Tuesday, October 17, 2023

Tourisam places Thoothukudi

Tourisam places 


Thoothukudi District Tourisam Places

 

 

 

Ayyanarsunai

 


It is 10km from Tiruchendur and 40 kms from Tirunelveli . A natural water gushes out from the spring at this place. A temple dedicated to Village deity It is a good picnic / excursion centre.

 

 

Ettayapuram 



Ettayapuram is the birth place of the revolutionary poet Subramaniya Bharathiyar and is located 76 kms from Tirunelveli and 22 kms from Kovilpatti and 35 kms from Thoothukkdi. His home now became a monument. Umarupulavar Dhansha is also located here.

 

 

Kazhugumalai


Kazhugumalai Jain Temple is 60Km from Tirunelveli and 21Km from Kovilpatti. This is basically a Jain temple where we can see images of Adinatha, Neminatha Mahaveera Parvanatha, Bahubali . There is also a monolithic Temple called Vettuvan Kovil. This is the only one of the monolithic Pandya Temple that still survive.

 

Kulasekaranpattinam



Kulasekaranpattinam is situated on the way to Kanniyakumari from Tiruchendur. It is 20 kms from Tiruchendur and 65 kms from Kanyakumari. This village is famous for Mutharaman Temple, which is located on the shore of Bay of Bengal. This temple is nearly 150 years old. The Dhasara Festival is celebrated in a grand scale every year during October. Folk dance artists from throughout Tamilnadu perform variety of programmes.

 

Panimaya Matha Church



Thoothukudi is traditionally known for pearl fishing and shipping activities, production of salt and other related business. This is a port city in the southern region of Tamilnadu. This is a natural port, from this place freedom fighter V.O.Chidambaranar operated the Swadeshi shipping company during the British rule. Now Thoothukudi is a bustling town with business activities.

Panimaya Matha Church (Shrine Basilia of Our Lady of Snow”) is a famous church built by the Portugese in 1711. Every year on 5th August the church festival is conducted in a grand manner which attracts a large number of devotees from all faiths.

 

Adichanallur



Adichanallur is 20km from Tirunelveli on the way to Tiruchendur. From an Archaeological point of view, this place has a glorious past and it is located on the banks of river Tamirabarani. It is assumed that, in ancient times a civilized habitation flourished here. Urns (burnt-clay vessels which were used for burying dead bodies of the very old people) small mud vessel were found near the river Tamirabarani and they are supportive evidence, for the civilization. This place is now under the supervision of Tamilnadu State Archaeological Department.

Kayalpattinam



Kayalpattinam was a famous port next to Korkai in the 12th and 13th Centuries, situated 30 kms from Thoothukudi and 18 kms fromTiruchendur between Thoothukudi and Tiruchendur highway. It has a fine beach on Bay of Bengal.

Kayathar



Kayathar, is situated about 25 kms from Tirunelveli on the way to Madurai. Kattabomman, one of the earliest Freedom fighters of who fought against the British rule in India, was hanged by the British in1799 at this place. A memorial has been built here by the Tamilnadu government to commemorate the memory of this great freedom fighter.

Korkai



Korkai ancient port city of Pandian dynasty in the Sagam period is located on the main road from Tiruchendur to thoothukudi . It is 29km from Tiruchendur . The Tank of Korkai is said to be korkai kulam with a extent 250 acres. An ancient Vettrivelamman Temple is also situated here. Many a number of tourists visit this temple.

 

Manapad



Manapadu is a Coastal village situated at 70 kms from Tirunelveli and 18 kms from south of Tiruchendur. This place was visited by St. Francis Xavier in 1542. The Holy Cross church built on a cliff attracts thousands of pilgrims throughout the year and during the month of festival (1st September to 14th September) thousand numbers of tourists assembles here

Meignanapuram



It is 13km from Tiruchendur and said to be an ancient village. The Pari Pauvlin Church here was built in 1847. It is 110 feet long, 55 feet wide with steeple in the front soaring into the sky a height of 192 feet. This is one of the biggest churches with the tallest steeple in India.

 

Navakailayam





Nine Lord Siva shrines highlight as Navagraghas which gives health and wealth to the pilgrims. Among the nine temples five are situated in Thoothukudi district and rest of them in Thirunelveli district. The following Temples referred as Navakailayam shrines (Nine Shiva Temples)

Papanasam

It is 45km from Tirunelveli. Presiding deity of the temple is Pabavinasar alias Kailasanatha and Mother goddess is Ulagammai A good picnic spot a large number of tourists. Agasthiar water falls is 2 kms from here.

Cheranmahadevi

It is 22km from Tirunelveli and is located on the bank of river Tamirabarani. presiding deity of the temple is Sri Ammainathar alias Kailasanathar and Goddess Avudinayaki. Frequest city buses available from Tiruenlveli Junction.

Kodaganallur

It is 15km from Tirunelveli on the way to Cheranmahadevi and the temple is located near Nadukallur village. Presiding deity is Kailasanathar and Goddess Sivakamiammai . City buses available from Tirunelveli Junction Bus stand.

Kunnathur

It is 2km from Tirunelveli Town railway station. And also very near to Thiruvengadanathapuram Kunnathaur is located in small hillock. Presiding deity is Kothai Parameswaran. Goddess Sivakamasundari.

Murappanadu

It is 17km from Tirunelveli and 40km from Thoothukudi on the National Highways. It is also situated on the banks of river Tamirabarni. Presiding deity is Kailasanathar Goddess Sivakamiammal.

Srivaikundam

It is 30km from Tirnelveli and 40km from Thoothukudi it is also located on the river Tamirabarni. Presiding deity is Kailasanathar Goddess Sivakamiammai. The first Navathirupathi temple is located here.

Thenthirupperai

It is 38km from Tirunelveli on the way to Tiruchendur. Presiding deity is Kailasanathar .Goddess Allakiyaponamal One of the Navathrupathi temple also located here.

Rajjapathi

It is 38km from Tirunelveli on the way to Tiruchendur near Thenthirupperai. Presiding deity is Kailasanathar Goddess Alagiya ponnamal and Sivakamiammai.

Senthapoomangalam

It is 20km km from Thoothukudi on the way to Tiruchendur near Athoor and Ponnakayal. Presiding deity is Kailasanathar Goddess Sivakami Ammai. City bus available from Thoothukudi Old bus stand.

 

 

 

 

 

 

Navathirupathi



 

The nine Vishnu Temples are located very close to one another. They are all in Thoothukudi District. The Vaishnava shrines are having an interesting legend. The shrines are notable for nine stone carvings and temple architecture.

Panchalankurichi



Panchalankurichi is a small historic village located 25km from Thoothukudi and 55 km from Tirunelveli. From here the Great warrior Kattabomman popularly known as “ Veerapandiya Kattabomman” raised his voice against the British regime in the 17th century AD.

The existing Memorial Fort was constructed in 1974, by the government of Tamilnadu. The Memorial hall, has beautiful paintings depicts the heroic deeds of the saga which give a good idea about the history of the period. Sri Devi Jakkammal Temple, the hereditary Goddess of Kattabomman, is located in the fort complex. Cemetery of British soldiers can also be seen near the fort. The rest of the old fort is protected by the Department of Archaeology. City bus services available from Thoothukudi. Kattabomman Festival is celebrated on January 15 and May second week every year which attract thousands of people. Small bullock cart race is the special attraction during festival.

Tourist can visit the fort from 8.A.M to 1 P.M. and 2 P.M. to 6 P.M on all days. The entrance fee for adult Rs.2 and Child Rs.1. A Tourist Rest house is available here for the benefit of the Tourists.

Thiruchendur



Thiruchendur is one of the major pilgrim centres of South India. This Temple is situated at a distance of 40 kms from Thoothukkudi. The sea-shore temple is dedicated to Lord Muruga, is one of the six abodes of Lord Muruga. (Arupadi Veedu).The nine storied tier temple tower of height 157 feet belongs 17th century AD. Visiting Valli Cave, taking sea-bath, and bathing in Nazhikkinaru are treated as holy one. It is well connected by bus service to all over Tamilnadu and train services to Tirunelveli and Chennai.

 

 

மணிமுத்தாறு அணை







 வழிகாட்டுதல்

குற்றாலத்திலிருந்து 48கி.மீ தொலைவில் உள்ளது. மலைமீது அருவி இருக்கிறது. இங்கு குளிக்கும் வசதியுள்ளது. ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வீழ்கிறது. அருவியின் உயரம் 25 அடி. குளிக்கும் இடத்தில் அருவியின் உயரம் 17அடி அருவிக்கு கீழே 80அடி ஆழத்துக்கு நீச்சல் குளத்தைப் போன்ற அமைப்புள்ளது. இங்கு மணிமுத்தாறு அணையையும் காணலாம். பெரிய மணிமுத்தாறு அணையில் பூங்காசிலைகள்மாந்தோப்புதென்னந்தோப்புசெயற்கைக்குகைகோழிப்பண்ணைமீன்பண்ணைவிதைப்பண்ணை முதலியவை உள்ளன. மலைமீது மாஞ்சோலைத் தோட்டங்களைக் காணலாம். மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி ஓர் அழகு தான்.

 

அகஸ்தியா் அருவி

திருநெல்வேலியிலிருந்து 42கி.மீ தொலைவில் பாபநாசம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. அகஸ்தியர் நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் இந்த நீர்வீழ்ச்சிகள் முனிவரின் அகஸ்தியத்திற்கு முன் சிவன் மற்றும் பார்வதி தோன்றிய இடத்தில் அமைந்துள்ளதாக நம்பப்படுகிறது. பாபநாசம் என்பதன் பொருள் பாவங்களை நிவர்த்தி செய்வது என்பதாகும். இந்த அருவியில் இருந்து விழும் நீரில் மக்கள் குளித்தால் தங்கள் பாவங்களில் இருந்து விடுபடும் ஒரு முக்கிய யாத்ரீக மையமாக இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

வைத்தியநாதர் பதிகம்

இன்று 17 /10/23 செவ்வாய்க்கிழமை   அன்று வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீ வைத்தியநாதர் பதிகம் இன்று 19/1/2021 செவ்வாய்க்கிழமை அன்று பதிவு செய்து வணங்குகின்றோம்.ப
வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீ வைத்தியநாதர் திருவடிகளே சரணம்

ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய

உன்னையன்றி வேறுதெய்வம் உள்ளம் எண்ண வில்லையே
ஓசைகொண்ட தமிழினாலே பாடுவேன் உன் பிள்ளையே
அன்னை, பிள்ளை மழலையிலே அகம் குழைதல் போலவே
அணிய வேண்டும் எனது சொல்லும் ஆதி வைத்தியநாதனே. 1

தேசமெங்கும் கோயில்கள் திறந்து வைத்த வாயில்கள்
தேடும் அன்பர் யார்க்கும் இன்பம் கோடிநல்கும் மூர்த்திகள்
பூசைகொள்ளும் தேவர்கள் யாவையும் நின் கோலமே
போற்றும் என்னை வாழ்விலேமுன் னேற்றுவைத்ய நாதனே 2

ஓதும் நாலு வேதமும் உலாவு திங்கள், ஞாயிறும்,
உகந்த கந்தவேள், சடாயு உண்மை அன்பின் ராமனும்
பாதபூசை செய்யவே பலன் கொடுத்த ஈசனே
பாதிகொண்ட தையலோடு வாழி வைத்ய நாதனே 3

ஆலகால நஞ்சை நீ அமிர்தமாய் அருந்தினாய்
அடித்துவைத்த பன்றியின் இறைச்சியும் விரும்பினாய்
பாலன் நஞ்சு தேடவோ? பன்றிவேட்டை ஆடவோ?
படைத்தபா சுவைத்தருள் பராவும் வைத்ய நாதனே. 4

வாத, பித்த, சிலேட்டுமம் வகைக்கு நூறு நோய்க்குலம்
மனிதராசி அறிகிலாத புதிய நோய் தினம், தினம்
வேதனை வளர்ந்ததன்றி வென்றதோ மருத்துவம்?
மேலும் என்ன கூறுவேன்? கண் பாரும், வைத்ய நாதனே 5

ஆயுர்வேதம் ஆங்கிலம் அமைந்த சித்தவைத்தியம்
ஆனவேறு வகையிலும் அனேகமான பத்தியம்!
பாயும் நோயும் போனதே? பலித்து நன்மை ஆனதோ?
பாவியேன் என் கூட்டத்தோடுன் பாரும் வைத்ய நாதனே. 6

அங்குமிங்கும் ஓடிஎன்ன? அகலவில்லை நோய்களே
ஆடி என்ன? பாடி என்ன? விலகவில்லை பேய்களே
மங்கைபாகன் நீயிருக்க எங்கு செல்வோம் சேய்களே?
மனமிரங்கி அருள்வழங்கு வாழி வைத்யநாதனே. 7

கண்ணில்லாத குருடருக்கும் கண்கொடுக்கும் ஈசனே
கால் இலாத முடவருக்குக் கால் கொடுக்கும் போஜனே
எண்ணிலாத நோயின் கூட்டம் இடமிலாமல் ஓடவே,
என்னுளே எழுந்தருள்வாய் அண்ணல் வைத்ய நாதனே. 8

சிந்தையில் இருந்த நோய் செயல்களால் விளைந்த நோய்
திசுக்குள், தோல், நரம்(பு), எலும்பு, குருதியில் செறிந்த நோய்
எந்த நோயும் போக்குவாய் எதிர்வராமல் ஆக்குவாய்
இசைந்தகந் புரியிலே அமர்ந்த வைத்யநாதனே. 9

நாம, ரூப பேதமற்ற ஞான ஜோதி மூர்த்தியே
நாளும் உன்னை அன்புசெய்து பாடுகின்றேன் வாழ்த்தியே
சாமவேத கீதனே சடாயு போற்றும் பாதனே
தஞ்சம், தஞ்சம், தஞ்சம் என்னைத் தாங்கு வைத்ய நாதனே.
வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீ வைத்தியநாதர் திருவடிகளே சரணம்

டி. எம். சௌந்தரராஜன்

டி. எம். சௌந்தரராஜன்! 

அரை நூற்றாண்டில் 10,000 பாடல்கள் பாடிய டி.எம்.எஸ் அவர்கள்! 

கதாநாயகர்களுக்கு ஏற்ப குரலை மாற்றும் டி.எம்.எஸ்.

65 ஆண்டுகள் அவர் திரையுலகில் தன்னுடைய இசை பயணத்தைத் தொடர்ந்து வந்தவர். தன்னுடைய தனித்துவமான இசைப் பயணத்தில், இவர் செய்த சாதனைக்காக பேரவைச் செம்மல், கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட ஏராளமான விருதுகள் இவருக்குக் கிடைத்துள்ளன.

இது தவிர கலா ரத்னம், கான ரத்னம், அருள் இசை சித்தர், நவரச பவ நளின கான வர்ஷினி, ஞானாமிர்த வர்ஷினி, சாதனை சக்கரவர்த்தி, பாரதிய இசை மேகம், கான குரலோன் போன்ற பட்டங்களும் அவருக்கு ரசிகர்களால் சூட்டப்பட்டது.

டி.எம்.சௌந்திர ராஜனின் இசைப் பயணத்தில் கவிஞர் கண்ணதாசனின் பங்கும் மிகப்பெரிய அளவில் இருந்தது. 
24 வயதில் திரையுலகில் பாடத்துவங்கிய இவர், தன்னுடைய 88வது வயது வரை பாடி வந்தார்.

ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான ’செம்மொழியான தமிழ் மொழியாம்’ என்ற பாடலில், மற்ற இளம் பாடகர்களுடன் இணைந்து டி.எம்.எஸ் பாடியிருந்தார். அதுவே அவர் பாடிய கடைசி பாடல்.

Saturday, October 14, 2023

பகையால் அழிவு வராமல் காக்கும் ஆயுதம்

 எப்போதோ நூலகத்தில் படித்தது..

திருமண நாளன்று மணமகள் வீட்டார் மாப்பிள்ளைக்கு
சீர் வரிசை பொருட்கள் தருவார்கள்.
ஆனால் உண்மையில் சீர் வரிசை யாருக்கு தெரியுமா கொடுக்க வேண்டும் மொழிகளுக்கு எல்லாம் தாயாக விளங்குகிற தமிழ் மொழியை புதுப்பித்து, உயிர்ப்பித்து கொண்டிருக்கிற கொண்டிருக்கிற எழுத்தாளர்களுக்கு தான் சீர் வரிசை கொடுக்க வேண்டுமாம். என்னவோரு மாறுபட்ட சிந்தனை!
இந்த தொழில்நுட்ப உலகத்தில் நாம் மறந்து விட்ட கதாநாயகர்கள் தான் இந்த எழுத்தாளர்கள்.
இவர்களையே ஊக்கப்படுத்தவது ஒவ்வொரு வாசகனின் கடமையும் கூட.
எனவே உங்கள் பகுதியில் நடக்கும் புத்தகத் திருவிழாவிற்கு சென்று ஒரு புத்தகமாவது வாங்கி வாசித்து மகிழுங்கள்.
(நண்பர்கள் யாரேனும் மதுரை புத்தகத் திருவிழாவிற்கு சென்று புத்தகங்கள் வாங்கினால் நீங்கள் வாங்கும் ஒரு புத்தகத்திற்கான தொகையை நானே செலுத்துகிறேன். உங்கள் வாசிப்பு உலகத்தில் நானும் ஒரு
பங்குதாரராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி தான்)
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்..
(பகையால் அழிவு வராமல் காக்கும் ஆயுதம் அறிவு ஒன்று தான்)

ஒரு வினாவிற்கு 10 இமைப்பொழுதுகள்

 *உங்களால் கீழே உள்ள எத்தனை வினாக்களுக்கு விடையளிக்க முடிகிறது என சோதிக்கலாமா?*

*ஒரு வினாவிற்கு 10 இமைப்பொழுதுகள் மட்டுமே.*
*1*. நியூமேரோ யூனோ என்றால் என்ன?
*2.* ஒரு டூயட்டில் எத்தனை பாடகர்கள்?
*3.* டேபிள் ஸ்பூன் எத்தனை டீஸ்பூன் ?
*4.* இந்து புராணங்களில் எத்தனை வேதங்கள் உள்ளன?
*6.* இந்தியாவை விட எத்தனை நாடுகளில் பெரிய பரப்பளவு உள்ளது?
*7.* நீரின் Ph மதிப்பு என்ன?
*8.* சூரிய குடும்பத்தில் எத்தனை கிரகங்கள் உள்ளன?
*10.* எத்தனை மில்லிமீட்டர்கள் ஒரு சென்டிமீட்டரை உருவாக்குகின்றன?
*11.* ஒரு கால்பந்து அணியில் எத்தனை வீரர்கள் உள்ளனர்?
*12.* ஒரு அடி எத்தனை அங்குலங்கள்?
*15.* ஒரு முறை வாகன வரி எத்தனை ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்?
*16.* விண்கல சேவலில் எத்தனை இறகுகள் உள்ளன?
*17.* இந்திய நாணயத்தில் எத்தனை மொழிகள் அச்சிடப்படுகின்றன?
*18.* மகாபாரதத்தில் எத்தனை அத்தியாயங்கள் உள்ளன?
*19.* 2010 இல் இந்தியாவில் எத்தனையாவது காமன்வெல்த் விளையாட்டு நடத்தப்பட்டது?
*20.* டி -20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எத்தனை ஓவர்கள் உள்ளன?
*21.* தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி எத்தனை ஆண்டுகள் கழித்தார்?
*23.* மனித உடலில் எத்தனை ஜோடி குரோமோசோம்கள் உள்ளன?
*24.* அசோக சக்கரத்தில் எத்தனை வரிகள் உள்ளன?
*25.* எம்.எல்.ஏ ஆக தகுதி பெறும் வயது என்ன?

*"வினா எண்களே விடைகள்"*
*நல்லா இருக்குல்ல*

வாய்மை எனப்படுவது யாதெனின்

 இப்படி ஒரு குறளை எழுதியதற்காக வள்ளுவருக்கு ஆயிரம் கோடியில் கூட சிலை வைக்கலாம்.

சமீபத்தில் ஒரு பேருந்து பயணம், ஓட்டுநர் இருக்கைக்கு பின்புறம் உள்ள பலகையில் ஒரு திருக்குறள் ஒன்று எழுதி இருந்ததை பார்த்தேன்.
"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்"
இதன் பொருள் என்னவென்று தேடிப்பார்க்கிறேன்.
. இதன் விளக்கத்தை கேட்டு வியந்து நிற்கிறேன். இதை எல்லோரும் உணர்ந்தால் போதும் நீயா நானா போட்டி இருக்காது, கூட்டணி சண்டைகள் இருக்காது, விவாகரத்துகள் இருக்காது, உலகமே அமைதி பூங்காவாக மாறிவிடும். இதயத்தில் வைக்க வேண்டிய திருக்குறள் இது. இதன் பொருள் இதுதான்
"பிறருக்கு எள் முனை அளவு கூட தீங்கு விளைவிக்காத சொற்களை பேசுவது தான் வாய்மை" என்கிறார்,வள்ளுவர்.
திருக்குறள் எக்காலத்திற்கும் பொருத்தமானது!
திருவள்ளுவர் எப்போதும் போற்றப்பட வேண்டியவர்!

Thursday, October 5, 2023

ஆன்மீக குறிப்புகள் தமிழ் | Aanmiga kurippugal in Tamil


*1. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.*

*2. திருக்கோவிலின் பிரதான வாசல் வழியே தான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.*

*3. அர்ச்சனைப் பொருட்களை இடது கையால்எடுத்துச் செல்லக் கூடாது.*

*4.மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.*

*5. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை, கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.*

*6. எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.*

*7. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது.*
*மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.*

*8. சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது.*

*9. இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.*

*10. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.*

*11. திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.*

*12. ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.*

*13. கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக் கூடாது.*

*14. குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது.*

*15. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும் போது கண்களை மூடிக் கொண்டு வணங்கக் கூடாது.*

*16. பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.*

*17. செவ்வாய் கிழமை, புதன் கிழமை பகல்,வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கக் கூடாது.*

*18. இறந்த முன்னோர்களின் படங்களை (அவர்கள் தெய்வமாகி விட்டிருந்தாலும்) சாமி படங்களுடன் வைத்து வணங்குதல்கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம.*
*தெற்கு திசையை பார்த்தவாறு வைத்து வணங்கலாம்.*

*19. வாழைப்பழம் சாப்பிட்டபின் மோர் சாப்பிடக் கூடாது.*

*20. பூஜை அறையில் தெய்வங்களை தெற்கு பார்த்து வைக்கக் கூடாது.*

*21. புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.*

*22. கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக் கூடாது.*


Tuesday, October 3, 2023

கண்ணனை குருவாயூரில் போய் கண் குளிர, மனதார ரசிக்க வேண்டும்,

குருவாயூரப்பனும் மஞ்சாட்டிகுருவும்
........................
அனைவருக்கும் எனது வினீதம்கூடிய அனேகநமஸ்காரங்கள்

குருவாயூர் கண்ணன் திருவடி காண போனால் ஒரு சடங்கு உண்டு.

"மஞ்சாடி குரு "

இது மலையாள பெயர்,

அதாவது விநாயகர் சதுர்த்தி அன்று களிமண் பிள்ளையார் செய்யும்போது, விநாயகர், கண்களாக பாவித்து சிவப்பும், கருப்பும், கலந்த சிறிய வகை கொட்டை அது,
தமிழில் குன்றிமணி என்றும் குண்டுமணி என்றும் சொல்வார்கள் 

கேரளாவில் இதற்கு மஞ்சாடி குரு " க்கள் என்று பெயர்,

குருவாயூரில், ஒரு பெரிய வட்டமான உருளியில் (பாயாசம் செய்யும் வாய் அகன்ற பித்தளை பாத்திரம் ")
இந்த மஞ்சாடி குரு "என்னும் கொட்டைகளை அந்த உருளியில் போட்டு வைத்திருப்பதை நீங்கள் குருவாயூர் செல்லும்போது காணலாம்!

எதற்காக?

பிறந்த குழந்தைக்கு அன்னமூட்டு, என்கின்ற சம்பவம் அங்கே செய்வார்கள்!

அதாவது மூன்று மாதம் அல்லது ஐந்து மாதம் கழிந்த சிசுவிற்கு முதல்முதலாக
" சோறூட்டு " சடங்கு நடத்தப்படும்,

அதன் பிறகு அந்த குழந்தையின் கைகள் கொண்டு மஞ்சாடி குருக்கள் இருக்கும், உருளியில் சிறிது பணத்தோடு சேர்த்து மூன்று முறை வாரி, அந்த பணத்தையும் சேர்த்து மஞ்சாடி குருக்கள், என்கின்ற கொட்டைகளுடன் போட்டு விடுவார்கள்,

இப்படி செய்யும் பிள்ளைகளுக்கு ஸ்ரீ கிருஷ்ணன் சுபாவங்கள் வரும் என கேரளாவில் ஐதீகம்.

இந்த மஞ்சாடி குருக்கள் " வாரும் ஐதீகத்திற்கு பின்ன்னால் ஒரு சிறுகதை போல் நடந்த சம்பவம் ஒன்று உண்டு,

ஒரு வடக்கன் கேரளாவில், ஒரு குக்கிராமத்தில், ஒரு ஏழை ஸ்த்ரீ ஒருத்தி இருந்தால்,

கண்ணனை  நினைத்து இருந்தாள்!

"கேரளத்து மீரா "

கண்ணனை நினைக்காத நாளில்லையே!!

உண்ணும்போதும்,
உறங்கும்போது,

கண்ணன் தானே,
மாய வண்ணன் தானே!!

விவாஹம் நடக்கவில்லை!
செய்ய வில்லை.!

கண்ணனை குருவாயூரில் போய் கண் குளிர, மனதார ரசிக்க வேண்டும்,

இதுதான்  அந்த ஏழைப்பெண்ணின் லக்ஷியம்,

அந்த காலகட்டத்தில் இன்று போல் வாகன வசதிகள் இல்லாத காலம்,!

நடைபயணம் தான்!!

வருஷங்கள் ஓடியது!

கிழடு தட்டி கிழவி ஆனாள்!

"வ்ருத்த கன்யகா "

ஒரு நாள் கனவில்,

கண்ணன் வந்தான்!!

தன்னை வந்து குருவாயூர்க்ஷேத்ரத்தில் தரிசிக்க சொன்னார்,

எழந்தாள்,

குளத்தில் சென்று குளித்தாள்,

கிழிந்து போயிருக்கும் முண்டையும், மேலாடையையும் அணிந்து,
தெக்கன் நாட்டில் இருக்கும் திருச்சூர், நாட்டிற்கு நடக்க தீர்மானித்தாள் அந்த வ்ருத்த ஸ்த்ரீ,

இப்போது தன் மனம் கவர்ந்த கண்ணனுக்கு காணிக்கையாக என்ன கொண்டு செல்வது?
குஸேலன் போல் யோசித்தாள்!

ஒரு பிடி அவள் வாங்க கூட நம்மிடம் பணம் இல்லையே!

என்ன நினைத்தாளோ! தெரியவில்லை.!

"அந்த மஞ்சாடி மரத்திலிருந்து மஞ்சாடி கொட்டைகளை பறித்து தனது கிழிந்த முட்டில் முறுக்கி கட்டி கொண்டாள்.

கண்ணனை காண!

நடந்தாள்!

நடந்தாள்!

நாற்பது நாட்கள் பசி, பட்டினி யோடு நடந்தாள்,

கடைசியாக  குருவாயூர் போய் சேர்ந்தாள்!
 மகரம் மாஸம் ஒன்றாம் தேதி!

உத்ராயண கால தொடக்கம்!!

சங்கராந்த்ரி.!

இராஜபரணம் காலம் அது!

தை முதல் தேதி!!

அன்று பொதுமக்கள் குருவாயூரானை தரிசிக்க அனுவாதம் இல்லை!

இராஜக்கன்மார்களும் நம்பூதிரிக்கள் மட்டும் அனுவாதம்!

கண்ணனை தரிசிக்க வந்த அந்த பக்தைக்கு எப்படி யாவது இன்றே கண்ணனை காணவேண்டும், என்கின்ற ஆசை!!

யாருடைய அனுவாதமும் கேட்காமல் நேராக க்ஷேத்திரம் நோக்கி, நடந்தாள்,

அந்த நேரம் பார்த்து இராஜக்கன்மார்களும், க்ஷேக்த்ர தந்திரி 'நம்பூதிரிமார்களும் வந்து கொண்டிருந்தார்கள்

அதுவும் யானையின் மேல்!

அந்த பெண் நேராக ஸ்ரீ கோவிலின் அருகே சென்று கொண்டிருந்தாள்!!

" க்ஷேக்த்ராதிபர்கள் "பார்த்து விட்டனர்,

இராஜக்கன்மார்கள் வரும் நேரத்தில் இவள் யாருக்கும் தெரியாமல் எப்படி வந்தாள்!?

கோபம் கொண்ட க்ஷேக்த்ர நிர்வாகிகள் அவளை பலவந்தமாக, கையை பிடித்து இழுத்து நடைக்கு வெளியே கழுத்தை பிடித்து கோபம் கொண்டு, விருத்தஸ்த்ரீ என்றும் பாராமல், தள்ளினர்.

அவள் கையில் துணியில் பொதிந்து வைத்திருந்த,
"மஞ்சாடி கொட்டைகள் " 
தரையில் கொட்டி சிதறியது!

கண்ணகி சிலம்பை உடைத்ததுபோல்!

" பரல்கள் சிதறியதுபோல் "

அதைகண்டு அங்கிருக்கும் க்ஷேக்த்ர நிர்வாகிகள், விழுந்து விழுந்து சிரித்தனர்!

"அவமானம், அழுகை, பசி வேதனை,
கண்ணீராக வந்தது அவளுக்கு!!

பட்டத்து யானைகளுடன் தரிசனத்திற்கு வந்த இராஜக்கன்மார்கள் வரும்போது,

அவர்களை தாங்கி வந்த யானைகள் மதம் பிடிக்க தொடங்கியது,

அத்தனை யானைகளுக்கும்,

அதிர்ச்சி அடைந்த மன்னர்களும், க்ஷேக்த்ர நிர்வாகிகளும், கண்ணனை தரிசிக்காமல் மன்னர்கள் புறப்பட்டனர்,

ஒட்டு மொத்த யானைகள்கும் ஒரே நேரத்தில் மதம் பிடித்ததில் ஏதோ,

"தேவகோபம் " உண்டு "

தேவப்ரஸன்னம் " வைக்கப்பட்டது,

ப்ரஸ்னத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் உக்ர கோபத்தில் உள்ளார், என்றும்,

தான் கனவில் சென்று அழைத்த ஸ்த்ரீயை அவமானப்படுத்தியது,

அவள் எனக்காக ஆசையுடன் கொண்டு வந்த அந்த "மஞ்சாடி கொட்டைகளை "சிதற விட்டதாலும்,

அவள் என்னை காண அனுவாதம் கொடுக்கவில்லை என்பதாலும்
க்ஷேக்த்ர மூர்த்தி ஸ்ரீ கிருஷ்ணன் கடுங்கோபம் அடைந்துள்ளார் "
என்பதும் "தேவப்ரஸன்னதௌதில் காண பட்டது,

நிர்வாகிகள் அந்த ஸ்த்ரீயை வலை போட்டு தேடி கண்டுபிடித்தனர்

அவளுக்கு அன்றே இராஜக்கன்மார்கள் கூடே தர்ஸனம் செய்ய அனுமதிக்கப்பட்டது,

கண்குளிர கண்டாள்.
குருவாயூரோனை ,
கண்ணீர் பெருகியது அவள் கண்களில்,

அப்போது ஒரு அஸரீரீ!!!!

என் பக்தை அவள் கொண்டு வந்த மஞ்சாடி கொட்டைகள் இங்கு வைக்க வேண்டும்,

குழந்தைகள் என்னை ப்ரார்த்தித்து அதை வாரும்போது,

ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிய நான் அவர்கள் உள்ளில் செல்கிறேன்,

அவர்கள் குழந்தைகளாக இருக்கும் வரை அவர்கள் ஆண், பெண் யாராக இருந்தாலும் "நான்தான் "அவர்களில் இருப்பேன்,

தேவப்ரஸன்னத்தில் காணப்பட்டது போல் க்ஷேக்த்ர நிர்வாகிகள் "மஞ்சாடி கொட்டைகளை ஒரு பெரிய உருளியில் போட்டு வைத்திருப்பதை இன்றும் காணலாம்,

அந்த மஞ்சாடி கொட்டைகள் கொண்டு வந்த ஸ்த்ரீக்கு அவருடைய ஜீவித நாள் முழுவதும் காலையில் கண்ணனை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

(இதை பதிவிடும் நேரத்தில் குருவாயூர்,
"தேவப்ரஸன்னம் " வைத்து கொண்டிருக்கிறார்கள்)

மூதாட்டியின் ஆன்மாவைத் தேடிக் கண்ணனே வந்தான்.

அர்ச்சகருக்கு மூதாட்டியிடம் விசேஷப் பரிவு உண்டு.
பல்லாண்டுகளாக தினமும் ஆலயத்திற்கு வருபவள்.
அர்ச்சகர்பிரியத்தோடு கேட்டார்:
“”பாட்டி! இன்று என்ன வேண்டிக்கொண்டாய்?”
“”நேற்று என் கண்ணன் நிறைய வெண்ணெய் சாப்பிட்டுவிட்டான். கண்ணன் அருளால் அந்த வெண்ணெயெல்லாம் அவனுக்கு ஜீரணம் ஆகவேண்டும்,” என்று வேண்டிக் கொண்டேன்.
அர்ச்சகர் சிரித்தார். “”அதில்லை பாட்டி. உனக்காக ஏதாவது வேண்டிக் கொண்டாயா?”
“”எனக்கென்ன வேண்டிக் கிடக்கிறது இப்போது? போகப் போகிற கட்டை. என் பிள்ளைகண்ணன் சவுக்கியமாக இருந்தால் போதாதா! ஏராளமான பேர் அதுவேண்டும் இதுவேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள்.
கண்ணன் வலக்கரம் உயர்த்தி ஆசீர்வதித்துக் கொண்டே இருக்கிறான். அவனது வலது கை வலிக்காதோ!
இவர்கள் தங்களுக்கான வேண்டுதலைக் கொஞ்சமாவது நிறுத்தினால் தானே அவன் தன் கைக்குச் சற்று ஓய்வு கொடுக்க முடியும்! ஏற்கனவே பாஞ்சாலிக்குப் புடவை வழங்கியும், அர்ஜுனனுக்குத் தேரோட்டியும்அவன் கை வலித்திருக்கும்.
புல்லாங்குழல் அதிக கனமில்லாததுதான்.
என்றாலும், ஓயாமல் அதைக் கையில் பிடித்து உதட்டருகே வைத்து ஊதிக்கொண்டிருந்தால் அந்தக் கரம் என்னாவது? இதையெல்லாம் யாராவது நினைத்துப் பார்க்கிறார்களா? இவற்றைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு ஓய்வெடு என்றால் அவன்கேட்பதில்லை.
நம் பேச்சை அவன் எங்கே கேட்கிறான்? அவன் பேச்சைத்தான் கீதை என்று உலகம்
கொண்டாடிக் கேட்கிறது. நான் அவனிடம் எனக்கென்று எதுவும் வேண்ட மாட்டேன். எனக்கு வலக்கரம்உயர்த்தி ஆசிகூறி, அதனால் அவன் கை வலி இன்னும் சற்றுக் கூட வேண்டாம்!”
அர்ச்சகர் பாட்டியின் பேச்சை ரசித்துக் கேட்டார்.
கண்ணனை எவ்வளவு உண்மையாக நம்புகிறாள்
இவள்.படிப்பறிவில்லாத ஏழைக் கிழவி. ஆனால் எத்தனை பக்தி!
நாள்தோறும் என் கண்ணன் காதில் சாணத்தை அப்புகிறவன், எப்படி
பக்தி செய்வது என்பதை இந்தப் பாட்டியிடம் கற்றுக் கொள்ளட்டும். அர்ச்சகர் ஆலயக் கதவைப் பூட்டினார்.
மூதாட்டி கண்ணனை நமஸ்கரித்துவிட்டு, தளர்ந்த நடையோடு வீடு நோக்கிச்சென்றாள்.
அன்றிரவு, அர்ச்சகர் கண்ணனது காதோரச் சாணத்தின் மர்மம் அறியாமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார். பின் எப்போது தூங்கினார் என்ற தெரியவில்லை.
கலகலவென நகைத்துக் கொண்டு கண்ணன் அவரது சொப்பனத்தில் வந்தான்.
“”அர்ச்சகரே! உம் பக்தியில் எந்தக் கோளாறும் இல்லை. என் காதில் ஒட்டிக்கொள்ளும் சாணம் நீங்கள் எனக்குச் சாத்தும் சந்தனத்தை விடவும் புனிதமானது.
அதன்மகிமையை அறிய இப்போது உங்கள் உடலை விட்டு விலகி சூட்சும சரீரம் அடையுங்கள்.
மூதாட்டியின் இல்லத்திற்குச்சென்று நடப்பதைப் பாருங்கள். பிறகு மறுபடி உடலுக்கு நீங்கள் வந்துவிடலாம்!
மறுகணம் அர்ச்சகரின் உடல் கட்டையாய்க் கிடக்க, அவரது சூட்சும சரீரம் வெளியே சென்றது.
மூதாட்டி இல்லத்தில் திறந்திருந்த சாளரத்தின் வழியாக நுழைந்தது.
அர்ச்சகர் மூதாட்டியின் நடவடிக்கைகளைக் கவனித்தார்.
பாட்டி இரவு தாமதமாக உறங்கப் போனாள். அதற்குமுன் தோத்திரங்களைச் சொன்னபடி, அடுப்பைச் சாணத்தால் மெழுகினாள்.
மெழுகிய பின்னரும் கொஞ்சம் சாணம் அவள் கரத்தில் எஞ்சியிருந்தது.
“சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!’
என்று மனப்பூர்வமாக வாய்விட்டுச் சொன்ன அவள் சாணத் துணுக்கைச் சாளரத்தின் வழியே வீசினாள்.
என்ன ஆச்சரியம்! அர்ச்சகரின் சூட்சும சரீரம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சாணம்
பூட்டிய கோயிலின் உள்ளே புகுந்து கண்ணன் காதில் ஒட்டிக் கொண்டது.
நன்கு உறங்கிய அவள், அதிகாலையில் மெல்லக் கண்விழித்தாள்.
“”கண்ணா! நீ நன்றாகத் தூங்கினாயா? நேற்று குளிர் அதிகம். போர்வை போர்த்திக் கொண்டு தானே தூங்கினாய்?” என்றவாறே தன் பாயையும் போர்வையையும் மடித்து வைத்தாள்.
வாய் கொப்பளித்து, முகத்தைத் தூய்மை செய்துகொண்டுவந்தாள்.
“”தண்ணீர் இன்று குளிர்ச்சியாக இருக்கிறது கண்ணா. உடம்புக்கு ஆகாது. நீவெதுவெதுப்பான நீரில் முகம்
கழுவிக்கொள். இன்று உனக்காகபுள்ளிவைத்துக் கோலம் போடப் போகிறேன்,” என்ற பாட்டி கோலமாவோடு வாயிலுக்கு வந்தாள்.
ஒவ்வொரு புள்ளிவைக்கும்போதும் “கிருஷ்ணா! முகுந்தா! முராரே!’ என்றுகண்ணன் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே புள்ளிவைத்தாள்.
பின் கண்ணனைப் பற்றியதோத்திரங்களைச் சொல்லியவாறே இழையிழுத்துக்கோலம் போட்டாள். தொடர்ந்து தோத்திரங்களைச் சொன்னபடி,அடுப்பு மூட்டிச்
சமைக்கலானாள்.
உறக்கம் கலைந்து எழுந்தார் அர்ச்சகர்.நடந்ததெல்லாம் கனவா நனவா?
அன்றும் கோயிலுக்குப் போனார்.
கண்ணன் சிலையின் காதுகளில்
ஒட்டியிருந்த சாணத்தைப்பார்த்ததும் அவரது மனம் பக்தியில் தழதழத்தது.
அதை உன்னதமான பிரசாதம் என்று கருதி வாழையிலையில் மடித்து இடுப்பு வேட்டியில் செருகிக் கொண்டார். அன்று மாலை மூதாட்டிக்காகக் காத்திருந்தார்.
ஆனால் அவள் வரவில்லை. அன்றிரவும் அவர் சொப்பனத்தில் கண்ணன் வந்தான்:
“”அர்ச்சகரே! நீங்கள் எடுத்துவந்த சாணம் உன்னதமான பிரசாதம்.
ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். இனி அது கிடைக்காது”.
ஏன்?- வியப்போடு கேட்டார் அர்ச்சகர்.
“”நாளை அவள் ஆன்மா என்னை வந்து சேர்கிறது. இன்று அவளுக்கு உடல் நலமில்லை. அதனால் தான் அவள் கோயிலுக்கு வரவில்லை.
நாளை அதிகாலையில் கோயிலுக்கு வருவதற்கும் முன்பாக நீங்கள் அவள்
இல்லம் செல்லுங்கள். அங்கே மக்கள் கூடியிருப்பார்கள்.
மற்றவர்களுக்குத் தெரியாத சில காட்சிகள் உங்களுக்கு மட்டும் தெரியும். சுயநலமின்றி,
தாய்ப்பாசத்தோடு என்னை நேசித்த அவள் பக்தியின் பெருமையை நாளை
முழுமையாகப் புரிந்துகொள்வீர்கள்!”
அர்ச்சகர் திடுக்கிட்டு எழுந்தார்.
அதன்பின் உறக்கம் பிடிக்கவில்லை. மறுநாள் காலை மூதாட்டியின்
இல்லத்திற்கு விரைந்தார். கூடியிருந்த மக்களை விலக்கியவாறு உள்ளே சென்றார்.
பாயில் அவள் உடல் கிடத்தப்பட்டிருந்தது.
அவள் ஆன்மா அப்போதுதான் உடலை விட்டுப் பிரிந்திருந்தது. அந்த ஆன்மாவை அழைத்துச் செல்ல விண்ணிலிருந்து புஷ்பக விமானம் வருவது அவர் கண்ணுக்கு மட்டும் தெரிந்தது.
கிழவியின் ஆன்மா பேசிய பேச்சை அவர் கேட்டார்.
“”இந்தப் புஷ்பக விமான அந்தஸ்தெல்லாம் ஏழைக் கிழவியான எனக்கெதற்கு?
என் பிள்ளை கண்ணனை எப்போதும் பார்த்துக் கொண்டிருந்தால் அதுபோதும் எனக்கு!”
மூதாட்டியின் சுயநலமற்ற பக்தியின் முன் நிற்க வெட்கப்பட்டதுபோல் புஷ்பக விமானம் கண்ணன் ஆலயச் சுவரில் மோதி தூள்தூளாகியது.
மூதாட்டியின் ஆன்மாவைத் தேடிக் கண்ணனே வந்தான்.
“”என் தாய் அல்லவா நீ! எப்போதும் நீ சொல்வதைக் கேட்டு அதன்படி நான் நடக்கவேண்டுமே?” என்ற கண்ணன் அந்த ஆன்மாவை இரு குண்டலங்களாக்கித் தன் செவிகளில் அணிந்துகொண்டான்.
குண்டலங்கள் தாய்ப்பாசத்தோடு அவன் செவிகளில் பேசத் தொடங்கின.
அர்ச்சகர் தம் இல்லத்திற்குச் சென்று குளித்துவிட்டு, அவசர அவசரமாகக் கோயிலுக்குச் சென்றார். கண்ணன் விக்ரகத்தை வியப்போடு பார்த்தார்.
எந்த இடத்தில் சாணித் துணுக்கு நாள்தோறும் இருக்குமோ அந்த இடத்தில் இப்போது இரு காதுகளிலும் இரு அழகிய குண்டலங்கள் தென்பட்டன.
சுயநலமற்ற ஏழைக்கிழவியின் பக்தியை அங்கீகரித்த கண்ணனை
வணங்கிய அவரது கண்களில் கண்ணீர் பெருகியது.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

காசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை தெரியுமா?

காசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை தெரியுமா?

ஏழு ஜென்மத்துக்கும் செய்த பாவங்களைப் போக்குகின்ற புண்ணிய தலமாக காசி கருதப்படுகிறது. 

அதன் புனிதம் பற்றியும் கங்கையின் புனிதம் பற்றியும் நிறைய நிறைய கேட்டிருப்போம்.

வாராணசியைச் சுற்றிப் பார்த்தீர்கள் என்றால், எங்கும் கருடன் சுற்றுவதைப் பார்க்கவே முடியாது. 

அதேபோல் காசியில் எங்குமே பல்லியை உங்களால் பார்க்கவே முடியாது. ஏன் தெரியுமா?

நம்முடைய வீடுகளில் கூட சாதாரணமாக திரிகின்ற பல்லி மோட்ச ஸ்தலமான வாரணாசியில் மட்டும் ஏன் இல்லை என்று யோசிக்க வேண்டியது மிக அவசியம்.

ராவண வதம் நடந்தது பல யுகங்களுக்கு முன்பு ஸ்ரீராமர் ராவணனை வதம் செய்த பின், 

ஹனுமனிடம் ராமேஷ்வரத்தில் ஒரு சுயம்பு லிங்கத் நிறுவ வேண்டும். 

அதற்காக காசியில் இருந்து ஒரு சுயம்பு லிங்கத்தைக் கொண்டு வரும்படி கட்டளையிடுகிறார்.

 அப்படி அனுப்புகிற பொழுது, காசிய நோக்கி ஹனுமான் பயணம் செய்கிறார். 

அப்படி காசியை நோக்கி ஹனுமான் வரும்பொழுது, அவருடைய கண்களில் அங்கிருக்கும் பல ஆயிரக்கணக்கான லிங்கங்களும் அங்கு தென்படுகின்றன. 

அதைப் பார்த்ததும் ஹனுமான் குழம்பிப் போகிறார். 

அங்கிருக்கும் லிங்கங்களில் எது சுயம்பு லிங்கம் என்பது அவருக்குத் தெரியவில்லை. 

சுயம்பு லிங்கத்தைக் கொண்டு சென்றால் அதற்குரிய பலன் என்பது மிகமிக அதிகம். 

அதற்குரிய சக்தியும் அதிகம். அதனுடைய சக்திப் பிரவாகம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த சுயம்பு லிங்கத்தை காசி முழுவதும் தேடி அலைந்து கொண்டிருக்கிறார் ஹனுமன். 

ஆனால் கிடைக்கவில்லை. 

அப்பொழுது கருடன் அவருக்கு உதவி செய்ய முன்வருகிறார். 

இதுதான் நீங்கள் தேடுகின்ற சுயம்பு லிங்கம் என்று ஹனுமனுக்குப் புரிய வைப்பதற்கான ஒரு சுயம்பு லிங்கத்துக்கும் மேலாக மேல்நோக்கி, வட்டமடித்து கத்திக் கொண்டே வலம் வந்து கொண்டிருந்தது கருடன். 

அதை ஹனுமன் கண்டுபிடித்துவிட்டார்.

அதேபோல் பல்லியும் அந்த சுயம்பு லிங்கம் இருக்கின்ற திசையைப் பார்த்து, கத்தி காட்டிக் கொடுத்தது. 

இவ்வாறு கருடனும் பல்லியும் சுயம்பு லிங்கம் இருப்பதை ஹனுமன் கண்டுபிடிப்பதற்காக உதவி செய்தது. 

இதன்பின்பு, கருடன், பல்லி இருவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, அந்த சுயம்பு லிங்கத்தை எடுத்துக் கொண்டு புறப்பட ஆரம்பித்தார். 

அப்படி கிளம்புகிற பொழுதுதான் அங்கே ஒரு பெரிய பிரச்னை வெடித்தது. 

காசியில் காவல் தெய்வமாக இருப்பவர் யார் தெரியுமா? 

காசிக்கு காவல் தெய்வமாக இருப்பவர் கால பைரவர். 

அந்த கால பைரவரைத் தாண்டி, யாரும் காசியை விட்டு எதுவும் வெளியில் எடுத்துக் கொண்டு செல்ல முடியாது. 

ஆனால் ஹனுமனோ தன்னுடைய எஜமானர் ஸ்ரீ ராமருடைய கட்டளைப்படி சுயம்பு லிங்கத்தை எப்படியாவது கொண்டு சென்று விட வேண்டும் என்று எடுத்துச் செல்கிறார். 

அப்போது கால பைரவர் ஹனுமனை தடுத்து நிறுத்துகிறார். 

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற ஆரம்பித்து, சண்டை வலுக்க ஆரம்பிக்கிறது. 

இருவருக்குமே கோபமும் ரௌத்திரமும் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. 

இதைப் பார்த்த தேவலோகத்தினர் இப்படியே தொடர்ந்தால், இந்த மண்ணுலகில் பிரளயமே வெடிக்குமே என்று பயந்து கொண்டிருக்கிறார்கள். 

இருவருமே அதிக பலசாலிகளாக இருப்பதால் இருவருக்கும் இடையே இருக்கின்ற சண்டையை எப்படியாவது பெரிதாகாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று யோசித்து கால பைரவரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டனர். 

சுயம்பு லிங்கத்தை எடுத்துச் செல்லவும் வழிவகுக்க வேண்டும் என்று கூறினார். 

ஹனுமானின் விசுவாசத்தைப் புரிந்து கொண்ட அவர், 

லிங்கத்தை எடுத்துச் செல்வதற்கான அனுமதியைக் கொடுத்தார். 

தன்னுடைய அனுமதியின்றி எடுத்துச் சென்றதற்காக மட்டுமே தான் சண்டையிட்டதாகத் தெரிவித்தார். 

அதோடு சுயலிங்கத்தை ராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்வதற்காகவும் ஹனுமனை அனுப்பி வைத்தார். 

ஆனால் அதேசமயம் ஹனுமனுக்கு தன்னுடைய அனுமதியின்றி லிங்கத்தைக் காட்டிக் கொடுத்ததற்காக கருடனுக்கும் பல்லிக்கும் சாபத்தை வழங்கினார் கால பைரவர். 

இந்த வாராணசியில் (காசியில்) எங்கும் நீங்கள் இருவரும் இருக்கக்கூடாது என்று சாபம் கொடுத்தார். 

எப்போதும் காசிக்கு வரக்கூடாது என்றும் சொல்லியிருக்கிறார்.

அதனால் தான் வாரணாசியில் எப்போதும் கருடனும் பல்லியும் இருப்பதில்லை.
🙏🙏🙏 ஓம் சிவாய நமஹ 🙏


Saturday, September 9, 2023

மனித வாழ்க்கையின் உண்மை

*மனித வாழ்க்கை*
                             கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்,

"நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல்லைத்தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய்.

அதற்கு கழுதை சொன்னது

"நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்."

கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்."

அதற்கு நாய் கூறியது,

"கடவுளே, 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்"

கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்,
"நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு குரங்கு கூறியது "20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்"

கடவுளும் குரங்கின் ஆசையை நிறைவேற்றினார்.

கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார் " நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன் கையில். நீ 20 வருடங்களுக்கு நன்கு வாழ்வாய்."

இதற்கு மனிதன் கூறினான் "20 வருஷம் ரொம்ப குறைவு.

கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு"

கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினார்.

அன்று முதல்....
மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக.

கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான்.

குழந்தைகள் வளர்ந்தபிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்.

வயதாகி, பணிஓய்வுக்கு பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேரக் குழந்தைகளுக்கு வித்தைகள் காட்டி மகிழ்வித்து மரணக்கின்றான்.

*மனித வாழ்க்கையின் உண்மை*......

மனம் நெகிழ்ந்த நல்ல கதை


மனம் நெகிழ்ந்த நல்ல கதை👉

காஃபி குடித்த டம்ளரை என்னிடமிருந்து வாங்கிக்கொண்ட என் மனைவி, நகராமல் அப்படியே நின்றாள்.

என்ன ' என்பதுபோல் வைதேகியை ஏறெடுத்துப் பார்த்தேன்.

உங்கப் பையனும், மருமகளும் நாளை காலையில ஹனிமூன் முடிச்சு சிம்லாவிலேர்ந்து திரும்பி வராங்க...

சரி. அதுக்கென்ன இப்போ?...

அவங்க தங்க ரூம் வேண்டாமா.. அந்த ரூம்லதான உங்க அம்மா தங்கியிருக்காங்க, இவ்வளவுநாள் இருந்தது போதும். அவங்கள ஹாலுக்கு ஷிப்ட் பண்ணச்சொல்லுங்க.

வாஸ்தவம்தான். முப்பது வருஷத்துக்கு முன்னால் என் தந்தை கட்டிய வீடு. பாத் ரூம் அட்டாச்சுடன் இரண்டு படுக்கையறைகள். ஹால். அதிலும் அட்டாச்டு பாத்வசதி உண்டு.

சமையலறை, டைனிங் ரூம், பூஜையறை என்று விஸ்தாரமாய் கட்டப்பட்ட வீடு. இப்போது என் அம்மா தங்கிக் கொண்டிருக்கும் அறைதான் என் தந்தை உபயோகித்தது. நான் இருக்கும் படுக்கையறையை ஆரம்பத்திலிருந்தே பயன்படுத்தி வருகிறேன்.

எனக்குத்திருமணமாகி ஐந்து வருடங்கள்வரை என் தந்தை உயிருடன் இருந்தார்.

இன்றுவரை தன்ரூம் என்ற உரிமையுடன்
இருந்து வருகிறாள் அம்மா. இப்போது தடாலென்று ஹாலுக்கு வரச்சொன்னால்
அதுவும் உறவினர், நண்பர்கள் அடிக்கடி வருவர். ஹாலில் உட்கார்ந்தபடிதான் பேசுவர். அது அம்மாவுக்கு இடைஞ்சலா இருக்காதா?.. தனக்கென்று இருக்கும் பிரைவேஸி இல்லாமல் எப்படி மீதியிருக்கும் காலத்தை தள்ளுவாள்! நினைக்கும்போது தொண்டையை அடைத்தது எனக்கு.

என்ன பதில் இல்ல... உங்களுக்கு சொல்ல கஷ்டமாயிருந்தால் நான் உங்கம்மாக்கிட்டப்பேசறேன்.

ஹாலுக்கு ஷிப்ட்டாகி வாம்மா... என்று நான் கேட்பதைவிட என் மனைவியே கேட்பதுதான் சரி என மனதில் பட்டது.

சரி வைதேகி, நீயே கேட்டுடு என்றேன்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் வைதேகி என் அம்மா படுத்திருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.

அத்தை, குரல் கேட்டதும் அம்மா விசுக்கென்று எழுந்து உட்கார்ந்தாள்.

நாளைக்காலை உங்க பேரனும் அவன் பெண்டாட்டியும் டூர் முடிஞ்சு திரும்பி வராங்க. அவங்க தங்க ரூம் வேண்டாமா.. நீங்க காலிபண்ணிக்கொடுத்தால்தானே அவங்க இங்க தங்க முடியும். தயவு செஞ்சு நிலைமையைப்புரிஞ்சுக்கிட்டு ஹாலுக்கு வரப்பாருங்க... என்று கூறி விட்டுத்திரும்பினாள்.

அவள் அடுக்களைக்குள் நுழைந்ததும் நான் அம்மா படுத்திருந்த அறைக்குள் நுழைந்தேன்.

அம்மாவைப்பார்க்க பாவமாயிருந்தது.
பிரம்மை பிடித்தால் போல் அமர்ந்திருந்தாள். இதுவரை சுவாதீனத்தோடு உரிமை கொண்டாடிய பிரைவேட் ரூம் தனக்கு கிடையாது, இனி கிடையாது என்பதை அவளால் தாள முடியவில்லை.

அம்மா அருகில் கட்டில் மீது உட்கார்ந்தேன்.

என் கைகளை ஆதூரத்துடன் பற்றிக்கொண்டாள். அவள் கைகள் நடுங்கின.

உனக்கு இஷ்டமில்லேன்னா நீ ஹாலுக்கு வரவேணாம்மா. இங்கேயே இருந்துக்கோ. மேலுக்குச்சொல்லி பெருமூச்சொன்றை விட்டேன்.

அது கூடாதுடா ராகவா..... சின்னஞ்சிறுசுகள். அதுங்க ஹால்ல தங்கமுடியாது...
எனக்கென்ன.. நான் ஒண்டிக்கட்டை,
ஹாலுக்குத்தானே போகப்போறேன்.
வீட்டைவிட்டு இல்லையே....

அம்மா இப்படிச்சொன்னதும் எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.

சிறிதுநேரம் மெளனமாயிருந்த அம்மா தொடர்ந்தாள்.

ராகவா, நீ குழந்தையா இருந்தபோது
இதே கட்டில்லதான் என்னோட படுத்திருந்தே. உடம்புக்கு முடியாம நான் இருக்கறபோது உங்கப்பா சாதம் பிசைந்துகொண்டுவந்து இந்தக் கட்டில்ல உட்கார்ந்துதான் உனக்கு சாதம் ஊட்டுவார்... எத்தனை தடவைகள்.... அதெல்லாம் மறக்க முடியுமா....கைகளை என்னிடமிருந்து விடுவித்து கட்டிலை ஆதங்கத்துடன் தடவிப்பார்த்துக் கொண்டாள்.

சட்டென என்னை நோக்கித்திரும்பிய அம்மா, டேய் ராகவா இன்னிக்கு ராத்திரி மட்டும் என்னை இங்க தங்கவிடுடா.
நாளை உதயத்தில் நான் ஹாலுக்கு வந்துடறேன். என் கையைப்பிடித்து கெஞ்ச, துக்கம் பீறிட்டது எனக்கு.

சரிம்மா நீ படுத்துத்தூங்கு... இன்னும் கொஞ்சநேரம் அங்கு தங்கினால் நான்
ஓ வென்று அழுதுவிடுவேன், என எண்ணி அம்மாவை படுக்கவைத்து, என் அறைக்குத்திரும்பினேன்.

என் சிந்தனை பூராகவும் அம்மாவைப் பற்றியே இருந்தது. அம்மா கூச்ச சுபாவமுடையவள். யாராவது அறைக்குள் இருந்தாலே உடனே எழுந்து உட்கார்ந்து விடுவாள். உடம்பு முடியாமல் போனாலும் உட்கார்ந்தபடிதான் இருப்பாள். அதற்காகவே நாங்கள் யாராயிருந்தாலும் ஐந்து நிமிடமோ அல்லது பத்துநிமிடமோ இருந்துவிட்டு வெளியேறி விடுவோம்.

அடிக்கடி பாத்ரூம் போக எழுந்து கொள்வாள். ஹாலில் அடிக்கடி யாராவது நடமாடிக்கொண்டே இருப்பர். அதோடு ஹாலில்தான் டிவி இருக்கு. டிவி புரோக்ராம்களை என் மனைவியும், மகனும் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பர். இது அம்மாவுக்குப் பெரிய தலைவலியாக இருக்குமே....

நினைக்க நினைக்க நெஞ்சில் வேதனை பிடுங்கித்தின்றது.

இந்த வீடு அப்பாவும், அம்மாவும் கஷ்டப்பட்டு கட்டிய வீடு; மகன் என்பதற்காக எனக்கு ஒரு ரூமைக் கொடுத்தார்கள். என் மகனுக்கு வீடு அல்லது ரூம் வேண்டுமென்றால் நாம் தானே கட்டிக்கொடுக்கவேண்டும்; அம்மாவை ரூமை காலி செய்து கொடு எனக்கேட்பது தவறு இல்லையா?'' என்று வைதேகியிடம் சொல்லிட வேண்டியது தான் என நினைத்துக் கொண்டே தூங்கி விட்டேன்.

ஆனால் மறுநாள் காலை அம்மா இதற்கொரு விடை கொடுத்தாள். ஆம். அம்மா நள்ளிரவே காலமாகி விட்டாள்.

ஹாலில் இருந்துகொண்டு தான் அவஸ்தைப்பட்டு அதனால் பிறத்தியாருக்கும் கஷ்டம் கொடுப்பதை விரும்பாமல் போய்ச்சேர்ந்துவிட்டாள்.

அம்மாவின் காரியங்கள் நடந்து முடிந்தன.

அன்று இரவு அம்மாவைப்பற்றி சிந்தனையோடு கட்டிலில் அமர்ந்திருந்தேன். வைதேகி என்னருகில் வந்து நின்றாள்.

என்ன அம்மாவைப்பத்தி சிந்தனையா?.

நான் பதிலேதும் சொல்லவில்லை. அவளே தொடர்ந்தாள்.

பாவம் உங்கம்மா, இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்... ம்ம்.. என்ன செய்றது என்றவள், ஆனால் ஒரு விஷயத்த கவனிச்சீங்களா?...

என்ன' என்பதுபோல் அவளைப் பார்த்தேன்.

கடைசிவரை ஹாலுக்கு வரல்ல. தன் ரூமுன்னு உரிமை கொண்டாடி, அங்கேயே உசிர விட்டாங்க. அவங்க சாமர்த்தியம் யாருக்கும் வராது.

சுருக்கென்று சொல்லிவிட்டு அகன்றாள் வைதேகி.

அம்மாவை வெளியேத்தணும்னு ரூமைக் கேட்டாளா? இல்ல, பையனை வைக்கணும்னு ரூமைக்கேட்டாளா?....

அப்பா உயிருடன் இருந்திருந்தா அந்த ரூமை கேட்டிருப்பாளா?, அம்மா தனியா இருந்தது அவங்களுக்கு பலவீனமோ? அம்மா 'நான் தனியா இல்ல, பையனோடு தான் இருக்கேன்னு' சொன்ன நம்பிக்கையைக்கூட காப்பாத்த முடியலையோ?....

அவளை அழைத்து, இந்த வீடு அப்பாவும் அம்மாவும் கஷ்டப்பட்டு கட்டிய வீடு; மகன் என்பதற்காக எனக்கு ஒரு ரூமைக் கொடுத்தார்கள் என் மகனுக்கு வீடு அல்லது ரூம் வேண்டுமென்றால் நாம் தானே கட்டிக் கொடுக்கவேண்டும்; அம்மாவை ரூமைக்காலி செய்து கொடு எனக் கேட்டது தவறு இல்லையா?''என்று சொல்ல நினைக்கிறேன்; முடியவில்லை; 

இது என்னுடைய கையாலாகதத் தனமோ?.... நான் மட்டும் தான் இப்படியா? இல்லை, எல்லா ஆண்களும் இப்படித் தானா?

○'பெண்' இருந்தும் 'சன்' இருந்தும் பல அப்பாக்களை இன்று 'பென்சன்' தான் காப்பாற்றுகிறது. பணத்தால் மட்டும் அவர்கள் வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைத்து விடுமா.○

●ஒவ்வொரு ஆண் மகனின் வாழ்க்கையிலும் என்னை ஏன்னு கேட்க ஆளேயில்லை என்ற வாக்கியம் வயதுக்கேற்ப மாறும். இளமையில் கர்வமாக முதுமையில் பரிதாபமாக.

●வாழ்க்கையிலும் சரி, பணியிலும் சரி நமக்கு எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும், பெற்றவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். அன்னையின் மடியில் தலை வைத்து அயருங்கள். தந்தையின் கரங்களை பிடித்து கொண்டு கடைவீதிக்கு செல்லுங்கள்.

வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உணருங்கள். இன்று நீங்கள் பெற்றோரை ஆதரித்து அரவணைத்தால், நாளை உங்கள் பிள்ளைகளும் உங்களை ஆதரிப்பர் என்பதை சொல்லி தான் தெரிய வேண்டுமா... இதைவிட வேறு புண்ணியமும் வேண்டுமா?...

●சில சந்தோஷங்கள். 
●சில கனவுகள்

படிப்பினைக்காக, பகிர்கிறேன்.... 🙏

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...