன விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பக்தியோடு கேட்டுக் கொண்டிருந்தபோது, அதனை குறிப்பெடுத்ததோ, எழுதிக்கொண்டதோ யார்?” மீண்டும் அமைதி.

ஸ்ரீமஹாபெரியவா புன்னகையுடன் சொல்ல 
ஆரம்பித்தார்

“பீஷ்மர், ஸ்ரீகிருஷணரின் புகழையும், பெருமைகளையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தால் விளக்கிக் கொண்டிருந்தபோது, ஸ்ரீகிருஷணரும், வியாசரும் உட்பட அனைவரும் வேறு எந்த நினைப்புமின்றி அவரையே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். 

பிதாமகர் பீஷ்மர் ஆயிரம் நாமங்களையும் சொல்லி முடித்தபின்பு அனைவரும் விழிப்படைந்தனர்.

முதலில் யுதிஷ்ட்டிரர் பேசினார்,

”பிதாமகர், ஸ்ரீவாசுதேவரின் ஒப்பற்ற பெருமை வாய்ந்த ஆயிரம் புனித நாமாக்களை சொன்னார். அவற்றைக் கேட்பதில் கவனமாக இருந்த நாம் அனைவரும் அவற்றை குறிப்பெடுக்கவோ, எழுதிக்கொள்ளவோ தவறிவிட்டோம். 

நாம் அற்புதமான விஷயத்தை இழந்து நிற்கின்றோம்” என்றார். 

அப்போதுதான் அனைவரும் எப்படிப்பட்ட தவறு நேர்ந்துவிட்டதென்று உணர்ந்து திகைத்தனர்.

பிறகு யுதிஷ்டிரர் ஸ்ரீகிருஷணரிடம் திரும்பி,”ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர தாங்களாவது உதவக்கூடாதா” என்று கேட்டார். 

ஸ்ரீகிருஷ்ணர் வழக்கம்போல், “என்னால் மட்டும் என்ன செய்ய முடியும்? உங்கள் எல்லோரையும் போல நானும் ஆச்சார்யர் பீஷ்மரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன் என்றார்.

அனைவரும் சேர்ந்து ஸ்ரீகிருஷ்ணரிடம், “ஹே.. வாசுதேவா, நீ ஆனைத்தும் அறிந்தவர். உம்மால் இயலாததென்பது எதுவுமே இல்லை. தாங்கள் தயைகூர்ந்து எங்களுக்கு உதவ வேண்டும்.

 அந்த ஒப்புயர்வற்ற பெருமைவாய்ந்த பரந்தாமனின் ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர வேணடும். அது தங்களால் மட்டுமே முடியும்” என்று வேண்டினர்.

அதற்கு ஸ்ரீகிருஷ்ணர்,”இதனை செய்ய முடிந்த ஒருவர் உங்களுக்குள்ளேயே இருக்கின்றார்” என்றார். 

எவருக்கும் ஒன்றும் புரியவில்லை. 

ஸ்ரீவாசுதேவர் தொடர்ந்தார்,”சகாதேவன் அதனை மீட்டு சொல்ல, வியாசர் எழுதுவார்” என்றார். 

அனைவரும் சகாதேவனால் எப்படி சஹஸ்ர நாமத்தை மீட்க முடியும் என்பதை அறிய ஆவலாக இருந்தனர். 

ஸ்ரீவாசுதேவர் கூறினார்,”உங்கள் அனைவருள்ளும் சகாதேவன் மட்டுமே ‘சுத்த ஸ்படிக’ மாலை அணிந்திருந்தான். 

சகாதேவன் சிவபெருமானை பிரார்த்தனை செய்து தியானித்து ‘சுத்த ஸ்படிகம்’ உள்வாங்கியுள்ள சஹஸ்ரநாமத்தை சப்த அலைகளாக மாற்ற, அதனை வியாசர் எழுதிக்கொள்ளுவார்” என்றார்.

‘சுத்த ஸ்படிகம்’ அமைதியான சூழ்நிலையில் எழும் சப்தங்களை கிரகித்துக்கொள்ளும். 

இது ஸ்படிகத்தின் குணம், தன்மை. 

‘ஸ்வதம்பரராகவும்’ ‘ஸ்படிகமாகவும்’ இருக்கும் சிவபெருமானை தியானித்து அந்த சப்தங்களை மீட்க முடியும்.

உடனே சகாதேவனும் வியாசரும், பீஷ்மர் சஹஸ்ரநாமம் சொல்லிய அதே இடத்தில் அமர்ந்தனர். 

சகாதேவன் மஹாதேவரை பிரார்த்தித்து, தியானம் செய்து சஹஸ்ரநாமத்தை மீட்கத் துவங்கினர்.

அந்த ‘சுத்த ஸ்படிக’ மாலையே உலகின் முதல் ‘வாய்ஸ் ரிகார்டராக’, அற்புதமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தை நமக்குத் தந்தது………..”

என்று சொல்லி குழந்தைபோல சிரித்தார் ஸ்ரீமஹாபெரியவா.

ஜய ஜய சங்கர
ஹர ஹர சங்கர 

-

லட்சுமியும் நுனிப்பகுதியும்

லட்சுமியும் நுனிப்பகுதியும்:

எதில் ஒன்றுமே நுனி பகுதி லட்சுமி ஸ்தானமாகும், 

கை. கால் நுனி விரல் ஆனாலும். இலைகளின் நுனி ஆனாலும் சரி. பழங்களின் நுனி ஆனாலும் சரி. நாக்கின் நுனியும் கூட லட்சுமி ஸ்தானமாகும்,

 நகங்களை ஒட்ட ஒட்ட வெட்டக்கூடாது . குறிப்பாக விரத நாட்கள். வெள்ளி. செவ்வாய். சனி. பௌர்ணமி. அமாவாசை போன்ற நாட்களிலும் சந்தி வேளையான காலை மாலை வேளையிலும் ராகு எமகண்ட வேளையிலும் உச்சிகால வேளையிலும் நகம் வெட்டுவதோ. பற்களால் கடிப்பதோ கூடாது .

 எப்போது நகம் வெட்டினாலும் மிக சிறிதளவாவது நகம் விட்டு மீதத்தை வேண்டுமானால் வெட்டலாம், 

வெட்டிய நகத்தை புதைத்தால் நல்லது . நெருப்பில் எக்காரணம் கொண்டும் போடக்கூடாது வெட்டிய நகம் பிணத்திற்கும். ரத்தத்திற்கும் சமம் எனவே நகம் வெட்டிய பின்பு அது தீட்டு பொருளாகும் எனவே நகத்தை வெட்டிய உடன் அப்புறப்படத்துவதே நல்லது இல்லையேல் தரித்திரம் குடிகொள்ளும் .

அடுத்து நுனி நாக்கு லட்சுமி குடிகொண்ட இடமாகும், மகா சரஸ்வதியும். மகா லட்சுமியும் ஆட்சி செய்யும் நாக்கில் சுப வார்த்தைகள் எதை பேசினாலும் அதன் பலனை நமக்கும் கொடுப்பார்கள், 

நாக்கில் மிக சூடான பொருட்கள் சுவைக்கும் போது நுனி நாக்கு சுட்டுவிட்டால் செல்வ செழிப்பு குறைய ஆரம்பிக்கம், 

அதனால் டீ. காபி. பால் போன்ற சூடான பானங்களை மித சூட்டோடு நுனி நாக்கில் படாமல் குடிப்பது நலம், இன்றைக்கும் சில வகுப்பினர் வாய் உதடு படாமலும். பல் படாமலும் அண்ணாந்து பானகங்களை குடிப்பார்கள்,

 இது ஆச்சாரத்திற்கு எனஅனைவரும் கருதுகின்றனர், விஷயம் அறிந்தவருக்கு இதன் ரகசியம் தெரியும், நுனி பல்லும். நுனி நாக்கும் சூடு பட்டால் அதன் சுயதன்மையை இழந்து துடிக்கும், பின்பு அந்த பாகத்திற்குரிய தேவதை பாதிக்கப்பட்டு சாபம் பெறுவோம் .

 எனவே சூடான உணவுகளை நாக்கு சுட்டுபோகும்படி சுவைக்க வேண்டாம் ஆற வைத்தே சாப்பிடவும் .

 அதுபோல் காய். கிழங்கு. பழம் வகைகள் வெட்டினாலும் முதலில் அடி பகுதியை வெட்டிய பின்னரே மற்ற பகுதியை நறுக்கவும்,

 (அடிபகுதி எதிலும் சக்தி பகுதியாகும், அங்கு பலி நிகழ்த்தும் போது (அறுத்தல்) பாதகமில்லை, முனை பகுதியே வளர்ந்து வரும் பகுதி அதன் முனையை கிள்ளினால் வளர்ச்சி தடைபடுவது ஒருபுறம் இருந்தாலும் அதை கிள்ளி நம்முடைய வாழ்க்கையும் தடைபடும் என்பதை அறிக,

 வாழை பழம் கைகளால் பிரித்து சாப்பிட்டாலும் அதன் தோல் உறிக்கும் போது முதலில் அடிபகுதியான காம்பு பகுதியையே முதலில் உறிக்கவும் , நுனி பகுதி நம் தலை அந்த தலையிலும் லட்சுமி வாசம் செய்வதால் தான் தலையில் யாரும் கொட்டக்கூடாது என்பார்கள்,

 (ஒருவருடைய பாத அணி நம் தலையில் பட்டால் நாம் செல்வந்தர் ஆவோம், அந்த ஒருவர் யார் எனில் ஸ்ரீமன் நாராயணன் ஆவார், அவர் பாதம் பட்டால் லட்சுமி பூரிப்படைவாள், இன்றும் வைணவ ஆலயங்களில் பாத ஆசீர்வாதம் சிரசிற்கு செய்வார்கள் .இதில் பல தகவல் இருந்தாலும் இதுவும் அதில் அடங்கிய ரகசியமாகும்) 

தலைமேலேயே அடிப்பேன் என்ற வார்த்தையை கூட பயன்படுத்த வேண்டாம் .

 முடிந்தளவு மனித நிழலில் தலை பாகத்தையும் மிதிக்க வேண்டாம், நிச்சம் வறுமை வாட்டும்,

 எனவே சுபிட்சமாக வாழ லட்சுமி ஸ்தானத்தை அவமதிக்காதீர்கள், 

இன்னொரு தகவலையும் அறியுங்கள் தலையில் பேன் இருந்தால் அதை பார்க்கும் போது தலையிலேயே வைத்து குத்தக்கூடாது (சிரசு லட்சுமிக்குரியதால் அது புனிதமான பகுதி அதனால்தான் கங்கை. சூர்யன். சிவஸ்தானம் என்றùல்லாம் வர்ணிப்பார்கள்) 

பேனை சிரசில் இருந்து நீக்கி பின்பு வெளியில் வைத்து குத்துவார்கள், தலையில் சீப்பு படுவதால் சீப்பில் பேன் குத்த கூடாது கவனம்,

 பாவம் தாக்கவும். நீக்கவும். முதலில் தெய்வங்களால் பயன்படுத்தக்கூடியது சிரசுதான், அதனால் தான் 7 1/2 சனியே வந்தாலும் முதலில் சிரசையே பீடிக்கும் .

 பாவம் போக்க கங்கைக்கு போனாலும் தலையுடன் தான் பாவம் தீர குளிக்க வேண்டும், ஆக சிரசு மிக முக்கியம், சுத்த லட்சுமி ஸ்தானமாகும்,

 தலையை அடிக்கடி சொறிவது. தலையில் கை வைத்து உறங்குவது. முறையான தூக்கம் கூட இல்லாமல் போவது, தேவையில்லா கற்பனை. தேவையில்லா கவலை. இவைகள் யாவும் தகாத செயல்களாகும்,

 இதனால் நஷ்டம் நமக்கும் நம் குடும்பத்திற்கும் தான், வறுமையும் வற்றி வெறுப்பு பற்றிக்கொள்ளும், எனவே இதையெல்லாம் முறையாய் பாதுகாத்துக் கொள்ளுங்கள், லட்சுமி கடாட்சத்தோடு வாழுங்கள் .

            இதில் உள்ள முறைகளை ஒரு மாதம் மட்டுமாவது கடைபிடித்து பாருங்கள், நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் நிச்சயம் உயர்வீர்கள்,

 எதை நாம் அடைய விரும்புகிறோமோ அதை பற்றிய சிந்தனை நம் நினைவில் இருந்து நீங்கள் பார்த்துக் கொண்டாலே போதும், அதன் அருகில் நிச்சயம் செல்வோம், 

ஒரே செயலில் கவனம் செலுத்துவதும் தியானம் தான், அது மந்திரத்தை விட சக்தி வாய்ந்ததாகும், 

ஒரே லட்சியமாக செல்வ சந்தோஷத்தோடு நாங்கள் வாழ வேண்டும், எங்களால் யாருக்கும் துன்பம் ஏற்படகூடாது என நினைத்து இதில் உள்ள முறைகளை கடைபிடியுங்கள், உங்கள் வாழ்க்கை கோபுரமாகும்,

சந்தோஷம். சுபிட்சம். கடாட்சம். 

ஐஸ்வர்யம் கொண்டு வாழ்வீர்கள், இறுதி வரை வழிமுறைகளை பின்பற்றவும், கிடைத்தவுடன் விட்டு விடக்கூடாது .


பகவான் இராமகிருஷ்ணர்-5

*ஒவ்வொருவரும் ஒருநாள் ஈஸ்வரனைக் காண்பார்கள்.*
*கண்டுதான் தீரவேண்டும்.!*

அது

*இந்த ஜென்மத்திலோ அல்லது அநேக ஜென்மங்களுக்குப் பின்னரோ.!*

-பகவான் இராமகிருஷ்ணர்-

Thursday, March 31, 2022

பூலோக தென் கைலாயம் !

 பிரமிக்க வைக்கும் பூலோக தென் கைலாயம் !

வசதி இருந்தால் யார் வேண்டுமானாலும் விமானம், ஜீப் மற்றும் குதிரைகளின் உதவியுடன் வட கைலாயம் சென்று தரிசனம் செய்து திரும்பி விடலாம். ஆனால் தென் கைலாயமான இம் மலைக்கு உடல் பலமும், மன உறுதியும் ஈசன் அருளும் இருந்தால் மட்டுமே ஈசன் தரிசனம் கிடைப்பது சாத்தியம்.
சித்தர்கள், யோகிகள் மற்றும் அருளாளர்கள் பன்னெடுங்காலம் தங்கியிருந்து தவம்புரிந்து தெய்வீகத்தை உணர்ந்த தலம், அவர்கள் தெய்வீகத்தை உணர்ந்ததோடு நில்லாமல், அதனை உணர்த்தும் விதமான அதிர்வுகளையும் நிரப்பியிருக்கிற மலை வெள்ளியங்கிரி.
ஏழு மலைகளை சிரமப்பட்டு ஏறி வந்த ஈசன் முன் நிற்கும் போது நாம் அடையும் மகிழ்ச்சி, பூரிப்பு ஆகியவற்றை சொல்ல இயலாது. உடல் களைப்பு, மனச்சோர்வு, அசதி கால்வலி அனைத்தும் ஈசனைக் கண்ட அந்த ஒரு நொடிப் பொழுதில் மறைந்து விடுகிறது.
ஓம் நம சிவாய

தென்கயிலையேனும் வெள்ளியங்கிரிமலை

சிவசிவ
அன்பு அடியாா்பெருமக்களே
மகிமை மிக்க தென்கயிலையேனும்
வெள்ளியங்கிரிமலை பற்றிய அரிய தகவல்கள்...!அன்புஅடியாரவர்களுக்கு
சமர்ப்பனம் அனைவருக்கும்
வெள்ளியங்கிரி மலை என்றவுடன் அதன் பசுமையும் தெய்வீக அதிர்வுகளும் உடனே நினைவுக்கு வரும்.
அங்குள்ள 7 மலைகளிலும் உள்ள தெய்வீக இடங்களும், வரலாற்று சிறப்புகளும் என்னென்ன என்பதை பலரும் அறிந்திருப்பதில்லை.
வெள்ளியங்கிரி பற்றிய அரிய தகவல்கள் பலவற்றைக்கொண்டு ஒரு முழுமையான தொகுப்பாக இப்பதிவு அமைகிறது!
‘தென்னாடுடைய சிவனே போற்றி!’ என்று போற்றப்படும் சிவனுக்கு, தென்னாட்டில் உள்ள கயிலைதான், ‘தென் கயிலை’ என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை!
இயற்கையின் பேருருவில் இறைவனைக் காணுகிற மரபு நம்முடையது. வெள்ளியங்கிரியின் ஏழாவது மலையில் இருக்கும் சிவலிங்கம் இயற்கையாக எழுந்த சுயம்புலிங்கம்.
ஞானிகளும் சித்தர்களும், ஸ்தூல வடிவிலும் சூட்சுமவடிவிலும் நடமாடுகிற புனிதமிக்க மலை வெள்ளியங்கிரி. இதில் பயணம்செய்வது பரமனைப் படிப்படியாய் நெருங்குவதற்குச் சமம்! ஏழு மலைகளைக்கொண்டது வெள்ளியங்கிரி.
இறைவனை நேசிப்பவர்களும் இயற்கையை நேசிப்பவர்களும் இதயம் கரைந்து ஈடுபடுகிற மலை, வெள்ளியங்கிரி.
இந்த ஏழு மலைகளும் மனித உடலில் சூட்சுமமாக உள்ள ஏழுசக்கரங்களின் குறியீடு. பங்குனி, சித்திரை மாதங்களில் சிவகோஷம் எழுப்பிய வண்ணம் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக மலையேறி வழிபடுவது வழக்கம். ஆண்டு முழுவதும் மலையேற வருகிற பக்தர்களும் உண்டு.
முன்பெல்லாம் கைகால்களால் தவழ்ந்து ஏறி வந்த இந்த மலையில் இப்போது படிக்கட்டுகள் வந்துவிட்டன.
முதல் மலை செங்குத்தான பாதைகொண்டது. ஏறுவதற்குச் சிரமப்பட வேண்டிவரும். இந்த மலைப் பாதையின் ஆரம்பத்தை ஆன்மிகப் பாதையின் ஆரம்பத்துக்கு நாம் ஒப்பிடலாம்.
ஆன்மிகப் பயிற்சிகளைப் பின்பற்றுவது எப்படி ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருக்குமோ, அது போல முதல் மலை ஏறுவது சற்றே சிரமமாக இருக்கும். முதல் மலையைத் தாண்டி வருபவர்களை வரவேற்க, விநாயகப்பெருமான் காத்திருக்கிறார்.
பயணம் பழகிவிட, சுனையில் நீர் குடித்து இரண்டாவது மலையில் உற்சாகமாக நடையிடும்போது, அதன் எல்லையாக நிமிர்ந்து நிற்கிறது வழுக்குப் பாறை ஒன்று. இந்தப் பாறையில் ஏறும்போது புதுமையாய் இருக்கிறது. வழுக்குப் பாறை வந்தவுடனேயே இரண்டாவது மலை முடிந்துவிட்டதை பக்தர்கள் புரிந்துகொள்கிறார்கள்.
மூன்றாவது மலையும் ஒரு சுனையோடு துவங்குகிறது. இதற்கு ‘கைதட்டிச்சுனை’ என்று பெயர். இந்தச் சுனை இருக்கும் பகுதிகளில் சித்தர்கள் நடமாட்டம் மிகுதி என்பதால், இங்கே நின்று கை தட்டினால் பாறைகளின் இடுக்கிலிருந்து தண்ணீர் வரும் என்ற ஒரு நம்பிக்கை. இதனாலேயே கை தட்டிச் சுனை என்ற பெயர்.
மூன்றாவது மலை முடிவடைவது இன்னொரு சுனையில். இதற்கு ‘பாம்பாட்டிச்சுனை’ என்று பெயர். பாம்பாட்டிச் சித்தர் என்று சொன்ன மாத்திரத்தில் நம் நினைவுக்கு வருவதென்னவோ, மருதமலைதான்.
அந்தப் பாம்பாட்டிச் சித்தர் இந்த இடத்திலேயும் வசித்திருக்கக்கூடும். குண்டலினி சக்தியின் குறியீடாக பாம்பு இருப்பதையும் நாம் நினைவுகொள்ள வேண்டும்.
மனிதர்களின் குண்டலினி ஆற்றலை ஆட்டுவிக்கிற வல்லமை சித்தர்களுக்கு இருப்பதாலேயே பாம்பாட்டிச் சித்தர் என்பது ஒரு முக்கியமான சொல்லாக விளங்குகிறது.
நான்காவது மலை, சமதளத்தில் இருக்கிறது. நடந்து போக எளிதாகவும் பக்தர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள வாய்ப்பாகவும் இந்த மலை விளங்குகிறது.
இது மண் மலையாக இருக்கிறது. ஒருபுறம் அடர்ந்த வனமாகவும், மறுபுறம் பாதாளமாகவும் அமைந்திருக்கிறது.
இந்த நான்காம் மலையில்தான் ஒட்டர் என்கிற சித்தர் சமாதி அடைந்திருக்கிறார். எனவே, ‘ஒட்டர் சமாதி’ என்கிற பெயர் வெள்ளியங்கிரி பக்தர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர்.
ஐந்தாம் மலைக்கு ‘பீமன் களியுருண்டை மலை’ என்று பெயர் உண்டு. பஞ்ச பாண்டவர்கள் தாராபுரத்தில் தங்கி இருந்ததாகவும் அப்போது வெள்ளியங்கிரிக்கு வந்ததாகவும் நம்பப்படுகிறது.
எனவே, பீமன் களியுருண்டை மலை, அர்ச்சுனன் தவம் செய்த இடமாகக் கருதப்படும் ‘அர்ச்சுனன் தலைப் பாறை’ போன்ற இடங்களெல்லாம் இங்கே உண்டு.
ஐந்தாம், ஆறாம் மலைகள் ஏற்ற இறக்கம் நிரம்பியதாய், ஒன்றோடொன்று நெருக்கமாய் அமைந்திருக்கின்றன. இந்த இரண்டு மலைகளுக்கு நடுவில் சேத்திழைக் குகை உள்ளது.
இந்தக் குகையில் ஒரே நேரத்தில் 60 – 70 பேர் வரை தங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறாவது மலை, கீழ் நோக்கி இறங்கக்கூடியது.
இங்கே பாயக்கூடிய சுனை ‘ஆண்டிசுனை’. இது நீலி ஆற்றில் சேர்கிறது. இங்கே குளிப்பது மறக்க முடியாத, சுகமான அனுபவம் என்கின்றனர் பக்தர்கள். ஐந்தாவது மற்றும் ஆறாவது மலைகள், வெள்ளை மணல் கொண்டவை.
எனவே, இவற்றுக்கு ‘திருநீற்றுமலை’ என்றும் பெயர் உண்டு. இந்தத் திருநீற்று மலையிலிருந்து வெள்ளை மணலை இறைவனுடைய திருநீறாகவே போற்றி வீடுகளுக்குக் கொண்டு செல்வது பக்தர்களின் வழக்கம்.
‘சுவாமி முடி மலை’ என்று பெயர்கொண்ட ஏழாவது மலை மேல் ஏறுவது, முதல் மலையில் ஏறியபோது இருந்த அதே அளவு சிரமமும் சவாலுமானது.
இதில், பெரும் பாறைகள் மூன்றும் சேர்ந்து இயற்கையாகவே தோரணம்போல் அமைந்திருக்கும் அரிய காட்சி கண்களுக்கு விருந்தாகிறது.
இதைத் ‘தோரண வாயில்’ என்று அழைக்கிறார்கள். ஏழாவது மலையில் இருக்கிற சுயம்புலிங்கம் அனைவராலும் வழிபடப்படுகிற வெள்ளியங்கிரி ஈசன்.
மலையேறி வந்த களைப்பும் நாம்தானா ஏறி வந்தது என்கிற மலைப்பும் பறந்து போகும்விதமாய் அடர்ந்த வனங்களின் மடியில் உயர்ந்த மலைகளின் நடுவில் யுகம்யுகமாய் கோயில்கொண்டு இருக்கிறார் வெள்ளியங்கிரி ஈசர்.
கரிகால சோழனிடம் சமய முதலிகள் ‘வெள்ளியங்கிரிச் சாரலில் பிறந்தாலும், இருந்தாலும், இறந்தாலும் முக்தியே கிடைக்கும்!’ என்று தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.
வெள்ளியங்கிரியின் எந்தவொரு மலையையோ, லிங்கத்தையோ வழிபட்டாலும், அவர்கள் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய பலன்களைப் பெறுவார்கள் என்று தெய்வீக நூல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளியங்கிரி மலை, இறைமையின் மகத்துவத்துக்கு மட்டுமின்றி இயற்கையின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிற மேன்மையான தலம்.
பற்பல சுனைகளும் சிற்றருவிகளும் உருவெடுக்கும் வெள்ளியங்கிரி மலையில் மூங்கில், தேக்கு, சோதிப் புல், சோதிக்காய், மிளகு, திப்பிலி, உதிரவேங்கை, வசுவாசி, வாடா மஞ்சள், காட்டுப்பூ, சிவப்புக் கற்றாழை, கற்பூரவல்லி, ரத்தசூரி, ஏறு சிங்கை, இறங்கு சிங்கை, சோழைக் கிழங்கு, கருங்கொடிக் கிழங்கு உள்ளிட்ட பல்வேறு அரிய தாவரங்களும் மூலிகைகளும் கிடைப்பதாக சித்த மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மலைகள் பொதுவாகவே மகிமை மிக்கவை. சித்தர்கள், யோகிகள் மற்றும் அருளாளர்கள் பன்னெடுங்காலம் தங்கியிருந்து தவம்புரிந்து தெய்வீகத்தை உணர்ந்த தலம், வெள்ளியங்கிரி.
அவர்கள் தெய்வீகத்தை உணர்ந்ததோடு நில்லாமல், அதனை உணர்த்தும் விதமான அதிர்வுகளையும் நிரப்பியிருக்கிற மலை வெள்ளியங்கிரி.
மண்ணுலகம் சிறக்கவும் அருள் நெறியில் ஈடுபட்டு மக்கள் தங்களை உணரவும் வேண்டிய வழிகாட்டுதல்களை வழங்குகிற அருட்களஞ்சியமாய், பேரருளின் பிரம்மாண்டமாய், தென் கயிலாயமாய் நிமிர்ந்து நிற்கும் வெள்ளியங்கிரி மலை தெய்வீகத்தின் உறைவிடம், ஞானத்தின் நிறைகுடம்
யாம் எனது சிறு வயது முதலே இம்மலைகளில் நிறைய முறை
பயணம் மேற்கொண்டுஉள்ளோம்
ஓவ்வோரு ஜீவனும் வாழ்வில்
ஓருமுறையேனும் தென்கயிலையேனும்
வெள்ளியங்கிரிசென்று வாருங்கள்
திருச்சிற்றம்பலம்

மதிப்புடைய அனைத்தும் சோதிக்கப்படும்

 மதிப்புடைய அனைத்தும் சோதிக்கப்படும் இதுவே இயற்கை விதி.

மாற்றங்களே வாழ்வுக்கான விடை
மனதார ஏற்றுக்கொள்.
மனம் ஓயாது மகேசன் வாரான்

வாரியார் #சொன்ன #கற்பூரகதை.

 #வாரியார் #சொன்ன #கற்பூரகதை.

~``~``~``🔥🍌🥥 🔥 ``~``~``~
பக்தன் ஒருவன் கோயிலுக்குச் சென்றான். அவனது கூடையில் ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதற்காக வாழைப்பழம், தேங்காய், கற்பூரம் ஆகியன இருந்தன.
தேங்காய் பேச ஆரம்பித்தது: ”நம் மூவரில் நானே கெட்டியானவன், பெரியவனும்கூட!” என்றது. அடுத்து வாழைப்பழம், ”நமது மூவரில் நானே இளமையானவன், இனிமையானவன்” என்று பெருமைப்பட்டுக் கொண்டது. கற்பூரமோ எதுவும் பேசாமல் மௌனம் காத்தது.
பக்தன் சந்நிதியை அடைந்தான். தேங்காய் உடைபட்டது. பழத்தோல் உரிக்கப்பட்டது. கற்பூரமோ தீபம் ஏற்றியதும் கரைந்து ஒன்றும் இல்லாமல் போனது. பக்தர்களாகிய நாம் இதிலிருந்து ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தேங்காய் போல் கர்வத்துடன் இருந்தால், ஒருநாள் நிச்சயம் உடைபடுவோம்.
இனிமையாக இருந்தாலும், வாழைப்பழம் போல் தற்பெருமை பேசித் திரிந்தால் ஒருநாள் கிழிபடுவோம். ஆனால் கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால், இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்.🔥

திண்டீச்சரம் (திண்டிவனம்) Thindeechuram (Tindivanam)

 திண்டீச்சரம் (திண்டிவனம்) Thindeechuram (Tindivanam)

🙏இறைவர் திருப்பெயர்:
திந்திரிணீஸ்வரர்.
🙏இறைவியார் திருப்பெயர்:
மரகதவல்லி, மரகதாம்பாள்
தல மரம்:
🙏புளியமரம்
தீர்த்தம் :
🙏வழிபட்டோர்:
வால்மீகி, வியாசர், டிண்டி, முண்டி,கில்லி, கில்லாலி ஆகிய முனிவர்கள்
Sthala Puranam
🙏தற்போது திண்டிவனம் என வழங்கும் ஊராகும்.
🙏கோயில் உள்ள தெருவுக்கு ஈசுவரன் கோயில் தெரு என்றே பெயர்.
🙏மக்கள் 'ஈசுவரன் கோயில்' என்றும் 'திந்திரிணீஸ்வரர் கோயில்' என்றும் வழங்குகின்றனர்.
🙏திந்திருணி, புளிதிந்திருண்வனம் - புளியமரக்காடு, இச்சொல் மருவி வழக்கில் திண்டிவனம் என்றாயிற்று. புளியமரக் காடுகளால் சூழப்பட்ட பகுதி என்று பெயர்.
🙏வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - 1. தெள்ளும் புனற்கெடில (6-7-8),
2. திண்டீச்சரஞ் சேய்ஞலூர் (6-70-9).
Specialities
🙏இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
🙏மூலவர் சுயம்பு மூர்த்தி; சிவலிங்கத் திருமேனி.
🙏பெரிய கோயில்; கீழ்ப்புறம் கருங்கல்லாலும் மேற்புறம் செங்கல்லாலும் கட்டப்பட்ட கட்டுமானமுடையது.
🙏இத்தலம் வால்மீகி, வியாசர், டிண்டி, முண்டி, கில்லி, கில்லாலி ஆகிய முனிவர்களால் பூசிக்கப்பட்டது.
🙏இக்கோயிலின் விமானம் வியாச முனிவரால் தாபிக்கப்பட்டது.
🙏இச்சிவாலயக் கல்வெட்டில் இவ்வூர் "ஓய்மாநாட்டு..... திருத்தீண்டீஸ்வரம்" என்று குறிக்கப்பட்டுள்ளது.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் செல்லும் எல்லா பேருந்துகளும் திண்டிவனம் வழியாகச் செல்கின்றன







வஜ்ராயுத லிங்கம்,உப்பு லிங்கம்

 அனைத்து சிவ சொந்தங்களுக்கும் இனிய காலை வணக்கம் ...! ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் ஹரஹர மகாதேவா #உப்பு_லிங்கம் !

#ராமேஸ்வரம்ராமநாதர் #கோவிலில்உப்பு #லிங்கம்*_
#இதை_வஜ்ராயுத
#லிங்கம்_என்று
#அழைப்பர்.
காசிக்கு நிகராக போற்றப்படும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சீதை உருவாக்கிய சிவலிங்கம், அனுமன் கொண்டு வந்த காசி லிங்கம், தவிர வேறு ஒரு சிவலிங்கமும் சிறப்பாக போற்றப்படுகிறது. அதுதான் உப்பு லிங்கம்!
இது அதிக சக்தி வாய்ந்தது; அபூர்வமானதும்கூட. சுவாமி சந்நதிக்குப் பின்புறம் இந்த லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெற்றாலும் லிங்கம் கரைவதில்லை. அதனால் இந்த லிங்கம் ‘வஜ்ராயுத லிங்கம்’ எனவும் போற்றப்படுகிறது. இவரை வழிபட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. ராமேஸ்வரத்தில் சிவராத் திரி அன்று காலை திறக்கும் கோயிலை மறுநாள் பிற்பகலில்தான் மூடுவார்கள். இரவு முழுவதும் ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகள் நடக்கும். தேவராரம், திருவாசகம், ருத்ர, சமக பாராயணங்கள் தொடர்ந்து ஒலிக்க நான்கு ஜாமங்களிலும் தனித்தனி அலங்காரத்தில் சுவாமி திருவுலா வந்து அருட்பாலிப்பார்.
#உப்புலிங்கம்*
ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில், ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் உப்பு லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
இந்த லிங்கம் வந்ததற்கு ஒரு கதை கூறப்படுகிறது.
ஒரு முறை சிலர், ‘இந்தக் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள்.
அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை.
‘அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாதபோது, காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் என்ன அதிசயம் இருக்கிறது’ என்று கூறினார். அவர் செய்த உப்பு லிங்கத்தை இப்போதும் நாம் தரிசனம் செய்யலாம்...
முப்பொழுதும்... நற்றுணையாவது நமசிவாயவே அருள்மிகு ஸ்ரீ பிரகலாதீஸ்வரர் சமேத லோகநாயகி அம்மாள் திருவடிகள் போற்றி போற்றி*
அடியேன்: ஞானன்
ஞானக்கண் அருட்பணி மன்றம் இ.துரைசாமியாபுரம் என் கடன் பணி செய்து கிடப்பதே. இறைப்பணி செய்வோம். இன்பமாக வாழ்வோ
May be an image of 1 person



நம் வம்சம் வாழையடி வாழையாய் வளர அமாவாசையில் குலதெய்வ வழிபாடு !

 நம் வம்சம் வாழையடி வாழையாய் வளர அமாவாசையில் குலதெய்வ வழிபாடு !

இன்று பங்குனி 17, மார்ச் 31/3/2022
சிறப்பு: அமாவாசை விரதம்
வம்சத்தை வாழையடி வாழையாய் வளர செய்யும் குல தெய்வத்தையும் அமாவாசை நாளில் வழிபடுவது சிறப்பு.ஒவ்வொரு அமாவாசைக்கும் இந்த பிரபஞ்சம் முழுவதும் விசேஷமான சக்திகள் நிறைந்து காணப்படும் என்பது நியதி.அமாவாசையில் வழிபடும் வழிபாட்டு முறைகள் விசேஷமான பலன்களைத் கொடுக்கின்றன.
பங்குனி அமாவாசையில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவதும் அல்லது அவருடைய படத்தை வீட்டில் வைத்து தூப, தீப, ஆரத்தி காண்பித்து வழிபடுவதும் குலதெய்வ சாபத்தையும், தோஷத்தையும் போக்கும்.
அமாவாசையில் உணவேதும் உண்ணாமல் தினமும் மந்திரங்களை உச்சரித்து விரதமிருந்து வழிபட்டு வந்தால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். அமாவாசை விரதம் இருக்க சிறந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவது என்பது விசேஷ சக்திகளை கொடுக்கும். இது உங்களிடம் இருக்கும் கெட்ட சக்திகளை விலகி ஓட செய்யும்.
வீட்டை சுத்தம் செய்ய அன்றைய நாளில் தண்ணீருடன் சிறிது அளவு கல் உப்பு சேர்த்து துடைத்து எடுக்கலாம். காலை, மாலை இருவேளையும் பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும்.
அமாவாசை நாளில் விரதம் இருப்பவர்கள், விரதம் இல்லாதவர்கள் என்று யாராக இருந்தாலும் புலால் உணவைத் தவிர்ப்பது நல்லது. பூண்டு, வெங்காயம் போன்ற பொருட்களை சேர்த்த சைவ உணவை சேர்த்து தவிர்க்க வேண்டும். அமாவாசை தினத்தில் சாப்பிட கூடாத பொருட்கள் இது ஆகும்.
குலதெய்வ அருள் பெறவும் அமாவாசை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க அமாவாசை நாளில் மந்திர ஸ்லோகங்களை உச்சரிப்பதும் அல்லது ஒலிக்க விடுவதும் செய்ய வேண்டும்.
உங்களுக்கு தெரிந்த சிறு சிறு மந்திரங்களை கூட அமாவாசை நாளில் உச்சரித்து பாருங்கள். நல்ல பலன்கள் எல்லாம் கிடைக்கும். பொன், பொருள் சேரவும், சகல சம்பத்தும் கிடைக்கும்.
அமாவாசை நாளில் முன்னோர்களின் ஆசி பெறுவது, குல தெய்வத்தை வணங்குதல், தினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால், வீட்டில் இருக்கும் தரித்திர நிலை நீங்கும். திருமண தாமதம், ஏழ்மை விலகி உங்கள் அனைத்து முயற்சிக்கும் நல்ல வெற்றி ஏற்படும்.
No photo description available.



Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...