Saturday, March 26, 2022

அற்புத பலனை தரும் தண்ணீர் சிகிச்சை

*அற்புத பலனை தரும் தண்ணீர் சிகிச்சை*

முதலில் தண்ணீர் சேமிக்க செப்புப் பாத்திரத்தை
(copper) எற்பாடு செய்து கொள்ளவும்.

முதல் நாள் இரவில் சுமார்
 1 ¼ லிட்டர் (If possible don't use mineral water) தண்ணீரை செப்புப் பாத்திரத்தில் பத்திரப்படுத்தவும். 

அதிகாலை 4 மணிக்கு எழுந்து பல் துலக்காமல் தண்ணீர் முழுவதையும் அல்லது முடிந்த அளவு அருந்தவும். 

கொஞ்ச கொஞ்சமாக அளவை அதிக்கப்படுத்தி 1 ¼ தினமும் குடித்து விடவும். தண்ணீர் குடித்து முடித்த பிறகு, ஒரு மணி நேரத்திற்கு வேறு ஏதும் பானமோ(drinks) உணவோ கூடாது.

காலை, மதியம், இரவு மூன்று வேளை உணவு முடித்த 1/2 மணி நேரம் பின்னரும், இரண்டு மணி நேரம் கழித்து தண்ணீர் அருந்தவும். படுக்கைக்குச் செல்கையில் நொறுக்குதீனி எதும் சாப்பிடக்கூடாது. 

மிகவும் நோய்வாய்ப் பட்டவர்கள், ஆரம்பத்திலேயே 1 ¼ லிட்டர் அளவு தண்ணீர் குடிக்கக் கூடாது. முதலில் கால் லிட்டர் தொடங்கி, கடைசியில் 1 ¼ லிட்டர் என்ற அளவிற்கு பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

*தண்ணீர் சிகிச்சை* *குணமாகும்*
*நோய்கள்*

1. உடல் பருமன், தொப்பை, கொழுப்பு நோய்கள்

2. தலைவலி, பக்கவாதம், இரத்த சோகை

3. இருமல், சளி, ஆஸ்துமா, காசநோய்

4. கல்லீரல் நோய்கள்

5. மலச்சிக்கல், மூலம், சர்க்கரை நோய்கள்

6. பெண் உறுப்பு கோளாறுகள், கருப்பை கோளாறுகள்.

தண்ணீர் சிகிச்சை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் கீழ்க்கண்ட கால அளவுகளில் நோய்கள் குணமாகிறது. 

1. இரத்த அழுத்தம் 1 மாதத்தில் குணமாகிறது.

2. உடல் பருமன், தொப்பை – 2 மாதத்தில் குணமாகிறது.

3. வாயுக் கோளாறுகள் – 10 நாளில் குணமாகிறது.

4. புற்றுநோய் - 6 மாதத்தில் குணமாகிறது.

5. சர்க்கரை வியாதி 1 மாதத்தில் குணமாகிறது.

6. மலச்சிக்கல் 10 நாளில் குணமாகிறது.

7. காசநோய் – 3 மாதத்தில் குணமாகிறது.

8. மூட்டு வலி – 7 நாளில் குணமாகிறது.

Friday, March 25, 2022

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு வர..

வியாழக்கிழமை இதை செய்தால் போதும்...!!
வெள்ளிக்கிழமை மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு வர... 

பொதுவாகவே வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி நம் வீடு தேடி வர வேண்டும் என்பதற்காக நம் வீடு முழுவதையும் வியாழக்கிழமை அன்றே சுத்தம் செய்து விடுவோம். குறிப்பாக பூஜை அறையை சுத்தம் செய்து, வெள்ளிக்கிழமை பூஜைக்குத் தயாராக வைத்து இருப்போம். 

ஆனால் மகாலட்சுமி குடி கொண்டிருக்கும், அன்னலட்சுமி குடி கொண்டிருக்கும், அஷ்டலட்சுமிகளும் குடி கொண்டிருக்கும் சமையலறையை யாரும் கவனிப்பது கிடையாது. 

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி மனநிறைவோடு நம் வீட்டிற்கு வருகை தர, வியாழக்கிழமை என்னென்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்? என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்...!

வியாழக்கிழமை அன்று இரவு மட்டும் அல்ல, தினந்தோறும் இரவு நேரத்தில் சமையலறையில் எச்சில் பாத்திரங்கள் கட்டாயம் இருக்கக்கூடாது. முடிந்தவரை எச்சில் பாத்திரத்தை சுத்தம் செய்துவிட்டு, அதன் பின்பு தூங்கச் செல்வது நம் வீட்டிற்கு நன்மையை தரும்.

குறிப்பாக வியாழக்கிழமை அன்று சமையலறை, சமையல் மேடை, அடுப்பை சுத்தம் செய்து சில இடங்களில் மஞ்சள், குங்கும பொட்டை வைத்திருக்க வேண்டும். 

எந்தெந்த இடங்கள்? 

அடுப்பு,உப்பு ஜாடி, அஞ்சறைப் பெட்டி, அரிசி கொட்டி வைத்திருக்கும் பாத்திரம், 
அருவாமனை அல்லது கத்தி 

இந்த பொருட்களில் எல்லாம் கட்டாயம் மஞ்சள், குங்கும பொட்டு வைப்பது மிகவும் நல்லது. இதை தவிர்த்து உங்களுக்கு வேறு ஏதேனும் பொருட்களுக்கு மஞ்சள், குங்கும பொட்டு வைக்க வேண்டும் என்ற இஷ்டம் இருந்தால் நீங்கள் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். 

இதோடு சமையலறை மேடையில் கொஞ்சமாக பச்சரிசி மாவில் மஞ்சள் பொடியை கலந்து மஞ்சள் நிறத்தில் சிறிய கோலம் போட வேண்டும். வியாழக்கிழமை இரவு இதை செய்துவிடுங்கள். 

மறுநாள் காலை வெள்ளிக்கிழமை குளித்து முடித்துவிட்டு முதலில் மகாலட்சுமியை வேண்டிகொண்டு பாலைக் காய்ச்சுங்கள். அந்த பால் பொங்கி வழிவது போல உங்கள் இல்லமும் எப்போதும் சந்தோஷத்தில் பொங்கி வழியும். 

வாரம் ஒரு நாள் வியாழக்கிழமை அன்று சிரமம் பார்க்காமல் எந்த ஒரு வீட்டில், சமையலறையை இப்படி பராமரித்து வருகின்றார்களோ அந்த வீடு நிச்சயமாக சுபிட்சம் அடையும். 

மெழுகுவர்த்தி :

இதேபோல் தினந்தோறும் இரவு நேரத்தில் சமையல் அறையில் இருக்கக்கூடிய வேண்டாத எதிர்மறை ஆற்றல் அந்த இடத்தை விட்டு அகல வேண்டும் என்றால் சமையல் அறையில், ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்க வேண்டும். சிறிய அளவிலான மெழுகுவர்த்தியை ஏற்றினால் போதும். இரண்டு நிமிடங்கள் அந்த மெழுகுவர்த்தி எரிந்து உருகி அணைந்து போனாலும் சரி, உங்கள் சமையலறையில் இருக்கக்கூடிய கெட்ட சக்திகள் சமையலறையை விட்டு நீங்கிவிடும். 

சமையலறையில் எப்படி கெட்ட சக்தி குடிகொள்ளும்? 

சமையலறையில் சமைக்கும் பெண்கள் ஒரே மனநிலையில் சமைப்பது கிடையாது. சில சமயங்கள் சந்தோஷமாக சமைக்கும் தருணங்களும் உண்டு. சில சமயம் அடுத்தவர்களை திட்டிக்கொண்டு சமைக்கும் தருணங்களும் உண்டு. அடுத்தவர்களை திட்டும்போது கட்டாயமாக அந்த இடத்தில் எதிர்மறை ஆற்றல் செயல்பட தொடங்கிவிடும்.

இதோடு மட்டுமல்லாமல் சிலர் அசைவம் சமைக்கும் பழக்கத்தையும் வைத்திருப்பவர்கள். அதன் மூலம் ஏதேனும் தோஷங்கள் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்வதற்கு ஒரு சிறிய மெழுகுவர்த்தி போதும்.

நன்றி வாழ்கவளமுடன்

Thursday, March 24, 2022

பகவான் இராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள்..3

*இரவில் வானத்தில் ஏராளமான நட்சத்திரங்களைப் பார்க்கிறோம்.*

*சூரியன் உதயமானதும் நட்சத்திரங்கள் தெரிவதில்லை.*

*அதனால் பகற்பொழுதில் நட்சத்திரங்களே இல்லை என்று சொல்ல முடியாது அல்லவா.*

*அதுபோல நாம் போதிய அறிவு பெறாமல் அறியாமையுடன் இருக்கும் பொழுது இறைவன் இருப்பதை உணர்ந்து அறியமுடியாமல் இருப்பதால் இறைவனே இல்லை என்று சாதிக்கக்கூடாது.*

-பகவான் இராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள்-

காரைக்கால் அம்மையார்

பேரழகும், தெய்வீக அம்சமும் கொண்ட அம்மையார், சிறுவயதில் இருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இவரது வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

வரலாற்றில் காரைவனம் என்றழைக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தில், வணிகர்களின் தலைவராக இருந்த தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு காரைக்கால் அம்மையார் என்கிற புனிதவதியார் மகளாகப் பிறந்தார். பேரழகும், தெய்வீக அம்சமும் கொண்ட அம்மையார், சிறுவயதில் இருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இவரை, காரைக் காலை அடுத்த நாகைப்பட்டினத்தில் உள்ள நீதிபதி ஒருவரின் மகனான பரமதத்தர் என்ற வணிகருக்கு மணமுடித்து கொடுத்தனர். ஒரே மகள் என்பதால், காரைக்காலிலேயே வணிகம் செய்து, வசிக்க வழிவகை செய்தனர்.

சிவனடியார் வேடத்தில்...

ஒருசமயம் பரமதத்தன் தனது கடையிலிருந்தபோது, மாங்கனி வியாபாரி ஒருவர், தனது வீட்டுத்தோட்டத்தில் காய்த்த இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து பரமத்தத்தரிடம் கொடுத்தார். அக்கனிகளை பெற்ற பரமதத்தர், அதனை தன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து, அம்மையாரின் சிவபக்தியை சோதிக்கும் பொருட்டு, அம்மையாரின் வீட்டிற்கு சிவபெருமான் சிவனடியார் வேடத்தில் உணவுவேண்டி வந்தார்.

அவரை வரவேற்று தயிர்கலந்த அன்னம் படைத்து, அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார். அதனை உண்ட சிவனடியார் அம்மையாரை வாழ்த்திச் சென்றார். பின்னர், மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தருக்கு பல வகை பதார்த்தங்களுடன் அன்னம் பரிமாறிய அம்மையார், மீதமிருந்த ஒரு மாங்கனியை அவருக்கு வைத்தார்.

மாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, தன் கொடுத்தனுப்பிய மற்றொரு மாங்கனியையும் தனக்கு வைக்கும்படி கேட்டார் பரமதத்தர். அம்மையார் செய்வதறியாது திகைத்து மற்றொரு அறைக்குள் சென்று சிவபெருமானிடம் வேண்டினார். அப்போது, மேலிருந்து அம்மையார் கையில் ஒரு மாங்கனி வந்து தங்கியது. மகிழ்ச்சி அடைந்த அம்மையார் அதனை கணவருக்கு அதனை படைத்தார்.

முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கனி அதிக சுவையுடன் இருக்கவே சந்தேகமடைந்த பரமதத்தர், இது ஏது? என்றார். அம்மையார் நடந்ததை கூறினார். அக்காரணத்தைப் பரமதத்தர் நம்பவில்லை. சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படி கூறினார். அம்மையார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி மேலிருந்து அம்மையார் கையில் வந்து தங்கி, பிறகு மறைந்தது. இதைக்கண்டு வியந்த பரமதத்தர், நீ மனிதப்பிறவி இல்லை. தெய்வப்பெண், உன்னுடன் நான் இனி வாழ்தல் சரியாகாது என்று கூறி, அம்மையாரை விட்டு பிரிந்து, வாணிபம் செய்ய பாண்டிய நாடு சென்றார்.

பின்னர் பரமதத்தர் பாண்டிய நாடான மதுரை மாநகர் சென்று மற்றொரு பெண்ணை மணம் முடித்து அங்கேயே வாழ்ந்து வந்தார். சிலகாலம் கழித்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அம்மையாரின் திருப்பெயரான புனிதவதியார் என்ற பெயரையே வைத்தார். பரமதத்தர் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, அம்மையாருடைய உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் அம்மையாரை அழைத்துக்கொண்டு பாண்டி நாடு சென்றனர். அம்மையாரை கண்ட பரமதத்தர், அவரைத் தெய்வமாக வணங்கித் தனது இரண்டாவது மனைவி, குழந்தையுடன் காலில் விழுந்தார். கணவர் தன் காலில் விழுந்ததை ஏற்க முடியாத அம்மையார், தனது அழகுமேனி அழிந்து, பேய் வடிவத்தை வழங்குமாறு இறைவனிடம் வேண்டி பெற்றார்.

திருப்பதிகம்

தொடர்ந்து, அம்மையார் இறைவனைக் காண கயிலாயம் சென்றார். கயிலாயம் இறைவன் உறையும் புனிதமான இடம் என்பதால், அங்கு தரையில் கால் ஊன்றாமல், தலைகீழான நிலையில் அம்மையார் நடந்துச் சென்றார். இதனை பார்த்த சிவபெருமான், “அம்மையே வருக. அமர்க” என அழைத்து, “நீ வேண்டுவன கேள்” என்றார். அதற்கு அம்மையார் “பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி, அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க” என்றார். அவ்வாறே அருளிய இறைவன் அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு அருளிய இறைவன் தன் திருவடிக் கீழ் என்றும் இருக்க அருளினார். அங்கு சென்ற அம்மையார், 11 பாடல்கள் கொண்ட திருப்பதிகம் பாடி இறைவனின் நிழலின் கீழ் வீற்றிருக்கலானார்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், காரைக்கால் அம்மையார் கோவிலில் 4 நாட்களும், தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் 26 நாட்களும் என ஒரு மாதக்காலம் மாங்கனித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் அம்மையார்

அறுபத்து மூன்று நாயன்மார்களில் காரைக் கால் அம்மையார் மட்டுமே அமர்ந்த நிலையில் காட்சித்தருவார். காரணம், பிரிந்து சென்ற கணவரை பாண்டிய நாட்டுக்கு அம்மையார் தேடிச்செல்லும்போது, கணவர் குடும்பத்தோடு அம்மையார் காலில் விழுந்ததும், மனம் வெதும்பிய அம்மையார், தனக்கு இந்த அழகுமேனி வேண்டாம், பேய் உருவம் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டியதும், இறைவன் அம்மையார் வேண்டியபடி செய்தார்.

பேய் உருவம் தாங்கிய அம்மையார், ‘அற்புத திருவந்தாதி’, ‘திருவிரட்டை மணிமாலை’ பாடியபடி சிவபெருமானின் இருப்பிடமான கயிலை மலையை அடைந்தார். இறைவன் இருக்கும் இடம் என்பதால், கால் வைக்க மனம் ஒப்பாமல், தலையாலேயே அம்மையார் நடந்து மலை உச்சிக்கு சென்று இறைவனை அடைந்தார். அங்கு அம்மையாரை வரவேற்ற சிவபெருமான், அம்மையே அமர்க! என்று கூறினார். இறைவனே அம்மையாரை அமரச் சொல்லியதால் அறுபத்து மூன்று நாயன்மார்களில் அம்மையார் ஒருவர் மட்டுமே அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இறைவன் மீது முதன் முதலாக பாடல் பாடிய முதல் பெண் புலவர் காரைக்கால் அம்மையார் ஒருவரே.

மாங்கனியின் மகிமை

முக்கனிகளுள் ஒன்றான மாங்கனிக்கு முக்கியத்துவம் கொடுத்து விழா நடைபெறுவது உலகிலேயே காரைக்காலில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சாமிக்கு மாங்கனியுடன் பட்டுத்துணி சாத்தி வழிபடும் பக்தர்கள், சாமி வீதிஉலாவை தொடர்ந்து தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய மகிழ்ச்சியில் மாங்கனிகளை வாரி இறைக்கின்றனர். முக்கியமாக இறைக்கப்படும் மாங்கனியை குழந்தைபேறு இல்லாத கணவனும், மனைவியும் உண்டால் அவர்களுக்கு அடுத்த ஆண்டே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அமுது படையலில் தயிர் சாதம்

உலகிலேயே சிவபெருமான் அமுது உண்ட ஒரே இடம் காரைக்கால் அம்மையார் எனும் புனிதவதியார் இல்லத்தில் மட்டுமே. சிறு வயது முதல் சிறந்த சிவ பக்தையாக விளங்கிய காரைக்கால் அம்மையாரின் பக்தியை சோதிக்கும் பொருட்டு, சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் அம்மையாரின் இல்லத்திற்கு உணவு வேண்டி செல்வார். சிவபெருமானின் பசித்த நிலையைக் கண்ட புனிதவதியார், கணவர் கொடுத்தனுப்பிய 2 மாங்கனிகளில் ஒன்றை, தயிர் சாதத்துடன், சிவபெருமானுக்கு பறிமாறுவார். எனவேதான் மாங்கனித் திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியில், பிச்சாண்டவர் வீதிஉலா முடிந்து, அமுதுபடையல் நிகழ்ச்சி நடைபெறும்போது, பிச்சாண்டவருக்கு, மாங்கனியுடன் தயிர்சாதத்தை அம்மையார் படைக்கும் நிகழ்வு நடைபெறும். பக்தர் கள் பலர் சாமி ஊர்வலத்தின் போது, மோர், தயிர்சாதத்தை அன்னதானமாக வழங்கி வருகின்றனர்.

Sunday, March 20, 2022

குளிகை கால மந்திர ஜபம்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்
மதியம் 3 மணி முதல் மாலை 4.30 வரையிலான நேரத்தில் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே

*ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ*
என்று ஜபியுங்கள்;

இந்த ஒன்றரை மணி நேரமும் ஜபிக்க இயலாதவர்கள் மாலை 4 முதல் 4.30 வரையாவது ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்று ஜபியுங்கள்;

இதன் மூலமாக நமது கர்மவினைகளை நம் சார்பாக கால பைரவப் பெருமான் ஏற்றுக் கொள்வார்;

நமது கர்மவினைகளை ஏற்றுக் கொண்டு நமக்கு முக்தி தரும் தெய்வங்களில் ஒருவர் கால பைரவர்!!

ராகு காலத்தை விடவும், குளிகை கால மந்திர ஜபம் கோடி மடங்கு சக்தி வாய்ந்தது;

ஓம் அகத்தீசாய நமஹ

ஒம் அருணாச்சலாய நமஹ

சங்கரன்கோயில் கோமதி அம்மன்

சங்கரன்கோயில் கோமதி அம்மன் 

அன்பின் திருவிடம் உமையவள் கோமதியின் தரிசனம்…

அன்பின் திருவிடம்;
பண்பின் உறைவிடம்;
சாந்தியின் இருப்பிடம்;
சந்தோஷத்தின் பிறப்பிடம்!

என்றால் உமையவள் கோமதிதான். தேவர்கள் மலர் தரும் விருட்சங்களாகவும், தேவமாதர்கள் ஆநிரைகளாகவும் தோன்றிய திருவிடமே சங்கரன்கோவில் என்னும் புண்ணியத்தலம்…! கோவிலுக்கு சென்றதும்125 அடி உயரத்தில் 9 நிலைகள் கொண்ட இராஜகோபுரம் அம்மையும், அப்பனும் அழைப்பது போன்று நம்மை வரவேற்கிறது. சில்லென்று வீசும் காற்றும், கலைநயமிக்க சிற்பங்கள் என கோவிலில் எங்கு சுற்றிலும் அழகு நிறம்பி இருக்கிறது. அழகுமட்டுமல்லை, அன்னை கோமதியின் அன்பும்தான்.

பள்ளியில் தமிழ் பாடங்கள் நடத்தும் போது ஆசிரியை சிவன், பார்வதையின் கதைகளை சொல்லும் போது உடல் சிலிர்க்கும். கோவிலுக்குள் சென்றும் அவை அனைத்தும் நம்முடைய மனதிற்குள் வந்து செல்லும். குழந்தையாகவே நம்மை நாம் உணரும் போது அன்னை உமையவள் கோமதி எங்கேயோ ஒழிந்து விளையாடுகிறாள் போன்றே தோன்றும். அவளைத் தேடி செல்கையில் துய மணிகளை கொண்ட கொலுசு சத்தமும், வளையல் சத்தமும், சிரிப்பு சத்தமும் மட்டுமே கேட்கும்.

சங்கரலிங்கம், சங்கரநாராயணரை தரிசனம் செய்யும் வகையில் உமையவளை எப்போது பார்ப்போம் என்றுதான் தேடிச்செல்லும் கண்கள். கோமதியை இறுதியாக பார்க்கையில் மனம் முழுவதையும் ஆட்கொண்டுவிடுவாள். அவள் முகம் மட்டும்தான் நெஞ்சமெல்லாம் நிறைந்து இருக்கும். நம் கைகளை பிடித்து வழிநடத்திச் செல்வது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். கோவிலில் இருந்து திரும்புகையில் போய் வருகிறேன் என்று சொல்ல மனம் வராமல், உன்னுடனே இருக்கட்டுமா? என்கூட வருவாயா? என்றுதான் அவளை நோக்கி கேட்கத்தோனம். சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கும் கோமதியை தரிசனம் செய்ய சங்கரன்கோவிலுக்கு சென்று வருவோம்.

கோவில் அமைவிடம்

திருநெல்வேலியில் இருந்து வடமேற்கே 48 கிலோமீட்டர் தூரத்தில் சங்கரன்கோவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி, மதுரை, விருதுநகரில் இருந்து பஸ் போக்குவரத்து இருக்கிறது. மதுரையில் இருந்து ரெயில் மூலமாக சங்கரன் கோவில் செல்லலாம். தென்காசியில் இருந்தும் ரெயிலில் செல்லலாம்.

திருக்கோவில் வரலாறு

தமிழகத்தில் உள்ள சிவத்தலங்களில் சங்கரநாராயண சுவாமி கோவில் பாண்டிய நாட்டின் நில தலமும் ஆகும். மதுரையை ஆண்ட உக்கிரமப்பாண்டிய மன்னரால் பதினொன்றாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கோவில். மணிக்கிரீவன் என்ற காவலின் சொல் கேட்டு புன்னை வனத்தின் புற்றின் அருகே இருந்த புன்னை வனக்காட்டினை சீர் செய்து, கோவிலை கட்டியதுடன், கோவிலின் முன் மண்டபங்களையும் கட்டி சுற்றுச்சுவரையும் எழுப்பினார்.

அரியும் சிவனும் ஒன்றென உலகிற்கு உணர்த்திய தலம் சங்கரன் கோவில். இக்கோவில் 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளப்படுவதை தடுத்து நிறுத்தவும், நாட்டில் இந்து மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தவும், பாம்பரசர்களான சிவ பக்தன் சங்கனும், விஷ்ணு பக்தன் பதுமனும் சேர்ந்து திருக்கயிலை மலையில் அருந்தவம் மேற்கொண்டனர். பாம்பரசர்களின் அருந்தவத்தை கண்ட பார்வதி தேவியார் பாம்பரசர்கள் முன்பாகத் தோன்றி என்னவரம் வேண்டும் என்று கேட்க, அதற்கு அவர்கள் இருவரும் சிவன், விஷ்ணு இந்த இருவரில் உயர்ந்தவர்கள் யார் என்று வினா எழுப்பினார்கள்.

இதில் அம்பிகை யாரை உயர்ந்தவர் என்று கூற இயலும் தவித்தார். ஒருபுறம் கணவர் சிவபெருமான், மறுபுறம் சகோதரர் விஷ்ணு, இதற்கு தீர்வை அம்பிகை சிவபெருமானிடமே கேட்க, அதற்கு ஈசனோ பொதிகை மலைச் சாரலில் புன்னைவனத்தில் தவம் மேற்கொள் உன் கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று அம்பிகைக்கு அருளினார். அதன்படி உமையம்மை தமைசூழ்ந்த பசுக்களாகிய வேதமாதர்களுடன் பார்வதி தேவி கோமதியம்மை, ஆவுடையம்மை எனும் காரணப் பெயர்களை தாங்கி புன்னைவனத்தில் தவம் மேற்கொண்டார்.

அம்மையின் அருந்தவத்திற்கு இணங்கி சிவபெருமான் ஆடித்திங்கள் உத்திராடம் நன்னாளில் அருள்தரும் கோமதி அம்பிகைக்கு அரியும், சிவனும் இணைந்த சங்கரநாராயணர் கோலத்தில் காட்சி கொடுத்து அருளினார். இந்த காட்சியைத்தான் ஆடித்தபசு திருவிழாவாக லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி, அம்பாளை தரிசனம் செய்து இறையருள் பெற்று வருகின்றனர்.

சங்கர நாராயணர்

சங்கரன்கோவிலில் மூலவராக முதல் சந்நிதியில் சங்கரலிங்கமாகவும், இரண்டாம் சந்நிதியில் சங்கரநாராயணர் வடிவிலும், மூன்றாவதாக, தனிச் சந்நிதியில் பார்வதி தேவி கோமதி அம்மனாகவும் வீற்றுள்ளார். புன்னை மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட இந்தக் கோவில் ஒன்பது ராஜ கோபுரங்களைக் கொண்டது. சங்கரரும், நாராயணரும் ஒருவரே என்னும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்தியருளிய இந்தக் கோயிலில் சுவாமி, அம்பாள் சந்நிதிகளுக்கு இடையே சங்கரநாராயணர் சந்நிதி அமைந்துள்ளது.

சங்கர நாராயணரின் சிவனுக்குரிய வலது பாகத்தில் தலையில் கங்கை, பிறை நிலா, அக்னி, ஜடாமுடியுடன் கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் போன்றவற்றுடன், திருவாசியில் நாகவடிவில் சங்கன் குடைபிடிக்கிறான். அதே போல் மகாவிஷ்ணுவுக்குரிய இடது பாகத்தில் நவமணி கிரீடம், கையில் சங்கு, மார்பில் துளசி மற்றும் லட்சுமி மாலைகள் இவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடைபிடிக்கிறான். ஆலய வடக்குப் பிரகாரத்தில் சொர்க்கவாசல் உள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறக்கப்படும்.

கோமதியம்மை

அம்பாள் முன் ஆக்ஞா சக்கரம் உள்ளது. மனநோய்கள் எல்லாம் நீங்கிட, அதில் உட்கார்ந்தும் தியானித்துக் கொள்ளலாம். கோமதி அம்மன் சந்நிதி முன் உள்ள ஸ்ரீசக்கரத்தில் பிணியாளர்கள், செய்வினைகளால் பாதிக்கப்பட்டோர் அமர்ந்து அம்மனை நோக்கித் தவம் செய்தால் அவையும் நீங்கும். சந்நிதியில் விபூதிப் பிரசாதம், துளசி தீர்த்தம் உண்டு, வில்வார்ச்சனை, துளசி அர்ச்சனை இரண்டுமே உண்டு, இரண்டையும் இணைக்கும் அம்பாளின் குங்குமார்ச்சனையும் இங்கு உண்டு.

அம்பாளுக்கு திங்கட்கிழமைகளில் மலர் பாவாடை, வெள்ளிக்கிழமைகளில் தங்கப் பாவாடை அணிவித்து அலங்காரம் செய்விக்கிறார்கள். அம்பாளுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடை, புத்திரதோஷம், நாகதோஷம் முதலியவை அகலும் என்று கூறப்படுகிறது.

தபசுக் காட்சி

ஆடித்தபசு விழா இத்தலத்தில் 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். ஆடித்தபசு அன்று காலையில் தங்கச் சப்பரத்தில் கோமதி அம்மன் எழுந்தருளி தபசு மண்டபம் வந்தருள்வாள். மாலை 4 மணிக்கு ஈசன் சங்கர நாராயணராக வெள்ளி ரிஷப வாகனத்தில், தெற்கு ரத வீதியில் உள்ள காட்சி மண்டப பந்தலுக்கு வருகை தருவார்.

தொடர்ந்து அம்பாளும் காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்வாள். அங்கு அம்பாள் தனது வலது காலை உயர்த்தி, இடது காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து அதை இரு கைகளால் பிடித்தபடி தபசுக் காட்சி அருள்வாள். மாலை 6 மணிக்கு ஈசன் சங்கர நாராயணராக அம்பாளுக்கு காட்சி தருவார். அப்போது பக்தர்கள், தங்கள் வயலில் விளைந்த பொருட்களான நெல், பருத்தி, கம்பு, சோளம், பூ, மிளகாய் போன்றவற்றை ‘சூறை விடுதல்’ என்ற பெயரில் அம்பாள் மீது வீசியெறிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

மீண்டும் தவம்

பின்பு அம்மன் மீண்டும் தவக்கோலம் பூணுகிறாள். எதற்காக மீண்டும் தவம்?. அம்பாளின் அண்ணன் மகாவிஷ்ணு, சிவபெருமானின் ஒரு பாதியில் வீற்றிருந்து சங்கர நாராயணராக உள்ளார். ஈசனின் ஒரு பாதியில் அண்ணன் இருப்பதால் ஈசனை எவ்வாறு மணப்பது?. எனவேதான் அம்மன் மீண்டும் ஈசனை வேண்டி சங்கரலிங்கமாக காட்சி அருள வேண்டுகிறாள். இரவு 11.30 மணிக்கு சுவாமி கோவிலில் இருந்து வெள்ளி யானை வாகனத்தில் புறப்பட்டு காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்கிறார். சரியாக இரவு 12 மணிக்கு ஈசன், கோமதி அம்மனுக்கு சங்கரலிங்கமாகக் காட்சி கொடுக்கிறார். பின் அம்பாள் ஈசனுக்கு திருமண மாலை மாற்றி மணந்து கொள்கிறார். பின்னர், சுவாமி- அம்பாள் ஊஞ்சல் சேவை நடைபெறும்.

நாகதோஷங்களை தீர்க்கும் ஸ்தலம்

தமிழ்நாட்டில் நாகதோஷங்களை தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக விளங்குவதற்கு இக்கோவிலின் சங்கரலிங்கசுவாமி சன்னதியின் கன்னி மூலையில் 6 அடி உயரத்தில் சர்ப்பத்தை கையில் பிடித்தபடி சர்ப்ப விநாயகர் வீற்றிருக்கிறார்.

இவரை வழிபாடு செய்பவர்கள் சர்ப்ப தோஷத்தில் விடுபட்டு, திருமணத்தடை நீங்கி வாழ்க்கையில் மேன்மை அடைகின்றனர் என்பது இக்கோயிலின் ஐதீகம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தந்து அன்னை கோமதியின் அருள் பெற்று செல்கின்றனர்.

முக்கிய திருவிழாக்கள்

சித்திரைப் பெருந்திருவிழா – 48 நாட்கள்.
ஆடித்தபசு திருவிழா – 12 நாட்கள்.
நவராத்திரி லட்சார்ச்சனை – 9 நாட்கள்.
ஐப்பசி திருக்கல்யாணம் – 10 நாட்கள்.
கந்தசஷ்டி திருவிழா – 6 நாட்கள்.
திருவெம்பாவை திருவிழா – 10 நாட்கள்.
தை மாதம் கடைசி – ஆவுடைப்பொய்கை
வெள்ளி அன்று தெப்பத் தேரோட்டம்
ஸ்ரீநந்தீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு – மாதம் 2 முறை.

புற்றுமண்தான் பிரசாதம்

சங்கரன்கோயில் பாம்புகள் (சங்கன், பதுமன்) வழிபட்ட கோவில் என்பதால் இங்கு புற்று இருக்கிறது. புற்று மண்தான் பிரதான பிரசாதம். நோயுள்ளவர்கள் இந்த மண்ணை நீரில் கரைத்துச் சாப்பிடுகின்றனர். மேலும் வீடுகளில் பூச்சி, பல்லி, வயல்களில் பாம்புத் தொல்லை இருந்தால் மூலவர் சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அந்தந்தப் பூச்சிகளின் உருவங்களை வாங்கி உண்டியலில் காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. கோமதியின் அருள் பெறுவோம்.

சுந்தரகாண்டம் #படிக்கலாம்_வாங்க

#சுந்தரகாண்டம் 
#படிக்கலாம்_வாங்க

சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும். எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். வாழ்வில் நம்பிக்கை ஏற்படும். நோய்கள் விலகும். ராமச்சந்திர மூர்த்தியையும், ராமபக்தனான அனுமனையும் மனதில் தியானித்து, இந்த எளிய சுந்தரகாண்டத்தைப் படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் வந்துசேரும்.

சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்

கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது.

அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே
ஆயத்தமாகி நின்றான், அனைத்து வானரங்களும் அங்கதனும், ஜாம்பவானும் அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே!

வானவர்கள் தானவர்கள் வருணத்தேவர்கள்
வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!

மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து சுரசையை வெற்றி கண்டு ஹிம்சை வதம் செய்து சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான்.

இடக்காகப் பேசிய இலங்கையின் தேவதையை இடக்கையால் தண்டித்து இலங்கையைக் கலக்கினான்.

அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும் இங்கும் தேடியே அசோக வனத்தை அடைந்தான்.

கிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும் சீதா பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்.

ராவணன் வெகுண்டிட, ராட்சசியர் அரண்டிட
வைதேகி கலங்கிட, வந்தான் துயர் துடைக்க
கணையாழியைக் கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி சூடாமணியைப் பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர் அன்னையின் கண்ணீர் கொண்டு, அரக்கர் மேல் கோபம்
கொண்டு, அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.

பிரம்மாஸ்திரத்தால் பிணைத்திட்ட ஆஞ்சநேயர் பட்டாபிராமன் பெயர் சொல்ல
வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ
வாலுக்கென்றான். வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகரம். 

அரக்கனின் அகந்தையை அழித்திட்ட
அனுமானும் அன்னை ஜானகியிடம்
அனுமதி பெற்றுக் கொண்டு
ஆகாய மார்க்கத்தில் தாவி வந்தான்.

அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.

ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீராமனிடம் ஆஞ்சநேயர்
"கண்டேன் சீதையை என்றான்.

வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணியைக் கொடுத்தான், 
மனம் கனிந்து மாருதியை மார்போடு அணைத்து ஸ்ரீராமர் மைதிலியை சீறை மீட்க சித்தமானார்.
ஆழ்கடலில் அற்புதமாய் அணை கட்டி படைகள் சூழ அனுமானும், இலக்குவனும் உடன் புறப்பட்டனர்.

அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான்
அதர்மத்தை அயோத்தி சென்று ஸ்ரீராமர்
அகிலம் புகழ ஆட்சி செய்தான். 
அவனை சரண் அடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு.

எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா!
உன்னைப் பணிகின்றோம், 
பன்முறை உன்னை பணிகின்றோம், 
பன்முறை உன்னை பணிகின்றோம்.

ஜெய் ஸ்ரீராம்....ஜெய் ஸ்ரீராம்!!

Saturday, March 19, 2022

பசுவும் புண்ணியங்களும்

**பசுவும் புண்ணியங்களும்**

பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால் , முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொலை , களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி தோஷங்கள் விலகிவிடும். நீண்ட நாட்களாக திதி , கர்மா செய்யாமல் இருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும்.

பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

பசுவை பூஜித்தால் பிரம்மா , வி்ஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் உண்டாகும்.

பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் ( கோக்ராஸம் ), பசுவின் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் ( கோகண்டுயனம் ) கொடிய பாவங்கள் விலகும்.

பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் ( லக்னம் ) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான காலமாகும்.

பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது 8 வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால் பட்ட தூசியைதான் மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.

" மா " என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது.

பசு வசிக்கும் இடத்தில் , அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ , தர்ம காரியங்களோ 100 மடங்கு பலனைத் தரும்.

மனிதன் கண்களுக்கு புலப்படாத ம்ரத்யு , எமன் , எமதூதர்கள் பசுவின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள்.

ஒருவர் இறந்த பின் பூலோகத்திற்கு அழைத்து செல்லப்படும் ஜீவன் அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியை ( மலம் , சலம் , சளி , சுடு நீர் ஓடும் நதி ) கடக்க இயலாமல் தவிக்கிறது. பசு தானம் செய்பவர்களுக்கு இத்துன்பம் இல்லை. அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்றி அதன் வாலைப் பிடித்துக்கொண்டு வைதரணிய நதியை கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.

உலகத்தில் விஞ்ஞானத்தால் எத்தனை பாதிப்பு நிகழ்ந்தாலும் , பசுக்கள் வசிக்கும் இடத்தி்ல் மட்டும் எவ்வித பாதிப்பும் இருக்காது.

கோமாதாவை காப்போம் , நேசிப்போம் , பூஜிப்போம்...

இறைவன் சன்னதி முன் ஆமையின் திருவுருவம் ?

இறைவன் சன்னதி முன் ஆமையின் திருவுருவம் ???? ( இந்த திருவுரு உத்தரகோசமங்கை ஆலயத்தில் இறைவன் எழுந்தருளும் மண்டபமாக உள்ளது )

பெரும்பாலும் வடநாட்டில் உள்ள சிவாலங்களில் கருவறையில் உள்ள இறைவன் திருமேனியை நோக்கியவாறு ஆமையின் திருமேனி இருக்கும் !!

இங்கும் சில சிவாலயங்களில் ஆமையின் திருமேனியோ, படமோ இடம்பெற்று இருக்கும் இதன் அர்த்தம் அறிவோமா ??

அதை அப்படியே கொஞ்சம் காப்பி அடித்து இன்று நவீன ஆலயங்கள் அதை வைத்துகொண்டு இருக்கிறது !!

ஆமை என்ற உயிரினத்தை கேட்டவுடன் !! நம் நினைவில் வருவது ??

அது நீண்டகாலம் உயிர்வாழும் என்பதே !!

ஆனால் 
ஒவ்வொரு உயிரினத்தின் தனித்தன்மை போல !!

மனிதர்கள் தாங்கள் சுமக்கும் கருவை தன்னுள்ளே வைத்திருந்து தங்கள் காணும் காட்சி, அனுபவிக்கும் இன்பம், போன்ற உணர்வுகள் வழியே உயிர்பெற செய்வார்கள் !!

கோழி முட்டையிட்டு தன் ஸ்பரிசம் தீண்டல் வழியே தன் உடலின் சூட்டை கொண்டு அந்த முட்டையில் உள்ள கருவை உயிர்பெற செய்யும் !!

அதேபோல 
மீன் தான் முட்டையிட்டு தன் கண்கள் வழியே அந்த முட்டையை பார்த்துக்கொண்டே தன் பார்வையின் வழியே முட்டையை உயிர்பெற செய்யும் !!

ஆனால் 
ஆமை கொஞ்சம் வித்தியாசமானது, அது கடலில் இருந்து வெளியே வந்து கடற்கரையில் தன் முட்டைகளை இட்டுவிட்டு அதை மணல் கொண்டு மூடிவிட்டு, உடனே கடலுக்குள் சென்று விடும் !!

அதன் அன்றாட வாழ்வை / பயணத்தை மேற்கொண்டு இருக்கும்,

ஆனால் அதன் சிந்தை அந்த முட்டைகள் மீதே இருக்கும், 

அது எத்தனை கடல் கடந்து இருந்தாலும் அதன் சிந்தனை அந்த முட்டைகள் மீதே இருக்கும் !!

இந்த சிந்தை என்ற எண்ணம் எங்கோ இருக்கும் அந்த முட்டைகள் உள் ஓர் தாயின் அரவணைப்பை கொடுத்து அந்த முட்டைகளை உயிர் பெற செய்யும் !!

அதுபோலவே 

நம் இறைவனின் படைப்புகள், 
நாம் எங்கு இருந்தாலும், 
எப்படி இருந்தாலும் 
என்ன செய்து கொண்டு இருந்தாலும் 
நம்மை படைத்த இறைவன் நம்மை எப்போதும் இடைவிடாது இந்த பிரபஞ்ச பேற்றால் வழியே நம்மை நோக்கி கொண்டே இருக்கிறான் !!

அவன் எங்கும் நிறைந்து எப்போதும் நம் மீது நமக்கே இல்லாத அக்கறையோடு காத்தருளிகொண்டு இருக்கிறான் என்ற மெய்யை உணர்த்தவே !!

ஆமையை கொண்டு நமக்கு அறிவுறுத்துகிறார்கள் நாம் முன்னோர்கள் ஆலய வழிபாட்டின் வழியே !!

ஏதோ இவன் அறிவுக்கு எட்டிய வரையே !!
எட்டவைத்தவன் திருவருளால் !!

திருச்சிற்றம்பலம் 

நற்றுணையாவது நமச்சிவாயவே 


கோபுர தரிசனம்

ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான். 🍂🛐🍂 

அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான். 
நேரம் போய்க்கொண்டே இருந்தது. 
இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.

இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்? எவ்வளவு இழிசொல்? போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே? என்று தன் விதியை நொந்துகொண்டான். மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல 'அப்பனே ஆண்டவா...என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்' என்று கோபுரத்தை பார்த்து மனதில் உள்ள தன் குமுறலைச் சொல்லி, கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில் அமர்ந்தான். குளத்து நீரை கையில் எடுத்து முகத்தை கழுவி, படியில் சோர்வாக அமர்ந்தான்.

ராஜா அன்னதானம் கொடுத்து முடித்து, அந்த படித்துறையில் காலாற நடந்து வந்தார். "என்னப்பா...சாப்பிட்டாயா?" என்று ஒரு பத்தடி தூரத்திலிருந்து குளத்தில் தன் முகத்ததை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏழையிடம் கேட்டார். கேட்பது ராஜா என்று தெரியாமல் "ஊரே சாப்பிட்டது..என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அய்யா" என்று விரக்தியாக, முகத்தை திருப்பாமல் குளத்துநீரை பார்த்தபடியே பதில் சொன்னான் அந்த ஏழை.

அவன் சொன்ன பதில் ராஜாவின் மனதை உருக்கியது. என் முதல் குழந்தை பிறந்தநாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்றுதானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம்? 
ஒரு அப்பாவி ஏழை இப்படி விடு பட்டுள்ளானே என்று அவன் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்து 'மன்னித்துவிடப்பா... ரொம்ப பசிக்கிறதா உனக்கு?" என்று கேட்க.

குளத்து நீரில் தலையில் கிரீடம், காதில் குண்டலம், நெற்றியில் திருநீர், முகத்தில் வாஞ்சை என்று ராஜா தெரிய திடுக்கிட்டு எழுந்தான். 'ராஜா...

நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்துகொண்டே பதில் சொல்லிவிட்டேன்...🗣 

மன்னிக்க வேண்டுகிறேன்' என்று பதறினான். இவனின் பண்பை பார்த்த ராஜா சத்தமாக சிரித்தார். 'வா...

இன்று நீ என்னோடும் குழந்தை ராணியோடும் விருந்து உண்ணப்போகிறாய்' என்று அவனை பேசவிடாமல் எழுத்துச் சென்று அவரின் தேரில் ஏற்றிக்கொண்டு, அரண்மனைக்கு விரைந்தார். 'போய் குளித்துவிட்டு வா' என்று தனக்கென்று வாங்கி வைத்திருந்த புதிய ஆடைகளில் ஒன்றை அவனுக்கு கொடுத்தார். 

குளித்து, புத்தாடை அணிந்தது வந்தான். அறுசுவை விருந்து கொடுத்தார். சாப்பிட்டு முடித்து அவன் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை கொடுத்த்தார் 'இன்றிலிருந்து நீ ஏழை இல்லை...

இந்த பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாக வாழ்" என்று வாழ்த்தினார்.

அதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. 'ஏனப்பா அழுகிறாய்?' என்று ராஜா கேட்க. "நான் இதுநாள் வரை பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன் ராஜா...இந்தத் தருணம்தான் நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்துகொண்டேன்" என்று சொன்னான். ராஜா ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று கேட்க "வாழ்க்கையில் இன்றுதான் முதல் முறையாக கோபுரத்தை பார்த்து என்னை ஏன் இப்படி வைத்திருக்கிறாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன்...கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றிவிட்டான்...கடவுளிடம் கேட்டால் நாம் கேட்டதைவிட இன்னும் பல மடங்கு தருவான் என்று இன்றுவரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன்" என்று சொல்லி அழுதான்....🗣 

நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் சராசரியைவிட மிகச் சிறந்த ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள். நல்லதே நடக்கும்.
சும்மாவா சொன்னார்கள் :: 

🛕 கோபுர தரிசனம் கோடி புண்னியம்        


பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும்

கண்களில் உள்ள கோளாறு நீங்குவதற்கும், பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும், இடக்கண்ணில் இடர் நீங்குவதற்கும் வந்து வழிபடவேண்டிய தலம்.

மூலவர் - மணல் (பிருதிவி) லிங்கம். 

உமாதேவியார் கம்பை நதிக்கரையில் மணலால் இலிங்கம் அமைத்து வழிபட, இறைவன் ஆற்றில் வெள்ளம் வருமாறு செய்ய, உமையம்மை இலிங்கத்தைத் தழுவிக் காத்தாள்.

தழுவிய போது இறைவன் தன் திருமேனியில் அம்பிகையின் தழுவலை ஏற்றுத் தழுவக் குழைந்தார். இதனால் இறைவனுக்குத் ‘தழுவக் குழைந்த பிரான்’ என்றும் பெயர்.

சக்தி பீடங்களுள் சிறந்ததாகிய காமகோடி பீடத்தலம். சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்டர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் வாழ்ந்த தெய்வப் பதி.

      தலமரம் மாமரம். ஆம்ரம் - மாமரம்.
      ஏகம்+ஆம்ரம் = ஏகாம்ரம் - ஒற்றை மாமரம்.

இம்மாவடியின் கீழ் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இறைவன் ஏகாம்அரநாதர் எனப் பெயர் பெற்றார். இப்பெயரே ஏகாம்பரநாதர் என்று வழங்கலாயிற்று. 

மாமரம் இத்தல மரம். இவ்விடம் மிகச் சிறந்த பிரார்த்தனைக்குரிய இடமாகும். திருமணங்கள் நடைபெறுமிடம். புத்திரப் பேறில்லாதவர்கள் அப்பேறு வேண்டி, தொட்டிலைக் கட்டி வேண்டிக்கொள்ளும் நிலையை இன்றும் காணலாம். 

வேதமே மாமரம். வேதத்தின் நான்கு வகைகளே இம்மரத்தின் நான்கு கிளைகள். இதன் வயது புவியியல் வல்லுநர்களால் 3600 ஆண்டுகளுக்கு 
மேல் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இம்மரத்தின்மீது ஏறுவதுகூடாது. இயல்பாகவே பழுத்துக் கீழே விழும் கனிகளைச் சுவைத்தோர், நான்கு கிளைகளிலிருந்தும் கிடைக்கும் மாங்கனிகள் நான்கு விதமான சுவையுடையதாகச் சொல்கின்றனர். 

தவம் செய்த அம்பாளுக்கு, இறைவன் இம் மாவடியின் கீழ்தான் காட்சி தந்தருளினார்.

காஞ்சிபுர மண்டலம் முழுமைக்கும் தேவி, காமாக்ஷியே யாவாள். ஆதலின் காஞ்சியில் எச்சிவாலயத்திலும் தனியாக அம்பாள் (மூல) சந்நிதி கிடையாது. 

எனினும் ஒவ்வொரு கோயிலிலும் உற்சவமூர்த்தமாக ஓர் அம்பாள் சந்நிதி ஒரு பெயர் தாங்கி இருக்கும்.   

கோயிலுக்கு முன்புள்ளது ‘திருக்கச்சி மயானம்’ கோயிலாகும். இது வைப்புத் தலமாகும். அப்பரால் வைத்துப் பாடப்பட்டதாகும். ஏகம்பத்தின் நாற்புறத்திலும் நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள் கச்சிமயானம் ஒன்று. மற்றவை வாலீசம், ரிஷபேசம், சத்தியநாதேசம் என்பன.

கண் பார்வையிழந்த சுந்தரர் திருவெண்பாக்கத்தில் (பூண்டி) ஊன்றுகோலைப் பெற்றவாறே இத்தலத்திற்கு வந்து காமக்கோட்டம் பணிந்து பின்னர்த் திருவேகம்பம் அடைந்து இறையருளால் இடக்கண்பார்வை பெற்ற அற்புதம் நிகழ்ந்த தலம்.

திருவாரூரில் பரவையாரை மணந்து கொண்ட சுந்தரர், திருவொற்றியூரில் சிவசேவை செய்து வந்த சங்கிலியார் எனும் பெண்ணை சிவனை சாட்சியாக வைத்து அவளைவிட்டு பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து மணந்து கொண்டார். 

ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவொற்றியூரை விட்டு திருவாரூருக்கு கிளம்பினார். சுந்தரர் திருவொற்றியூர் தலத்தின் எல்லையை விட்டு வெளியேறியபோது, சிவன் அவரது இரண்டு கண்களையும் பறித்துக் கொண்டார். 

சத்தியத்தை மீறியதால் தன் கண்கள் பறிபோனதை உணர்ந்த சுந்தரர் சிவனிடம் தனக்கு கண்களை தரும்படி வேண்டினார். அவரோ கண்கள் தரவில்லை. இரண்டு கண்களும் தெரியாமல் தட்டுத்தடுமாறியபடியே திருவாரூர் செல்லும் வழியில் திருவெண்பாக்கம் (பூண்டி) ஊன்றீஸ்வரர் திருக்கோயில் வந்தார் சுந்தரர்.

அங்கு சிவனிடம் தனக்கு கண்கள் தரும்படி கேட்டார். சிவனோ அமைதியாகவே இருந்தார். சுந்தரர் விடவில்லை. பரம்பொருளாகிய நீங்கள் இங்குதான் இருக்கிறீர்களா? இருந்தால் எனக்கு கண் தருவீர்களே! என்று சொல்லி வேண்டினார். 

சுந்தரரின் நிலையைக் கண்டு இரங்கிய சிவன், அவருக்கு ஒரு ஊன்று கோலை மட்டும் கொடுத்து "நான் இங்குதான் இருக்கிறேன். நீங்கள் செல்லுங்கள்' என்றார். 

தன் நண்பனான சிவன் தனக்கே அருள் செய்யாமல் விளையாடுகிறாரே என்று எண்ணிய சுந்தரருக்கு கோபம் வந்துவிட்டது. அவர் தனக்கு கண் தரும்படி சிவனிடம் வாக்குவாதம் செய்தார். 

சிவனோ இறுதிவரையில் அவருக்கு கண் தரவில்லை. கோபம் அதிகரித்த சுந்தரர், சிவன் கொடுத்த ஊன்றுகோலை ஓங்கி வீசினார். அப்போது ஊன்றுகோல் அங்கிருந்த நந்தியின் மீது பட்டு விட்டது. இதனால் நந்தியின் கொம்பு ஒடிந்து விட்டது. 

மறைந்த கண்களைத் தரவேண்டிப் பல தலங்களிலும் வணங்கிப் பாடி, திருவெண்பாக்கத்தில் (பூண்டி) ஊன்றுகோலைப் பெற்றுத் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், தக்கோலம் (திருவூறல்) ஜலநாதீஸ்வரர் திருக்கோயில்களைத் தொழுது காஞ்சிபுரத்தை அடைந்து, காமக்கோட்டத்தில் அறம்புரக்கும் அம்மையை வணங்கித் திருவேகம்பத்தை அடைந்து, 

"கச்சி ஏகம்பனே, கடையானேன் பிழை பொறுத்துக் கண்ணளித் தருளாய்' 

என்று வேண்டிப் பெருமான், இடக்கண் கொடுக்கப்பெற்று மகிழ்ந்து பாடியருளியது இத் திருப்பதிகம். 

குறிப்பு: இத்திருப்பதிகம், தமக்குக் கண் அளித்த இறைவரது திருவருளை வியந்து சுந்தரர் அருளிச்செய்தது.

கண்களில் உள்ள கோளாறு நீங்குவதற்கும், பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய பதிகம்.
(இடக்கண்ணில் இடர் நீங்குவதற்கு)

1. ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்தும்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

நஞ்சினைத் தான் விரும்பி உண்டு, அமுதத்தைத் தேவர்களுக்கு உரியதாக்கியவனும், யாவர்க்கும், முதல்வனும், தேவர்கள் வணங்கித் துதிக்கின்ற பெருமையை மிக உடையவனும், தன்னை நினைப்பவரது நினைவில் விளங்குபவனும், மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை, தான் எந்நாளும் துதித்து வழிபடுதலைப் பெற்றமைக்கு முதல்வனும், காலகாலனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

2. உற்றவர்க்கு உதவும் பெருமானை 
ஊர்வது ஒன்று உடையான், உம்பர்கோனைப் 
பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னைப் 
பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை 
அற்றம்இல் புகழாள், உமை நங்கை 
ஆதரித்து வழிபடப் பெற்ற 
கற்றைவார் சடைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

தன்னைப் புகலிடமாக அடைந்தவர்க்கு நலம் செய்கின்ற பெருமானும், ஊர்தி எருதாகிய ஒன்றை உடையவனும், தேவர்கட்குத் தலைவனும், தன்னை விடாது பற்றினவர்க்கு, பெரிய பற்றுக்கோடாய் நிற்பவனும், தன்னை நினைப்பவரது மனத்தில் பரவி நின்று, அதனைத் தன் இடமாகக் கொண்டவனும் ஆகிய, அழிவில்லாத புகழையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை விரும்பி வழிபடப் பெற்ற, கற்றையான நீண்ட சடையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

3. திரியும் முப்புரம் தீப்பிழம்பு ஆகச் 
செங்கண் மால்விடை மேல் திகழ்வானைக் 
கரியின் ஈர்உரி போர்த்து உகந்தானைக் 
காமனைக் கனலா விழித்தானை
வரிகொள் வெள்வளையாள் உமை நங்கை 
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற 
பெரிய கம்பனை, எங்கள் பிரானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

வானத்தில் திரிகின்ற முப்புரங்கள் தீப்பிழம்பாய் எரிந்தொழியுமாறு செய்து, அக்காலை, சிவந்த கண்களையுடைய திருமாலாகிய விடையின்மேல் விளங்கியவனும், யானையின் உரித்த தோலை விரும்பிப் போர்த்தவனும், மன்மதனைத் தீயாய் எரியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்தவனும், வரிகளைக் கொண்ட வெள்ளிய வளைகளை அணிந்தவளாகிய, 'உமை' என்னும் நங்கை அணுகி நின்று, துதித்து வழிபடப் பெற்ற பெரியோனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

4. குண்டலம் திகழ் காது உடையானைக் 
கூற்று உதைத்த கொடுந் தொழிலானை
வண்டு அலம்பும் மலர்க் கொன்றையினானை 
வாள்அரா மதிசேர் சடையானைக் 
கெண்டை அம் தடங்கண் உமை நங்கை 
கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற 
கண்டம் நஞ்சு உடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

குண்டலம் விளங்குகின்ற காதினையுடையவனும், கூற்றுவனை உதைத்துக் கொன்ற கொடுமையான தொழிலை உடையவனும், வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும், கொலைத் தொழிலையுடைய பாம்பு பிறையைச் சேர்ந்து வாழும் சடையை உடையவனும் ஆகிய, கெண்டைமீன் போலும் பெரிய கண்களையுடைய, 'உமை' என்னும் நங்கை அணுகி நின்று, துதித்து வழிபடப் பெற்ற, கண்டத்தில் நஞ்சினையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

5. வெல்லும் வெண்மழு ஒன்று உடையானை 
வேலை நஞ்சு உண்ட வித்தகன் தன்னை 
அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை, 
அருமறை அவை அங்கம் வல்லானை, 
எல்லை இல் புகழாள் உமை நங்கை 
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற 
நல்ல கம்பனை எங்கள் பிரானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

யாவரையும் வெல்லும் தன்மையுடைய, வெள்ளிய மழு ஒன்றை உடையவனும், கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட சதுரப்பாடுடையவனும், அடியார்களுக்குத் துன்பங்களைப் போக்கி அருள்செய்ய வல்லவனும், அரிய வேதங்களையும் அவற்றின் அங்கங்களையும் செய்ய வல்லவனும் ஆகிய, அளவற்ற புகழை யுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை, எந்நாளும், துதித்து வழிபடப்பெற்ற, நன்மையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

6. திங்கள் தங்கிய சடை உடையானைத், 
தேவ தேவனைச், செழுங்கடல் வளரும் 
சங்க வெண்குழைக் காது உடையானைச் 
சாம வேதம் பெரிது உகப்பானை, 
மங்கை நங்கை மலைமகள் கண்டு 
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற 
கங்கை யாளனைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பிறை தங்கியுள்ள சடையையுடையவனும், தேவர்க்குத் தேவனும், வளவிய கடலில் வளர்கின்ற சங்கினால் இயன்ற, 'வெள்ளிய குழையை யணிந்த காதினையுடையவனும், சாம வேதத்தை மிக விரும்புபவனும் ஆகிய, என்றும் மங்கைப் பருவம் உடைய நங்கையாகிய மலைமகள் தவத்தாற் கண்டு அணுகி, துதித்து வழிபடப்பெற்ற, கங்கையை யணிந்த, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

7. விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை, 
வேதம்தான் விரித்து ஓத வல்லானை, 
நண்ணினார்க்கும் என்றும் நல்லவன் தன்னை, 
நாளும் நாம் உகக்கின்ற பிரானை, 
எண்இல் தொல் புகழாள் உமை நங்கை 
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற 
கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக், 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

தேவர்கள் தொழுது துதிக்க இருப்பவனும், வேதங்களை விரித்துச் செய்ய வல்லவனும், தன்னை அடைந்தவர்கட்கு எந்நாளும் நலத்தையே செய்பவனும், நாள்தோறும் நாம் விரும்புகின்ற தலைவனும் ஆகிய, எண்ணில்லாத பழையவான புகழை யுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை, எந்நாளும் துதித்து வழிபடப்பெற்ற, கண்களும் மூன்று உடைய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

8. சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள் 
சிந்தையில் திகழும் சிவன் தன்னைப், 
பந்தித்த வினைப் பற்று அறுப்பானைப், 
பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானை, 
அந்தம் இல் புகழாள் உமைநங்கை 
ஆதரித்து வழிபடப் பெற்ற 
கந்தவார் சடைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

நாள்தோறும் தன்னையே சிந்தித்து, துயிலெழுங் காலத்துத் தன்னையே நினைத்து எழுவார்களது உள்ளத்தில் விளங்குகின்ற மங்கலப் பொருளானவனும், உயிர்களைப் பிணித்துள்ள வினைத் தொடக்கை அறுப்பவனும், பால் முதலிய ஆனஞ்சும் ஆடுதலை விரும்பியவனும் ஆகிய, முடிவில்லாத புகழையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை விரும்பி வழிபடப்பெற்ற, கொன்றை முதலிய பூக்களின் மணத்தையுடைய, நீண்ட சடையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக்காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

9. வரங்கள் பெற்று உழல், வாள் அரக்கர் தம் 
வாலிய புரம் மூன்று எரித்தானை, 
நிரம்பிய தக்கன்தன் பெரு வேள்வி 
நிரந்தரம் செய்த நிட்கண்டகனைப், 
பரந்த தொல் புகழாள் உமை நங்கை 
பரவி ஏத்தி வழிபடப் பெற்ற 
கரங்கள் எட்டு உடைக் கம்பன் எம்மானைக், 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

தவத்தின் பயனாகிய வரங்களைப் பெற்றமையால், வானத்தில் உலாவும் ஆற்றலைப் பெற்ற கொடிய அசுரர்களது வலிய அரண்கள் மூன்றினை எரித்தவனும், தேவர் எல்லாரும் நிரம்பிய தக்கனது பெருவேள்வியை அழித்த வன்கண்மையுடையவனும் ஆகிய, பரவிய, பழைய புகழையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை முன்னிலையாகவும், படர்க்கையாகவும் துதித்து வழிபடப் பெற்ற, எட்டுக் கைகளையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

10. எள்கல் இன்றி இமையவர் கோனை, 
ஈசனை வழிபாடு செய்வாள் போல் 
உள்ளத்து உள்கி, உகந்து, உமை நங்கை 
வழிபடச் சென்று நின்றவா கண்டு, 
வெள்ளம் காட்டி வெருட்டிட அஞ்சி 
வெருவி ஓடித்தழுவ வெளிப்பட்ட 
கள்ளக் கம்பனை, எங்கள் பிரானைக், 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

தேவர் பெருமானாகிய சிவபெருமானை, அவனது ஒரு கூறாகிய உமாதேவிதானே, தான் வழிபடவேண்டுவது இல்லை பயனின்மை யறிக. இத் திருப்பதிகத்துள், "நல்ல கம்பன்", "கள்ளக் கம்பன்" என வந்தவையும், அம்மை வழிபட்ட நிலையைக்கருதி அருளினவே யாதலின், அவற்றை உருத்திரர் வழிபட்ட நிலை, திருமால் வழிபட்ட நிலைகளாகக் கூறும் புராண வரலாற்றோடு இயைக்க முயலுதல் பொருந்தாமை யறிக.

11. பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானைப் 
‘பெரிய எம்பெருமான்” என்று எப்போதும் 
கற்றவர் பரவப் படுவானைக், 
“காணக் கண் அடியேன் பெற்றது” என்று 
கொற்றவன், கம்பன், கூத்தன் எம்மானைக் 
குளிர் பொழில், திரு நாவல் ஆரூரன் 
நற்றமிழ் இவை ஈர்ஐந்தும் வல்லார், 
நன்நெறி உலகு எய்துவர் தாமே.

குளிர்ந்த சோலைகளையுடைய திருநாவலூரனாகிய நம்பியாரூரன், ஆனேற்றை விரும்பி ஏற வல்லவனும், மெய்ந்நூல்களைக் கற்றவர்கள், 'இவன் எம் பெரிய பெருமான்' என்று எப்போதும் மறவாது துதிக்கப்படுபவனும், யாவர்க்கும் தலைவனும், கூத்தாடுதலை உடையவனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன், கண்பெற்றவாறு வியப்பு என்று சொல்லிப் பாடிய நல்ல தமிழ்ப் பாடலாகிய இவை பத்தினையும் பாட வல்லவர். நன்னெறியாற்பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர்

Friday, March 18, 2022

பங்குனி பவுர்ணமி தினத்தில் குலதெய்வத்தை வீட்டிற்குள் இப்படி அழைத்தால்,

பங்குனி பவுர்ணமி

பங்குனி பவுர்ணமி தினத்தில் குலதெய்வத்தை வீட்டிற்குள் இப்படி அழைத்தால், வாசலில் நிற்கும் குலதெய்வம் கூட உங்கள் வீட்டிற்குள் விரும்பி வந்துவிடும்.

பொதுவாக பௌர்ணமி தினம் என்றாலே குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள்.  பங்குனி மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமி தினத்தில், எல்லோரும் அவசியமாக குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். குலதெய்வ குத்தம் இருந்தால், குலதெய்வத்திற்கு கோபம் இருந்தால், குலதெய்வம் வீட்டிற்குள் வர முடியாத சூழ்நிலை இருந்தாலும் கூட இந்த பங்குனி பௌர்ணமி தின வழிபாட்டை மேற்கொண்டால், எல்லாத் தடைகளும் நீக்கப்பட்டு வீட்டு வாசலில் நிற்கும் குலதெய்வம், எல்லா தடைகளையும் தாண்டி நம் வீட்டிற்குள் குடி கொள்ளும் என்று சொல்கிறது சாஸ்திரம்.

உங்கள் வீட்டு குல தெய்வம் பெண் குலதெய்வமாக இருந்தால் அதை உங்களுடைய வீட்டிற்குள் எப்படி வரவேற்பது, ஆண் குலதெய்வமாக இருந்தால் அதை உங்கள் வீட்டிற்குள் எப்படி வரவேற்பது என்பதை பற்றிய ஆன்மீக வழிபாட்டு முறையை  தெரிந்துகொள்வோம்.

உங்களுடைய வீட்டு குல தெய்வம் எந்த குலதெய்வமாக இருந்தாலும், முடிந்தால் நாளை அந்த குலதெய்வ கோவிலுக்கு சென்று, குலதெய்வத்தை தரிசனம் செய்துவிட்டு வருவது மிகவும் சிறப்பானது. குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. வீட்டில் இருந்தபடியே இந்த முறைப்படி வழிபாட்டினை செய்து பாருங்கள்.

 உங்களுடைய வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.  காலை எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் உள்ள உங்களுடைய குலதெய்வத்தின் திருஉருவப் படத்திற்கு வாசனை மிகுந்த பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

உங்கள் வீட்டின் குலதெய்வம், பெண் குலதெய்வமாக இருந்தால்  காலை குலதெய்வத்தின் திருவுருவப் படத்திற்கு முன்பு தீபம் ஏற்றி வைத்து விட்டு, தனியாக மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு குலதெய்வத்திற்கு என்று தனி‌ தீபம் ஏற்ற வேண்டும்.

அதன் பின்பு ஒரு தேங்காய்க்கு மேல் நன்றாக மஞ்சளைக் குழைத்து தடவிக் கொள்ள வேண்டும். குலதெய்வத்தின் திரு உருவ படத்திற்கு முன்பாக தேங்காயை வைத்து, மனதார வேண்டி குலதெய்வத்தை உங்கள் வீட்டிற்குள் வர வேண்டும் என்று அழையுங்கள். அதன் பின்பு இந்த தேங்காயை எடுத்து உடைத்து தேங்காயின் அடிப்பகுதியை தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்த வேண்டும்.

ஒரு சிறிய தட்டில் பச்சரிசியை பரப்பி அதன்மேல் இந்த தேங்காய் மூடியை அமரவைத்து, தேங்காய்க்கு உள்பக்கத்தில் நெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி உங்களுடைய பெண் குலதெய்வத்தை உங்கள் வீட்டிற்குள் அழைத்தால், நிச்சயமாக அந்தப் பெண் குலதெய்வம், அந்த தீபம் எரிந்து முடிவதற்குள், உங்கள் வீட்டிற்குள் வந்து அருள்புரியும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை.

அடுத்தப்படியாக உங்களுடைய குலதெய்வம் ஆண் குலதெய்வமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும். ஒரு சிறிய பித்தளையில் இருக்கும் கலச சொம்பு எடுத்துக் கொள்ளுங்கள். செம்பு கலச சொம்பு இருந்தாலும் பரவாயில்லை. அதன் உள்ளே சுத்தமான தண்ணீரை நிரப்பி விட்டு, அந்த தண்ணீரில் மஞ்சள் பொடி, கிராம்பு 2, ஏலக்காய் 2, பச்சை கற்பூரம் சிறிதளவு, இந்த பொருட்களை எல்லாம் போட்டுக் கொள்ள வேண்டும். 5 மாஇலைகளையும் அந்த தண்ணீரில் போட்டு விடுங்கள்.

இந்த கலச சொம்பு மேல் ஒரு தேங்காயை நிற்க வைக்க வேண்டும். அந்த தேங்காய்க்கு மஞ்சள் குங்குமப் பொட்டு இட்டுக் கொள்ளுங்கள். இந்த கலசத்தை உங்கள் குலதெய்வ படத்திற்கு முன்பாக வைக்க வேண்டும். தீப தூப ஆராதனை காட்டி கலசத்தை வழிபாடு செய்துவிட்டு, ஒரு பெரிய அளவிலான கட்டி கற்பூரத்தை ஏற்றி வைத்து, அந்த கற்பூரம் கரைவதற்குள், உங்கள் வீட்டு குல தெய்வம் அந்த கலச சொம்பில் வந்து அமர வேண்டும் என்று வேண்டுதல் வைத்துக் கொள்ளலாம்.  மாலை 6 மணிக்கு மேல் அந்த கலச சொம்பில் இருக்கும் தண்ணீரை உங்கள் வீடு முழுவதும் தெளித்து விட்டு, மீதம் இருக்கும் தண்ணீரை செடிகளுக்கு ஊற்றி விடலாம்.

நிச்சயமாக உங்களுடைய வேண்டுதலின்படி குல தெய்வம் வந்து உங்கள் வீட்டில் சந்தோஷமாக குடிகொள்ளும். மற்ற நாட்களில் வழிபாடு செய்து பலன் பெறுவதை விட, இந்த பங்குனி பவுர்ணமி தினத்தில் குலதெய்வ வழிபாட்டை செய்து குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்தால், இரட்டிப்பு பலனை பெறலாம்.

மேலே சொல்லப்பட்ட விஷயங்கள் அல்லாமல் உங்கள் வீட்டின் முறைப்படி, உங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்வதாக இருந்தாலும், தாராளமாக இன்று பௌர்ணமி  தினத்தில் வழிபடுவது நல்ல பலனைக் கொடுக்கும் 

நன்றி
இனியகாலைவணக்கம் வாழ்கவளமுடன்

ஜெய் சத்தியபிரமோத தீர்த்தரு

உண்மை நிகழ்வு

உத்திராதி மடத்தில் சில காலம் முன்பு த்வாதஸி அன்று பூஜைகள் நடந்து முடிந்து நைவேதனம்,தீபாராதனம் எல்லாம் முடிந்து பாரணம் செய்ய இலை போட்டு பிராம்மணர்கள் அமர ஏற்பாடுகள் நடந்து கோண்டிருந்தது.

அந்த த்வாதஸி விசேஷம் எதுவெற்றால்,உத்திராதி மடத்து ஸ்வாமிகள் அங்கே இருந்தார்.

அப்படி இலை போட்டு பறிமாரிக் கொண்டிருந்த வேளையில் எல்லோருக்கும் சந்தனம் மற்றும் அங்கார அஷ்தை வழங்கப்பட்டு கொண்டிருந்தார்கள்..

அந்த வேளையில் ஜடாமுடியுடன் உடல் முழுவதும் பட்டை பட்டையாக திருநீரு தரித்த வெள்ளை அங்கவஸ்திரம் தரித்த நல்ல சிவப்பு நிரமுடைய தீக்ஷிதர் ஒருவர் உத்திராதி மடத்தின் உள்ளே வந்து அலங்காரபந்தி இலையில் வந்து அமரந்து..அதிகாரத்துடன் ஸ்வாமிகளை பார்த்து """என்ன த்வாதஸி பாரணம் ஆக இவ்வளவு நேரமா""","""பசிக்கிறது சீக்கிரம் பரிமாருங்கள்""",என்று உரத்த குரலில் ஆணையிட்டார்.

இதை கேட்ட சுவாமிகளின் சிஷ்யர்கள் மற்றும் அங்கிருந்த மாத்வர்கள் முகம் சுளித்து கோபமுடன் முணு முணுத்தனர்..

இதை மிக சாந்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்த உத்திராதி மடத்து பீடாதிபதி ஸ்வாமிகள் கையை உயர்த்தி அணைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லி,உடனே எல்லோருக்கும் பரிமாற சொன்னார்..

அன்று த்வாதஸி பாரணம் நன்று நடந்து முடிந்தது,அங்கே வந்திருந்த அந்த ஆஜானுபாகுவான ஸ்மார்த்த ஸந்நியாஸி ஒருமுறைக்கு இரு முறை இலையில் பரிமாரிய பதார்த்தங்களை நன்கு ருசித்து உண்ட பிறகு,கை அலம்பி கொண்டு வந்தார்.

வந்தவர் ஸ்வாமிகளை ஆசிர்வதித்து விட்டு பல மந்திராச்சதம் வாங்காமல் மடத்தை விட்டு வெளியேரி சென்றார்.

உடணே ஸ்வாமிகள் இரண்டு சிஷ்யர்களை அவர் பின்னால் அனுப்பி அந்த ஸ்மார்த்த ஸந்நியாஸி எங்கே செல்கிறார் எண்று கண்டறிந்து வரச்சொல்லி அனுப்பிவிட்டு,மற்றவர்களுக்கு பல மந்திராச்சதம் வழங்க அமர்ந்தார்..

உடனே அங்கிருந்த பக்தர்கள் ஸ்வாமிகளிடம் பல வாரியாக அந்த ஸ்மார்த்ண ஸந்நியாஸியை எப்படி அனுமதித்தீர்கள் என்பது போல கேட்க தொடங்கினார்கள்,

உடனே ஸ்வாமிகள் இதற்கு விடை அவரை பின் தொடர சொல்லிஅனுப்பிய இரண்டு சிஷ்யர்கள் வந்து சொல்வார்கள் என்று சிரித்த படி பதில் சொன்னார்..

சில மணி நேரம் கழித்து அந்த சந்நியாசியை பின் தொடர்ந்த அந்த இரு சிஷ்யர்கள் வந்தார்கள்..

அவர்கள் கண்ட காட்சியை ஸ்வாமிகள் மடத்தில் கூடியிருந்த பக்தர்களிடம் விளக்கச் சொன்னார்..

அந்த சிஷ்யர்கள் அந்த ஸ்மார்த்த ஸந்நியாஸி வெகு தூரம் நடந்து சென்றதாகவும் பிறகு ஒரு சிவாலயத்திற்குள் நுழைந்ததாகவும்,இவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே,சிவலிங்க சந்நதிக்குள் நுழைந்து ஜோதி வடிவில் லிங்கேஸ்வரருடன் ஐக்கியமானதாக பக்தி பரவஸத்துடன் விளக்கினார்கள்..

இதை கேட்டுக் கொண்டிருந்த மடத்து பக்தர்கள்,பக்தி பரவஸத்துடன் "" ஓம் நமச்சிவாய""ஓம் நமச்சிவாய""என்று ஈஸனை நேரில் கண்ட ஆனந்த அனுபத்தில் திளைத்து,உத்திராதி மடத்து ஸ்வாமிகள் வாழ்க எனவும் கோஷமிட்டு அவரின் ஆசிகளை பெற்றார்கள்..

"ஜெய் சத்தியபிரமோத தீர்த்தரு","ஜெய் சத்யாத்ம தீர்த்தரு".

தேங்காய் உடைத்து சாமிக்கு பூஜை செய்யும் பொழுது, தேங்காய் தண்ணீரை என்ன செய்ய வேண்டும் தெரியுமா.?*

*தேங்காய் உடைத்து சாமிக்கு பூஜை செய்யும் பொழுது, தேங்காய் தண்ணீரை என்ன செய்ய வேண்டும் தெரியுமா.?* 
🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥
குறிப்பிட்ட தெய்வங்களுக்கு தேங்காயை உடைத்து வைத்து பூஜை செய்வது முறையானதாக இருந்து வருகிறது. குறிப்பாக விக்னங்களை தீர்க்கும் விக்னேஸ்வரனுக்கு தேங்காய் உடைப்பதை மிகவும் விசேஷமாக பக்தர்கள் கடைபிடித்து வரும் ஒரு விஷயமாக இருக்கிறது. இப்படி தேங்காய்க்கும், ஆன்மீகத்திற்கும் நிறையவே சம்பந்தம் உண்டு. தேங்காயை சாமிக்காக நீங்கள் உடைக்கும் பொழுது அதில் இருக்கும் தேங்காய் தண்ணீரை முறையாக என்ன செய்ய வேண்டும்.? 
🥥
முந்தைய காலங்களில் நம் முன்னோர்கள் தேங்காய் உடைக்கும் பொழுது சரிசமமாக உடைக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஒன்று பெரிதாகவும், இன்னொன்று சிறிதாகவும் உடைக்கக் கூடாது. நாம் வேண்டும் வேண்டுதல் பலிக்க வேண்டும் என்பதன் ஒரு சகுனமாக தேங்காய் உடைப்பது உண்டு. தேங்காய் அழுகிப் போகாமல் நல்ல தேங்காயாக இருந்தால், வேண்டிய வேண்டுதல் அப்படியே நிறைவேறும் என்பது ஐதீகம்.
🥥
தேங்காயில் பூ இருந்தால் நல்ல சகுனம் என்றும், தேங்காயில் அழுகல் இருந்தால் அபசகுணம் என்றும் சகுன சாஸ்திரங்கள் குறிப்பிட்டு கூறுகிறது. இப்படி பூஜைக்காக உடைக்கப்படும் தேங்காயில் இவ்வளவு விஷயங்கள் இருக்கும் பொழுது நாம் அந்த தேங்காய் உடைக்கும் பொழுது தேங்காய் தண்ணீரை கீழே ஊற்றுவது சரியா? தேங்காய் உடைக்கும் பொழுது முழுமையாக அதை இறைவனுக்கு அர்ப்பணிக்க பட வேண்டும்.
🥥
வீட்டில் பூஜை செய்கிறீர்கள் என்றால் நீங்கள் தேங்காய் உடைக்கும் போது தேங்காயின் முக்கண்களுக்கு நேரே இருக்கும் நரம்பில் ஒரு அடி அடித்தால் சரி பாதியாக உடைந்துவிடும். அது உடையும் பொழுது ஒரு மூடியில் அதன் தண்ணீரை தேக்கி வைத்து கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை ஒரு தம்ளரில் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். பூஜைக்கு தேங்காய் வைத்து அதன் பிரசாதமாக இந்த தண்ணீரையும் எந்த தெய்வத்திற்கு படைக்கிறீர்களோ, அந்த தெய்வத்துக்கு அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்.
 🥥
நைவேத்தியம் படைத்து, தீபாராதனை காண்பித்த பிறகு தண்ணீரை மூன்று முறை சுற்றி பூமியில் ஊற்றுவது வேண்டும். அப்படி ஆவாஹனம் செய்யும் பொழுது நீங்கள் இந்த தேங்காய் தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம். மீதம் இருக்கும் தண்ணீரை பூஜை முடித்த பிறகு தீர்த்தமாக அனைவருக்கும் கொஞ்சம் கொஞ்சம் கொடுக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் வேண்டிய பூஜை முழுமையாக நிறைவு பெறுகிறது.
🥥
தேங்காய் உடைப்பவர்கள் மட்டும் தேங்காய் தண்ணீரை முழுவதுமாக குடிப்பதோ, அந்த தண்ணீரை வீணடிப்பதோ கண்டிப்பாக கூடாது. அதற்கு பதிலாக நீங்கள் வேண்டிய வேண்டுதல் பலிக்க அந்த தெய்வத்திற்கு முறையாக பிரசாதமாக படைத்து, தீர்த்தமாக அனைவரும் எடுத்துக் கொள்வதே சரியாக இருக்கும். தேங்காய் சரி பாதியாக இல்லாமல் உடைத்தால் நீங்கள் வேண்டிய வேண்டுதலில் குறை இருக்கிறது என்று அர்த்தம் கொள்ளலாம்.
🥥
இளநீரை போலவே, தேங்காய் தண்ணீரும் உடலுக்கு நிறையவே நன்மைகளை செய்யும். உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி சிறுநீரக கற்களை கரைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. அதுமட்டுமல்லாமல் செரிமான பிரச்சனை, தலைவலி, உடல் எடை அதிகரிப்பு, தைராய்டு, பசி, தாகம் அத்தனையும் தீர்க்கும் வல்லமை இதற்கு உண்டு. சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுக்களை நீக்கி, சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளை ஒழித்து கட்டும் சக்தியும் இதற்கு உண்டு. எனவே தேங்காய் தண்ணீரை பூஜைக்கு பயன்படுத்தும் பொழுதும், மற்ற நேரங்களிலும் வீணடிப்பதை இனி தவிர்க்கலாமே.

மஹாபெரியவா - 27

மஹாபெரியவா - 27  

 ஸ்ரீமடம் பாலு சபரிமலையை 
விட்டு இறங்கி, எர்ணாகுளம் 
வந்து ஒரு வக்கீலின் வீட்டில் 
வந்து தங்கினார். அங்கேயே உணவருந்தினார். வக்கீலின் 
தாயார் இவருக்கு ஆசி வழங்கிய பின்னர், "டேய் நீ ராமய்யர் 
மாமாவைப் பார்க்காமல் 
போகாதே. மஹாபெரியவா 
கிட்டே இருந்து வந்திருக்கே.ன்னு சொன்னா, அவர் ரொம்ப சந்தோஷப்படுவார்" என்று 
வற்புறுத்திச் சொல்லவே, 
ஸ்ரீமடம் பாலு அதற்கு 
சம்மதித்தார்.

ராமய்யருக்கு வயது 90 இருக்கும். 
இவர் ( பாலு ) காஞ்சி மடத்தில் 
இருந்து வந்திருப்பதாகவும், 
ஸ்ரீமஹாபெரியவாளிடம் 
கைங்கர்யம் செய்பவர் என்று தெரிந்ததும் அந்த முதியவர் 
இவர் காலில் திடீரென்று 
விழுந்து நமஸ்கரித்தார். 
ஸ்ரீமடத்து பாலுக்கு உடலும் 
உள்ளமும் பதறியது. இவ்வளவு வயதானவர் நம் காலில் 
விழுவதா ? அபசாரம் அல்லவா 
என்று பதறினார்.

"நான் ரொம்பச் சின்னவன்.
எனக்குப் போய் நமஸ்காரம் 
பண்றேளே" என்று கண்களில் 
நீர்மல்க படபடப்புடன் சற்று 
தள்ளி நின்றார் ஸ்ரீமடம் பாலு

"டேய் இந்த நமஸ்காரம் 
உனக்கில்லே. நீ கைங்கர்யம் செய்யறியே, அந்த பகவானுக்கு என்றவர், டேய் ஸ்ரீபெரியவா 
சாட்சாத் ஈஸ்வரன் தாண்டா ! 
அவர் சிரஸிலே சந்திரன் 
இருக்கு. கையிலே சங்கு சக்கரம் இருக்கு. பாதத்திலேயே 
ஸ்ரீ சக்ரவர்த்தி ரேகை இருக்கு. 
நீ பார்த்திருக்கியோ?" என்று ஓர் அபூர்வமான தகவலை சர்வ சாதாரணமாகக் கூறினார் 
முதியவர்.

"நாங்க அவா கிட்டேயே 
இருக்கோம். நீங்க சொல்ற 
மாதிரியான ஈஸ்வர அடையாள அம்சங்களை பெரியவா கிட்ட 
நாங்க பார்த்ததில்லையே" 
என்று குரலில் ஏக்கம் தொனிக்கச் சொன்னார் ஸ்ரீமடம் பாலு.

அதைக் கேட்ட ராமய்யர் விவரமாக 
பேச ஆரம்பித்தார்.

"ஒரு நிதர்சனமான உண்மையை 
உன் கிட்டே சொல்றேன். இது 
வரையிலே இதை யார் கிட்டேயும் 
நான் சொன்னதில்லே. ரொம்ப 
காலம் முன்னால, ஸ்ரீபெரியவா 
இங்கே வந்து தங்கி இருந்தா. 
தினமும் அதிகாலை மூணு 
மணிக்கு எழுந்துப்பார். அப்புறம் 
பூஜை, தரிசனம். இங்கே அக்கம் 
பக்கம் இருக்கிற கோயில், உபன்யாசம்.ன்னு ராத்திரி 
பன்னண்டு மணி வரைக்கும் 
ஓயாம உழைப்பு தான். இங்கே 
நாப்பது நாள் இருந்தா. அவர் 
தினமும் இப்படி சிரமப்படுவதை பாத்தப்போ என் மனம் வேதனைப்பட்டுது. அதனாலே 
ஒரு நாள் பொறுக்க முடியாமே 
அவர் முன்னாலே கை 
கூப்பிண்டு நின்னேன்.

"என்ன வேணும் ?" னு 
என்னண்டை கேட்டார்.

"அதைச் சொல்றதுக்கு எனக்கு 
பயமா இருக்கு"ன்னேன்.

"நான் ஒண்ணும் புலி,சிங்கம் 
இல்லே.. பயப்படாமே சொல்லு"

"தினமும் காலம்பற மூணு 
மணியில் இருந்து நடு ராத்திரி வரைக்கும் உங்களுக்கு வேலை 
சரியா இருக்கு. கொஞ்சம் ஓய்வு வேண்டாமா ? வாரத்திலே ஒரு 
நாள் உங்களுக்கு எண்ணெய் 
தேய்ச்சு ஸ்நானம் செஞ்சு வைக்கணும்.ன்னு எனக்கு 
மனசிலே ஒரு ஆசை" என்று 
தயக்கத்தோட சொல்லி 
நிறுத்தினேன்.

அதைக் கேட்டு மகாபெரியவா 
கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு, 
"ஓஹோ உனக்கு அப்படியொரு ஆசையா ? சரி சனிக்கிழமை 
எண்ணெய் கொண்டு வா" 
என்று உத்தரவு போட்டார்.

துளசி, மிளகு போட்டு காய்ச்சின எண்ணெயுடன் நான் போனதும், "சனிக்கிழமை மறக்காம வந்துட்டியே"..ன்னு சொன்ன மகாபெரியவா, தன் திருமேனிக்கு மங்கள ஸ்நானம் செய்விக்க 
என்னை அனுமதிச்சா.

இது எனக்குக் கிடைச்ச பாக்யம்" 
என்று சொன்ன ராமய்யர் பின்னர் 
சொன்னவை வியப்பூட்டும் 
விஷயங்கள்.

"பெரியவா சிரசில் எண்ணெய் தேய்த்தேன்.- சங்க சக்கர ரேகை தரிசனமாச்சு. கையில காலுல 
தேய்க்கற போது சக்கரவர்த்தி 
ரேகைகள் தெரிஞ்சது. இதை 
எல்லாம் பார்த்தவுடன் எண்ணெய் பாத்திரத்தை அப்படியே கீழே 
வைச்சுட்டு பெரியவாளை 
நமஸ்காரம் செய்தேன்.

ஏன்னா, அவர் ஈஸ்வரனோட 
அவதாரம் என்பது எனக்குக் 
கொஞ்சமும் சந்தேகமே இல்லாமப் புரிஞ்சுடுத்து. அதனாலே தான் சொல்றேன். அவாளை விட்டுட்டு 
நீ எங்கேயும் போகாதே. நீ செஞ்ச புண்ணியம் அது. பெரியவா
கிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்..ன்னு சொல்லு 
ஏன்னா பாதத்திலே இருக்கிற 
ரேகை அழிஞ்சுடுமோ..ன்னு 
ராமய்யர் பயப்படறார்..ன்னு 
சொல்லு !"

காஞ்சி மகானை விட்டு கடைசி 
வரை கண நேரமும் பிரியாமல் 
இருந்த ஸ்ரீமடம் பாலுவுக்கு 
என்ன பாக்கியம்.

ஓம் ஸ்ரீமஹாபெரியவா 
திருவடிகள் சரணம்🌹🙏

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

படித்ததில் மனம் சிலிர்த்தது

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...