Tuesday, February 15, 2022

சாதுக்களை சோதிக்காதீர்

 

May be an image of 5 people, people standing and outdoors

























#சாதுக்களை சோதிக்காதீர்!
#விஷ்ணு ஆற்றில் படகு சென்று கொண்டிருந்தது. அதில் பயணித்த இளைஞர்கள் படகில் இருந்த சாது ஒருவரைக் கேலி செய்தனர்.
#அவர் சூரிய பகவானின் பக்தர். அளவுக்கு மீறியதால் சாது எச்சரிக்கும் நோக்கில் பார்த்தார். இதைக் கண்ட ஒரு வாலிபன் கிண்டலாக, உழைக்கப் பயந்த சோம்பேறி மனுஷனான உனக்கு என்ன வீராப்பு வேண்டிக் கிடக்கு!
என்று சொல்லி அடிக்கப் பாய்ந்தான்.சாதுவின் கண்கள் கலங்கிவிட்டன. அப்போது சூரியபகவான் அசரீரியாக, என் அருமை சாதுவே! நீ கட்டளையிட்டால் இந்த படகையே கவிழ்த்து விடுவேன்! என்றார். இதைக் கேட்ட இளைஞர்கள் பயந்து போனார்கள்.
#ஆனால் சாதுவோ,செங்கதிரோனே! எல்லோரையும் காப்பாற்ற வேண்டிய நீயா இப்படி சொல்வது? செய்வதாக இருந்தால் இவர்களின் புத்தியை நல்வழிப்படுத்து. படகைக் கவிழ்ப்பதால் யாருக்கும் பயன் இல்லை! என்று பிரார்த்தித்தார்.உடனே சூரிய பகவான் பேசினார். சாதுவே!
#மிக்க மகிழ்ச்சி. உன்னைச் சோதிக்கவே அப்படி சொன்னேன். உன் நல்ல உள்ளத்தை மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? உனக்கு எப்போதும் என் அருள் உண்டு. நீ விரும்பியது போல, இவர்களுக்கு நல்ல புத்தியையும் அளித்தேன், என்றார்.மென்மையான போக்கு தான் மனிதனை வாழ வைக்கும்.
பழி வாங்குதலும், கோபமும் மனிதனை மிருகமாக்கி விடும்.-
siva

உங்கள் பயணம் மிகவும் குறுகியது

 


💛 *நம் பயணம் குறுகியது*💛 *நமது நினைவில் வைக்கவும்*
ஒரு பெண் பேருந்தில் ஏறி ஒரு ஆணின் அருகில் அமர்ந்து,இடம் போதாமையால் அவரை திட்டி கொண்டிருந்தாள்.
அந்த நபர் அமைதியாக இருந்தபோது, ​​​​அந்தப் பெண் உங்களை திட்டி கொண்டு இருக்கும் போது, ஏன் அமைதியாக இருந்தீர்கள் என்று அருகிலிருந்த பெண்மணி கேட்டார்.
அந்த மனிதன் அவருக்கு புன்னகையுடன் பதிலளித்தார்: ஏனெனில்
*எனது பயணம் மிகக் குறுகியதாக இருப்பதால்* முக்கியமற்ற ஒன்றைப் பற்றி வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்குகிறேன்"🥰
இந்த பதில் அந்தப் பெண்ணை மிகவும் யோசிக்க செய்தது, மேலும் அவர் அந்த மனிதனிடம் மன்னிப்புக் கேட்டாள், மேலும் அவரது வார்த்தைகள் பொன்னெழுத்தால் எழுதப்பட வேண்டும் என்று நினைத்தார். 💛
இவ்வுலகில் நமது நேரம் மிகக் குறைவு என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும், பயனற்ற வாக்குவாதங்கள், பொறாமை, மற்றவர்களை மன்னிக்காதது, அதிருப்தி மற்றும் மோசமான அணுகுமுறைகள் ஆகியவை நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்க்கும் ஆபத்தானது.
யாராவது உங்கள் மனதை காயப்படுத்தினார்களா? அமைதியாய் இருக்கவும்.ஏனெனில்
*நம் பயணம் மிகவும் குறுகியது*.💛
யாராவது உங்களைக் காட்டிக்கொடுத்தார்களா, மிரட்டினார்களா, ஏமாற்றினார்களா அல்லது அவமானப்படுத்தினார்களா?
ஓய்வெடுங்கள் - மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள்.ஏனெனில்
*நம் பயணம் மிகவும் குறுகியது*.💛
காரணம் இல்லாமல் யாராவது உங்களை அவமானப்படுத்தினார்களா?
அமைதியாய் இருக்கவும். புறக்கணிக்கவும்.ஏனெனில்
*நம் பயணம் மிகவும் குறுகியது*.💛
உங்களுக்குப் பிடிக்காத கருத்தை யாராவது தெரிவித்திருக்கிறார்களா?
அமைதியாய் இருக்கவும். புறக்கணிக்கவும். மன்னிக்கவும்,மறக்கவும் பழகி கொள்ளுங்கள்.ஏனெனில்
*நம் பயணம் மிகவும் குறுகியது*💛
சிலர் நமக்கு என்ன பிரச்சனைகளை கொண்டு வந்தாலும்,
அதை நாம் நினைத்தால் தான் பிரச்சனை, நினைவில் கொள்ளுங்கள்.
*நாம் ஒன்றாக பயணம் செய்வது மிகவும் குறுகியதாக உள்ளது*.💛
நம் பயணத்தின் நீளம் யாருக்கும் தெரியாது. நாளை என்பதை யாரும் பார்க்கமுடியாது. அது எப்போது நிறுத்தப்படும் என்றும் யாருக்கும் தெரியாது.
*நாம் ஒன்றாகப் பயணம் செய்வது மிகக் குறைவு*💛
நண்பர்களையும் குடும்பத்தினரையும் மற்றும் நமக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சக ஊழியர்கள், மேலதிகாரிகள் அனைவரையும் பாராட்டுவோம். அவர்களிடம் நல்ல நகைச்சுவையுடன் பேசவும் அவர்களை மதிக்கவும். மரியாதையாகவும், அன்பாகவும், மன்னிப்பவராகவும் எப்போதும் இருப்போம்.ஏனெனில் *நம் பயணம் மிகவும் குறுகியது*💛
உங்கள் புன்னகையை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.... நீங்கள் விரும்பும் அளவிற்கு அழகாக இருக்க உங்கள் பாதையை தேர்ந்தெடுங்கள் 💛எப்போதும் மறக்காதீர்கள்
*உங்கள் பயணம் மிகவும் குறுகியது* 💛
நாமும் இதை முயற்சி செய்து பார்க்கலாம்.

பஞ்ச பூத யாகம்,tamilnadu ,india

 *பஞ்ச பூத யாகம்**

சித்தர்கள் அருள் ஆசியோடு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா காட்டுநாயக்கன்பட்டி கிராமம்
ரிஷி மலை அடிவாரத்தில் உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வளம் வேண்டியும்,
பொருளாதாரம் மேம்படவும்
உலக சித்தர்கள் ஞான பீடம் நடத்தும்
*பௌர்ணமி
யாகம் வருகின்ற 16.02.2022
(புதன் கிழமை )
மாலை 5மணிக்கு நடைபெறும்.
*
*சித்தர்கள் யாகத்தில் கலந்து கொண்டால்* ...
*உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.
*பொருளாதார தடை நீங்கும்.
*குடும்ப பிரச்சினைகள் தீரும்.
*திருமண தடை அகலும்.
*குழந்தைப் பேறு கிட்டும்.
*பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவர்.
*ஏவல் பில்லி சூனியம் பேய் அகலும்.
*நினைத்த காரியம் நடக்கும்.
*கடன் பிரச்சினை தீரும்
*ஞாபக சக்தி அதிகரிக்கும்
*ஞானத்திற்கான வழி கிடைக்கும்.
*நவக்கிரக தோஷங்கள் நீங்கும்.
*அமைதியான மனநிலை உருவாகும்.
*பிறவிப் பலன் கிட்டும்.
*வராத கடன் வசூல் ஆகும்.
*குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி ஆனந்தமான வாழ்வு கிட்டும்.
*சித்தர்கள் அருளால் நடைபெற இருக்கும் சித்தர்கள் யாகத்தில் அனைவரும் கலந்துகொண்டு பயனடைய வேண்டுகிறோம்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22, 23 ஆகிய இரண்டு நாட்கள் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற *உலக சித்தர்கள் மாநாட்டில் 1.25 லட்சம் பேர்* கலந்துகொண்டு சித்தர்கள் அருளைப் பெற்றனர். சித்தர்கள் அருள் பெற்றிட அனைவரும் வந்து சித்தர்கள் யாகத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
*மாதந்தோறும் பௌர்ணமி,
அமாவாசை
பஞ்ச பூத யாகம் நடைபெறுகிறது*
*தொடர்புக்கு*
*உலக சித்தர்கள் ஞானபீடம்* .
*தவத்திரு.
அ.வே.இரத்ன மாணிக்கம*
94435 12858

சோடச உபசாரம்


🌺🌷கோபத்தில் வியர்க்கும் முருகர் சிலை !

🌺🌹திருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிக சூடாக இருக்கும். சந்தனம் அரைத்து சிறிதும் தண்ணீர் இல்லாதவாறு நன்கு வடிகட்டி அதை விக்ரகம் மீது முழுதாக தடவி பூசி மூடி விடுவர். மாலை சந்தனம் வழிக்கும்போது நிறைய தண்ணீர் இருக்கும்…சந்தனம் சொத சொதவென சிலை முழுக்க வழிந்தோடும்.

🌺🌹வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது நடைபெற்ற நிகழ்ச்சி இது. சர்வ அலங்காரங்களுடன் எம்பருமான் கந்தவேல் திருசெந்தூரில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருக்கிறான். அப்போது (1803 ஆம் ஆண்டு) திருநெல்வேலி மாவட்டட கலக்டராக இருந்த லூசிங்டன் பிரபு என்பவர் திருச்செந்தூர் வந்திருந்தார். முருகனுக்கு நடைபெறும் வழிபாடுகளை கண்டார்.

🌺🌹இறைவனுக்கு அளிக்கப்படும் சோடச உபசாரம் எனப்படும் பதினாறு வகை உபசாரங்களுள் விசிறி வீசுதலும் ஒன்று. சுப்ரமணிய சுவாமிக்கு அர்ச்சகர் வெள்ளியிலான விசிறியை வீசுவதை கண்டார் லூசிங்டன்.
அங்கிருந்த பக்தர்களிடம், “உங்கள் கடவுளுக்கு வியர்க்குமோ? விசிறியை வைத்து வீசுகிறீர்கள்..?” என்று கேலி செய்தார்.

🌺🌹அர்ச்சகருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. துணிவை வரவழைத்துக்கொண்டு, “ஆம்… எங்கள் சண்முகனுக்கு வியர்க்கும்.


ஆஞ்சநேயரின் பரம பக்தர்

ஆஞ்சநேயரின் பரம பக்தர் ஒருவருக்கு சொக்கட்டான் விளையாட ஆசை! 

தன்னுடன் சேர்ந்து விளையாட ஆஞ்சநேயரே வரவேண்டும் என விரும்பினார்.

எனவே, மனமுருகி ஆஞ்சநேயரைப் பிரார்த்தித்தார். 

அவர் முன் தோன்றிய ஆஞ்சநேயரும் பக்தரது விருப்பத்தை பூர்த்தி செய்ய ஒப்புக் கொண்டார்.

ஆனாலும் ஒரு நிபந்தனை விதித்தார்.

"நான் விளையாட்டில் விட்டுக் கொடுக்க மாட்டேன். 

எனவே, தோற்றால் நீ வருத்தப்படக் கூடாது!'' 
என்றார் அஞ்சனை புத்திரன்.

பக்தரும் சம்மதித்தார் இருவரும் விளையாட ஆரம்பித்தனர்.

பக்தர், ஒவ்வொரு முறையும் "ஜெய் அனுமான்" என்ற படியே காய்களை உருட்டினார். 

ஆஞ்ச நேயர் ''ஜெய் ராம்" என்றபடி காய்களை உருட்டினார்.

ஒவ்வொரு முறையும் பக்தனே வெற்றி பெற்றான். 

"சரி அடுத்த முறை ஜெயிக்கலாம்!" என்று ஆஞ்சநேயர் மீண்டும் மீண்டும் விளையாட வெற்றி பக்தனின் பக்கமே!

மனம் வருந்திய ஆஞ்ச நேயர் "ஸ்வாமி, தங்கள் நாமத்தை உச்சரித்தும் எனக்கு தோல்வியா...?" 
என்று ராமரிடம் பிரார்த்தித்தார்.

அவர் முன் தோன்றிய ராமன்,

 "ஆஞ்சநேயா... நீ, என் பக்தன் ஆதலால், உன்னிடம் என் சக்தி இணைந்துள்ளது. 

அவனோ உனது பக்தன். ஆதலால், அவனது சக்தியுடன் நம் இருவரது சக்தியும் இணைந்து விடுகிறது. 

இதுவே அவனது வெற்றிக்கு காரணம்!'' என்றார்...

ஜெய் ஹனுமான் 🙏
ஜெய் ஸ்ரீ ராம் 🙏

துவாரபாலகர்கள் இருவர்

சிவாலயத்திற்கு செல்லும்பொழுது எல்லோரும் மூலவரான சிவலிங்கத்துடன் வேண்டுகிறோம். நான் பிரார்த்தனை என்று நம்புகிறோம். இது தவறு. 

மூலஸ்தானத்திற்கு நுழையும் முன்பாக துவாரபாலகர்கள் இருவர் இருப்பர். அந்த இருவரில் யாராவது ஒருவரிடம் நாம்
அவரது முகம் பார்த்து பின்வருமாறு நாம் நினைக்க வேண்டும்.

நம்முடைய பெயர் 

நம்முடைய பிறந்த நட்சத்திரம் 

நம்முடைய பிறந்த ஊர்

 நம்முடைய கோத்திரம் நம்முடைய தொழில் இவை அனைத்தையும் நினைக்க வேண்டும்.

 பிறகு நம்முடைய கோரிக்கைகளை வரிசையாக கூற வேண்டும். 

என் மகளுக்கு நல்ல வாழ்க்கை துணை அமைய வேண்டும். 

எனது கடன் இன்னும் ஒரு வருடத்திற்குள் தீர வேண்டும்.

எதிரிகளும் துரோகிகளும் செய்யும் எந்த ஒரு மாந்திரிக தாக்குதலும் என்னையும் எனது குடும்பத்தையும் எனது தொழிலையும் சிறிதும் பாதிக்காத அளவுக்கு நான் ஆத்மா பலத்தோடு இருக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை உள்ளே இருந்து அருள்பாலிக்கும் அப்பாவிடம் தெரிவித்து விடுங்கள். என்று வேண்ட வேண்டும்.

 அப்படிச் செய்தால் அன்று நள்ளிரவு 3 மணிக்கு துவாரபாலகர் உள்ளே இருந்து அருள்பாலிக்கும் சிவலிங்கத்துடன் முறைப்படி தெரிவிப்பார். 

(ஒவ்வொரு ஆலயத்திலும் நள்ளிரவு 3 மணிக்கு எல்லா தெய்வீக சன்னதியில் இருந்தும் சிற்பங்கள் உயிர் பெற்று எழுந்து வரும்.மூலஸ்தானத்திற்கு சென்று அன்று முழுவதும் அந்த ஊரில் என்ன நடந்தது என்பதை மூலவரிடம் தெரிவிக்கும். இதை நாம் யாரும் பார்க்க முடியாது.)

இந்த பிரார்த்தனையில் யாரையும் சபிக்க கூடாது. 

நமக்கு என்ன வேண்டும் என்பதை மட்டுமே கேட்டுக் கொள்ளவேண்டும் வேண்டிக் கொள்ள வேண்டும்.

சித்தர்கள் அருளிய பிரார்த்தனை முறை இதுதான். 

இந்த முறையினை எமது குருவின் அருளால் உங்களுக்கு தெரிவித்து விட்டோம். 

சிவாய நம சிவாய நம சிவாய நம

Monday, February 14, 2022

காமராஜர் சொன்ன பதில்

1967 தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவ, திமுக அறியணை ஏறியது.

அப்போது ஒரு காங்கிரஸ்காரர் காமராஜரிடம் சொன்னார், 

 "மக்களுக்காக நீங்கள் எவ்வளவோ செய்திருக்கிறீர்கள். அப்படியும் நீங்கள் ஜெயிப்பதற்குத் தேவையான வாக்குகள் விழவில்லை. என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தீர்களா? எதிர்க்கட்சிக்காரர்கள் ஓயாத பிரசாரத்தின் மூலம் நம்மை வீழ்த்திவிட்டார்கள். நீங்களோ நாம் மக்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் செய்தோம் என்பதைக் கூடப் பிரசாரத்தில் விவரமாய்த் தெரிவிக்கவே இல்லை. நீங்கள் தோற்றதற்கு அதுதான் காரணம்!" 

அதற்கு காமராஜர் சொன்ன பதில்,

 "அட, போய்யா! பெத்த தாய்க்குச் சேலை வாங்கிக் குடுக்கிற மகன், ‘எங்கம்மாவுக்கு நான் சேலை வாங்கிக் குடுத்தேன், எங்கம்மாவுக்குச் சேலை வாங்கிக்க குடுத்தேன்னு தம்பட்டம் அடிக்கலாமான்னேன்! நம்ம கடமையைத்தானேய்யா நாம செஞ்சோம்? அதில பீத்திக்கிறதுக்கு என்ன இருக்குன்னேன்?"

மகாத்மா காந்தி சிறையில் இருந்தபோது

மகாத்மா காந்தி சிறையில் இருந்தபோது ஸ்மட்ஸ் என்ற மகா கொடியவன் ஜெயிலராக இருந்தான்.
எல்லாக் கைதிகளையும் எலும்பு ஒடிய அடிப்பவன். 
காந்தியையும் கீழே தள்ளி, பூட்ஸ் காலால் பலமுறை மிதித்தான், அடித்தான்.
அடிக்கும்போது எல்லோரும் ஐயோ!என்று அலறினார்கள்.
ஆனால், காந்தி மட்டும் "ராம்!ராம்!!" என்று சொன்னது,
அவனை மிகவே
யோசிக்க வைத்தது.
அன்று முதல் காந்தியை அடிப்பதை நிறுத்தினான்.
ஆனால், காந்தியை அவ்வப்போது 
உற்றுப் பார்த்தான்.
இலேசாகப் புன்முறுவல் காட்டினான். 
ஒரு நாள் "மிஸ்டர் காந்தி"!என்று கனிவாக அழைத்து
நான் உங்களுக்கு ஏதாவது உதவ நினைக்கின்றேன்;
என்ன வேண்டும் என்றான்?
ஏதாவது புத்தகம் கொடுங்கள் என்றார் காந்தி. அவன் "பைபிள்" சார்ந்த இரு நூல்களைப் பரிசாக கொடுத்தான். 
இந்தத் தொடக்கம் நட்பாக மாறியது; வளர்ந்தது. 
ஒரு நாள் காந்தியிடம் வந்த ஸ்மட்ஸ், நான் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியையும், ஓரு வருத்தமான செய்தியையும், கொண்டு வந்துள்ளேன் என்றான்.
மகழ்ச்சி எது? வருத்தம் எது? என்று கேட்டார் காந்தி.
இன்று உங்களுக்கு
விடுதலை. இது மகிழ்ச்சியான செய்தி.
ஆனால், உங்களைப் பிரிய
என்னால் முடியவில்லை.
இது வருத்தமான செய்தி என்றான்
ஸ்மட்ஸ்.
காந்தி சொன்னார்,
"நானும் உங்களுக்கு
ஒரு பரிசு தருகிறேன்; என் நினைவாக வைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி,
தான் சிறையில் தைத்த பூட்சை அவரிடம் கொடுத்தார். 
ஆவலோடு அணிந்து பார்த்த ஸ்மட்ஸ் கேட்டான், 
"இவ்வளவு
துல்லிமாகத் தைக்க, என் கால்களின் அளவு எப்படிக் கிடைத்தது" 
என்று கேட்க,
சிரித்தபடி காந்தி
தனது மார்புத் துண்டை அகற்றினார்; 
ஆரம்பத்தில்
ஸ்மட்ஸ் காலால் உதைத்தபோது ஏற்பட்ட வடுக்கள் அங்கு இருந்தன.
"இந்த வடுக்களை
அளந்துதான் தைத்தேன்" என்று காந்தி சொன்னார்.
"தடால்" என்று சத்தம்;
ஸ்மட்ஸ் கீழே விழுந்து காந்தியின் கால்களைப் பிடித்துக்
கதறினான்.
"நான் மிருகம்! கொடிய, கேவலமான, மிருகம்!!
என்னை மன்னித்து விடுங்கள்.
இனி யாரையும்
அடிக்க மாட்டேன்" என்றார். 
ஒரு நிமிடத்தில்,
ஒரு கொடிய மிருகம்,
மென்மையான
மனிதனாக மாறியது.
"கல்லையும் கனியாக மாற்றலாம்" என்று இதைத்தான் சொன்னார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. 
ஸ்மட்ஸ் சத்தியம் செய்தான்.
"இந்த பூட்ஸ்தான்
இனி எனக்குக் கடவுள்;
இதை மட்டுமே வணங்குவேன்" அணியமாட்டேன் 
என்று சொல்லி அந்த பூட்சை தன் பூஜை அறையில் வைத்து அப்படியே 
வணங்கினான்.
*"நாம் நினைத்தால், யாரையும் மன்னிக்கவும் முடியும். மாற்றவும் முடியும்".*
மன்னிக்கின்ற மனம் தான் மனிதனை மகாத்மாவாக மாற்றும்.

அஞ்சல்துறையின் சிறப்பு ஆதார் முகாம்

அஞ்சல்துறையின் சிறப்பு ஆதார் முகாம்: பிப்.22 முதல் 27 வரை நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு
Published: 12 Feb, 22 07:15 

சென்னை: இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு ஆதார் முகாம் வரும் 22 முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் புதிதாக ஆதார் எடுக்க கட்டணம் கிடையாது. ஆதார் திருத்தம் செய்ய மட்டும் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், ஆதார் அட்டையில் பிறந்த தேதி மாற்றம், முகவரி மாற்றம், செல்பேசி எண் சேர்த்தல் மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்.

இந்த சேவைகளைப் பெற வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்தகம், பான்கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றின் அசல் ஆவணத்தைக் கொண்டு வர வேண்டும்.

இதுகுறித்து, மேலும் தகவல் அறிய அருகில் உள்ள அஞ்சல் ஆதார் சேவை மையம் மற்றும் அஞ்சல் அலுவலகத்தை அணுகலாம் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் உப்பு கரிப்பது ஏன்?:

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் உப்பு கரிப்பது ஏன்?: 12 கி.மீ., தூரம் வரை கடல் நீர் உட்புகுந்தது கண்டுபிடிப்பு துாத்துக்குடியில், 12 கி.மீ., துாரம் வரை கடல் நீர் ஊடுருவியுள்ளதே, அங்கு நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு முக்கியமான காரணம்,'' என, வ.உ.சிதம்பரம் கல்லுாரியின் நிலத்தியல் துறை உதவிப் பேராசிரியர் சே.செல்வம் தெரிவித்துள்ளார்.

கடந்த 1985 முதல் நடைபெற்று வந்த பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில், இந்தக் கருத்தை, இவர் தெரிவித்துள்ளார். பெருநிறுவனங்கள் வெளியிடும் நீர் கழிவுகளாலேயே, துாத்துக்குடியின் நிலத்தடி நீர் மாசுபட்டது என்று முன்பு கூறப்பட்டது. பேராசிரியர் செல்வம் கூறியதாவது:கடல்நீர் அருகில் உள்ள நிலத்தில் ஊடுவுவது என்பது, கடலோரப் பகுதிகள் அனைத்திலும் காணப்படும் பிரச்னை தான். துாத்துக்குடியிலும் இதுதான் நடைபெற்றுள்ளது.

1985 முதல் நடைபெற்று வந்த பல்வேறு நிலவியல் ஆய்வு முடிவுகள், இதற்கு ஆதாரமாக விளங்குகின்றன. கடந்த 2010 முதல் நானே இந்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறேன். இதில் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது.துாத்துக்குடியின் நிலத்தடி நீர் உப்பு கரிக்கிறது, அதனைக் குடிநீர்த் தேவைகளுக்குப் பயன்படுத்த முடியவில்லை என்ற குறைபாடு சொல்லப்படுகிறது.

இதற்கு முதன்மையான காரணம், கடல்நீர் படிப்படியாக துாத்துக்குடி நிலத்தில் ஊடுருவுவது தான். பத்தடி தோண்டினாலேயே உப்பு நீர் தான் கிடைக்கும் வெல்லப்பட்டி, புதுார் பாண்டியாபுரம், முள்ளக்காடு, தாளமுத்து நகர், முத்தையாபுரம் போன்ற பகுதிகள், கடலுக்கு அருகே இருப்பதால், இங்கேயெல்லாம் நிலத்தடி நீர் இன்னும் உப்பாக இருக்கும். கடல் நீர் ஊடுருவல் படிப்படியாக நடந்திருக்கிறது. 1993ல் கடலில் இருந்து 1.5 கி.மீ., துாரம் வரை ஊடுருவிய கடல் நீர், 2007ல், 5 கி.மீ., வரை;- 2011ல், 6 கி.மீ., வரை; 2014ல் 8 கி.மீ., துாரத்திற்கு

Sunday, February 13, 2022

Tata punch cng release date ?

Tata punch cng


Tata punch cng release date Estimate Launch: Aug - Sep 2022

Which district is busy in Tamilnadu?

Coimbatore

Fast growing to become a world-class city with Metro train and air connectivity to the international destinations. Great weather with friendly culture. Coimbatore Shines 

Saturday, February 12, 2022

குகையில் தானாய் தோன்றிய சிவன் வடிவம்*



*குகையில் தானாய் தோன்றிய சிவன் வடிவம்*..

 குகை முழுக்க மர்மங்கள் ! எங்கு தெரியுமா

 - பொதுவாக சிவ பெருமானின் லிங்க வடிவமே பல இடங்களில் சுயம்புவாக தோன்றியுள்ளதை நாம் பார்த்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒரு குகையில் சிவபெருமானின் முழு வடிவமும் சுயம்புவாக தோன்றி உள்ளது. அது மட்டுமா இன்னும் பல கடவுள் வடிவங்களும் சுயம்புவாக தோன்றி பலரையும் ஆச்சர்யப்பட வைக்கிறது. வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில், பெளனி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ரன்சூ எனும் மலை கிராமத்தில் அமைந்துள்ளது சிவகோரி(சிவன் குகை) என்னும் மலை குகைக்கோயில். இந்த குகைக்குள் சிவபெருமான் தியான கோலத்தில் இருப்பது போல ஒரு சுயம்பு வடிவம் உள்ளது. அதோடு இல்லாமல் பார்வதி தேவியின் உருவம், நந்தி, விநாயகர், முருகன் என பல தெய்வ உருவங்களும் சுயம்புவாக தோன்றியுள்ளது. - 

 - சுமார் 200 மீட்டர் நீளம் உள்ள இந்த குகை, ஒரு மீட்டர் அகலமும் மூன்று மீட்டர் உயரமும் கொண்டது. உடுக்கை வடிவில் அமைந்துள்ள இந்த குகையில், சிவன் சிலைக்கு மேல் எப்போதும் நீர் சொட்டிக்கொண்டிருக்கும் அதிசயம் நிகழ்கிறது. அந்த நீர் எங்கிருந்து ஊற்றெடுத்து எப்படி சரியாக சிவன் உருவத்திற்கு மேல் மட்டும் சொட்டுகிறது என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை. இந்த குகையில், காமதேனு, சுதர்சன சக்கரம் போன்றவையும் தோன்றியுள்ளன. குகையின் மேற் பகுதி பாம்பு தோல் போல உள்ளது. இந்த குகையில் முப்பத்து முக்கோடி தேர்வர்களும் வாசம் செய்வதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. - 
 - இந்த குகையில் இருந்து அமர்நாத் குகை கோயிலிற்கு செல்லும் வழி ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது. பாரதப்போர் முடிந்து, கிருஷ்ண பரமாத்மா தன் உலக வாழ்வை முடித்துக்கொண்ட பிறகு, பாண்டவர்கள் சொர்கத்திற்கு செல்ல முடிவெடுத்த போது இந்த வழியை தான் தேர்ந்தெடுத்தனர் என்று கூறப்படுகிறது. இந்த குகை ஆரம்பத்தில் பெரிதாகவும் போக போக குறுகலாகவும் அமைந்துள்ளது. பல அற்புதங்கள் நிறைந்த இந்த குகைக்குள் செல்வதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இந்த குகைக்குள் சென்ற சிலர் மீண்டும் திரும்பவே இல்லை என்றும் கூறப்படுகிறது. பாதுகாப்பு கருது அரசாங்கம் இந்த குகைக்குள் செல்ல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையும் படிக்கலாமே: சிவ லிங்கத்தில் இருந்து பீறிட்டு வந்த நீர்- ஆச்சர்யத்தில் உறைந்த மக்கள் கடந்த 2003 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை இந்த குகை பெரிதாக பிரபலம் கிடையாது ஆனால் அதற்கு பிறகு இந்த குகையை காண பலர் கூட்டம் கூட்டமாக வர ஆரமித்தனர். 2016 ஆம் ஆண்டில் மட்டும் இங்கு 20 லட்சம் பேர் வந்துள்ளனர். மகா சிவராத்திரி திருவிழா இங்கு பிரபலம் என்பதால் அந்த நாளில் இங்கு பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவதுண்டு. - 

குருவாயூர் அப்பனின் நாராயணியம் உருவான அருமையான வரலாறு....

 குருவாயூர் அப்பனின் நாராயணியம் உருவான அருமையான வரலாறு....

அந்த காலத்தில் எந்த நோய்க்கும் நாட்டு வைத்தியம் தானே . மந்திரத்தில் வியாதி குணம் ஆனவர்களும் உண்டு. பத்தியத்தில் வியாதி குணமாகும். கோவில்களில் மண்டல விரதமிருந்து பெற்ற ஈஸ்வர பிரசாதமும் மருந்தாக வியாதி நிவாரணம் செய்திருக்கிறதே.

மலையாள தேசத்தில் ஒரு ஆச்சார நம்பூதிரி குடும்பம். அதில் ஒருவருக்கு உடலில் பெரும் வாத நோய் கண்டது. அந்த நம்பூத்ரி கல்விமான். உயர்ந்த கௌரவமான மதிப்பான குடும்பம்.  

கர்மா அவருக்கு இப்படியொரு வியாதி. எங்கெங்கோ மருத்துவர்களிடம் அலைந்தும் பயனில்லை. கொஞ்சம் பூஸ்திதி உண்டு.

ஒரு நாள் அவர் வேலைக்காரனை கூப்பிட்டு ''ஏ குட்டா, உடனே போ. யாரோ ஜோசியர் ஊருக்கு வந்திருக்கிறாராம். பல வியாதிகளுக்கு அவரிடம் மருந்து இருக்கிறதாம். உங்கள் உடம்பை பற்றி கேட்கக்கூடாதா என்று தெரிந்தவர்கள் என்னிடம் சொல்கிறார்கள்.

 என்னால் நடக்க முடியவில்லை. நீ அவரைப் பார்த்து என் நிலைமையைச் சொல். அவரிடம் ஏதாவது மருந்து வாங்கி வா'' என்று கோபாலனை அனுப்பினார்.

அவர் வேலைக்காரன் கோபால குட்டன் ஜோஸ்யரிடம் சென்றான். 

வேலைக்காரன் விவரங்களை சொல்லி ஜோசியர் என்ன சேதி சொன்னார் என்று அறிந்துகொள்ள ஆவலுடன் பட்டத்திரி என்கிற வியாதிக்கார நம்புதறி காத்திருந்தார். ஏன் அவன் இன்னும் வரவில்லை?

சற்றைக்கெல்லாம் அந்த வேலைக்காரன் அலறி அடித்துக் கொண்டு அவரை நோக்கி ஓடி வந்து விட்டான். அவனைக் கண்ட பட்டத்ரி

''என்னப்பா ஆயிற்று? எனக்கு ஏதாவது நிவாரணம் உண்டு என்று ஜோசியர் சொன்னாரா? ''

'' ஐயா, அவர் உங்களுக்கு வியாதி குணமாகும். கண்டிப்பாகப் பரிகாரம் இருக்கிறது'' என்று கூறினார்.

அதுவும் ஒரே ஒரு பரிகாரம் செய்தால் போதும் என்றும் கூறினார். ஆனால் அதற்குப் பிறகு அவர் சொன்ன பரிகாரம் தான் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது''

''அப்படி என்ன ஜோசியர் சொல்லி விட்டார்?''

கோபாலன் ஜோதிடர் சொன்ன விவரமெல்லாம் சொல்லி ''புனிதமான க்ஷேத்ரமான குருவாயூரில் நீங்கள் மீனை நாக்கில் வைத்துக் கொண்டு பாடினால் வியாதி குணமாகுமாம்'' என்றான்.

''குருவாயூர் கோயிலில் ஒரு சின்னக் குழந்தை அசுத்தம் செய்து விட்டாலே மூன்று மணி நேரத்திற்குக் கோயில் கதவை மூடி புண்யாகவாசனம் செய்துவிட்டுத்தான் பிறகு திறப்பார்கள். 

அப்பேர்ப்பட்ட பெருமை மிகுந்த கோயிலில், உங்களை மீனை நாக்கில் தொட்டுப் பாடச் சொல்கிறார்.

அப்படிச் செய்வதற்கு நீங்கள் மேல்புத்தூரிலேயே உங்கள் வாத ரோகத்துடன் இருக்கலாம்.

 நானே உங்களைப் பார்த்துக் கொள்கிறேன். இந்த ஜோசியர் இப்படிச் சொல்லுவார் என்று தெரிந்திருந்தால் நான் போயே இருக்க மாட்டேன்.

நான் ஏன் தான் அந்த ஜோசியரிடம் போனேனோ?'' கோபால குட்டன் அழாத குறையாக சொன்னான்.

பட்டத்திரி யோசித்தார். அவருக்கு சிரிப்புவந்தது. ஜோசியர் கூறியதன் உட்பொருள் புரிந்தது.

மனம் சந்தோஷம் அடைந்தது. ''கோபாலா, வாடா, நாம் இன்றே குருவாயூர் போகணும். பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கோ''

''ஏய், இதென்ன அக்கிரமம். நான் வரமாட்டேனாக்கும்'' என்றான் கோபாலன்

. உங்களையும் போக விட மாட்டேன். அதெப்படி நீங்கள் குருவாயூர் க்ஷேத்ரத்தில் கோவிலுக்குள்ளே போய் அனாசாரம் பண்றது. 

நான் ஒப்புத்துக்க மாட்டேன். 

உங்களுக்கு வேணா எப்படியாவது வியாதி குனமாகாதா என்று இப்படி செய்ய பிடிக்கலாம். அந்த பாபத்துக்கு நான் துணை போக விரும்பலே.'' ரொம்ப கோபத்துடன் கோபாலன் கத்தினான்.

பட்டத்திரி என்ன சமாதானம் பண்ணியும் கோபாலன் கோபம் அடங்கவில்லை. '' ஜோசியன் சொன்னதுக்கு வேறே அர்த்தம்டா கோபாலா'' என்று திருப்பித் திருப்பி சொல்லி கடைசியில் கோபாலன் ஒரு வழியாக அமைதியானான்.

''ஜோசியன் சொன்னது நீ புரிஞ்சிண்ட மாதிரி இல்லே. அதற்கு அர்த்தம் வேறே. 

''மத்ஸ்யம் தொட்டுப் பாடணும்'' என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? சாதாரண மீன் என்று நீ ஏன் நினைக்கிறே? 

பகவான் குருவாயூரப்பனின் தசாவதாரத்திலே முதல் அவதாரம் மத்ஸ்ய அவதாரம். அவர் மிகவும் இஷ்டப்பட்டு எடுத்த அவதாரமும் மத்ஸ்ய அவதாரம்தான்.

''மத்ஸ்யம் தொட்டு'' என்றால் மத்ஸ்ய அவதாரத்திலிருந்து தொடங்கி தசாவதாரம் பத்தையும் அவர் என்னைப் பாடச் சொல்லி இருக்கிறார். 

அதனால் நான் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவதாரங்களைப் பற்றி குருவாயூரில் பாடப் போறேன்

. நீ என்ன பண்றே. என்னை இப்பொழுதே குருவாயூருக்கு அழைத்துச் செல்.'' அப்பாடா, கடைசியில் சுலபமாக வாத நோய் குணமாக ஒரு பரிகாரம் கிடைத்ததே என்ற சந்தோஷம் அவருக்கு.

''ஒ, நான் ஒரு முட்டாளாக்கும் . இப்படி ஒரு அர்த்தமோ இதுக்கு. அதுவும் நம்பூதிரி, அதுவும் குருவாயுரப்பன் கோவில்லே உள்ளே மீனை வாயில் வைத்துக்கொண்டு............'' என்று அந்த ஜோசியன் சொன்னதை வேறே மாதிரி புரிஞ்ஜிண்டுட்டேன். நம்பிவிட்டேன் . அதாக்கும் கோபம் வந்துது. ''

பட்டத்திரிக்கு இன்னுமொரு சந்தோஷம் என்ன வென்றால் அவருடைய குரு கற்றுக் கொடுத்த சமஸ்கிருத மொழியில் பாட அந்த பகவானே நம்மைப் பணித்திருக்கிறார் என்று. 

அவர் கண்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தது.. அந்த குருவாயூரப்பனைப் பாடப் பாட , நம் ரோகம் நிவர்த்தி ஆகும் என்று நினைத்ததுமே மனம் ஆனந்தக் கூத்தாடியது. பகவானின் பெருங் கருணையை எண்ணி மனம் பரவசம் அடைந்தது.

''நாராயண பட்டத்திரிக்கு எந்த மருந்திலும் குணமாகாத வாத நோய், வெறுமே பாட்டுப்பாடுவதால் மட்டும் குனமாகப்போகிறதா என்ன ? '' என்று ஏற்கெனவே நொந்து போயிருந்த அவர் குடும்பம் ,உறவினர்கள் அவநம்பிக்கையுடன், வெறுப்புடன், வேறு வழியில்லாமல் அவர் குருவாயூர் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்தனர்.

நடக்க முடியாதே பட்டதிரிக்கு. ஒரு பத்துப் பதினைந்து பேர் அவரை ஒரு பல்லக்கில் தூக்கி வைத்துத் கொண்டு குருவாயூர் சென்றனர். ''எப்போ குருவாயூர் வரும், எப்போ நாராயணனைப் பார்ப்போம்'' --- பட்டத்ரியின் மனம் பல்லக்கை விட வேகமாகச் சென்றது. 

குருவாயூரப்பனின் தரிசனத்திற்காக மனம் ஏங்கியது. மனத்தில் இருந்த பயம் விலகியது. 

இந்த ரோகத்தால் இனி நம்மை ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் குட்டிக் கிருஷ்ணன் நம்மைப் பார்த்துக் கொள்வான். 

நாளைக் காலை நிர்மால்ய தரிசனத்தின்போது நாம் அந்த குருவாயூரப்பன் சன்னதியில் இருப்போம்'' என்று எண்ணிக் கொண்டார்.

அடுத்த நாள் விடியற்காலையில் அவர்கள் குருவாயூர் சென்றடைந்தனர். 

அவரை நாராயண சரஸில் ஸ்நானம் செய்ய வைத்தனர். '' ஆஹா என் பகவானே ஸ்நானம் செய்த குளமாச்சே இது ? இதில் ஸ்நானம் செய்ய நாம் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்'' -- அவர் மனம் துடித்தது. 

புது வஸ்த்ரம் உடுத்தினர். அவரை தூக்கிக் கொண்டு கருடரை வணங்கி, பின் பிரதான வாயிலைத் தாண்டி கொடிக் கம்பத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தின் சிறிய வாயில் நுழைந்தனர்.

தினமும் காலையில் மூன்று மணிக்கு நிர்மால்ய தரிசனத்திற்கு வைகுண்டத்திலிருந்து அந்தர்யாமியாக (கண்ணுக்குத் தெரியாமல்) வந்து குருவாயூரப்பனை தொழுது செல்லும் முப்பத்து முக்கோடி தேவர்கள், அனைவரும் அவனைத் தொழ வருவார்களே. அவர்களில் ஒருவராக பட்டத்திரியும் உள்ளே நுழைந்தார். 

இவரைக் கண்ட தேவர்கள், இவரால் நாராயணியம் என்னும் மாபெரும் க்ரந்தம் ஒன்று பின்னால் உருவாகப் போகிறது என்பதை உணர்ந்து மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.

குருவாயூரப்பனின் தரிசனம் ஒரு விநாடி நேரமாவது கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் பக்தர்களுக்கு நடுவே பட்டத்திரியும் உள்ளே நுழைந்தார். 

அப்பொழுது அவரைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் அங்குள்ள திண்ணையைக் கண்டனர்.

பகவானுக்கு வலப் பக்கம் தமக்கு இடப்பக்கம் உள்ள அந்தத் திண்ணையில் அவரை அமர வைத்தனர்.

 பட்டத்ரி முதன்முறையாக குருவாயூர் வருகிறார். அவர் இதற்கு முன் குருவாயூரப்பனைப் பார்த்தது இல்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறார். 

அவரது உடல் பரவசத்தால் சிலிர்த்தது. சாதாரண மானிடனான என்னை அந்த பகவானின் கருணையன்றி வேறு எது இங்கு அழைத்து வரமுடியும்? 

இவரது திவ்ய ஸ்வரூபத்தைக் காண கண் கோடி வேண்டுமே? எத்தனை அழகு? எவ்வளவு தேஜஸ்? இப்பேர்ப்பட்ட அழகு வாய்ந்த இவரைப் பாட என்னால் முடியுமா? அதற்கு நான் தகுதி உடையவனா? அந்த பகவான் என்னை ஏற்றுக் கொள்வானா? அவர் என்னையும் தன் சரணாரவிந்தங்களில் சேர்த்துக் கொள்வானா? இப்படி பட்டத்ரி மனத்திற்குள் ஆயிரம் கேள்விகளை எழுப்பிக் கொண்டே அந்த குருவாயூரப்பனைக் காணத் துடிக்கிறார் பட்டத்திரி.

அந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்டு, '' என் கண்ணா'' என பக்தியுடன் கதறினார். சப்தம் பக்தியோடு வெளிவந்தது. அவரது கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. குருவாயூரப்பன் அவருக்கு செவி சாய்த்தானா?

பட்டத்ரி அந்த மண்டபத்தில் உட்கார்ந்தவுடன் அவருக்கு குருவாயூரப்பனின் தரிசனம் கிடைக்கவில்லை.

 அந்த மண்டபமானது குருவாயூரப்பனுக்கு வலது பக்கத்தில் இருந்தது. பட்டத்ரிக்கோ வாத ரோகம் . தன் கழுத்தைத் திருப்பி குருவாயூரப்பனை தரிசனம் செய்ய இயலவில்லை.

அப்போது பட்டத்ரி அந்த குருவாயூரப்பனை மனதில் நினைத்துக் கொண்டு, ''ஏ உன்னிக் கண்ணா! கிருஷ்ணா! பரந்தாமா!'' என்று கதறுகிறார்.

'' இதோ பார் குட்டி கிருஷ்ணா உன் திவ்ய தரிசனத்தைக் காணாமல் என்னால் எப்படி நாராயணியம் எழுத முடியும் னு நீ நினைக்கிறாய்? அதனால் நீ முதல்லே எனக்கு உன் திவ்ய தரிசனத்தைத் தா'' என்று அழுது கண்ணீர் மல்குகிறார்.

அதற்கு குருவாயூரப்பன் ஒன்றும் பேசவில்லை. வாத ரோகம் உள்ள காரணத்தால் பட்டத்ரி மனம் வருந்தி கண்ணனிடம்

'' சரி கிருஷ்ணா, நீ எனக்கு ஒன்றுமே செய்ய வேண்டாம். என் வலது பக்க கழுத்தில் மட்டுமாவது லேசாக அசைவு வரும்படி செய். கழுத்தையாவது திருப்பி உன்னைப் பார்க்க அனுகிரகம் செய். 

நான் இப்போ தான் முதன் முதலில் குருவாயூர் வந்திருக்கிறேன். இதற்கு முன் உன்னைப் பார்த்தது கூட கிடையாது. என் காதால் மட்டுமே இதுவரை உன் புகழைக் கேட்டிருக்கிறேன். 

உன் சௌந்தர்ய ரூபத்தைப் பார்க்காமல், உன் மேனி அழகைக் காணாமல், நீ சூடி இருக்கும் ஆடை, ஆபரணங்களைக் காணாமல், உன் தேஜோமய திவ்ய சொரூபத்தைக் காணாமல், கருணா கடாக்ஷத்தைக் காணாமல் நான் எப்படி அப்பா உன் பெருமையைப் பாட முடியும்? 

உன் புராணமாகிய நாராயணியத்தை, நான் எதை நினைச்சு எழுத முடியும்? நீயே சொல்லு, அதனால் தான் கேட்கிறேன் நீ உன் தரிசனத்தை முதலில் எனக்கு கொடு'' என்று மனம் குழைய கெஞ்சிக் கேட்டார் .

குருவாயூரப்பன் சும்மாவா இருப்பான் ? 

அவனுக்கு நாரயணீயம் வேண்டாமா. அதற்காக தானே இத்தனை வேலை செய்து, அவருக்கு வாத ரோகத்தை வேறு கொடுத்து இழுத்து வந்திருக்கிறான். முதன் முதலில் பட்டத்ரியிடம் பேசுகிறான் .

''நாராயண பட்டத்திரி, நீ நினைக்கிற மாதிரி எல்லாம் என்னால் இப்பொழுது உன் கழுத்தை சரி செய்ய முடியாது. என்றைக்கு நீ இங்கே வந்த காரியம் முடிவடைகிறதோ, அன்றுதான் உன் வியாதி நீங்கும் சரியா ?''

'' அடே, குட்டி கிருஷ்ணா, எனக்கு உன் தரிசனம் எப்போது கிடைக்கும்? ''

'' பட்டத்ரி, நீ உன் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு உன்னுடைய கழுத்தை சாய்த்துதான் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்? 

என் கழுத்தின் ரெண்டு பக்கமும் நன்றாகத்தானே இருக்கிறது. அதனால் என் கழுத்தைத் திருப்பி என்னால் உன்னைப் பார்க்க முடியும்அல்லவா ?. பட்டத்திரி. 

நானே என் தலையைச் சாய்த்து உன்னைப் பார்க்கிறேன். என்று கூறி பாண்டுரங்கனாக மாறி இடுப்பில் கையை வைத்துக் கொண்டு தலையை சாய்த்து பட்டத்ரியைப் பார்த்து, நீ நாராயணியம் பாட ஆரம்பி'' என்று கூறி கிருஷ்ணன் அனுக் ரஹம் செய்கிறார்.

(இப்பொழுதும் குருவாயூர் ஆலயத்தில் 'நாராயண பட்டத்ரி மண்டபத்தில்' உட்கார்ந்து கொண்டு பார்த்தால் நமக்கு அந்த குருவாயூரப்பன் தெரிய மாட்டான். ஆனால் குருவாயூரப்பன் நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து நம்மைக் காணமுடியும்.)

அப்பேர்ப்பட்ட புனிதமான இடமானதால் இப்பொழுது அங்கு ஒரு செப்புப் பட்டயம் வைத்து, 'நாராயண பட்டத்ரி நாராயணியம் எழுதிய இடம்'' என்று எழுதி வைத்திருக்கின்றனர். 

சாட்சாத் அந்த குருவாயூரப்பனே, பட்டத்ரி நாராயணியம் எழுதி முடித்தவுடன், ''மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி , இந்த ஊரில் உள்ள எல்லா இடமும் எனக்குச் சொந்தம். ஆனால் இன்று முதல் இந்த இடம் உனக்கு மட்டுமே சொந்தம். இதற்கு இனிமேல் ''பட்டத்ரி மண்டபம்'' என்று பேர்'' குருவாயுரப்பனே கூறினார்.)

எந்த காவியத்துக்கும் இல்லாத பெருமை இந்த நாராயணியத்திற்கு உண்டு. 

என்ன வென்றால், இந்த நாராயணியம் என்கிற க்ரந்தம் முழுவதுமே நாராயண பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசும் பாவனையில் எழுதப்பட்டுள்ளது.

 இது முழுக்க முழுக்க அவர்களுக்குள் நடக்கும் சம்பாஷணை போல் அமைந்திருக்கிறது.

'' நான் நாராயணியம் எழுத ஆரம்பிக்கட்டுமா? என்று பட்டத்ரி கேட்க,

'' உம். எழுது. நான் கேட்க ஆவலாக இருக்கிறேன்'' என்று குருவாயூரப்பன் கூறுகிறான்.

'' நான் நாராயணியத்தைத் தொடங்க வேண்டும் என்றால் சில பல நிபந்தனைகள் உள்ளன. அவற்றை எல்லாம் நீ பூர்த்தி செய்தால் மட்டுமே என்னால் நாராயணியம் பாட முடியும். இல்லையென்றால் நான் ஊருக்குச் செல்கிறேன்''

ஒரு முக்ய விஷயம். மற்றவர்கள் எல்லாம் தங்கள் வாழ்வில் சில சமயங்களில் தங்கள் இஷ்ட தெய்வத்தோடு பேசியிருக்கிறார்கள். 

ஆனால் குருவாயூரில் பட்டத்ரி நூறு நாளும் தொடர்ந்து குருவாயூரப்பனோடு பேசும் மகா பாக்யத்தைப் பெற்றார்.! 

பேசியது மட்டுமல்ல ஒரு நண்பனாக, தந்தையாக, குழந்தையாக, பணியாளாக என அத்தனை பாவங்களிலும் பேசுகிறார்.

குருவாயூரப்பன் ப்ரத்யக்ஷ தெய்வம்

"ஸ்ரீ குருவாயூரப்பன் திருவடிகளே சரணம்"

அருள்மிகு புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் ஆலயம்

இன்றைய கோபுர தரிசனம் அருள்மிகு புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் ஆலயம்




புதுக்கோட்டை ராஜாகுளக்கரையில் புவனேஷ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.புதுக்கோட்டை நகரின் கிழக்குப்பகுதியில் அமைந்திருக்கும் அருள் மிகு புவனேஸ்வரி அம்மனை தரிசிக்க தமிழகம் முழுவதிலிமிருந்து தினமும் திரளான பக்தர்கள் வருகின்றனர். இக்கோயில் அண்மைக்காலத்தில் உருவானதாகும்.

புவனேஸ்வரி கோவிலுக்கு அதிஷ்டானம் என்று பெயர். 1936ஆம் ஆண்டு முதல் இந்தக்கோவில் இருக்கிறது.

இக்கோயில் தோன்றியது குறித்த ஒரு கதையும் உண்டு. கேரள மாநிலம் திருவாங்கூரில் நேர்மையும் நீதி வழுவாத நீதியரசர் ஒருவர் பணியாற்றி வந்தார். அவர் விசாரணை செய்த ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு கொலையாளி எனத் தீர்க்கமாகத் தெரிந்து சட்டப்படி தண்டைனை வழங்க இயலாமல் போனது. இதனால் மனமுடைந்த நீதிபதி தனது பதவியை துறந்து உலக வாழ்க்கையை வெறுத்து துறவியாகி அவதூதராக நாடெங்கும் சுற்றி வந்தார்.

புதுக்கோட்டைக்கு வந்த அவர் தற்போது புவனேஸ்வரி கோயில் அமைந்துள்ள இடத்தருகே தங்கினார்.
இதன் பிறகு பதினாறு ஆண்டுகள் கழித்து அவதூதரின் பக்தரான ஸ்ரீ சாந்தனாந்தசுவாமி எனும் ஞானியார் புதுக்கோட்டைக்கு வருகை தந்து ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானம் அருகே புவனேஸ்வரி அம்மனுக்கு ஒரு கோயிலை எழுப்பினார்.

அன்னை புவனேஸ்வரி இங்கு குடிகொண்டுள்ளதால் புவனேஸ்வரி அம்மன் கோயில் என்று தமிழக மக்களால் இத்தலம் அழைக்கப்படுகிறது. கோயிலுக்குள் நுழைந்ததும் நேர் எதிரில் ஜட்ஜ் சுவாமியின் அதிஷ்டானம் தென்படும். அவரை பக்தியுடன் வணங்கி இடது புறம் திரும்பினால் அஷ்டதசபுஜா மகாலட்சுமி துர்காதேவி சன்னதி உள்ளது. அம்பிகை மிக உயரமாக பத்து கரங்களுடன் இன்னருள் பாலிக்கிறாள். 

சற்றே நடந்தால் 18 சித்தர்களை தரிசிக்கலாம். சித்தர்களை அடுத்து நால்வர், 25 தலை கொண்ட சதாசிவர், அபீஷ்ட வரத மகாகணபதி, ஸற்குரு சாந்தானந்த சுவாமிகள், பஞ்சமுக மகா கணபதி, விஸ்வகர்மா, பஞ்சமுக ஆஞ்சநேயர், ஐயப்பன். பாலமுருகன், தெட்சிணாமூர்த்தி, தட்சிணகாளி, காசி விஸ்வநாதர், காவல் தெய்வமான பொற்பனை முனீஸ்வரர், கைவல்யானந்த சுவாமி, லட்சுமி நரசிம்மர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் இங்கு நடைபெறும் யாகம் பக்தர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றதால், நாடு முழுவதுமிருந்து பக்தர்கள் அச்சமயம் இங்கு கூடுகின்றனர்.

புதுக்கோட்டை கீழ ஏழாம் வீதியில் இத்தலம் அமைந்துள்ளது. பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., தொலைவிலுள்ள இத்தலத்தை ஆட்டோக்களில் அடையலாம்.

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...