Sunday, February 18, 2024

தமிழ் அறிவோம் -1

தமிழ் அறிவோம் 

1. QR CODE = விரைவுக்குறி
2. 3D = முத்திரட்சி
3. BLUETOOTH = ஊடலை
4. BROADBAND = ஆலலை
5. CCTV = மறைகாணி
6. CHARGER = மின்னூக்கி
7. CYBER = மின்வெளி
8. DIGITAL = எண்மின்
9. GPS = தடங்காட்டி
10. HARD DISK = வன்தட்டு
11. HOTSPOT = பகிரலை
12. INKJET = மைவீச்சு
13. INSTAGRAM = படவரி
14. LASER = சீரொளி
15. LED = ஒளிர்விமுனை
16. MEME = போன்மி
17. MESSANGER = பற்றியம்
18. OCR = எழுத்துணரி
19. OFFLINE = முடக்கலை
20. ONLINE = இயங்கலை
21. PRINT SCREEN = திரைப் பிடிப்பு
22. PRINTER = அச்சுப்பொறி
23. PROJECTOR = ஒளிவீச்சி
24. ROUTER = திசைவி
25. SCANNER = வருடி
26. SELFIE = சுயமி 
27. SIMCARD = செறிவட்டை
28. SKYPE = காயலை
29. SMART PHONE = திறன்பேசி
30. TELEGRAM = தொலைவரி
31. THUMBDRIVE = விரலி
32. THUMBNAIL = சிறுபடம்
33. TWTTER = கீச்சகம்
34. WECHAT = அளாவி
35. WHATSAPP = புலனம்
36. WIFI = அருகலை
37. YOUTUBE = வலையொளி
38. GALLERY = களரி
39. GADGET = பொறிகை
40. GAME = ஆட்டம்
⭕WhatsApp புலனம் 
⭕Youtube வலையொளி
⭕Instagram படவரி
⭕ We Chat அளாவி
⭕Messanger பற்றியம்
⭕Twtter கீச்சகம்
⭕Telegram தொலைவரி
⭕Skype காயலை
⭕Bluetooth ஊடலை
⭕WiFi அருகலை
⭕Hotspot பகிரலை
⭕Broadband ஆலலை
⭕Online இயங்கலை 
⭕Offline முடக்கலை
⭕Thumbdrive விரலி
⭕Hard disk வன்தட்டு
⭕GPS தடங்காட்டி
⭕CCTV மறைகாணி
⭕OCR எழுத்துணரி
⭕LED ஒளிர்விமுனை
⭕3D முத்திரட்சி
⭕2D இருதிரட்சி
⭕Projector ஒளிவீச்சி
⭕Printer அச்சுப்பொறி
⭕Scanner வருடி
⭕Smart phone திறன்பேசி
⭕Simcard செறிவட்டை
⭕Charger மின்னூக்கி
⭕Digital எண்மின்
⭕Cyber மின்வெளி
⭕Router திசைவி
⭕Selfie தம் படம் - சுயஉரு
⭕Thumbnail சிறுபடம்
⭕Meme போன்மி
⭕Print Screen திரைப் பிடிப்பு
⭕Inkjet மைவீச்சு
⭕Laser சீரொளி.
 
Switch board சொடுக்கிப் பலகை
plug point ஆப்பு முனை சொருகித்தானம்
Charger மின்ஏற்றி
Sink மூழ்கு/பாத்திரம் கழுவும் இடம்
Gas stove எரிவாயு அடுப்பு
Lighter ஒளி ஏற்றி
Bulb குமிழ்விளக்கு/மின்விளக்கு
Switch சொடுக்கி
Ink pen மைஎழுதுகோல் 
Pen எழுதுகோல்
Ball point pen பந்து முனை எழுதுகோல்  
Pencil கரிக்கோல்
Scale அளவுகோல்/அளப்பான்
Table மிசைப்பலகை
Remote தொலைவில்/தான்இயக்கி
Fridge குளிர்ப் பதனப்பெட்டி
Aircooler காற்றுக் குளிர்வி
Washing machine மின் சலவை இயந்திரம்
Mixie மின் கலக்கி
Grinder மின் அரைத்தி/மின் அரவை இயந்திரம்/மாவு அரைப்பான்
Torch மின்கல விளக்கு/பசைமின்கலவிளக்கு/ஒளிவழங்கி
Sofa நீள்சாய்வு இருக்கை 
Hall வரவேற்பறை/அறை
Balcony மாடம் 
Wifi அருகலை
cupboard/Alamari -நிலைப் பேழை
Tie கழுத்துச் சுருக்கு
Id card அடையாள அட்டை
Trouser கால் சட்டை
Selfie தன் படம்/தாமி 
Clip கவ்வி
Toothbrush பல்துலக்கி
Restroom ஒப்பனை அறை
Maintain.- தொடர்ந்து செயலாக்குவது 
Fevicol - பசை
Cake - அணிச்சல் 
Chocolate - இனிப்பு அச்சு/தீங்கட்டி.
Icecream பனிக்கூழ் 
Biscuit - ஈரட்டி ( இரு புறமும் சுடுதல்)
Induction stove தூண்டல் அடுப்பு
Tiffin box சிற்றுண்டி பெட்டி
Snacks சிறுதீனி 
Box பெட்டி
Bottle - குப்பி/குடுவை 
Shampoo சிகை கழுவி
Shoe/sepal சப்பாத்துகள்.
Soup வடி சாறு
Tiles வனைஓடுகள்/மெருகு ஓடுகள்
Tubelight குழல் விளக்கு
Pant முழுக்கால் - சட்டை.
Trouser அரைக்கால் சட்டை
Shorts குட்டைக்கால் சட்டை
Leggings கால் குப்பாயம் / புட்டகம்
coat stand - சட்டை தாங்கி! 
Belt- அரைக்கச்சை
Table- மிசைப்பலகை
Tablemat மிசைப்பலகை விரிப்பு.
Washbasin கழுவு தொட்டி 
Stool இருக்கை 
Inverter எதிர் மின்மாற்றி
Channel அலைவரிசை 
Media ஊடகம்
Soap- வழலை கட்டி

Thursday, February 15, 2024

ஆதி தீ யக வந்தவனே ஆத்தியப்பா

 ஆதி தீ யக வந்தவனே ஆத்தியப்பா

ஆவிசோறக தந்தவனே ஆத்தியாப்பா அங்கி குள்ளா அணிந்து அதிர்வேட்டையாடி அடியேன்தாஸ் என்று
அமர்ந்தவனே ஆத்தியாப்பா
எங்கள் குல. கொடியை .. காத்தருள்வாய் ஆதாதியப்பா ..
வெட்ட அருவாமீசை காரா
வெள்ளைகுதிரை வாகன.
விரைந்து வாரும்ய்யா
எங்கள் வீட்டுக்கு ...
வாரும்ய்யா
ஆத்தியாப்பா .. ஆத்தியாப்பா...ஆத்தியப்பா..

3000 திவ்யபிரபந்த வரலாற்று ஆய்வு பயணம்

 அய்யா !!

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி வட்டம், செட்டியாபத்து கிராமத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீ ஐந்து வீட்டு பெரியசுவாமி அய்யாவின் வரலாற்று ஆய்வு பயணம்- ஸ்ரீ ஆத்தி சுவாமியின் துணையுடன்......
ஸ்ரீ பெரியசாமி அய்யா தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலையின் அருகிலுள்ள சிறிய கிராமத்தில் ஆழ்வார் சுவாமி மற்றும் ஆழ்வார் அம்மாள் தம்பதியினருக்கு தெய்வ கடாட்சம் பெற்ற குழந்தையாக தோன்றினார்.
விதியின் காரணமாகவும், தனது தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினாலும் வீட்டைவிட்டு தனது 8ம் வயதில் வெளியறி கால்போன போக்கில் பயணித்து தனது 16ம் வயதில் (12ம் நூற்றாண்டின் இறுதியாகவோ அல்லது 13ம் நூற்றாண்டின் ஆரம்பமாகவோ இருக்கலாம்) அப்போதைய மதுரையில் ஸ்ரீ இராவணீஸ்வரன் வழிபட்ட அன்னை ஸ்ரீ காளியின்(ஸ்ரீ பெரியபிராட்டி) தெய்வீக தரிசனம் காணப்பெற்றார். பின்பு அன்னையின் கரத்தால் 3000 திவ்யபிரபந்தம் ஏட்டினையும், துணையாக ஸ்ரீ ஆத்திசுவாமியையும் பெற்று யாவரும் ஒன்று என்ற கோட்பாட்டுடன் மக்களுக்கு பல அற்புதங்களை செய்துவந்தார். செல்லும் இடம் எல்லாம் ஸ்ரீ சக்தி வழிபாட்டின் மகத்துவத்தினையும், எட்டெழுத்து மந்திரத்தினையும் மக்களுக்கு உபதேசித்து அவர்களுக்கு நற்கதி வழங்கிவந்தார்.
இவர் அன்னைக்காக பொ.ஊ 1258ம் ஆண்டு நவபாஷனத்தில் தெய்வத்திருமேனியினை செய்து அவரை 'ஸ்ரீ அனந்தம்மாள்' என்ற நாமத்தில் வழிபட்டு வந்தார்(இது ஸ்ரீ பெரியசாமியின் அருள்வாக்கில் உதிர்த்த சத்திய வாக்காகும்) என்றும் இந்த வழிபாட்டுத்தலமே கழுகுமலை ஸ்ரீ அனந்தம்மாள் ஆலயம் என்றும் 24 தலைமுறைகளாக இன்றும் இக்கோவிலுக்கு ஆதீன குருக்களாக தொடர்ந்து பணிவிடை செய்துவரும் குடும்பத்தினை சேர்ந்த ஸ்ரீ திருமால்சுவாமி மற்றும் ஸ்ரீ செல்லச்சாமி ஆகியோரின் வரலாற்று புரிதல்கள் ஆகும்.
ஸ்ரீ பெரியசாமி அய்யா ஜோதியான பின்பு அவரை உருவம் இல்லாத விளக்கின் ஒளியாக செட்டியாபத்து ஆலயத்திலும், அய்யாவின் திருமேனியினை மூடுபல்லாக்கில் கழுகுமலை கொண்டு சென்று ஸ்ரீ அனந்தம்மன் ஆலயத்தில் சிவலிங்கம் அமையபெற்ற சமாதியாக வைத்து வழிபட்டுவருகின்றனர்.
1தலைமுறை என்பது 33ஆண்டுகள் என்று கணக்கிட்டால் 24ம் தலைமுறை என்பது சுமார் 792 ஆண்டு வரலாற்றினை கொண்டது. எனவே 2024 - 792 = 1232ம் ஆண்டு. கிட்டதட்ட காலகட்டம் பொருத்தமாகின்றது. மேலும் ஸ்ரீ இராமானுஜரின் காலகட்டம் (1017 - 1137) என்பது வரலாற்று பதிவு. எனவே 'ஹரிஓம் ராமானுஜாய' எனும் எட்டெழுத்தும் ஸ்ரீ இராமானுஜரின் காலத்திற்கு பின்பே உபதேசிக்கப்பட்டிருக்கலாம்.
இதில் முக்கியமாக ஸ்ரீ பெரியசுவாமி அய்யாவின் ஜோதிமயமானல் நிகழ்வின் காலகட்டம்?
அன்னை ஸ்ரீ காளியால் ஸ்ரீ பெரியசுவாமி அய்யாவுக்கு வழங்கப்பட்ட 3000 திவ்யபிரபந்த ஏடு எங்கே? யாரால்? பாதுகாக்கப்படுகிறது. இவ்வேடு பிரதி எடுக்கப்பட்டதா? அந்த ஏட்டில் உள்ள கோட்பாடுகள் மற்றும் இரகசியங்கள் யாவை?
அய்யா ஸ்ரீ பெரியசுவாமி அன்னை ஸ்ரீ காளியினை சந்தித்த பூமி தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இயற்கை சீற்றத்தால் அழிவுற்ற பட்டினமருதூர் கடற்கரை பகுதி என்றும், இந்த பூமியில்தான் நமது இராவணீஸ்வரன் வழிபட்ட ஸ்ரீ காளி அன்னையின் ஆலயமும் புதையுண்டுள்ளது என்றும் விரைவில் நடைபெறவுள்ள மத்திய தொல்லியல்துறையினரின் சீறிய ஆய்வுகளின் வாயிலாக அய்யா ஸ்ரீ பெரியசாமி உண்மையினை உலகுணர செய்வார் என்றும் அய்யா ஸ்ரீ ஆத்திசுவாமி ஸ்ரீ பெரியசுவாமி அய்யாவிற்கு துணையாக வந்தவர் எண்பதுதான் உண்மை என்றும்
அய்யாவின் திரு ஏடானது தூத்துக்குடியில் இருந்து 800கி.மீ வடக்கே உள்ள அருங்காட்சியகம் போன்ற இடத்தில் விபரம் அறியாது வைக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று சனிக்கிழமை 10.02.2024 அன்று அருள்வாக்கின் வாயிலாக சில விளக்கங்களை ஸ்ரீ ஆத்திசுவாமி அய்யா எனக்கு தந்து அருள்புரிந்தார்.
அடியார்கள் எனது பதிவின் நோக்கங்களை புரிந்து, நமது அய்யா ஸ்ரீ பெரியசுவாமியிடம் தங்களது விளக்கங்களை கேட்டு தெளிவுடனே ஆராய்ந்து அய்யாவின் உண்மை வரலாற்றினையும், 3000 திவ்யபிரபந்த ஏட்டினையும் மீட்டு உலகறிய செய்திட உதவிடவும்.
ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம்!!
ஹரி ஓம் ராமானுஜாய நமக!!!

கங்கையில் நீராடுவது என்பது நிச்சயமாக அனைவராலும் முடியாது

கங்கை நதிக்கரையில் இருந்து 4 மைல் தூரத்தில் உள்ள சிறிய கிராமத்தில் புண்ணியதாமா என்ற வயதான அந்தணர் வசித்து வந்தார். அதே ஊரில் பிருஹத்தபா என்ற பெரும் தவசியும் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் மாலை வேளைகளில் இறைவனின் லீலைகளை கதையாக கூறுவார். அந்த கதைகளை புண்ணியதாமா தவறாமல் கேட்டு விடுவார். தனது அன்றாட பணிகளை முடித்துக் கொண்டு பிருஹத்தபா கூறும் கதையை கேட்க கிளம்பிவிடுவார். தனது வாழ்க்கையில் ஒரு நாள் கூட அவர் கதையை கேட்க தவறியதில்லை. அன்றாட பணிகளை முடிப்பது கதை கேட்பது உணவு தங்க இடம் கேட்டு வருபவர்களை உபசரிப்பது அவரது பணியாக இருந்தது. கங்கையில் இருந்து 4 மைல் தூரத்தில் இருந்தாலும் ஒரு நாள் கூட புண்ணியதாமா கங்கையில் நீராடியதில்லை. அவருக்கு அது பற்றிய சிந்தனையும் இருந்ததில்லை.

ஒரு முறை வெகு தொலைவில் இருந்த இரண்டு யாத்திரிகர்கள் கங்கா ஸ்நானம் செய்வதற்காக காசி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இரவு நேரம் ஆகி விட்டதால் வழியில் எங்காவது தங்கி மறுதினம் பயணத்தை தொடர இருவரும் நினைத்தனர். அருகில் இருந்த புண்ணிய தாமாவின் வீட்டிற்கு சென்று வீட்டு திண்ணையில் தங்க இடம் கிடைக்குமா என்று கேட்டனர். அவர்கள் இருவரையும் யாத்திரிகர்கள் என்று தெரிந்து கொண்ட புண்ணியதாமா வீட்டிற்குள் அழைத்துச் சென்று தனது மனைவியிடம் கூறி அன்னம் பரிமாறக் கூறினார்.
இரண்டு யாத்திரிகர்களும் உணவருந்துவதற்காக அமர்ந்தனர். அப்போது அவர்கள் புண்ணியதாமாவிடம் நாங்கள் காசிக்கு சென்று கங்கையில் நீராட உள்ளோம். இங்கிருந்து கங்கை எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று கூறமுடியுமா என்று கேட்டனர்.

அதற்கு புண்ணியதாமா நான் நூறு ஆண்டுகளாக இந்த கிராமத்தில் இருக்கிறேன். இங்கிருந்து 4 மைல் தூரத்தில் கங்கை நதி இருப்பதாக பிறர் சொல்ல நான் கேள்விப்பட்டுள்ளேன். இதுவரை நான் ஒருமுறை கூட கங்கையில் ஸ்நானம் செய்தது கிடையாது என்றார். ஒரு கணம் திகைத்த அந்த யாத்திரிகர்கள் மறுகணம் அன்னத்தை நிராகரித்து எழுந்து விட்டனர். பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு கங்கா என்று சொன்னாலும் கூட பாவங்கள் விலகிவிடும். இவர் அருகிலேயே இருந்து கொண்டு கங்கையில் நீராடவில்லை என்கிறார். இவரை விட பாவி யாரும் இருக்க முடியாது. இவ்வளவு சமீபத்தில் இருந்து கொண்டு கங்கா ஸ்நானம் செய்யாதவரின் வீட்டில் நாம் அதிதிகளாக தங்கியதே மகா பாவம் என்று நினைத்து வீட்டை விட்டு உடனடியாக வெளியேறினர். அவர்களின் செய்கையைக் கண்டு புண்ணிய தாமாவின் மனம் மிகவும் துயரத்தில் ஆழ்ந்துவிட்டது. இரு யாத்திரிகர்களும் கங்கையில் நீராடாதவரின் வீட்டில் தங்கியிருந்த பாவத்தை கங்கையில் நீராடிதான் போக்க வேண்டும் என்று தங்களுக்குள் பேசியபடியே கங்கை நதியை நோக்கி வேகமாக நடைபோட்டுச் சென்றனர்.

கங்கை நதிக்கரையை அவர்கள் அடைந்த போது கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கங்கை நதி வறண்டுபோய் கிடந்தது. அதில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. கானல் நீர் கூட தென்படவில்லை. கங்கை நதிக்கரை ஓரமாகவே நடந்து கங்கை உற்பத்தியாகும் இடம் வரை சென்று விட்டனர். ஆனாலும் அவர்களால் கங்கையை காணமுடியவில்லை. எவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கிறோம். நம்மால் கங்கையில் நீராட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதே! நாம் ஏதோ அபவாதம் செய்து விட்டதாக தெரிகிறதே என்று புலம்பத் தொடங்கி விட்டனர். பின்னர் கங்கா தேவியை மனதார நினைத்து தாங்கள் செய்த குற்றத்தை பொறுத்து தங்களுக்கு காட்சி தர வேண்டும் என்று மனமுருக வேண்டினர். அப்போது அவர்கள் முன் தோன்றிய கங்கா தேவி என்னை காணும் தகுதியை நீங்கள் இழந்து விட்டீர்கள். மிகவும் பாக்கியசாலியும் புண்ணியவானுமான புண்ணியதாமாவை இருவரும் சேர்ந்து நிந்தித்து விட்டீர்கள். இறைவனின் லீலைகள் கதை எங்கெல்லாம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் அனைத்து தீர்த்தங்களும் இருக்கின்றன. அதே போல் இறைவனின் லீலைகள் கதையை தொடர்ந்து கேட்பவர்கள் படிப்பவர்கள் புனிதத்திலும் புனிதம் அடைந்தவர் ஆகிறார்கள். அத்தகைய சிறப்பு மிக்க புண்ணியவானின் பாதங்கள் என் மீது படாதா என்று பல காலங்களாக நான் காத்திருக்கிறேன். நீங்களானால் அவரது மனம் புண்படும்படி நடந்து கொண்டு வந்திருக்கிறீர்கள். புண்ணியதாமாவிடம் சென்று மன்னிப்பு கோருங்கள். அதுவரை உங்களால் கங்கையில் நீராட முடியாது என்று கூறி மறைந்து விட்டாள்.

தங்கள் தவறை உணர்ந்து கொண்ட இருவரும் உடனடியாக புண்ணியதாமாவிடம் சென்று நடந்தவற்றை கூறி அவரது காலில் விழுந்து தங்கள் தவறை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அவர்களை அரவணைத்துக் கொண்ட புண்ணியதாமா இருவரையும் பிருஹத்தபாவிடம் அழைத்துச் சென்று இரண்டு ஆண்டுகள் ஹரி கதை கேட்கும்படியாக செய்தார். பின்னர் அனைவரும் சென்று கங்கையில் நீராடி மகிழ்ந்தனர்.

கருத்து

கங்கையில் நீராடுவது என்பது நிச்சயமாக அனைவராலும் முடியாது. இறைவனின் லீலைகளை கதையாக கேட்பது படிப்பது என்பது அனைவராலும் நிச்சயம் செய்ய முடியும். இறைவனின் லீலைகள் கதையாக எங்கெல்லாம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் அனைத்து தீர்த்தங்களும் இருக்கின்றன. அதனை தொடர்ந்து கேட்பவர்கள் புனிதத்திலும் புனிதம் அடைந்தவர்கள் ஆகிறார்கள். இறைவனின் லீலைகளை கதையை படிப்பதன் வாயிலாகவும் நமது பாவங்கள் அனைத்தும் விலகும். அதே நேரம் இறைவனின் பக்தனை நிந்திப்பது என்பது பாவத்திலும் பாவமாகும். ஆயிரம் பிரம்மஹத்தி தோஷத்திற்கும் கூட பிராயச்சித்தம் என்பது உண்டு. ஆனால் பகவானின் பக்தனை நிந்திப்பவனுக்கு எந்த பிராயச்சித்தமும் இல்லை.

துரோணர் செய்த தவறு

துரோணர் செய்த தவறு

குருஷேத்திரம் யுத்தம் முடிந்துவிட்டது. அஸ்தினாபுரத்து அரசனாக தருமன் முடிசூட்டிக் கொண்டு விட்டான். பாண்டவர்களின் வம்சத்தையே அழிக்க முயன்றதால் பெற்ற சாபத்தினால் மன நிம்மதியின்றி துரோணரின் மகன் அஸ்வத்தாமன் அலைந்து கொண்டிருந்தான். அவன் மனதில் ஒரு சந்தேகம் ஆட்டிப்படைத்தது. என் தந்தை சத்தியவான் செஞ்சோற்று கடன் தீர்ப்பதற்காகவே துரியோதனனுக்கு ஆதரவாக போர் புரிந்தார். ஆனால் அவரை பாண்டவர்கள் நான் இறந்ததாக பொய் சொல்லி அநியாயமாக கொன்று விட்டனர். என் தந்தை செய்த தவறு என்ன என மனதுக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தான். ஒரு நாள் கிருஷ்ணரை சந்தித்தான். கிருஷ்ணன் மீது அவனுக்கு கோபம் இருந்தாலும் தன் கேள்விக்கு கிருஷ்ணரை தவிர வேறு யாராலும் பதில் சொல்ல முடியாது என்ற காரணத்தால் அவரிடமே தன் மனதில் இருந்த சந்தேகத்தை கேட்டான். என் தந்தையை பாண்டவர்கள் அநியாயமாக கொன்றதற்கு நீயும் காரணமாக இருந்தாய் அவர் செய்த தவறு என்ன? என கேட்டான்.

கிருஷ்ணன் சிரித்தபடியே செய்த பாவத்துக்கு யாராக இருந்தாலும் தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்றார். என் தந்தை என்ன பாவம் செய்தார் கேட்டான் அஸ்வத்தாமன். அதற்கு கிருஷ்ணன் உன் தந்தை அனைத்து சாஸ்திரங்களையும் கற்றவர். ஆனால் ஏழையாக இருந்தார். அவரை கௌவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் குருவாக பீஷ்மர் நியமித்தார். அதன் பின் தான் அவரது வாழ்க்கையில் வளம் ஏற்பட்டது. கௌவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சகல வில்வித்தை உட்பட அனைத்தையும் கற்றுக் கொடுத்தார் உன் தந்தை. ஒருநாள் அவரை ஏகலைவன் என்ற வேடுவர் இனத்தை சேர்ந்த சிறுவன் சந்தித்தான். தனக்கும் வில்வித்தை கற்றுக் கொடுங்கள் என உன் தந்தையிடம் கேட்டான். அரச குமாரர்களுக்கு சொல்லி தருவதால் ஏகலைவனுக்கு கற்று தர துரோணர் மறுத்து விட்டார். ஆனால் ஏகலைவன் உன் தந்தையை போல் மண்ணில் சிலை செய்து குருவாக வழிபட்டு வில்வித்தையை தானாக கற்றுக் கொண்டான். சில ஆண்டுகளுக்கு பின் ஒரு சந்தர்ப்பத்தில் ஏகலைவனின் வில் வித்தை திறமை அர்ஜூனனுக்கு தெரிந்தது. அர்ஜூணன் துரோணரிடம் இதனை தெரிவித்தான். 

அரண்மனை பணி போய்விடும் என்ற சுயநலத்தின் காரணமாக உன் தந்தை சுயநலமாக நடந்து கொண்டார். ஏகலைவனை வரவலைத்த உனது தந்தை வில்வித்தைக்கு மிகவும் தேவையான கட்டை விரலை குரு காணிக்கையாக ஏகலைவனிடம் உன் தந்தை கேட்டு பெற்றுக் கொண்டார். அவனும் மகிழ்ச்சியாக கொடுத்து குரு பக்திக்கு நீங்காத புகழை பெற்றார். ஒரு வேடனின் திறமையை பாழடித்தார். ஏகலைவனுக்கு பெருமை கிடைத்தாலும் அவனது எதிர்காலம் வீணானதுக்கு உன் தந்தை தான் காரணம். மேலும் போர் களத்தில் யுத்த தர்மத்திற்கு எதிராக அபிமன்யுவை அநியாயமாக கொலை செய்தார்கள். அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் உனது தத்தை. இந்த பாவம் தான் உன் தந்தையை போர்களத்தில் மகன் இறந்ததாக எண்ணி ஏற்பட்ட சோகத்தில் மரணமடைய வைத்தது என்று கூறி நிறுத்தினான் கிருஷ்ணன்.

உண்மைதான் என ஒப்புக் கொண்ட அஸ்வத்தாமன் நீ நினைத்திருந்தால் இந்த யுத்தம் நடக்காமல் தடுத்திருக்கலாம். ஆனால் ஒரு வம்சமே அழிவதை வேடிக்கை பார்த்தாய். உனக்கு தண்டனை கிடையாதா என கேட்டான் அஸ்வத்தாமன். ஏன் இல்லை ஒரு வம்சம் அழிவதற்கு காரணமாக இருந்ததால் என் வம்சம் அழிவதை பார்த்த பின் தான் எனக்கு மரணம் ஏற்படும் என்றான் கிருஷ்ணன். அதுபோலவே யாதவ வம்சம் அழிந்து காட்டில் தனிமையில் தியானத்தில் அமர்ந்திருந்த போது மான் என நினைத்து வேடன் எய்த அம்பால் கிருஷ்னரின் உடம்பில் இருந்து உயிர் பிரிந்தது.

பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர , வணங்க வேண்டிய "ஸ்ரீவாஞ்சியம்

பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர , வணங்க வேண்டிய "ஸ்ரீவாஞ்சியம்".

ஸ்ரீ வாஞ்சியம்

கும்பகோணத்திலிருந்து நன்னிலம் வழித்தடத்தில் அச்சுத மங்களத்திலிருந்து தெற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீ வாஞ்சியம் ஆகும்.

இறைவன்-ஸ்ரீ வாஞ்சிலிங்கெஸ்வரர்
இறைவி-மங்கள நாயகி
தீர்த்தம்-குப்த கங்கை

புனித நீராடல்:

திருவாஞ்சியத்தில் இருக்கும் குப்தகங்கையில் மகாசங்கராந்தி, அமாவாசை, அர்த்தோதயம், மஹோதயம், விஷீ,சூரிய,சந்திர கிரகணகாலம் கார்த்திகை, ஞாயிறு, சோமவாரங்கள், மாசிமகம், மார்கழி திருவாதிரை நட்சத்திரம் போன்ற தினங்களில் திருத்தலம் வந்து சிவபெருமானை வழிபடுவதற்கு முன்னரே மனம் உருகி நம் பாவங்களை நினைத்து முறைப்படி வழிபட்டு இப்புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் இவர்களின் சகல பாவங்கள் நீங்கி வருங்காலங்களில் சகல இன்பங்களும் பெற்று மறுமையில் நற்கதியடைவார்கள்.

காசியை விட 100 மடங்கு புனிதமானது. பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

முதலில் குப்தகங்கையில் நீராடி இடப்புறம் அக்னிமூலையில் தனிகோயில் கொண்டுள்ள எம தர்மராஜனை வணங்கி அதன் பின் வாஞ்சி நாதனை வழிபடவேண்டும்.

சிறப்பம்சம்:

திருவாஞ்சியலிங்கம் மிகவும் பழமையானது. 

64 சுயம்பு லிங்கங்களில் ஒன்றான ஸ்ரீ வாஞ்சிநாதர்லிங்கம், மேரு, மந்திரகைலாசர், காசி, ஸ்ரீ சைலம் போன்ற சித்தி தரக்கூடிய தலங்கள் தோன்றுவதற்கு முன்வே தோன்றியது.

 சிவபெருமானே பார்வதி தேவியிடம் தமக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறியத் தலம் ஸ்ரீவாஞ்சியம் ஆகும்.

உலகிலேயே எம தர்மராஜனுக்காக தனிக்கோயில் அமைக்கப்பட்ட வழிபடும் தலமாக சிறப்பு பெற்றதும் ஸ்ரீ வாஞ்சியம் ஆகும்.

 கோயிலின் அக்னி மூலையில் தனி கோயில் உள்ளது. மனிதன் இறந்த பிறகு தன் சந்ததிகள் யாரும் ஈமகாரியம் செய்வாரோ இல்லையோ என்ற கவலை உடையவன் உயிரோடு இருக்கையிலேயே இங்கு வந்து பிண்டம் போட்டு சடங்குகள் செய்யின் இவர்களது இறப்புகுப் பின் கொடுக்க வேண்டிய தானங்களை முன்னரே செய்தால் இறப்புக்குப் பின் நற்கதி அடைவார்கள்.

இத்தலத்திற்கு வந்து போவோரின் தரித்திரம் நீங்கப் பெற்று வளமுடன் கூடிய வாழ்க்கை பெறுவது நிச்சயம். 

திருவாஞ்சிநாதரை வழிபட்டவர்கள் பிரம்மா, விஷ்ணு, இந்திரன், சூர்யன், எமதர்மர், பைரவர்,கங்கை, அக்னி, கௌதமர், ஜமதக்னி, காச்சியபர், விசுவாமித்திரர், பரத்வாஜர், பராசர், மாமுனிவர், வசிஷ்டர், வால்மீகிஆகியோர்.
பூமியில் தோன்றிய சுயம்பலிங்கங்கள் 64ல் மிகவும் முக்கியமானது திருவாஞ்சியத்தில் இருக்கும்லிங்கம்.

இந்தலிங்கம் தான் உலகிற்கு முன்னதாக தொன்றியதாகவம் இந்த லிங்கத்துள் சதாசிவம் இருப்பதால் உலகெங்கும் உள்ளலிங்கங்கள் அனைத்தம் திருவாஞ்சியலிங்கத்தை வழிபட வணங்கிவருகின்றன. இந்த சுயம்லிங்கத்தை எவர் ஒருவர் பக்தியுடன் தரிசிக்கிறாரோ அவர் கைலாய நாதரை நேரில் தரிசித்து சிறப்பு பெறுவார்.

இங்கு பிரகராம் சுற்றிஉள்ள அனைத்து சுவாமிகளையும் தன் கைக்குள் கட்டளைக்குள் அடக்கியிருப்பதாகவும் அனைத்து சக்திகளையும் ஸ்ரீவாஞ்சிநாதரே கையகப்படுத்தியுள்ளவராக அருட்பாலிக்கின்ற காரணத்தால் அனைத்து சிவாலயங்களிலும் பிரசித்து பெற்றதாக திருவாஞ்சியம் திகழ்கின்றது.

பொதுவாக காசி சென்று வந்தவர்களுக்கு எமபயம் இல்லை. ஆனாலும் பைரவ தண்டனை உண்டு. ஆனால் வாஞ்சியில் இறப்பொருக்கு எமபயம் பைரவ வதை கிடையாது. 

பைரவர் மண்டலத்தின் அதிபதி இத்தலத்தில் தனது ஆயுதங்களை கீழே போட்டு விட்டு யோகபைரவராக அமர்ந்து சிவனை வழிபட்டுக் கொண்டு காட்சி புரிகின்றார்.

இத்தலத்தில் எவன் ஒரு நிமிடமாவது அமர்கிறானோ அல்லது ஸ்ரீவாஞ்சியம் செல்ல வேண்டும் என மனதார நினைத்தால் கூட பொதும் அவன் ஊழிவினை நீங்க நற்கதி பெறுவான் என்பது முனிவர்களின் வாக்கு.

ஏவன் ஒருவன் காலை எழுந்தவடன் மனம் உருகி திருவாஞ்சியம் என்று மூன்று முறை சொல்கிறானோ அவனுக்கு பாவம் தீர்ந்து தோஷம் போய் முக்தி கிடைப்பது நிச்சியம்.

திருவாஞ்சியம் வந்து வழிபட பில்லி சூனியம் அதாவது செய்வினை 
என்று கூறப்படும் எதிர்வினைகள் அறவே அகன்று தூய்மை பெற முடியம். 

கொலை, தற்கொலை போன்ற துர்மரணங்கள் ஏற்பட்ட வீடுகளில் வரும் தொல்லை வர்ணிக்க முடியாது இருப்பினும் துர்மரணம் கொண்ட வீட்டில் வசிப்பவர்கள் ஸ்ரீவாஞ்சியம் வந்து பஞ்சதானம் கொடுத்து வழிபட்டால் துர்மரணம் பெற்றவர்களின் ஆத்மாசாந்தி அடைந்து கர்மா விலகி நற்பயன் பெறவர்.

கணவன்-மனைவி இடைவே ஊடல் எற்பட்டு பிரிந்தவர்கள் இங்கு வந்து மங்களாம்பிகையை வழிபட்டால் இருவருக்கமிடையே பாச உணர்ச்சிகளைத் தோற்றுவித்து இருஉள்ளங்களையம் இணைப்பதில் சிறப்பு பெற்றவராகத் திகழ்கிறார். இன்றம் விவாகரத்து பெற்ற தம்பதிகள் கூட இங்கு வந்து வழிபட்டதன் மூலம் இணைகின்றனர்.

இத்தலத்தில் ஆனந்தமாக யோகபைரவராக அமர்ந்திருக்கம் பைரவரை வழிபட நரம்பு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கி நலன் பெறலாம்.

🙏🏻🪔🙏🏻

Monday, February 12, 2024

everything is God in Hindu mythology

கடவுளை எல்லா விதமாகவும் வழிபடும் தன்மை ஹிந்து மதத்தில் மட்டும் தான்...

1. தாயாக = அம்மன்
2. தந்தையாக = சிவன்
3. நண்பனாக = பிள்ளையார்,கிருஷ்ணன்
4. குருவாக = தட்சிணாமூர்த்தி
5. படிப்பாக = சரஸ்வதி
6. செல்வமகளாக = லக்ஷ்மி
7. செல்வமகனாக = குபேரன்
8. மழையாக = வருணன்
9. நெருப்பாக = அக்னி
10. அறிவாக = குமரன்
11. ஒரு வழிகாட்டியாக =பார்த்தசாரதி
12. உயிர் மூச்சாக = வாயு
13. காதலாக = மன்மதன்
14. மருத்துவனாக = தன்வந்திரி
15. வீரத்திற்கு = மலைமகள்
16. ஆய கலைக்கு = மயன்
17. கோபத்திற்கு = திரிபுரம்எரித்த சிவன்
18. ஊர்க்காவலுக்கு = ஐயனார்
19. வீட்டு காவலுக்கு = பைரவர்
20. வீட்டு பாலுக்கு = காமதேனு
21. கற்புக்கு = சீதை
22. நன் நடத்தைகளுக்கு = ராமன்
23. பக்திக்கு = அனுமன்
24. குறைகளை கொட்ட=வெங்கடாசலபதி
25. நன் சகோதரனுக்கு =
லக்ஷ்மணன், கும்பகர்ணன்
26. வீட்டிற்கு = வாஸ்து புருஷன்
27. மொழிக்கு = முருகன்
28. கூப்பிட்ட குரலுக்கு = ஆதி
மூலமான சக்கரத்தாழ்வார், மாயக்கண்ணன்
29. தர்மத்திற்கு = கர்ணன்
30. போர்ப்படைகளுக்கு = வீரபாகு
31. பரதத்திற்கு = நடராசன்
32. தாய்மைக்கு = அம்பிகை
33. அன்னத்திற்கு = அன்ன பூரணி
34. மரணத்திற்கு = யமன்
35. பாவ கணக்கிற்கு = சித்திரகுப்தன்
36. பிறப்பிற்கு = பிரம்மன்
37. சுகப் பிரசவத்திற்கு = கர்ப்ப ரட்சாம்பிகை

சிவ சிவ !

Saturday, February 10, 2024

2000 வருடங்களுக்கு முன்பாக உண்டு உறைவிட பள்ளி இருக்கிறதா?

2000 வருடங்களுக்கு முன்பாக உண்டு உறைவிட பள்ளி இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்வியை கேட்டால் நம்மால் சரியாக பதில் சொல்ல முடியுமா?  1200 வருடங்களுக்கு முன்பாகவே பெண் ஆசிரியர்களை கொண்ட பள்ளிக்கூடம் இருந்திருக்க கூடும் என்பதை    நம்மால் கற்பனை  செய்து பார்க்க முடியுமா?. ஆனால் அப்படிப்பட்ட பள்ளிக்கூடம் இருந்திருக்கிறது. இந்தப் பள்ளிக்கூடத்தை பராமரிப்பதற்காக  மன்னர் ஒருவர் ஒரு கிராமத்தையே தானமாக கொடுத்துள்ளார் என்பதை நம்மால் நம்ப முடிகிறதா?  அது எங்கே இருந்திருக்கும் என்று தானே யோசிக்கிறீர்கள்? மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை கிராமத்தின் அருகே கீழக்குயில் குடியில் உள்ள சமணர் மலையில் தான் அந்த பள்ளி அமைந்துள்ளது. இன்று வரை அதற்கான சான்றுகள்  அம்மலையில் காணப்படுகின்றது.   கிட்டத்தட்ட 90 மாணவர்கள் தங்கியதற்கான படுகை வசதி கொண்ட அமைப்பு இன்றும் நம்மால்  காண முடிகிறது. 

சமணர் மலை:

மதுரையில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் தேனி நெடுஞ்சாலையில் உள்ள நாகமலை புதுக்கோட்டை கிராமத்திற்கு அருகே அமைந்துள்ளது கீழக்குயில்குடி சமணர் மலை. இந்த மலையில் 2000 ஆண்டுகள் பழமையான சமண  படுகைகளையும் பள்ளியும் சமணர்களின் சிற்பங்களையும்   காண முடிகிறது.

மகாவீரரின் சிலை

சமணர் மலையின் தென்மேற்கு பகுதியில் மகாவீரரின் சிலை புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. அந்த சிற்பத்தின் கீழ் வட்ட எழுத்து கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது.  குரண்டி திருக்கட்டாம்பள்ளி மாணவர்களே இந்த புடைப்புச் சிற்பம் செய்வதற்கு காரணமானவர்கள் என்பதனை அந்த வட்டெழுத்து கல்வெட்டு கூறுகிறது.  

இயற்கை சுணை

இந்தப் பகுதியில் இயற்கையாகவே அமைந்துள்ள சுனை ஒன்று காணப்படுகிறது. இந்த சுனை பேச்சிப் பள்ளம்  என்றும் அழைக்கப்படுகிறது இந்தப் பேச்சிப்பள்ளத்தில் எட்டு தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும் வட்ட எழுத்து கல்வெட்டும்  காணப்படுகிறது.

சமணப்பள்ளி:

பேச்சிப்பள்ளத்திலிருந்து கொஞ்சம் தூரம் மேலே செல்லும் பொழுது கி.பி பத்தாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட மாதேவி பெரும்பள்ளி என்ற சமணப் பள்ளியின் அடித்தளம்  காணப்படுகிறது. அங்குள்ள கல்வெட்டிலிருந்து பராந்தக வீரநாராயணன் என்ற மன்னன் தன் மனைவி வானவன்மாதேவியின் பெயரில் பள்ளி ஒன்று எழுப்பப்பட்டது தெரிய வருகிறது.

தீபத்தூண்:

மாதேவி பெரும்பள்ளியின் அடித்தளத்திலிருந்து மேலே செல்லும் பொழுது மலை உச்சியில் தீபத்தூண் ஒன்று காணப்படுகிறது. இதன் அருகே கன்னட மொழி கல்வெட்டுகள் காணப்படுகிறது. தமிழகத்தில் கன்னட மொழி கல்வெட்டுகளா! என்று நமக்கு ஆச்சரியமாக  இருக்கும். சிரவணபெளகுளாவில் இருந்து வந்த சமண மாணவர்கள் தங்களது பெயர்களை கல்வெட்டுகளாக பொறித்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது .

தமிழி கல்வெட்டு

தீபத்தூண் இருக்கும் பகுதிக்கு செல்லாமல் மலையின் வட புறம் செல்லும்போது அங்கே தமிழில் கல்வெட்டு ஒன்றினை காண முடிகிறது. இந்த கல்வெட்டினை செல்வகுமார் என்ற தஞ்சை பல்கலைக்கழக கல்வெட்டியல் மாணவர் 2012 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். இந்த கல்வெட்டு கி.மு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதனையும் அங்கிருக்கும் கற்படுகை பெருந்தேரூரார் செய்த கற்படுக்கை என்பதும் அந்த கல்வெட்டிலிருந்து அறியமுடிகிறது. இப்படிப்பட்ட 2000 ஆண்டுகால கல்வி வரலாற்றினை தாங்கி நிற்கும் மலையை பார்க்க ஆசை இருக்கிறதா வாருங்கள் மதுரைக்கு.

Thursday, February 8, 2024

தை பூசம் - 25.01.2024

 தைப் பூச தாண்டவம்

ஆனந்த நடனம் காண்போம் ! ஆனந்தம் அடைவோம் !!

(சிதம்பரம் சித்ஸபையில் நடராஜர் நடனமாடிய நாள் - தை பூசம் - 25.01.2024)     

                                                                                                                                        

ஓம் க்ருபா ஸமுத்ரம் ஸுமுகம் த்ரிநேத்ரம் ஜடாதரம் பார்வதி வாமபாகம்

சதாசிவம் ருத்ரம் அனந்த ரூபம் சிதம்பரேசம் ஹ்ருதி பாவயாமி ||

எங்குந் திருமேனி எங்குஞ் சிவசக்தி

எங்குஞ் சிதம்பரம் எங்கும் திருநட்டம்

எங்கும் சிவமாயிருத்தலால் எங்கெங்குந்

தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டதே.

- திருமந்திரம்

பதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்கள் பெரும் தவம் செய்து வேண்டியதற்கு இணங்க, சிதம்பரத்தில் தை மாதம், பூச நட்சத்திரம், பெளர்ணமி, பகல் நேரம் கூடிய நன்னேரத்தில் ஸ்ரீ நடராஜப் பெருமான் ஆனந்த நடனம் கொண்டருளினார்.சிதம்பரம் - மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் - இம்மூன்றினாலும் சிறப்புற்ற ஸ்தலம்.

தீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம். 

சிதம்பர க்ஷேத்ரத்தின் தச (10) தீர்த்தங்களுள் முக்கியமானது. காசியில் உள்ள கங்கையை விட மேலானது. மிகவும் புனிதம் வாய்ந்தது. சிவசக்தி ரூபங்கள் இணைந்தது. ஸ்ரீ நடராஜப் பெருமானின் தங்க மேனியில் தவழ்ந்த அபிஷேக தீர்த்தம் சேரும் இடமாதலால், சிவகங்கையே பொற்குளம் போல் காட்சியளிக்கின்றது. இங்கு ஸ்நானம் செய்வதால் பொன்னார் மேனியனின் திருவருளால் தேகம் புனிதமடைகின்றது. கெளடதேசத்து சிம்மவர்மன் உடல் குறை நீங்க இங்கு ஸ்நானம் செய்து தங்க மேனியனாக ஹிரண்யவர்மனாக மாறினான்.

இக்குளத்தின் வருண (மேற்கு) திசை வாயிலில், ஸ்வாமி தீர்த்தம் கொடுப்பதே தைப் பூச தினத்தின் மிக முக்கிய நிகழ்வு.ஸ்தலம் : சிதம்பரம். 

சித்+அம்பரம் = ஞானாகாசமாக அமைந்த ஸ்தலம். உலக புருஷனின் ஹ்ருதய ஸ்தானத்திலும், சுழுமுனை நாடியிலும் அமைந்த இடம். உபநிஷதங்கள் உரைக்கும் (புண்டரீகபுரம், தஹராகாசம்) ஸ்தலம். தரிசிக்க முக்தி தரும் கோயில். தில்லைச் செடிகளால் சூழப்பட்டது. சிவபெருமான் அருவுருவமாக மூலஸ்தானத்தில் அமைந்த இடம். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் சேவித்த ஸ்தலம். வேண்டுவதை உடன் அருளும் ஸ்தலம். மரண பயம் போக்கும் ஸ்தலம்.

மூர்த்தி : ஸ்ரீ நடராஜ ராஜர். அனைத்து தெய்வங்களும் தொழுதேற்றக் கூடியவர். ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் வாழ்விற்கு மிக அவசியமாகிய ஒலிக் கருவியையும் (டமருகம்), ஒளிக் கருவியயும் (தீச் சுடர்) கரங்களில் ஏந்தியவர். பஞ்சக்ருத்ய (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) பரமானந்த நடனம் ஆடுபவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர்.

வேதங்கள் போற்றும் வேதநாயகர். கலைகள் போற்றும் கலாதரர். சித்தாந்தம் சித்தரிக்கும் சித்சபேசர். தமிழ் மறைகள் வணங்கும் தன்னிகரற்றவர். பரதம் போற்றும் பரமேஸ்வரர். இசைக்கலை இயம்பும் ஈஸ்வரர். காப்பியங்கள் போற்றும் கனகசபேசர். ஞானம் அருளும் ஞானமூர்த்தி. மக்கள் வணங்கும் மகேசர். வரங்கள் அருளும் வள்ளல்.

புராண விளக்கம் :

ஒரு சமயம், மஹா விஷ்ணு யோக நித்திரையிலிருந்து பரவசத்துடன் எழ, அவரைத் தாங்கிய ஆதிசேஷன், திடீர் மகிழ்விற்கான காரணம் கேட்க, விஷ்ணு, சிவபெருமானின் ஆனந்தக் கூத்தினை அனுபூதியாக விளக்க, தானும் அக்காட்சியைக் கண்டுணர வேண்டும் என வரம் கேட்க, விஷ்ணு அருள்பாலிக்க, ஆதிசேஷன், அத்ரி ரிஷியின் பத்னியாகிய அநசூயயின் குவிந்த கைகளில் (அஞ்சலி -குவிந்த கரம்) நாகமாக வந்து, பாதங்களில் விழுந்ததால் பதஞ்சலி என பெயர் பெற்று, தில்லை ஸ்ரீ மூலநாதரை, மத்யந்தின மகரிஷியின் மகனாகிய ஸ்ரீ வியாக்ரபாதர் என்ற புலிக்கால் உடைய முனிவருடன் வழிபாடாற்றி வந்தார்.

தேவர்கள், ரிஷிகள், கணங்கள் வேண்டியதற்கு இணங்க, முன்னர் வரம் அளித்தபடி, சிவபெருமான் ஆனந்த நடனக் காட்சி நல்க பூலோகம் வரும் நேரம் வந்தது.தை மாதம் - மகிழ்ச்சி பொங்கும் மாதம். சூரியன் தனது அயனத்தை (பாதையை) மாற்றும் மாதம். யோக குருவான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு உரிய நக்ஷத்திரம் பூசம். ஆடுவதும் (dynamic) அவரே, அமைதியும் அவரே (static) என்றுணர்த்தவே, ஆட்டமாடி ஆட்டுவிக்க, ஆடாமல் ஆட்டுவிக்கும் யோக தக்ஷிணாமூர்த்திக்குரிய நாள், நக்ஷத்திரம், பகல் நேரம் என உத்தமமான வேளை வந்தது.தில்லை ஸ்தலத்தில், அனைத்து ஜீவராசிகளும் ஆனந்த நடனத்தைக் காண கண்ணிமைக்காமல் காத்திருக்க, ஸகல தேவர்களும், அனைத்து கணங்களும் உடன் வர, இரு திருவடிகளில் ஒன்றை முயலகன் எனும் அரக்கன் மீது ஊன்றி நிறுத்தி, மறு திருவடியைத் தூக்குவதில் தொடங்குகிறது ஆனந்த நடனம்.அண்ட சராசரமனைத்தையும் ஆட்டுவிக்கும் நாயகன் தன் ஆட்டத்தைத் துவங்குகிறார்.காலில் சிலம்புகள் சிலம்புகின்றன. வலக்கையில் உள்ள டமருக ஒலி அண்டம் எங்கும் பரவுகின்றது. இடக்கயில் உள்ள அக்னி ஒளி பால் வெளியெங்கும் திரள்கிறது. முகத்தில் புன்னக பூக்கின்றது. தனது ஆட்டத்தில் மயக்கம் கொண்ட, அருகிலிருக்கும் சிவகாமியை சற்றே திரும்பிப் பார்க்கும் பார்வை. தலையில் கொக்கிறகும், ஊமத்தம் பூவும் அலங்கரிக்க, உதரபந்தம் விரிய, மார்பில் துலங்கும் ஆதிவராகக் கொம்பு அசைய, பனியால் நனைந்த தலையிலிருந்து கங்கையின் நீர்த்திவலைகள் திசையெங்கும் சிந்த, உடல் முழுவது பூசிய வெண்ணீறு சிதற ஆட்டம் நிகழ்கிறது.இந்திரன் புல்லாங்குழல் இசைக்க, தும்புரு கீதம் ததும்ப, பிரம்மா தாளம் போட, சரஸ்வதி வீணை மீட்ட, சிவகணங்கள் எழுப்பும் ஜம் ஜம் எனும் தாள சப்தம் எழ, ரிஷிகளின் வேத கோஷம் விண்ணை முட்ட, நந்தி மத்தளம் வாசிக்க, விஷ்ணு முரசு கொட்ட, லக்ஷ்மி மதுரகீதம் பாட, பானுகம்பன், பாணாசுரன் எழுப்பும் சங்கு முழக்கத்தினாலும், ஓங்கார நாதத்தாலும் விண்ணதிர, ஆனந்தத்தில் விநாயகராட, மயிலோடு குமரனாட, தேவ கன்னியராட, நட்டமாடும் நம்பெருமானின் ஆட்டத்தினை, நெஞ்சம் உருக, ஆனந்தக் கண்னீர் சொரிய, பரவச நிலையை சிரிப்பார், களிப்பார் என்பதன்படி, முன்னம் செய்த தவப்பயனின் விளைவாக அனைவரும் திருநடனத்தினைக் காணப் பெறுகின்றனர்.ஆனந்த நடனமாடிய அம்பலவாணர், தவம் செய்த பதஞ்சலியை நோக்கி என்ன வரம் வேண்டும் என வினவ, பதஞ்சலியோ தாம் கண்ட இத்திருக்காட்சியை எதிர்காலத்தில் அனைவரும் காண வேண்டும் என்ற பரந்த நோக்கத்தில், நடராஜ ராஜர் பொன்னம்பலத்தின் எப்பொழுதும் பதஞ்சலியாமல் (பாதம் சலிப்படையாமல்) ஆடவேண்டும் என பெருவரம் கேட்டார். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றௌ உடன் அருளும் குஞ்சிதபாதர், பதஞ்சலிக்கு அவ்வண்ணமே அருள்பாலித்தார்.

நடராஜராஜரின் அற்புத ஆனந்த நடனம் இன்றும் என்றும் நடக்கிறது.

அண்டத்தின் அசைவைக் காட்டுவது ஆனந்த நடனம். இந்நடனத்தை வேதாந்த சித்தாந்தங்கள் மிக அற்புதமாக விளக்குகின்றன. உருவம் (ஸ்ரீ நடராஜர்), அருவம் (சிதம்பர ரகசியம்), அருவுருவம் (ஸ்படிக லிங்கம்) என மூன்று வடிவங்களிலும் அமைந்து, மும்மலங்களை (ஆணவம், கண்மம், மாயை) அகற்ற காட்சி தருகின்றார். அசைவதும், அசையாததும், இரவும், பகலும், ஒலியும், ஒளியும், வெம்மையும், குளிரும் அனைத்தும் அவரே.அணுவுக்குள்ளும், அண்டசராசரமெங்கும் நடமிடுபவரும் அவரே. பக்தர்களின் வேண்டுதல்களை செவி கொடுத்துக் கேட்டு வரமருளும் தோடுடைய செவியன். எவரும் விரும்பாத ஊமத்தம்பூ, பாதி வளர்ந்த சந்திரன் போன்ற குறைகள் கொண்ட அனைத்தையும் தாம் ஏற்றுக் கொண்டு, தம்மை தரிசிப்பவர்களுக்கு அருளை நிரம்ப வாரி வழங்குபவர்.தைப் பூச தினத்தில் பஞ்ச மூர்த்தி வீதியுலா வந்து, பகல் நேரத்தில், சிவகங்கைக் குளத்தின் மேற்கு வாசலில் பதஞ்சலி, வியாக்ரபாதர், ஜைமினி அருகிருக்க, ஸ்வாமி தீர்த்தவாரி (அனைவருக்கும் அருளுதல்) நடைபெறும். மதிய வேளையில் கனகசபையில் தரை முழுவதும் அன்னம் நிரப்பி, ஸ்ரீ நடராஜ ராஜருக்கு நிவேதனம் செய்து, அனைவருக்குமான அன்னதான நிகழ்ச்சி நடைபெறும்.

தைப்பூச அன்னதான பாவாடை ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுவருகின்றது. எதிரிலிச் சோழன் குலோத்துங்கன் சிவபாதசேகரன் எனும் சோழ மன்னன் தைப்பூச அன்னப்பாவாடையை நிகழ்த்தினான் என்று பழங்கால செப்பேடு தெரிவிக்கின்றது.தைப்பூச தினத்தில் சிவகங்கையில் ஸ்நானம் செய்வதால், பாபங்கள் அனைத்தும் நீங்கி, பெரும் செல்வம் மற்றும் வேண்டும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன.

தைப்பூச நன்னாளில் சிவகங்கையில் நீராடி, ஆனந்த நடனமிடக் காரணமாகிய ஸ்ரீ மூலநாதரையும், பொன்னம்பலத்தில் விளங்கும்                ஸ்ரீ நடராஜ ராஜரையும் தரிசித்து பேரின்பப் பயன்பெறுவோம்.

பதவி உயர்வு அளிக்கும் பாதாள செம்பு முருகன்

 













ஶ்ரீவானமாமலை திவ்ய சேத்திரத்தில் உள்ள எண்ணை கிணறு

 கீழே படத்தில் நீங்கள் காண்பது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா ஶ்ரீவானமாமலை திவ்ய சேத்திரத்தில் உள்ள எண்ணை கிணறு


ஆகா இது நீங்கள் நினைப்பது போல் அரபுநாட்டு எண்ணை கிணறல்ல


வானமாமலை திவ்யதேச பகவானுக்கு தினமும் சாற்றுபடி (அபிஷேகம்) ஆகும் தைலகாப்பு ( நல்லெண்ணை அபிஷேகம்) தேக்கி வைக்கபடும் கிணறு போன்ற ஒன்று

அதாவது பகவான் ஶ்ரீவானமாமலை தெய்வநாயக பெருமாள் ஜீயர்ஊற்றில் (சேற்று தாமரை என்னும் குளத்தில் உள்ள ஒரு இடம்) ஸ்வமாயாக தோன்ற  திருவுள்ளம் கொண்டு பகவானே கருடன் மூலம் காட்டி கொடுத்த (ஸ்வயம்வக்த சேத்ரம் மொத்தம் 8 அந்த எட்டில் முதன்மையான ஸ்தலம் நம் வானமாமலை) இடத்தை தோண்டும் போது தவறுதலாக தோண்ட உபயோகித்த ஆயுதம் பகவான் தலையில் பட்டு அதன் காரணமாக பகவான் தலையில் இருந்து வடிந்த திரவத்தை தடுக்க எண்ணி அவருக்கு சிறப்பு தைலம் சாற்ற 

அன்றுமுதல் இன்றை வரை பகவானுக்கு தினமும் சாற்றுபடி ஆகும் தைலம் மற்றும் பால் இளநீர் போன்ற இதர அபிஷேக தீர்தங்கள் கோயில் கருவரை கோமுகி வழியாக உட்பிராகரத்தில் இருக்கும் ஶ்ரீராமர் சன்னதி அருகே வந்து சேரும் அந்த தைலத்தை தகர டப்பாக்களில் பிடித்து இந்த கிணற்றில் (கிணறு போன்ற இடத்தில்) கொட்டி வைத்து காலம் காலமாக பாதுகாக்க படுகிறது இதனையே இவ்வூரில் எண்ணைகிணறு என பழங்காலத்தில் இருந்தே அழைக்கின்றனர்

இந்த பகவானுக்கு அபிஷேகம் செய்து சேர்த்து வைக்கும் எண்ணை கிணற்றுக்கு சில வருடம் முன்பு வரை மேற்கூரை கிடையாது  ஆகையால் வெயில் மழை என இதன் மேல் பட்டு பட்டு இந்த எண்ணை காலப்போக்கில் இயற்கையாகவே மேலும் மேலும் பக்குவமடைவதால் சிறந்த மருத்துவ தைலமாக மாறி விடுகிறது இதனை சஞ்சீவினி தைலம் ( எண்ணை) என்பர்

அதாவது இந்த எண்ணையை ஒருமண்டலம் உடலில் நன்கு தெப்ப தெப்ப தேய்த்து உடலை நன்கு ஊரவைத்து நீராடிவர உடலில் உள்ள பல நேரடி மற்றும் மறைமுக வியாதிகள் குணமாவதாக அதீத நம்பிக்கை மற்றும் பலரது அனுபவமும் கூட

இந்த தைலத்தை தினமும் ஒருசிறு அளவில் உள்ளுக்கு உட்கொண்டு வர உடலின் உள்ளே ஏற்பட்ட பல தீராத உடல் வியாதிகள் தீருகிறது என்பது நம்பிக்கை பலர் அனுபவத்திலும் கண்டு உள்ளனர்

கோயிலிலேயே இந்த தைலம் சிறு சிறு பாட்டிலில் கிடைக்கிறது (விலை ₹25/- என நினைக்கிறேன் முன்பு ₹15 ஆக இருந்து)

தற்போது இந்த எண்ணை கிணற்றுக்கு மேல் வெளிச்சம் படுமாறு வெள்ளை நிற கூரை வேய்ந்து உள்ளதால் மழைஜெலம் விழுவதில்லை சூரிய கதிரும் முன்புபோல் விழுவதில்லை

பகவான் அபிஷேக தைலம் கோமுகியில் இருந்து மோட்டார் மூலம் கிணற்றுக்கு செல்கிறது

ஆனாலும் இதன் மருத்துவகுணம் இன்றும் மாறவில்லை

பகவானுக்கு அனுதினமும் நடக்கும் (21/2 லிட்டர் தைலம் கொண்டு) தைல காப்போடு அன்றைய தினம் ஏதாவது அபிமானிகள் பக்தர்கள் தங்களது பிறந்தநாள் திருமணநாள் அல்லது உறவினர் நண்பர் மற்றும் தங்களது குழந்தைகளின் நட்சத்திரம் போன்ற வைபவத்துக்காக பிரார்தனை செய்து காணிக்கையாக தரும் எண்ணையை (கோவிலில் பணம் கட்டிவிட்டால் அவர்களே நல்ல செக்கில் உருவாக்கபட்ட நல்எண்ணையை வாங்கி ஸ்டாக் வைத்துள்ளனர் அதில் இருந்து தேவைக்கு எடுத்து கொள்வர்) கொண்டும் தைல காப்பு நடைபெறும் 

இது போக வருடத்துக்கு தற்காலத்தில் சில வருடங்களாக 6 முறை ஒருகோட்டை (256 லிட்டர்) எண்ணையால் அபிஷேகம் நடைபெறும் இதனை ஒருகோட்டை எண்ணை காப்பு என்பர்

இந்த வருடம் இந்த தை மாதம் அமாவாசை (01/2/2022 திங்கட்கிழமை) அன்று இவ்வூர் அதாவது வானமாமலை திவ்யதேச அபிமானிகள் சிஷ்யர்களால் இன்றைக்கு சுமார் 43 ஆண்டுக்கு முன் வானமாமலை மடம் /திருவல்லிகேணி வானமாமலை மடம் ஆகிய இடங்களில் அப்போதைய ஶ்ரீமடத்தின் ஆச்சாரியரான  ஶ்ரீவானமாமலை மடம் 27வது பட்டம் ஸ்வாமி ஶ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஶ்ரீசின்ன ராமானுஜ ஜீயர் ஸ்வாமி வழிகாட்டுதல் படி கூடி பேசி வானமாமலை வித்வான்கள் பெரியோர்கள் அன்றய இளைஞர்களால் ஏற்படுத்தபட்ட  ஶ்ரீவானமாமலை ஶ்ரீவரமங்கை நாச்சியார் பக்த சபா மூலம் இவ்வருடம் தொடர்ச்சியான 43வது வருட ஒருகோட்டை எண்ணை காப்பு வைபவம் சிறப்பாக நடைபெற உள்ளது

(01/2/2022) இரண்டு வருடங்களுக்கு முன் திங்கட்கிழமை பல்வ வருட தைமாத ( சேஷம்)அமாவாசை திருவோண நட்சத்திரத்தில் அன்று காலை 8.45 மணி அளவில் வானமாமலை ஶ்ரீமடத்தின் வர்த்தமான ஜீயரான(31வது பட்டம்) ஶ்ரீமதுரகவி ராமானுஜ ஜீயர் முனலனிலையில் நடைபெற தொடங்கும் தைலகாப்பு சுமார் 9.15 மணி அளவில் நிறைவடையும் அதை தொடர்ந்து பால் இளநீர் சந்தனம் திருமஞ்சனதிரவியம் வெள்ளி தங்க குடதீர்தம் என அபிஷேகம் 9.45 வரை நடைபெறும் தொடர்ந்து பகவத்அலங்காரம் அர்ச்சனை தூபதீப ஆராதனை சேவகாலகோஷ்டி ஆசாரியர் மரியாதை ஆசாரியர் மற்றும் கோஷ்டி பகதர்கள் என முறையே தீர்தம் சடகோபம் திருத்துழாய் ஜீரான்னபிரசாத விநியோகம் என வரிசையாக சுமார் மதியம் 1.00 மணி வரை நடைபெறும்

அன்றய தினம் ஶ்ரீமடத்தின் ஆச்சாரியரான  ஶ்ரீவானமாமலை மடம் 27வது பட்டம் ஸ்வாமி ஶ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஶ்ரீசின்ன ராமானுஜ ஜீயர் ஸ்வாமி தீர்தம் நாள் (ஸ்வாமி பரம்பதித்த திதி) எனவே அன்று ஶ்ரீமடத்தில் விசேஷ சேவகாலம் கோஷ்டி தீர்தம் சடகோபம் மற்றும் அபிமானிகள் பக்தர்களுக்கு விசேஷ ததியாராதனை {தினமும் ததியாராதனை உண்டு ( ஜீயர் மடத்தில் எழுந்தருளி உள்ள காலங்களில்)} என நடைபெறும் (ததியாராதனை அநேகமாக மதியம் 2.30 மணி அளவில் நடைபெறும்)

அன்றய தினம் வானமாமலை ஊரே கோலகாலமாக இருக்கும்

மாலை கோவிலில் ஶ்ரீமடத்தில் அல்லது முன் மண்டபத்தில் விசேஷ உபன்யாசம் மற்றும் ஆடல் பாடல் விசேஷ வாத்யம் மற்றும் இரவு ஶ்ரீதோதாத்ரி ஸ்வாமி கருடவாகனத்திலும் தாயார்கள் முறையே அன்னவாகனம் கிளிவாகனம் என விசேஷபுறப்பாடு கண்டருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்

அனைத்து வைபவங்களும் முடிய மறுநாள் அதிகாலை 2.00 மணி ஆகிவிடும்

முடிந்தால் அன்பர்கள் வந்தருளி கண்டு பகவத் க்ருபைக்கும் ஆசாரியன் க்ருபைக்கும் ஒருமுறையாவது பாத்திரமாகும் படி கேட்டு கொள்கிறோம்


ஜெய் ஶ்ரீராம்!

குருவாயூரப்பன் தோன்றிய சரித்திரம்

 குருவாயூரப்பன் தோன்றிய சரித்திரம்

திருப்பாற்கடலில் திருப்பள்ளி கொண்டுள்ள மாலவன் எண்ணற்ற திருக்கோலங்களில் பக்தர்களுக்காக சேவை சாதித்து அருளுகின்றான். திருமலையில் ஸ்ரீவேங்கடவனாகவும், 

ஸ்ரீரங்கத்திலே ஸ்ரீரங்கநாதராகவும், இப்படி இன்ன பிற திருநாமங்கள் கொண்டு எண்ணற்ற க்ஷேத்திரங்களில் அருள் பாலித்து வருகின்றான். அப்படிப்பட்ட திருக்கோலங்களுள் குருவாயூரப்பனாக குடிகொண்டுள்ள குருவாயூர் மிகவும் புராதனமான திருத்தலம்.கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் அமைந்துள்ளது. இங்குதான் ஸ்ரீகிருஷ்ண பகவான் குருவாயூரப்பனாகத் திருக்கோயில் கொண்டுள்ளான். நாள் ஒன்றுக்கு இங்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இது இந்தியாவின் நான்காவது பெரிய கோயில் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்.அதிகாலை மூன்று மணிக்கே குளித்து விட்டு குருவாயூரப்பனின் தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருப்பதை தினமும் இங்கு பார்க்கலாம்.குருவாயூரப்பன் ஆலய வரலாறு மிகவும் பழைமை வாய்ந்தது. நாரத புராணத்தில் உள்ள குருபாவனபுர மகாத்மியம் என்ற பகுதியில் இந்தக் கோவில் வரலாறும், தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன.தேவ சிற்பியான விஸ்வகர்மாவால் குருவாயூர் கோவில் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது.குருவாயூர் திருக்கோயிலில் தரிசனம் தரும் மூலவர் ஸ்ரீகுருவாயூரப்பனின் விக்கிரகம் தனிச் சிறப்பு கொண்டதாகும். மிகவும் புனிதமானது எனக் கருதப்படும் பாதாள அஞ்சனம் எனும் கல்லில் மூலவர் விக்கிரகம் வடிக்கப்பட்டுள்ளது.இந்த விக்கிரகத்தை ஒரு காலத்தில் மகாவிஷ்ணு வைகுண்டத்தில் வைத்து வழிபட்டு வந்தார். அதன் பிறகு அந்த விக்கிரகத்தை பிரம்மதேவனிடம் அளித்தார். பிறகு பிரம்மனிடம் இருந்து கைமாறி காசியாபா பிரஜாபதி, வசுதேவர் ஆகியோரிடம் போனது. கடைசியில் வசுதேவரிடம் இருந்து ஸ்ரீகிருஷ்ணரிடமே இந்த விக்கிரகம் வந்து சேர்ந்தது. துவாரகையில் தன் மாளிகையில் இதை வைத்து வணங்கி வந்தார் ஸ்ரீகிருஷ்ணர்.கிருஷ்ண அவதாரம் பூர்த்தியாக வேண்டிய வேளை வந்தது. அதற்கு முன்னதாகத் தன் பக்தரான உத்தவரிடம், ‘இன்னும் ஏழு நாட்களில் துவாரகையைக் கடல் கொள்ள இருக்கிறது. அந்த வெள்ளத்தில் இந்தக் கிருஷ்ண விக்கிரகம் மிதக்கும். அதை குரு பகவான் உதவியுடன் பக்தர்கள் வணங்கத்தக்க புனிதமான ஓர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்' என்றார் கிருஷ்ண பகவான்.அடுத்த ஒரு சில தினங்களில், பகவானின் வாக்குப்படி பெரிய பிரளயம் ஒன்று துவாரகையைத் தாக்கியது. அந்த வெள்ளத்தில் மிதந்து வந்த விக்கிரகம் ஸ்ரீகிருஷ்ணரின் வாக்குப்படி குரு பகவானிடம் போய்ச் சேர்ந்தது. இதை பிரதிஷ்டை செய்வதற்காக குருவும் அவரது முதன்மை சிஷ்யனான வாயுவும் சேர்ந்து ஒரு நல்ல இடத்தைத் தேடி அலைந்தார்கள்.இறுதியில் அவர்கள் கேரள தேசத்தை அடைந்தார்கள். அங்கே பரசுராமரை சந்தித்தனர். இந்த விக்கிரகம் பிரதிஷ்டை ஆக வேண்டிய இடம் இதுதான் என்று பரசுராமரே இருவரையும் கூட்டிக் கொண்டு போய் ஓரிடத்தைக் காண்பித்தார். பச்சைப்பசேல் என்று அழகாகக் காட்சி தரும் அந்த இடத்தின் அருகே சிவபெருமான் பன்னெடுங் காலமாக தவம் இருந்து வந்தார்.அந்த இடத்தில் விக்கிரகம் பிரதிஷ்டை ஆனது. குரு மற்றும் வாயுவால் பிரதிஷ்டை ஆனதால் இந்த க்ஷேத்திரம் பின்னாளில் ‘குருவாயூர்' ஆயிற்று. தென் துவாரகை எனவும் போற்றப்படுகிறது.மும்மூர்த்திகளின் அனுக்ரஹம் இந்த விக்கிரகத்துக்கு உண்டு என்பதால் ஸ்ரீகுருவாயூரப்பனை வழிபட்டால் அனைத்து நலன்களையும் நாம் பெறலாம் என்பது ஐதீகம்.கிழக்கு வாசல், மேற்கு வாசல் என்று இரண்டு பிரதான வழிகள் இருந்தாலும், கிழக்கு நோக்கிய வாசல்தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும், தங்கத் தகடுகள் வேயப்பட்ட 33.5 மீட்டர் உயரமுள்ள கொடிக்கம்பத்தின் இருபுறமும் 13 அடுக்குகளுடன் 7 மீட்டர் உயரமுள்ள தீபஸ்தம்பம் கண்களைக் கவர்கிறது. இதன் வட்ட அடுக்குகளில் விளக்குகள் ஏற்றப்படும்போது காணக் கண் கொள்ளா காட்சியாக அமையும். கருவறையைச் சுற்றி வெளிச்சுவர்களில் மரச் சட்டங்களில் சுமார் 3,000 பித்தளை அகல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒரே நேரத்தில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்போது மனத்தில் பரவசம் ஏற்படுகிறது.கொடிக்கம்பத்துக்கு வடமேற்கே ஸ்ரீகிருஷ்ணனை துவாரகையில் இருந்து எடுத்து வந்து பிரதிஷ்டை செய்த குரு பகவான் மற்றும் வாயு பகவானின் பலிபீடங்கள் உள்ளன. தினமும் இவர்களுக்கு நைவேத்தியமாக அன்னம், பூ, தீர்த்தம் அளிக்கப்படுகிறது.நின்ற கோலத்தில் அருள் புரியும் பகவான், கண்களில் அன்பும் கருணையும் கொண்டு காட்சி தருகிறார். மேலிரண்டு கரங்களில் சங்கு& சக்கரமும், கீழிரண்டு கரங்களில் கதையும், தாமரையும் கொண்டு துளசி, முத்து மாலைகள் கழுத்தில் தவழ, கிரீடம், மகர குண்டலம், கேயூரம், கங்கணம், உதர பந்தனம் பூண்டு, வலப்பக்க மார்பில் ஸ்ரீவத்ஸம் எனும் சந்தனமும், வைஜயந்தி மாலையும், கௌஸ்துப மணியும் அணிந்து திருக்காட்சி தருகிறார்.கருவறைக்கு வடகிழக்கே வருண பகவானால் ஏற்படுத்தப்பட்ட கிணறு அமைந்துள்ளது. இந்த நீர்தான் அபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. குருவும் வாயுவும் வருணனை பூஜித்த ஐதீகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கிணற்றில் வருணனை ஆவாஹனம் செய்துள்ளார்கள். பரிவார தேவதைகளுக்கு பூஜை நடப்பதுபோல் தினமும் இந்த கிணற்றுக்கும் பூஜை நடக்கிறது. இந்தக் கிணற்றில் எந்நாளும் தீர்த்தம் குறைந்ததில்லை. இந்தப் புண்ணிய தீர்த்தத்துக்குள் எண்ணற்ற சாளக்கிராம கற்களும் சிலைகளும் உள்ளன. இந்த நீர் சுவையாக இருக்கும்.பக்தர்களுக்கு தங்கள் மனத்தில் என்ன வடிவம் தோன்றுகிறதோ, அதை முன்னிறுத்தியே குருவாயூரப்பனை வழிபட்டு வருகிறார்கள். ஞானிகளான மேல்பத்தூர் நாராயண பட்டத்ரி, பக்த சிரோன்மணி வாசுதேவன் நம்பூதிரி போன்றோர் குருவாயூரப்பனை மகா விஷ்ணுவாக வழிபட்டனர். பூந்தானம், வில்வமங்களன், மானதேவன், குரூர் அம்மையார் ஆகியோர் பாலகிருஷ்ணனாக வழிபட்டனர். எது எப்படி இருந்தாலும் குருவாயூரப்பனை ஒரு குழந்தையாக பாவித்து, இங்கு வழிபடும் பக்தர்களே அதிகம்!அதிகாலையில் ஸ்ரீகுருவாயூரப்பனின் விஸ்வரூப தரிசனம் காண இங்கு கூடும் பக்தர்களின் கூட்டம் சொல்லி மாளாது. குழந்தை கிருஷ்ணனை எந்த வேளையில் தரிசித்தாலும், அதிகாலையில் தரிசிப்பது கூடுதல் ஆனந்தம்!இரவு மூன்றாம் யாமம் முடிந்ததும் மூன்று மணிக்கு நாகஸ்வர இன்னிசை ஒலிக்க, சங்கு முழங்க குருவாயூரப்பனைத் திருப்பள்ளி எழச்செய்வர். அப்போது பகவான் காட்சி கொடுப்பதற்கு ‘நிர்மால்ய தரிசனம்’ என்று பெயர்.நிர்மால்ய தரிசனத்தின்போது பகவானுக்கு முதல் நாள் அணிவித்திருந்த சந்தனக் காப்பு, ஆடை, ஆபரணங்கள், மாலைகள் இவை அனைத்தையும் ஒவ்வொன்றாகக் களைவர்.விஸ்வரூப தரிசனம் முடிந்ததும் தைலாபிஷேகம் நடைபெறும். குருவாயூரப்பனுக்கு நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த எண்ணெய் கோவிலுக்குச் சொந்தமான செக்கில் ஆட்டப்பட்டதாகும். தைலாபிஷேகத்துக்குப் பின் அந்த தெய்வத் திருமேனியை வாகைத் தூளால் தேய்ப்பர். இதற்கு ‘வாகை சார்த்து’ என்று பெயர். அடுத்து சங்காபிஷேகம் நடைபெறும். அப்போது புருஷ ஸூக்தம் சொல்வர்.இதன் இறுதியில் தங்கக் கலசத்தில் உள்ள தூய நீரால் பூர்ணத் திருமஞ்சனம் செய்வர். கிட்டத்தட்ட இது கும்பாபிஷேகம் செய்து வைப்பது போல் ஆகும்.இந்த அபிஷேகம் முடிந்த பின் நெல்பொரி, கதளிப்பழம், சர்க்கரை முதலியவற்றை நைவேத்தியமாகப் படைப்பர். அப்போது உன்னி கிருஷ்ணனாகத் தோற்றம் அளிப்பார் குருவாயூரப்பன்.காலை பூஜை இதன் பின் ஆரம்பமாகும். இதற்கு உஷத் பூஜை என்று பெயர். இந்த பூஜையின்போது நெய் பாயசமும் அன்னமும் பிரதான நைவேத்தியம். இது முடிந்து நடை திறக்கும்போது பகவான் திருமுடியில் மயிற்பீலி, நெற்றியில் திலகம், இடையில் பொன் அரைஞாண், திருக்கரங்களில் ஓடக்குழல், மஞ்சள்பட்டு ஆகிய ஆபரண அலங்காரங்களுடன் தரிசனம் தருவார்.இத்தனை பூஜைகளும் காலை ஆறு மணிக்குள்ளாக பூர்த்தி ஆகி விடும்.பகவானுக்கு சாயங்காலம் (சந்தியாகாலம்) மட்டும்தான் தீபாராதனை செய்கிறார்கள். ஏழடுக்கு விளக்கு, ஐந்து திரி, நாகப்பட விளக்கு, ஒற்றைத் திரி விளக்கு என்று பல தீபங்கள் ஏற்றி ஆராதனை செய்து, கடைசியில் கற்பூர ஆரத்தி நடக்கும். மங்கள ஆரத்தியின்போது முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு வந்து குருவாயூரப்பனை வணங்குவதாக ஐதீகம். பந்தரடி (பந்தீரடி) என்று சொல்லப்படும் இந்த பூஜையை வேதம் ஓதும் நம்பூதிரிகள் செய்கின்றனர். இதற்கு அன்னமும், சர்க்கரை, பாயசமும் முக்கியமான நைவேத்தியம்.ஸ்ரீகுருவாயூரப்பனுக்குப் பிடித்த நைவேத்தியம், பால் பாயசம், நெய் பாயசம், சர்க்கரை பாயசம், அப்பம், திரிமதுரம், மற்றும் பழ வகைகள்.குருவாயூர் கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்களை மேல்சாந்தி, கீழ்சாந்தி மற்றும் தந்திரிகள் என்று அழைப்பர்.மேல்சாந்தி என்றால் தலைமை குருக்கள் என்று பொருள். முக்கியமான பூஜைகள், அலங்காரங்கள், அர்ச்சனை மற்றும் அபிஷேகங்களை செய்பவர் மேல்சாந்தி. இவரைத் தவிர மற்றவர்களுக்கு மூல விக்கிரகத்தைத் தொடும் உரிமை கிடையாது. கோயிலின் மேல்சாந்தி விடியற்காலை இரண்டரை மணிக்கே ஸ்ரீகோயிலின் கருவறைக்குள் நுழைந்து விடுவார். மேலும் உச்சி பூஜை முடியும் 12.30 மணி வரை பொட்டுத் தண்ணீர்கூட அருந்த மாட்டார். அப்படி ஒரு ஆசார முறை இங்கே கடைப் பிடிக்கப்படுகிறது.ஒரு மேல்சாந்தி தொடர்ந்து ஆறு மாத காலமே பணி புரிய வேண்டும். இந்த ஆறு மாத காலமும் குருவாயூர் கோயிலை விட்டு அவர் வெளியே எங்கும் செல்லக்கூடாது. கோவிலின் உள்ளே தங்குவதற்குத் தனி இடம் வழங்கப்படும். இந்த ஆறு மாத காலமும் பிரம்மச்சர்ய விரதம் அவசியம்.கீழ்சாந்தி எனப்படுபவர் உதவி அர்ச்சகர் என்று வைத்துக் கொள்ளலாம். விளக்கு ஏற்றுவது, அபிஷேகத்துக்குப் புனித நீர் எடுத்துத் தருவது, மலர் மாலைகளை எடுத்துத் தருவது, நைவேத்தியம் தயாரிப்பது இவை கீழ்சாந்தியின் வேலை. பரம்பரையாக வாரிசு உரிமை பெற்றவர்களே கீழ்சாந்தியாக நியமிக்கப்படுவார்கள்.தந்திரி எனப்படுபவர்கள் வேத மந்திரம் கற்றவர்கள். பூஜைகளைத் தந்திர முறையில் செய்வதால் இவர்கள் தந்திரிகள் ஆனார்கள். பல முக்கியமான நிகழ்வுகளுக்கு ப்ரஸ்னம் பார்த்துத் தீர்மானிப்பது தந்திரிதான். சென்னமனா என்னும் பரம்பரை குடும்பத்தினரைச் சார்ந்தவர்களே தந்திரி ஆக முடியும்.

கார்த்திகை 1ஆம் தேதியில் இருந்து மார்கழி மாதம் 11ஆம் தேதி வரையிலான 41 நாட்கள் மண்டல காலம் எனப்படும். இந்த நாட்களில் திரளான பக்தர்கள் வந்து குருவாயூரப்பனை தரிசிப்பார்கள். 

மண்டல கால பூஜையின்போது 40 நாட்களுக்குப் பஞ்சகவ்ய அபிஷேகமும் 41ஆவது நாளன்று சந்தன அபிஷேகமும் செய்து வைக்கப்படும். குருவாயூரப்பன் விக்கிரகத்தின் மார்பில் தினமும் சந்தனம் சார்த்தப்படுவது வழக்கம் என்றாலும், ஆண்டுக்கு ஒரு முறை இந்த நாளில் செய்யப்படும் சந்தன அபிஷேகத்தைத் தரிசிக்க பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கூடுவார்கள்.கோவில் தந்திரி சிறப்பு பூஜைகளைச் செய்த பிறகு இந்த சந்தன அபிஷேகம் மூலவர் குருவாயூரப்பனுக்குச் செய்யப்படும். இதற்கான சந்தனக் கலவை தயாரிப்பதற்கு மைசூரில் இருந்து சந்தனக் கட்டைகளும், காஷ்மீரில் இருந்து குங்குமப்பூவும் வரவழைக்கப்படும். தவிர பச்சைக் கற்பூரம், பன்னீர், கஸ்தூரி போன்ற வாசனைப் பொருள்களும் கலந்து சந்தனக் கலவையைத் தயாரிப்பார்கள். இதைத் தயாரிப்பதற்கு உண்டான செலவில் ஒரு பகுதியை கோழிக்கோடு சாமுதிரி மன்னர் குடும்பமும், எஞ்சிய தொகையை குருவாயூர் தேவஸ்வம் போர்டும் ஏற்றுக் கொள்ளும்.சந்தன அபிஷேகத்தில் நீராடிய குருவாயூரப்பனை அன்றைய தினம் முழுதும் பக்தர்கள் தரிசிக்கலாம். சந்தன அபிஷேகம் நடந்த தினத்துக்கு அடுத்த நாள் இந்த சந்தனம் களையப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. குருவாயூரப்பனின் திருமேனியைத் தீண்டிய இந்த சந்தனத்தைப் பெறுவதற்குப் பக்தர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்குவார்கள்.வாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த நாராயண பட்டத்ரி, குருவாயூரப்பன் சந்நிதிக்கு முன் நின்று தினம் பத்து ஸ்லோகங்கள் வீதம் நூறு நாட்கள் பாடினார். ஆயிரம் ஸ்லோகங்கள் பாடியதும் வாத நோய் நீங்கி விட்டது.பட்டத்ரி ஸ்ரீநாராயணீயம் சொல்லச் சொல்ல... அந்த குருவாயூரப்பன் ‘ஆமாம் ஆமாம்’ என்று தலை அசைத்து அவற்றை ஏற்று ஆனந்தமாகக் கேட்டு ரசித்ததாகத் தன் உபன்யாசத்தில் சொல்வார் சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர். கர்நாடக இசை வித்துவான் செம்பை வைத்தியநாத பாகவதர், சேங்காலிபுரம் ஸ்ரீஅனந்தராம தீட்சிதர் ஆகியோர் குருவாயூரப்பனின் பரம பக்தர்கள்.ஆலயத்தில் உள்ள நமஸ்கார மண்டபத்தில் அமர்ந்து நாராயணீயம் எழுதினார் நாராயண பட்டத்ரி. அவர் அமர்ந்து எழுதிய இடத்தைப் புனிதமாகக் கருதி, அங்கு எவரும் அமர்வதில்லை. நாராயணீயத்தை 'பாகவத ஸாரம்' என்று கூறுவர். இதில் நூறு தசகங்கள். மொத்தம் 1,034 செய்யுள்கள். குருவாயூர் கிருஷ்ணனை முன்னிலைப்படுத்தி பாகவதத்தின் சாரத்தை சம்ஸ்கிருதத்தில் பக்தி சொட்டச் சொட்ட நாராயண பட்டத்ரி எழுதி இருக்கிறார்.நாராயண பட்டத்ரியுடன் குருவாயூரப்பன் நிகழ்த்திய உரையாடல் சுவையானது.பட்டத்ரி: ‘நீங்கள் மிகவும் விரும்பும் நிவேதனப் பொருள் எது?’குருவாயூரப்பன்: ‘நெய்ப் பாயசம்.’ப: ‘ஒருவேளை நெய்ப்பாயசம் செய்ய எனக்கு வசதி இல்லை என்றால்..?’கு: ‘அவலும் வெல்லமும் போதுமே...’

ப: ‘அவலும் வெல்லமும் நைவேத்தியம் செய்து வைக்க எனக்கு வசதி இல்லை என்றால் என்ன செய்வது?’

கு: ‘வெண்ணெய், வாழைப்பழம், பால், தயிர் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து வழிபடு.’

ப: 'மன்னிக்க வேண்டும் பகவானே... இப்போது நீ சொன்ன நான்கும் என்னிடம் இல்லை என்றால்?'

கு: 'துளசி இலைகள் அல்லது உத்தரணி தீர்த்தமே எமக்குத் திருப்தி தரும்.'

ப: 'அதுவும் என்னிடம் இல்லை என்றால்..?'

கு: 'எனக்கு நைவேத்தியம் செய்விக்க ஒன்றும் இல்லையே என்று வருத்தப்பட்டு கவலையுடன் நீ அழுவாய் அல்லவா... அப்போது உன் கண்களில் இருந்து கசியும் இரண்டு சொட்டுக் கண்ணீரே எனக்குப் போதும். வேறு ஒன்றும் வேண்டாம்.'குருவாயூரப்பனிடம் இருந்து இப்படி ஒரு பதிலைக் கேட்டதும் பக்திப் பரவசம் மேலிட நாராயண பட்டத்ரி கதறி அழுதார்.பட்டத்ரியின் நாராயணீயத்துக்கு மூலமாக அமைந்தது ஞானப்பானை என்னும் நூல். இதுவும் குருவாயூரப்பனின் பெருமையைச் சொல்லும் படைப்பு ஆகும். மலையாள மொழியில் இதை எழுதியவர் பூந்தானம் என்பவர். இப்படி எண்ணற்ற பக்தர்களை ஆட்கொண்டு, தன்வயம் ஆக்கி இருக்கிறார் குருவாயூரப்பன்.எந்த நேரமும் ஏதாவது பிரார்த்தனைகள், வழிபாடுகள் என்று எப்போதும் ஆலயம் பிஸியாகவே இருக்கும்.துலாபார நேர்ச்சைக்கடன் இங்கே பிரசித்தம். பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப தங்கம், வெள்ளி, சர்க்கரை, கரும்பு, வெண்ணெய், பன்னீர், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை எடைக்கு எடை செலுத்துகிறார்கள்.அதுபோல் குழந்தைகளுக்கு முதல் அன்னமிடுதலும் இங்கே சிறப்பு. குழந்தைகளுக்கு முதன் முதலாக இங்கே அன்னம் ஊட்டினால் வாழ்நாள் முழுதும் அந்தக் குழந்தைக்கு ருசியான உணவு கிடைக்கும் என்றும், உணவுக்குப் பஞ்சம் வராது என்பதும், நோய் நொடிகள் எதுவும் வராது என்பதும் நம்பிக்கை. எனவே, தினமும் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இங்கே அன்னம் ஊட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் இருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள புன்னத்தூர் கோட்டாவில் தேவஸம் போர்டுக்குச் சொந்தமான யானைகள் கொட்டாரம் அமைந்துள்ளது. குருவாயூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், இந்த யானைகள் கொட்டாரத்துக்கும் வந்து பார்த்து மகிழ்கிறார்கள். சுமார் 100க்கும் மேற்பட்ட யானைகள் இருக்கின்றன. 200க்கும் மேற்பட்ட பாகன்கள் பணி புரிகிறார்கள். இதைத்தான் உலகிலேயே தனியார் கண்காணிப்பில் உள்ள மிகப் பெரிய யானைகள் பூங்கா என்கிறார்கள்.பத்மநாபன் மற்றும் கேசவன் என்கின்ற இரண்டு யானைகளின் படங்களை ஆலயத்தில் மாட்டி வைத்திருக்கிறார்கள். தற்போது உயிருடன் இல்லாவிட்டாலும், இந்த யானைகளுக்குத் தனி மரியாதை பக்தர்களிடம் இருந்து வருகிறது.திருச்சூரில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது குருவாயூர்.அதிகாலை மூன்று மணி முதல் இரவு ஒன்பதேகால் மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.

குடும்பத்தோடு சென்று குருவாயூரை தரிசியுங்கள். குருவாயூரப்பனின் அருள பரிபூரணமாகக் கிடைக்கட்டும்.

ஸ்ரீ காமாக்ஷி ஸ்தோத்திரம்

 ஸ்ரீ காமாக்ஷி ஸ்தோத்திரம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

மங்கள சரணே மங்கள வதனே மங்கள தாயினி காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே ஸஜ்ஜன ஸதயே காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

க்ரஹநுத சரணே க்ருஹ சுத தாயினி நவ நவ பவதே காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

சிவமுக விநுதே பவசுக தாயினி நவ நவ பவதே காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

பக்த சுமானஸ தாப வினாசினி மங்கள தாயினி காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

கேனோ பநிஷத் வாக்ய வினோதினி தேவி பராசக்தி காமாக்ஷி

பரசிவ ஜாயே வர முனி பாவ்யே அகிலாண்டேஸ்வரி காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

ஹரித்ரா மண்டல வாஸினி நித்யே மங்கள தாயினி காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி.

ஸ்ரீ காமாட்சி ஸ்தோத்திரம் சம்பூர்ணம்

16008 சாளக்கிராம கற்களை இணைத்து உருவான

 🌹🌺"  16008 சாளக்கிராம கற்களை  இணைத்து உருவான கேட்டதையெல்லாம் கொடுக்கும் பெருமாள்....  பற்றி - விளக்கும் எளிய கதை* 🌹🌺

--------------------------------------------------------

🌺🌹ஒரு முறை பிரம்மா யாகம் நடத்திய போது ஏற்பட்ட தவறால், யாக குண்டத்தில் இருந்து கேசன், கேசி என்ற அரக்கர்கள் தோன்றினர். இவர்களால் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொந்தரவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட இவர்கள் திருமாலிடம் முறையிட்டனர்.

🌺திருமால் கேசனை அழித்து, கேசியின் மேல் சயனம் கொண்டார். கேசியின் மனைவி பெருமாளை பழிவாங்கும் நோக்கத்துடன், கங்கையையும், தாமிரபரணியையும் துணைக்கு அழைக்க, அவர்கள் இருவரும் வேகமாக ஓடி வந்தனர்.

🌺இதையறிந்த பூமாதேவி திருமால் சயனித்திருக்கும் பகுதியை மேடாக்கினாள். அவர்கள், திருமால் இருந்த இடத்தை சுற்றி வணங்கி இரண்டு மாலைகள் போல் வட்ட வடிவில் ஓட ஆரம்பித்தனர். இதனால் இத்தலம் "வட்டாறு' என அழைக்கப்பட்டது.🌺இரு நதிகளும் பெருமாளுக்கு மாலை சூட்டியது போல் இருப்பதைக்கண்ட நம்மாழ்வார், "மாலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான்', என பாடுகிறார். கேசனை அழித்ததால் இத்தல பெருமாள் கேசவப் பெருமாள் எனப்படுகிறார்.

🌺கேசியின் மீது சயனித்த போது, அவன் தன் 12 கைகளால் தப்புவதற்கு முயற்சி செய்தான். பெருமாள் அவனது 12 கைகளிலும் 12 ருத்ராட்சங்களை வைத்து தப்பிக்க விடாமல் செய்தார். இவையே திருவட்டாரை சுற்றி சிவாலயங்களாக அமைந்தன.🌺மகாசிவராத்திரியின் போது பக்தர்கள் 12 சிவாலயங்களையும், ஓடியவாறு தரிசித்து, கடைசியில் ஆதிகேசவப் பெருமாளையும், அவர் பாதத்தின் கீழ் உள்ள சிவனையும் தரிசிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.🌺 இங்குள்ள பெருமாளின் திருமேனி கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால், 16008 சாளக்கிராம கற்களை (நாராயணனின் வடிவமான கல் வகை) இணைத்து உருவானது.

🌺ஆண்டுதோறும் பங்குனி 3 முதல் 9 வரையிலும், புரட்டாசி 3 முதல் 9 வரையிலும் சூரியனின் அஸ்தமன கதிர்கள் மூலவரின் மீது பட்டு தரிசிப்பதைக் காணலாம்.🌺அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், திருவட்டாறு, கன்னியாகுமரி, தமிழ்நாடு*இவருக்கு கேட்டதையெல்லாம் கொடுக்கும் பெருமாள் என வேறு பெயரும் உண்டு 🌹🌺

🌺🌹 வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க 🌷🌹

திருவண்ணாமலை அருணாசல புராணம் வச்சிராங்கத பாண்டியச் சருக்கம்

 திருவண்ணாமலை அருணாசல புராணம் 

வச்சிராங்கத பாண்டியச் சருக்கம்🌹

🔥அவன் அருளாலே அவன் தாள் பணிந்து🌺  பக்தியுடன்🙏 ...மாங்காடு மணிவண்ணன் பலராமன் அரும்பாக்கம் கிராமம் திருவண்ணாமலை மாவட்டம் ....       வச்சிராங்கத பாண்டியன் 

சந்தனக் காட்டு மணம் போல் தமிழ் மணத்தில் நெடுநாள் திளைத்து ஆடும் மயிலும் நடக்கும் அன்னமும் வருவது போல வாடையும் தென்றலும் புகும் நாடு வையை வளநாடு. 

விரும்பும் கண் கொண்ட மகளிர் இடையை மின்னல் என மருண்டு தாழை பூக்கும். மான் போன்ற மகளிர் கூந்தலை இருள் என்று எண்ணி மௌவல் மலரும். - நாடு. அந்த வளநாட்டின் அரசன் தேவேந்திரன் முடி சிதறும்படி தன் வளைதடி வீசியவன். தன் வெற்றி கயிலாயன் நெற்றிக்கண் போல் விளங்கும்படித் தன் மீன் கொடியை இமயத்தில் எழுதி வைத்தவன். 

காமன் போல் அழகு, மறைகள் பலவும் தெளிந்த அறிவு, சிவன்மீது பத்தி, மகளிர் விரும்பும் தோள் ஆகியவற்றை உடையவன் வையை வளநாடனாகிய வச்சிராங்கத பாண்டியன் 

வான், மண் என்னும் ஈருலகிலும் புகழ் பெற்றவன். சிவன் தலைமாலை மணத்தை முர்ந்துகொண்டு மனையறம் பேணுபவன்.

தங்கள் குலத் தலைவன் நிலாவையும், சிவன் அடிகளையும் தலையில் சூடினான். நன்றி அறிதலில் இணையில்லாதவன். 

10 திசையிலும் புகழ் பெற்றவன். சங்கு ஈன்ற முத்துக்கள் கிடக்கும் முற்றம் கொண்டவன்.  தன் வெற்றிக் கடலில் கப்பல் ஓட்டுபவன். 

கடலின் பவளக்கொடி போன்றவர் அவன் குடிமக்கள் (செம்மை திரம்பாதவர்)

எங்கும் நலம் பெற உலகை ஆள்பவன். அவன் பெயர் வச்சிராங்கதன்.

போரில் தோற்ற அரசர்களையும், கொடையில் தோற்ற மேகத்தையும் சிறையில் வைத்தவன். சித்திராங்கதன் வேட்டையாட விரும்பி கரி, பரிப் படைகளுடன் வடதிசை நோக்கிப் புறப்பட்டான். 

நிலவைக் கண்டு இருள் ஓடுவது போல, திங்கள் குலத்தவனைக் கண்டு கரிய நிற யானைகள் ஓடின. அம்புலி குலத்தவன் அம் புலிகளைக் கொன்றான். ஆறில் ஒரு பங்கு கடமை (வரி) வாங்குபவன் ஆறில் (வழியில்) கடமை மாடுகளைக் கைப்பற்றினான். அரசன் சேரமானைச் சிதைத்தவன் சேரும் மான்களைச் சிதைத்தான். தமிழ்ச்சங்கத்தில் கலை வளர்த்தவன் கலைமான்களை வளைத்துக் கொண்டான். 

நாற்படையை ஓட்டியவன் நாவி என்னும் புனுகுப்பூனையைத் தொடர்ந்தான். 

அந்தப் புனுகுப்பூனை அருணாசல  மலையை வலம்வருவது போல் ஓடிற்று. குதிரையைத் துரத்தினான். பூனை அவன் கண் முன் விழுந்தது. 

பச்சைநாவி என்னும் நஞ்சு பருகியவர் போல விழுந்த அந்தப் பூனை மலையை வலம்வந்ததால் தன் உடலை விட்டு, வித்தியாதரன் உருவம் கொண்டு விமானத்தில் ஏறி வானுலகம் சென்றது 

குதிரை கால் இடறி விழுந்தது. அரசனும் விழுந்தான். மலையை வலம்வந்ததால் குதிரை ஓவியராலும் எழுத முடியாத உருவம் கொண்டவனாக மாறி பூ விமாத்தில் ஏறி வானுலகம் சென்றது. அவன் யானை போன்றவன். இலங்கை அரசன் இராவணன் கயிலாய மலை அடியில் விழுந்தது போல அண்ணாமலை அடிவாரத்தில் விழுந்தான். விலங்கின் பின்னே ஓடினால் யார்தான் விழமாட்டார்கள்? 

வானுலகம் செல்லுமுன் பூனையும், குதிரையும் காந்திசாலி, கலாதரன் என்பவர்களாக மாறினர். அவர்கள் பாண்டியனுக்கு நண்பர் ஆயினர். காந்திசாலி, கலாதரன் இருவரும் பாண்டியனிடம் வந்து  கலங்கினான். பாண்டியன் அவர்களை அஞ்சவேண்டாம் என்று கையமர்த்தினர் 

நீங்கள் இங்கு வந்தது நீதியே. உங்கள் துயருக்குக் காரணம் என்ன என்று பாண்டியன் வினவியபோது கலாதரன் சொல்கிறான். 

இவன் பெயர் காந்தசாலி. என் பெயர் கலாதரன். நாங்கள் இருவரும் நண்பர்களாக விளையாடினோம். 

மேருமலைச் சாரலில் விளையாடிக்கொண்டிருந்தபோது ஊழ்வினை எங்களைத் தொடர்ந்தது 

துருவாச முனிவர் சினம் மிக்கவர். அவர் ஊற்றிய நீரால் பூத்துக் குலுங்கும் நந்தவனத்தில் நுழைந்தோம். 

அப்போது காந்திசாலி சில பூச்செடிப் புதர்களை மிதித்தான். நான் அதில் இருந்த பூக்களைப் பறித்தேன். முனிவர் கண்டார். சினம் கொண்டார். 

அவர் முகத்தில் முத்தாரம் போல் வியர்வை. பவளம் போன்ற அவரது இதழ்கள் துடித்தன. உடல் நடுக்கத்தால் நழுவும் மேலாடையை அடிக்கடி உயர்த்திக்கொண்டார். விசித்திரமான அனல் பொறிகள் உடலிலிலிருந்து தெறித்தன. அவர் சொன்னார். 

செங்கதிர்,  தென்றல், நத்தை, தேன் உண்ணும் வண்டு ஆகியனவும் இந்தப் பூங்காவில் நுழைய முடியாது. இதில் உதிர்ந்த இலைகள் காய்வதில்லை. இப்படிப்பட்ட நந்தவனத்தில் ஒருவர் நுழைய முடியுமா 

காளை ஊர்தியான் சிவனுக்குப் பூசை செய்யும் மலரை, என் வனத்தில் புகுந்து பறித்தீர். பாவிகளே என் கோபக் கனலுக்கு ஆளானீர். செடியை மிதித்த காந்திசாலி குதிரையாகவும், மலரைப் பறித்தவன் (நான்) நாவிப் பூனையாகவும் ஆவீர்க்களாக என்று சபித்தார். முனிவனைப் போற்றிப் புகழ்ந்து இந்தச் சாபம் நீங்கும் காலம் எப்போது என்று வினவினோம். 

சோணாசலம் என்னும் திருவண்ணாமலையை வலம்வந்தால் சாபம் தீரும். பாண்டியன் ஒருவன் உங்களை அம் மலையை வலம்வரச் செய்வான் என்றும் முனிவர் கூறினார். 

அத்துடன் அந்த முனிவர் ஒரு கதையும் சொன்னார். சிவன் தன்னிடம் இருந்த நீண்ட காட்டுப் பழம் ஒன்றைத் தன் பிள்ளைகள் இருவரும் தனக்குத் தரும்படிக் கேட்க, உங்களில் யார் இந்த உலகை முதலில் சுற்றிவருகிறாரோ அவருக்குத் தருவேன் என்று கூறினார். கந்தன் தன் மயிலின்மீது ஏறி உலகை வலம்வரச் சென்றான். ஆனைமுகன் எல்லோர்க்கும் தந்தையான தன் தந்தையை வலம்வந்து பழத்தை வரங்களுடன் பெற்றுக்கொண்டான். 

விரைந்து உலகைச் சுற்றிவந்த வேலவன் தனக்குக் கனியைத் தருமாறு வேண்டினான். சிவன் நடந்ததைக் கூறினார். ஏழு உலகங்களை வலம்வந்தாலும், பல பல  தவங்கள் செய்தாலும் தன் அடிகளை வலம்வந்ததற்கு இணை ஆகாது என்றும் கூறினார். 

சிவன் முருகனிடம் சொல்கிறான். நான் இந்தச் சிவந்த மலை உருவில் இருக்கிறேன். என்னை வலம்வந்தோர் பிரமன், வீட்டுணு, நீ, உமை, நான் ஆகியோரைக் காட்டிலும் அதிக பேறு பெற்றவர் என்றான்.

என் மேனியாகிய இந்த மலைக்குத் தேவர்கள் பூசை செய்யமாட்டார்கள். இதனை வலம்வருதலே எனக்குச் செய்யும் பூசை. இதனை வலமவரக் கூசுபவர் எனக்குத் தீமை செய்தவர் ஆவார் என்று சிவன் முருகனிடம் கூறினான். 

முருகனுக்குச் சிவன் சொன்னதைச் சொல்லிவிட்டு துருவாச முனிவன் சென்றான். அதன்படிக் குதிரை, பூனையாகப் பிறந்த நாங்கள் தென்னாடனாகிய உன்னால் இந்த மலையை வலம் வந்தோம். சாபம் நீங்கிப் பண்டைய வடிவம் பெற்றோம் - என்று கூறிவிட்டு விமானத்தில் ஏறினர். 

எங்கள் ஆவி உன்னைத் துன்புறுத்தியது. நீ இந்த மலையை வலம் வந்ததால் அந்தத் துன்பமும் நீங்கும் - என்று காந்திசாலி, கலாதரன் இருவரும் பாண்டியனிடம் சொல்லிவிட்டுத் தங்களுடைய ஊருக்குச் சென்றனர். 

மன்னன் சென்ற குதிரைக் காலடிச் சுவடுகளின் வழியில் அவனைத் தேடிக்கொண்டு வந்த அவன் படைகள் அவனிடம் வந்து சேர்ந்தன. பாண்டியன் துன்பம் தீர்ந்தது. 

வச்சிராங்கத பாண்டியன் அரதனாங்கதன் (இரத்தினாங்கத பாண்டியன்) என்னும் தன் மகனை அழைத்து முன்னொரு காலத்தில் இராமனுக்காகப் பரதன் ஆண்டது  போல நாட்டை ஆளும்படிப் பணித்தான். அவனும் அவ்வாறே சென்று பாண்டிய நாட்டை ஆண்டான். 

வச்சிராங்கதன் தன் மூதாதையர் வழியில் வந்த செல்வம், கடலில் பெறும் முத்தின் செல்வம், பகைவர் பணிந்து தந்த திறை ஆகியவற்றை சிவன் பூசைக்குச் செலவிட்டான். 

பின்னர் கவுதம ஆச்சிரமத்துக்கு அருகில் ஒரு பன்னசாலை அமைத்து அதில் தங்கிக்கொண்டு மலைவலம் வந்தான். (கைதவர் = சிவன், வஞ்சகர்) அவன் எதிரில் சிவன் தோன்றவில்லை. 

தலையில்  பிறை, அருள் பொழியும் விழி, மறை மிடறு, 4 புயம், கயில் மான், கணிச்சி, விடைமேல் அமர்ந்த கோலம் ஆகியவற்றைக் கண்டு களிப்பது என்றோ என ஏங்கினான். 

அண்ணாமலை என்னும் பெயர் உடையவன். விடை கொண்டவன். குளுமையாய் இருப்பவன். எம்மை ஆளாகக் கொண்டவன். நுதலில் கண் கொண்டவன். வினைப்பயன் நீங்காதவரின் அறிவுக்கு எட்டாத ஒளி கொண்டவன். குழந்தை பால் உண்ணாத முலை கொண்டவளின் தலைவன் - என்றெல்லாம் சிவனைப் போற்றிப் புகழ்ந்தான். 


காலால் நடந்து மலையை வலம் வராமல் குதிரை மேல் வந்து பாவம் செய்தேன். இந்தத் தீவினையைத் தீர்ப்பாயாக - என்றெல்லாம் வேண்டினான். 


சிவன் பாண்டியன் முன் தோன்றினார். வச்சிராங்கத பாண்டியனே! நீ முன் பிறவியில் தேவனாக இருந்தாய். அப்போது உன் வச்சிரப் படையால் என்னைத் தாக்கினாய். அதன் வினைப்பயனால் மனிதனாகப் பிறந்தாய். என் மலையை வலம் வந்ததால் பொன்நாடு பெற்றுப் பொலிவுடன் வாழ்வாயாக - என்று வரம் கொடுத்துவிட்டு மறைந்தார். 

திருவண்ணாமலையை நினைப்பவர்கள் சாவில் துன்புறார். சிவன் வடிவமாக மாறுவர். - என்று சிவன் கூறினார். 

இதனை அறிந்தவரும், பெரியவர்களுடன் சேர்ந்து படித்தவரும் சிவ சாயுச்சியம் பெறுவார்கள். மூன்று காலமும் படிப்பவர்களும், இதன் பொருளைப் பகிர்ந்துகொண்டவர்களும் சிவகதி அடைவர் என்பது வியப்பன்று. 

நூல் - எல்லப்ப நாவலரால் பாடப்பட்ட (திருவண்ணாமலை) அருணாசல புராணம் வச்சிராங்கத பாண்டியச் சருக்கம்

அண்ணாமலையாருக்கு அரோகரா

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...