Sunday, April 21, 2024

உத்தம மகா பிரதோஷம்


*10. உத்தம மகா பிரதோஷம்*

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்

மகா பிரதோஷம்



மகா பிரதோஷம்*

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.

குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்

அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்

 அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்*

வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும்.

இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்

தீபப் பிரதோஷம்

தீபப் பிரதோஷம்*
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

திவ்யப் பிரதோஷம்



*திவ்யப் பிரதோஷம்

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும்திவ்யப் பிரதோஷம் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

பூரண பிரதோஷம்

பூரண பிரதோஷம்*

திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

நட்சத்திரப் பிரதோஷம்


*4. நட்சத்திரப் பிரதோஷம்*
பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

மாசப் பிரதோஷம்

*3. மாசப் பிரதோஷம்*

பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.

20 வகை பிரதோஷங்களும்

*20 வகை பிரதோஷங்களும். 

மொத்தம் 20 வகை பிரதோஷங்கள்

1. தினசரி பிரதோஷம்
2. பட்சப் பிரதோஷம்
3. மாசப் பிரதோஷம்
4. நட்சத்திரப் பிரதோஷம்
5. பூரண பிரதோஷம்
6. திவ்யப் பிரதோஷம்
7. தீபப் பிரதோஷம்
8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
9. மகா பிரதோஷம்
10. உத்தம மகா பிரதோஷம்
11. ஏகாட்சர பிரதோஷம்
12. அர்த்தநாரி பிரதோஷம்
13. திரிகரண பிரதோஷம்
14. பிரம்மப் பிரதோஷம்
15. அட்சரப் பிரதோஷம்
16. கந்தப் பிரதோஷம்
17. சட்ஜ பிரபா பிரதோஷம்
18. அஷ்ட திக் பிரதோஷம்
19. நவக்கிரகப் பிரதோஷம்
20. துத்தப் பிரதோஷம்

பட்சப் பிரதோஷம்

2. பட்சப் பிரதோஷம்*அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.

தினசரி பிரதோஷம்

1.தினசரி பிரதோஷம்*

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

Saturday, April 6, 2024

மூச்சு உள்ளவரை முயற்சி செய்வோம் முங்கில் போல

பொறுமையின் உதாரணமாக மூங்கில் செடியைச் சொல்வார்கள்.

மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும். ஆனால் செடி வளரவே வளராது. ஒரு இன்ச் அளவு கூட வளராமல் அடம்பிடித்து அப்படியே இருக்கும். முழுசாய் நான்கு வருடங்கள் செடி அப்படியே இருக்கும். செடிக்குத் தண்ணீர் ஊற்றுபவர் பொறுமையுடன் அதை பராமரிக்க வேண்டும்.

நான்கு ஆண்டுகளாய் அவருக்கு சிலாகிக்கவோ, மகிழ்ச்சி கொண்டாடவோ எதுவுமே இருப்பதில்லை.

ஆனால் அதற்கு அடுத்த பருவத்தில் எல்லோரும் வியக்கும் வண்ணம் அந்த மூங்கில் வளரத் துவங்கும். அதுவும் எப்படி? சடசடவெனும் அசுர வளர்ச்சி. ஒரே ஆண்டில் அது எட்டிப் பிடிக்கும் உயரம் எவ்வளவு தெரியுமா? 80 அடிகள். நான்கு ஆண்டு காலமாக அமைதியாக இருந்த செடி, எப்படி ஐந்தாவது ஆண்டில் மட்டும் விஸ்வரூப வளர்ச்சியை எட்டுகிறது?

ஆராய்ந்து பார்த்தால் ஆச்சரியம் தரும் ஒரு ரகசியம் இதில் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். இயற்கையின் அற்புதம், கடவுள் படைப்பின் மகத்துவம் இது.

முதல் நான்கு ஆண்டுகள் அந்த மூங்கில் வேர்களை பூமியில் நன்றாக இறக்கி மிகச் சிறந்த பிடிமானத்தை உருவாக்கிக் கொள்கிறது. ஐந்தாவது ஆண்டில் என்பது அடி உயரமாக வளரப் போகிறேன், என்னைத் தாங்கிப் பிடிக்கும் வல்லமை என் வேர்களுக்குத் தேவை என மூங்கில் முழு மூச்சாய்த் தன்னைத் தயாரிக்கும்.

அதனால் தான் ஐந்தாவது ஆண்டில் அசுர வளர்ச்சி அடையும் போது அது தடுமாறுவதும் இல்லை, தடம் புரள்வதும் இல்லை!

பொறுமை உயரமான வெற்றிகளை உருவாக்குகிறது. அவசரப்பட்டு முளைத்து, சடசடவென வீழ்ந்து விடாமல், நமது அடித்தளத்தை வலுவாக்கிக் கொள்ள பொறுமை நம்மைத் தூண்டுகிறது.

மூச்சு உள்ளவரை முயற்சி செய்வோம். முடியாதது என்று இங்கு ஒன்றும் இல்லை!

#படித்ததில் பிடித்தது

Saturday, March 23, 2024

அம்பிகைக்கு பிடித்த நைவேத்தியங்கள்...

லலிதா ஸகஸ்ரநாமத்தில் கூறும் அம்பிகைக்கு பிடித்த நைவேத்தியங்கள்...

சக்திதேவிக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. அந்தப் பெயர்களால் அவளை அர்ச்சிக்கும் மந்திரங்கள் அடங்கிய நூலே லலிதா சகஸ்ரநாமம். இந்த நூலிலேயே தேவிக்கு பிடித்த நைவேத்ய வகைகள் சொல்லப்பட்டுள்ளன.

இந்த நூல் தோன்றியதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு இருக்கிறது.

பெருமாளின் அவதாரமாகக் கருதப்படுபவர் ஹயக்கிரீவர். இவர் குதிரை முகம் கொண்டவர். கல்விக்கு அதிபதி. இவரது தரிசனம் ஒருமுறை அகத்திய முனிவருக்கு கிடைத்தது. கல்விக்கதிபதியான அவரை தன் குருவாகவே பார்த்தார் அகத்தியர். அதன் காரணமாக சக்தியின் வரலாற்றை அறிந்தார். சக்திக்கு "லலிதா' என்ற திருநாமம் சூட்டி, அவளது கதையைக் கூறினார் ஹயக்கீரிவர்.

அதைக் கருத்துடன் கேட்டு மகிழ்ந்த அகத்தியர், "குருவே! தாங்கள் எனக்கு லலிதா தேவியின் சரித்திரத்தை மட்டும் கூறினீர்கள். அவளுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே! அதையும் சொல்லுங்கள்!' என்றார்.

"அது மிக, மிக ரகசியம். தேவியின் அனுமதியின்றி யாருக்கும் சொல்லக் கூடாது. இருந்தாலும் தேவியின் அதிதீவிர இறைபக்தர்களுக்கு இதைச் சொல்வதில் தவறில்லை!' என்று கூறிய ஹயக்கிரீவர், ஆயிரம் நாமங்களையும் கற்றுக் கொடுத்தார்.

அதில் வரும்,

(1) 480வது ஸ்லோகமான, " *பாயஸான்ன* *ப்ரியாயை* " என்பதற்கு, "பால் பாயசத்தை விரும்புபவள்" எனப் பொருள்.

(2) 501வது ஸ்லோகமான, " *குடான்ன ப்ரீத* *மானஸாயை'* என்பதற்கு, "அம்பிகை சர்க்கரைப் பொங்கலை விரும்புபவள்" என்று அர்த்தம்.

(3) 526வது ஸ்லோகமான, " *ஹரித்* *ரான்னைக* *ரஸியை'* என்ற ஸ்லோகத்திற்கு, "மஞ்சள் பொடி கலந்த எலுமிச்சை சாதத்தை ரசித்து உண்பவள்" என பொருள் வருகிறது.

(4) அம்பிகை குறித்த இன்னொரு ஸ்லோகமான, " *தத்யான்ன ஸக்த* *ஹ்ருதயாயை'* என்ற ஸ்லோகத்திற்கு, "இவள் தயிர் சாதம் என்றால் இதயத்தையே கொடுப்பவள்!" என்று பொருள்.

(5) " *முத் கௌத* *நாஸக்த...* என்ற ஸ்லோகத்திற்கு, "பாசிப்பருப்பு, அரிசியில் சமைத்த வெண்பொங்கலை விரும்புபவள்!" என்று அர்த்தம்.

(6) " *ஸர்வெளதன* *ப்ரீதசித்தா* ' என்ற ஸ்லோகத்திற்கு, "அம்பிகை கதம்ப சாதம், தேங்காய் சாதம், புளியோதரை ஆகியவற்றை உண்ணும் மனதைக் கொண்டவள்!" எனப் பொருள்.

(7) இதையெல்லாம் முடித்த பிறகு 559வது ஸ்லோகத்தில், " *தாம்பூல பூரிதமுகிச்யை* " என்ற ஸ்லோகம் வருகிறது. இதற்கு, "தாம்பூலம் தரித்ததால் லட்சணமாக இருக்கும் முகத்தைக் கொண்டவள்!' எனப் பொருள்.
         "தாம்பூலம்" என்பது வெற்றிலை, பாக்கைக் குறிக்கும். எனவே தான் கடவுளுக்கு நாம் நிவேதனம் படைத்து வழிபடுகிறோம். 

இதைத்தவிர அவரவருக்கு என்ன நைவேத்யமாக வைத்து பூஜிக்க முடியோமோ அதை வைத்து வணங்கலாம். அம்பாள் நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான, ஆத்மார்த்தமான பக்தியே!யார் யார் எப்படி என்னை வழிபடுகறார்களோ அவ்வாறே அருள்கிறேன் என்கிறார் பகவான் தன் கீதையில். அம்பாளும் எண்ணத்தின் காரணமாகவும், எண்ணமாகவும், அதை தெரிவிக்கும் மொழியாகவும், வார்த்தையாகவும் பக்தனின்மனதில் அன்னம்போல் சஞ்சரிக்கிறாள் என்கிறது ஸஹஸ்ரநாமம்

*நாமும் நமக்கு தெரிந்த முறையில் அம்பாளை மனதார நினைத்து, துதித்து, தாயின் அருளை பெறுவோம்.

Thursday, March 21, 2024

கருடபுராணம்_சொல்லும்_நன்மைகள்_சில

#கருடபுராணம்_சொல்லும்_நன்மைகள்_சில

*1 #அன்ன_தானம் செய்தல் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.

*2 #கோ_தானம் செய்தல் கோலோகத்தில் வாழ்வர்.

*3 #பசு_கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு.

*4 #குடை_தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்.

*5 #தாமிரம், நெய், கட்டில,; மெத்தை, ஜமுக்காளம், பாய,; தலையனை இதில் எதை தானம் செய்தாலும் சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.

*6 #வஸ்திர_தானம் கொடுத்தவருக்கு 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்.

*7 #இரத்தம், கண,; உடல் தானம் கொடுத்தவருக்கு அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்.

*8 #ஆலயத்திற்கு #யானை_தானம் கொடுத்தவருக்கு இந்திரனுக்கு சமமான ஆசனத்;தில் அமர்ந்திருப்பார்.

*9 #குதிரையும்_பல்லக்கும்_தானம் கொடுத்தவருக்கு 14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்.

*10 #நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர் ஒரு மன் வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வார்
 தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவருக்கு மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்.

*12 #பயன்_கருதாது_தானம் செய்பவரின் மரணம் உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை.

*13 நற்செயலை விரும்பி செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்.

*14 தீர்த்த யாத்திரை புரிகின்றனர் சத்தியலோக வாசம் கிட்டுகிறது.

*15 ஒரு கன்னிகையை ஒழுக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவருக்கு 14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்.

*16 #பொன்_வெள்ளி_ஆபரணங்களைத்தானம் கொடுத்தவருக்கு குபேர லோகத்தில் ஒரு மன் வந்தரம் வாழ்வார்.

*17 பண உதவி செய்பவர்கள் ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்.

*18 நீர் நிலைகளை சீர்திருத்துபவரும்; உண்டாக்குபவரும் ஜனலோகத்தில் நீண்டகாலம் வாழ்வார்கள்.

*19 பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர் தபோ லோகத்தை அடைகிறார்.

*20 புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால் 64 ஆண்டுகள் பரமபத்திலிருப்பான்.

*21 தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர் 10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.

*22 பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர் இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்.

*23 தாமிரப்பாத்திரத்தில் #எள்ளு_தானம் கொடுத்தவருக்கு நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்.

*24 சுவையான #பழங்களைத்தானம் கொடுத்தவருக்கு ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்.

*25 ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு கைலாய வாசம் கிட்டும்.

*26 அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர் 60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்.

*27 விரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர் 14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்.

*28 சுதர்சன ஹோமமும,; தன்வந்திரி ஹோமமும் செய்பவர் ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்.

*29 ஷோடச மகாலெட்சுமி பூiஐயை முறையோடு செய்பவர் குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர்.

*30 இதைப் படிப்பவரும் கேட்பவரும்; புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும் தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள். அவர்களின் பெற்றோரும் மிதுர்களும் முக்தி பெறுகின்றனர்.

*எந்த எந்த சுகத்தை யார் யார் விரும்புகின்றார்களோ அவரவர் அதற்குரிய பொருட்களை உயரிய ஒழுக்கமுள்ளவர்களுக்குத் தானம் செய்தால் அந்தந்த சுகத்தை அடைவார்கள்.

வெள்ளியங்கிரி மலை பயணம்

🔱வெள்ளியங்கிரி மலை பயணம் 🔱

மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலை, ஏழு மலைகளை உள்ளடக்கியது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில்,ஏழாவது மலையின் உச்சியில், சுயம்புலிங்கமாய் வீற்றிருக்கிறார் நம் வெள்ளியங்கிரி ஆண்டவர்.

 பொதுவாக மற்ற தெய்வங்களை தரிசிக்க நாம் முழுமனதாக வேண்டினால் போதும். ஆனால், சிவபெருமானை தரிசிக்க அந்த சிவபெருமான் அருள் புரிந்தால் மட்டுமே முடியும் என்பார்கள். அது 100க்கு 200% பொருந்தும். உடல் வலிமை மனவலிமை மற்றும் ஈசனின் அருள் இருந்தால் மட்டுமே ஏழாவது மலையின் உச்சியை அடைய முடியும்.

 ஏழாவது மலையின் உச்சி அடைய நாம் பயணிக்க வேண்டிய தூரம் வெறும் 6km மட்டுமே. ஆனால் அது சுலபம் அல்ல.
இந்த 6km தூரத்தை கடக்க பொதுவாக 8-ல் இருந்து 10 மணி நேரம் ஆகும். மீண்டும் கீழே இறங்க 6ல் இருந்து 8 மணி நேரம் ஆகும்.
 முடிந்த அளவுக்கு பழங்களை எடுத்துச் செல்ல வேண்டும் .குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீர் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு torchlight மிக மிக அவசியம். 

முதல் மலை:

அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரின் அருளை பெற்று, மூங்கில் தடியின் துணை கொண்டு ஆரம்பிக்கிறது முதல் மலை.
ஏழு மலைகளில் மிகவும் கடினமானது இந்த முதல் மலையும் ஏழாவது மலையும் தான்.இம்மலை மிகவும் செங்குத்தாக படிக்கட்டால் ஆனது. முதல் மலை மட்டுமே 1½ km.
முதல் மலையே நம்மை மிகவும் சோதித்து விடும். சிவபெருமான் எப்போதும் தன் பக்தர்களின் நம்பிக்கையை சோதிப்பார். அப்படியான சோதனைதான் இந்த முதல் மலை.
பலமாக மூச்சு இரைக்கும். நமது உடல் தகுதியின் மேல் நமக்கே சந்தேகம் வர வைக்கும். முதல் மலையில் எங்கும் தண்ணீர் கிடைக்காது. கடைகளும் இருக்காது. ஆங்காங்கே படிக்கட்டுகளில் இரு பக்கமும் தர்பூசணி பழம் விற்று கொண்டிருப்பார்கள். அது மட்டுமே கிடைக்கும்.
அனைவரும் இரண்டு அல்லது மூன்று முறையாவது திரும்பி போய் விடலாமா என்ற எண்ணம் எழாமல் இருக்காது. அந்த எண்ணத்தை கருத்தில் கொண்டு உடல் உறுதிக்கு தேவையான ஓய்வும் நீர்ச்சத்தும் பெற்றுக்கொண்டு. மன உறுதிக்கு "ஓம் நமசிவாய" என்ன உச்சரித்து சிவனை சிந்தையில் நிறுத்தி தொடர்ந்தாள் மட்டுமே ஏழாம் மலை வரை செல்லும் தைரியமும் தன்னம்பிக்கையும் வரும்.
1½ முதல் 2 மணி நேரம் நடந்தால் வெள்ளை விநாயகர் ஆலயம் தென்படும். இத்துடன் முடிகிறது முதல் மலை.

இரண்டாம் மலை:

முதல் மலை முடிவில் கடைகள் இருக்கும். அது நம் கண்களுக்கு சொர்க்கம் போல் காட்சியளிக்கும். ஆனால் இங்கும் தண்ணீர் கிடைக்காது. அதனால், லெமன் ஜூஸ் லெமன் சோடா என்று முடிந்த அளவுக்கு அருந்திவிட்டு நல்ல ஓய்வெடுத்து முடிந்தால் ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு கலைப்பாறிய பின்பு வெள்ளை விநாயகரின் ஆசிக்கொண்டு இரண்டாம் மலையை ஏற தொடங்குவோம்.

இரண்டாம் மலை செங்குத்தான படிக்கட்டுகளும் சமதரைகள்ளும் வழுக்குப் பாறைகளாலும் ஆனது. முதல் மலையை ஒப்பிடுகையில் இது கொஞ்சம் சுலபம்தான். இரண்டாம் மலை கிட்டத்தட்ட முடியும் நிலையில் மிகப்பெரிய வழக்குப் பாறை தென்படும் அதைக் கடந்து சிறிது தூரம் சென்றால் இடது பக்கம் பாம்பாட்டி சித்தர் குகையும் வலது பக்கம் பாம்பாட்டி சித்தர் உருவாக்கிய சுனையும் தென்படும் இத்துடன் முடிவடைகிறது இரண்டாம் மலை.

 மூன்றாம் மலை :

 பாம்பாட்டி சூனையில் நம்மிடம் உள்ள பாட்டிலில் தண்ணீரை நிரப்பிக் கொள்ள வேண்டும். கூட்டம் வெகுவாக இருக்கும் இருந்தாலும் பொறுமையாக இருந்து தண்ணீரை நிரப்புவது நல்லது. இதனால் நமக்கு தேவையான ஓய்வும் கிடைக்கும், தண்ணீரும் கிடைக்கும். இந்தத் தண்ணீர் தான் நம் மூன்றாவது மலை முழுவதும் உபயோகப்பட போகிறது தண்ணீரை நிரப்பி விட்டு ஓய்வெடுத்த பின் பாம்பாட்டி சித்தரை வணங்கி மூன்றாவது மலையேற்றத்தை தொடங்குவோம்.

 மூன்றாவது மலை முழுக்க முழுக்க வழுக்குப் பாறையாளானது. நம் உடன் இருக்கும் மூங்கில் தடி மட்டுமே நமக்கு பாதுகாப்பு. சிறியதாக தவறினாலும் பெரிய காயங்கள் உண்டாகும். மூன்றாவது மலையுமே செங்குத்தாகவே அமைந்திருக்கும் ஆனால் முதல் மலை அளவுக்கு இருக்காது. இருந்தாலும் இதுவும் கடினம்தான் மிகவும் கடினம்.
 எப்பொழுது மலை முடியும் என்ற எண்ணத்தை தோற்றுவித்துக் கொண்டே இருக்கும். மூன்றாவது மலை ஏற ஏற குளிர்ந்த காற்று வீச தொடங்கும்.
 மூன்றாவது மலையுமே நீண்ட நெடிய பயணமாக இருக்கும் எனவே ஆங்காங்கே தேவையான ஓய்வும் நீர் சத்தும் மிகவும் அவசியம்.
 மூன்றாவது மலை கிட்டத்தட்ட முடியும் நிலையில் ஒரு அதிசய சுனையானா கைதட்டி சுனை இருக்கும்.நம் கைதட்டும் ஓசைக்கேற்ப்ப தண்ணீர் வேகமாகவும் மெதுவாகவும் வழிய தொடங்கும். இந்த சுனையும் மிகவும் முக்கியமானது. இதைத் தவிர விட்டால் அடுத்து நான்காவது மலை முழுவதும் தண்ணீர் இருக்காது.
 சுனையில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு சிறிது தூரம் ஏறினால் மலையின் உச்சியை அடைவோம். உச்சியில் இருந்து கீழே அழகான பள்ளத்தாக்கும் சிறுவாணி நதியும் தென்படும். இதுவே மூன்றாவது மலை முடிந்து நான்காம் மலை தொடங்கும் இடம்.

நான்காம் மலை:

நான்காம் மலையில் கோரைப்புற்கள் நம்மை வரவேற்கும். சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் காண இது மிகவும் சிறந்த இடம்.
 நான்காம் மலை குறுகிய பாதைகளும் மேடான மணல் திட்டுகளும் பெரிய பாறைகளும் கொண்டது. நான்காம் மலையின் உச்சிக்கு செல்லும் வரை ஓய்வெடுக்க பெரியதாக இடங்கள் இருக்காது ஏதேனும் பாறை மேலே தான் அமர வேண்டும் அதுவும் ஆபத்தானதே.
 எனவே நான்காம் மலை ஏறும் முன் நன்றாக ஓய்வு எடுத்து நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

 ஏறி வந்த மூன்று மலைகளை விட நான்காம் மலை சிறிது சுலபமாகவே இருக்கும். நான்காம் மலை உச்சியை தொட்டு சிறிது தூரம் நடந்தால் ஒட்டன் சித்தர் சமாதியை வந்தடைவோம்.இதுவே நான்காம் மலையின் எல்லை.

 ஐந்தாம் மலை:

 ஒட்டன் சித்தர் சமாதியை வணங்கி விட்டு தொடர்கிறது ஐந்தாம் மலையின் பயணம்.
 ஐந்தாம் மலை ஒரு சமதரை பகுதியாகும்.
 இந்த மலை முழுவதும் மணல் வெந்நிறத்தில் இருக்கும். இதை பார்க்க திருநீறு போன்று காட்சியளிக்கும் எனவே இது திருநீறு மலை என்றும் அழைக்கப்படும். 
 ஐந்து, ஆறு, ஏழு மூன்று மலைகளிலும் வெயிலோ குளிரோ இரண்டும் மிகவும் கடுமையானதாக இருக்கும்.
 ஐந்தாம் மலையில் பயணிக்க தொடங்கிய சிறிது தூரத்தில் ஒரு சுனை தென்படும். இந்தத் தண்ணீரை தவறவிட்டால் ஐந்து ஆறு இரண்டு மலைகளிலும் தண்ணீர் கிடைக்காது.
 தொடர்ந்து பயணித்து வந்தால் பீமன் களி உருண்டை என்னும் பாறையை வந்தடைவோம் இதுவே ஐந்தாம் மலையின் முடிவு.

ஆறாம் மலை :

 ஐந்தாம் மலை சமதரை என்பதால் பெரியதாக சிரமம் இருக்காது எனவே ஓய்வும் பெரியதாக தேவைப்படாது. இருந்தாலும் பீமன் களி உருண்டையின் கீழ் சற்று இளைப்பாரி விட்டு மேலும் பயணத்தை தொடரலாம்.
 நான்கு மலைகளை ஏரியும் ஐந்தாவது மலை நடந்தும் பயணம் செய்த பிறகு ஆறாவது மலையை கீழே இறங்கி பயணிக்க வேண்டும்.
 ஆறாவது மலையின் பாதை மிகவும் குறுகலானது ஒருவர் பின் ஒருவராக தான் செல்ல வேண்டும். ஆறாம் மலை இறங்குவதும் மிகவும் எளிதான பயணமே. மலை இறங்க இறங்க மணல் குளுமையானதாக இருக்கும். இதற்கு காரணம் ஆறாம் மலை கீழே இருக்கும் ஆண்டி சுனை. இந்த ஆண்டி சுனையுடன் ஆறாம் மலை முடிவடைந்து ஏழாம் மலைக்கான பயணம் தொடங்கும்.

ஏழாம் மலை:

 வெள்ளிங்கிரி மலை பயணத்தில் மிகப்பெரிய சுனை இந்த ஆண்டி சுனை.
 இச்சுணை பெரும்பாலும் பக்தர்கள் நீராடுவதற்காக பயன்படுத்தப்படுகிறது.
 உறைய வைக்கும் இந்நீரில் மூழ்கி எழுந்தாள் ஆறு மலைகளை கடந்து வந்த சோர்வு முழுமையாக நீங்கும். அந்த சோர்வு நீங்கினால் மட்டுமே நாம் ஏழாம் மலை ஏற முடியும். எனவே ஆண்டி சுனையில் நீராடுவது மிக மிக அவசியம்.

 சுனையில் மூழ்கி அதன் மத்தியில் இருக்கும் சிவலிங்கத்தை வணங்கி ஆசி பெற்று நெற்றி நிறைய திருநீறு பூசி புத்துணர்வு கொண்ட உடலோடு "ஓம் நமசிவாய" என்று சொல்லி மனதையும் புத்துணர்வு ஆக்கிக் கொண்டு நம் வெள்ளியங்கிரி ஆண்டவர் வசிக்கும் ஏழாம் மலையான கிரி மலையை ஏற தொடங்குவோம்.
 ஏழாம் மலை தொடக்கத்தில் ஒரு சுனை உண்டு அங்கு தேவையான அளவு தண்ணீரை நிரப்பிக் கொண்டு பயணத்தை தொடங்க வேண்டும். அதை தவறவிட்டால் ஏழாம் மலை ஏறி இறங்கும் வரை எங்கும் தண்ணீர் கிடைக்காது.

 ஏழாம் மலை மிகவும் செங்குத்தானது இங்கு படிக்கட்டுகள் எதுவும் இருக்காது. வெறும் பாறைகள் மீதே தான் பயணம் செய்ய வேண்டும். முதல் மலையில் ஏற்பட்ட அனைத்து சோதனைகளும் ஏழாம் மலையிலும் ஏற்படும். உடலும் மனதும் மிகப்பெரிய சோர்வடையும். வெயில் நேரத்தில் ஏறினால் கால்களில் கொப்பளங்கள் வரும். இரவில் பயணத்தை தொடங்கினால் குளிர்ந்த காற்று நம் உடலை நடுங்கவும் உரையவும் செய்யும். எனவே ஆங்காங்கே ஓய்வு மிக மிக அவசியம்.
உடல் சோர்வை தணிக்க தண்ணீரும் கொண்டு சென்ற பழங்களும் மனச்சோர்வை தவிர்க்க ஓம் நமசிவாய என்னும் மந்திரமே நமக்கு துணை. அப்படியே 1½ முதல் 2 மணி நேரம் பயணித்தால் கிரி மலையின் உச்சியை நாம் அடைவோம்.

 உச்சியை அடைந்ததும் நம்மில் ஏற்படும் மாற்றம் மிகவும் அலாதியானது. அதை உணர மட்டுமே முடியும். இயற்கை எவ்வளவு அழகானது என்பதை பார்க்க முடியும். நாம் மேகங்களுக்கும் மேலே இருப்போம். சூரிய உதயத்திலும் அஸ்தமனத்திலும் பள்ளத்தாக்கு தென்படாதவாறு மேகங்கள் மூடி வெள்ளியைப் போற்றியது போல் காட்சி அளிக்கும். இதால்தான் இம்மலை வெள்ளியங்கிரி என அழைக்கப்படுகிறது.

 வரிசையில் நின்று சுயம்பு லிங்கமாய் வீற்றிருக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசித்து பின்னர் சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்தால் நம்முள் ஏற்படும் மாற்றம் நம் வாழ்நாளில் மிக முக்கியமானதாக இருக்கும்.
 ஈசன் தன் மன அமைதிக்காக வந்து அமர்ந்த இடத்தில் நாமும் இருக்கிறோம் என்று நினைக்கும் போது உள்ளத்தில் ஈசனும், உதடுகளில் ஓம் நமச்சிவாய என்னும் பஞ்சாட்சரமும், கண்களில் கண்ணீரைத் தவிர வேறொன்றும் இருக்காது.

 "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" இன்னும் சிவபுராண வரிகளுக்கு ஏற்ப, அவன் அருளாலே அவனை தரிசிக்க முடிந்தது.
 அவன் கருணையால் எனக்கு உடல் உறுதியும் மன உறுதியும் தந்து அவனை தரிசிக்க இரண்டு முறை அருள் புரிந்திருக்கிறான் என் ஈசன். தொடர்ந்து அருள் புரிவான் எனவும் நம்புகிறேன்.

ஓம் நமசிவாய🔱
சிவாய நம🔱

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...