Thursday, February 8, 2024

முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும் பிப்ரவரி 9ஆம் தேதி

 தை அமாவாசை:

 இவற்றை தானம் செய்யுங்கள்.ஜென்ம பாவம் தீரும். முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும்!

முன்னோர்களின் ஆசிகள் கிடைக்க இந்த பொருட்களை தை அமாவாசையில் தானமாக கொடுங்கள். 

இந்து மத சாஸ்திரங்களின்படி வருடம் முழுவதும் வரும் அம்மாவாசை சிறப்பானது என்றாலும் தை அமாவாசை அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அமாவாசை என்பது முன்னோர்கள் வழிபாட்டிற்குரிய நாளாக கருதப்படுவதால், அந்நாளில் அவர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களை வழிபட வேண்டும். 

அதன்படி இந்தாண்டு தை  வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. எனவே, இந்த தை அமாவாசை நாளான பிப்ரவரி 9ஆம் தேதி காலை 08. 05 மணி முதல் பிப்ரவரி 10ஆம் தேதி அன்று அதிகாலை 04. 28 மணிக்குள் உங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாம்.

அமாவாசை நாளில் பக்தர்கள் புனித நதிகள் மற்றும் ஏரிகளில் மூழ்குவார்கள். அதன் பிறகு வழிபாடு, தவம், தானம் முதலியவை செய்யப்படுகின்றன. அதுமட்டுமின்றி இந்நாளில் தர்ப்பணம், திதி வழங்குவது மூலம் முன்னோர்கள் முக்தி அடைகின்றன. 

அமாவாசை நாளில் தானம் செய்வது சிறப்பு வாய்ந்தது. அமாவாசை தினத்தன்று தானம் செய்வதால் ஒவ்வொருவருக்கு நிச்சயம் வளம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதில் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பையும் தருகிறது. எனவே இந்த பொருட்களை தை அமாவாசையில் தானம் செய்ய வேண்டும். அவை..

2024 தை அமாவாசை அன்று இவற்றை தானம் செய்யுங்கள்:

ஜோதிடர்களின் கூற்றுப்படி, ஒரு பசு தானம் ஒரு சிறந்த தானமாக கருதப்படுகிறது. நீங்கள் பொருளாதார ரீதியாக வலுவாக இருந்தால் அமாவாசை நாளில் பசுவை ஒருவருக்கு தானம் செய்யுங்கள். இதன் மூலம் ஒருவன் 100 யாகங்களுக்கு சமமானதை அடைகிறான்.

உணவு தானம் செய்வதற்கும் வேதங்களில் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது எனவே தை அமாவாசை அன்றி ஏழு எளியவர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

அமாவாசை நாளில் உணவு, தண்ணீர், ஆடை, எள், நவதானியங்கள், உப்பு, புத்தகம், வெள்ளி, தங்கம், பழங்கள், காய்கறிகள், வெல்லம் முதலியனவற்றை தானமாக வழங்கலாம்.

அதுபோல் தை மாதத்தில் கடும் குளிரின் காரணமாக ஏழைகளுக்கு போர்வைகளை தானமாக வழங்கலாம்.

தை அமாவாசை அன்று முன்னோர்களை மகிழ்விக்க பிராமணர்களுக்கு உணவு வழங்கல் அவ்வாறு செய்வதன் மூலம் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து உங்களுக்கும் உங்கள் சந்ததியினருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் தருவார்கள்.

தை அமாவாசை நாளில் தீபம் மற்றும் விளக்கு தானமாக கொடுக்கலாம். இதனால் உங்களுக்கு பார்வை கோளாறு அல்லது கண்ணில் பிரச்சனைகள் இருந்தால் அவை அனைத்தும் நீங்கும்.

தை அமாவாசை அன்று அரிசி தானம் செய்யலாம் இதனால் உங்கள் பாவங்கள் அனைத்தும் நீங்கும். இந்த தானம் செய்யும் போது பிரார்த்தனை செய்து கொடுங்கள்.அதுபோல தை அமாவாசை தினத்தில் யாருக்காவது தேன் வழங்கலாம். இதனால் குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டில் பிள்ளை செல்வம் இல்லை என்ற குறை நீங்கும்.சாஸ்திரம் படி, ஒருவருக்கு  தேங்காயை தானமாக கொடுத்தால் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி நிச்சயம் உண்டு.ஒருவேளை இவை எதுவுமே உங்களால் செய்ய முடியவில்லை என்றால், இயலாதாவர் ஒருவருக்காவது தயிர் சாதமாவது வாங்கி கொடுங்கள். இதனால் பித்துக்களின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசமே

*ஒரு நாள் எறும்பும் பறவையும் தங்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டன. யார் முதலில் சென்று அந்த வான்உயர்ந்த மலையை தொடுவது என்பது தான் இருவரின் பந்தயம்.* 

*பறவை எறும்பை பார்த்து ஏளனமாக சிரித்துவிட்டு மலையைநோக்கி பறந்தது. வெகு சீக்கிரத்திலேயே பறவை மலையின் உச்சியை தொட்டது.*

*மலை உச்சிக்கு சென்ற பறவை மேலிருந்து கீழே இருக்கும் எறும்பை தேடியது. அப்போது எறும்பு மலை அடிவாரத்தில் இருந்து பாதி தூரத்தை கூட தொடவில்லை.*

*எறும்பை பார்த்து பறவை கூறியது எனக்கு முதலிலேயே தெரியும் வெற்றி எனக்குதான் என்று.*

*பறவையிடம் ஒரு சிறு எறும்பு போட்டியிடலாமா எறும்பை பார்த்து கேலி செய்து பறவை நகைத்தது.*

*வெகு நாட்கள் கழித்து எறும்பின் விடாமுயற்சியால் ஒரு நாள் எறும்பு அந்த மலையின் உச்சியை சென்றடைந்தது. அப்போது அந்த பக்கமாக மலையை கடந்து சென்ற பறவை மலை உச்சியில் இருக்கும் எறும்பை ஆச்சரியமாக பார்த்தது.*

*அப்போது பறவையை பார்த்து எறும்பு கூறியது, "வெற்றி என்பது எல்லோருக்கும் பொதுவானது. சிலருக்கு வெற்றி சீக்கிரமாகவே கிடைத்துவடும் சிலருக்கோ தாமதமாகவும்கிடைக்கும். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தாலே போதும், வெற்றி ஒரு நாள் எல்லோருக்கும் நிச்சயம் என்றது. எறும்பு.*

*விடாமுயற்சி வெற்றியைப் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை. உண்மையைச் சொன்னால் வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசமே விடாமுயற்சிதான்.*

Wednesday, February 7, 2024

அயோத்தியா மட்டும் செல்ல நினைப்பவர்கள்கவனத்திற்கு.

குறைந்த செலவில் அயோத்தியா மட்டும் செல்ல நினைப்பவர்கள்
கவனத்திற்கு.

ஒவ்வொரு திங்கள் அன்றும் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தியா ரயில் செல்கிறது . சென்னை எழும்பூர் நண்பகல் 12 மணிக்கு வருகிறது . 
*ரயில் எண் 22613* RMM AYC

சரியாக புதன் கிழமை காலை 9 மணிக்கு செல்கிறது.

 *அயோத்தியா தாம்* என்ற ரயில் நிலையம் இறங்கவும்

அயோத்தியா கன்டோன்மென்ட் கடைசி ரயில் நிலையம் இறங்கினால் 15 km மீண்டும் வர வேண்டும்.

அயோத்தியா தாம் இறங்கி நேராக சரயு காட் (ராம் காட்) 2 km நடந்து தான் வர வேண்டும்.

அங்கு குளித்து விட்டு மீண்டும் வந்த வழியே 1.5 km திரும்பினால், *அனுமான் காரி* என்னும் அனுமான் கோட்டை காவலாக  இருக்கும் கோவிலை அடையலாம்.

50 படிக்கட்டுகள் ஏறி ஹனுமான் தரிசனம் செய்து அங்கிருந்து வெளியே வந்து 500 மீ தொலை உள்ள ஶ்ரீ ராம் ஜென்ம பூமி  நுழைவு வாயிலை அடையலாம்.

பெரிய luggage bag இருந்தால் போலீஸ் checking  முன்பே வலது பாகத்தில் locker  அறை உள்ளது. அங்கு உங்கள் பொருட்களை பாதுகாப்பாக (மொபைல் , watch தவிர) வைத்து செல்லலாம். 


உள்ளே சென்றவுடன் இலவச  பொருள் வைப்பரை கவுண்டரில் உங்கள் சிறிய bag, hand bag, இடுப்பு  belt, mobile, watch முதலியவைகளை வைத்து விட்டு செல்ல வேண்டும். (பொருள் வைக்க குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டும் )

 மீண்டும் உள்ளே  பாதையில் சென்றவுடன் , ஒருவர் பின் ஒருவர் கணக்கில் இரண்டு வரிசையாக எறும்பு சாரை போல் இடிபாடு இல்லாமல் நடந்து செல்லலாம்.

200 மீ நடந்தால் கோவில் முன் மண்டபத்தில் இருந்தே ஶ்ரீ பால ராமனை தரிசித்து கொண்டே அருகில் செல்லலாம். சுமார் 20  metre தொலைவில் இருந்து ஶ்ரீ ராமனை கண் குளிர தரிசனம் செய்து வெளி வரலாம்.

பூந்தி அல்லது சர்க்கரை கற்கண்டு பிரசாதமாக கொடுக்கிறார்கள்.

வெளி வரும் வழியில் purse, mobile, bag போன்ற பொருட்களை பெற்று கொண்டு நுழைவு வா அடையலாம்.

பிறகு மீண்டும் அனுமான் காரி என்னும் கோவில் அருகே வந்து தசரதன் மாளிகை தரிசனம் செய்யலாம்.

இங்கு தான் ஶ்ரீ ராமன், லட்சுமண், பரதன், சத்ருகன் ஆடி பாடி விளையாடிய உப்பரிகை பார்க்கலாம்.


அங்கிருந்து வெளி வந்து வலது பக்கம் திரும்பி 50 மீட்டர் நடந்தால் ஒரு பழைய வீட்டில் தசரதன் புத்திர காமேஷ்டி யாகம் செய்த இடம் தரிசிக்கலாம் 


பிறகு மீண்டும் தசரதன் மாளிகை வழியாக  பக்க வாட்டு சந்தில் நுழைந்து பின் புறம் சென்றால் ஜனக மஹாராஜா சீதைக்கு சீதனமாக கட்டி கொடுத்த மாளிகை காணலாம்.

வழி எல்லாம் இப்போது அன்னதானம் செய்கிறார்கள்.

வழியில் எல்லாம் மடம், அறைகள் உள்ளது.

முன்பதிவு செய்து விட்டு செல்லலாம்.

ஒவ்வொரு புதன் கிழமை இரவும் 11 மணிக்கு அயோத்தியா கன்டோன்மென்ட் இருந்து சென்னை அல்லது ராமேஸ்வரத்திற்கு ரயில் திரும்புகிறது. *22614 AYY RMM* 

Lucknow வந்தும் சென்னை  திரும்பலாம்

9532065447 சீத்தா ராம் பியாஸ் குஞ் இந்த இடத்தில் நாங்கள் தங்கினோம்.

சூடு தண்ணீர் , கம்பளி, விசாலமான அறைகள் உள்ளது

உங்கள் சந்தேகங்களுக்கு
K.முருகராஜ்
9840927502
 *ஆத்ம சரண ஆலயம் தபோவனம்*

Saturday, February 3, 2024

அனுமன் மேல் ஸ்ரீராமன்

 அனுமன் மேல் ஸ்ரீராமன்


அனுமனின் மேல் அமர்ந்திருக்கும் கம்பீர தோற்றத்தில் ராமர். ஸ்ரீராமரை சுமந்திருப்பதால் பணிவான பெருமிதத்துடன் அனுமன். இடம்: ஸ்ரீசௌந்திரராஜபெருமாள் கோவில் தாடிக்கொம்பு. திண்டுக்கல் மாவட்டம்.

சிருங்கார நரசிம்மர் செஞ்சு லட்சுமி

 சிருங்கார நரசிம்மர் செஞ்சு லட்சுமி



அஹோபிலம் பகுதியில் பல நூற்றாண்டுகளாக வாழும் வனவாசி மக்கள் சமுதாயத்தினர் செஞ்சுக்கள் என்று அழைக்கப் படுகின்றனர். உலக நன்மைக்காக செஞ்சுக்களின் குடியில் பிறந்த லட்சுமியை நரசிம்மர் இங்கு வந்து திருமணம் புரிந்ததாக தல புராணம் கூறுகிறது. செஞ்சுலட்சுமி என்ற திருநாமத்துடன் நரசிம்மரின் நாயகியாக அருள்பாலிக்கிறாள். இடம் அஹோபிலம்

அடிமுடி காணா அண்ணல்

 அடிமுடி காணா அண்ணல்




அடிமுடி காணா அண்ணாமலையாக இறைவன் நிற்க திருமால் வராக அவதாரம் எடுத்து அவரது பாதத்தை தேட பிரம்மா முடியை காண மேலே சென்ற காட்சி. முற்சோழர் கால கலைப் படைப்பு. இடம்: நற்றுணையப்பர் திருக்கோயில். திருநனிப்பள்ளி நாகை மாவட்டம்.

புத்தன் சபரிமலை

 புத்தன் சபரிமலை



கேரளாவில் சபரிமலையை போன்றே பழமையான அமைப்புடன் பதினெட்டு படிகளை உள்ளடக்கி சபரிமலை கோவிலை போன்றே ஆச்சார அனுஷ்டானங்களை பூஜைகளை கடைபிடித்து வரும் புத்தன் சபரிமலை எனும் கோவில் உள்ளது. அங்கு அனைத்து வயது பெண்களும் பதினெட்டு படிகள் வழியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். தற்போது பிரதான சபரிமலை அமைந்துள்ள பத்தனம்தெட்டா மாவட்டத்தில் திருவல்லாவிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் தடியூர் எனும் இடத்தில் மிக புராதான ஆலயமாக பழமை மாறாது காணப்படுகிறது இந்த புத்தன் சபரிமலை அய்யப்பன் ஆலயம். இந்த புத்தன் சபரிமலை அய்யப்பன் கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது, பழமையானது. இங்கும் அடர்ந்த வனப்பிரதேசம் ஒரு காலத்தில் இருந்துள்ளது கொடும் காட்டு விலங்குகள் வாழ்ந்த இந்த புத்தன் சபரிமலையில் பக்தர்கள் அவ்வளவாக சென்றதில்லை சுமார் நூறு வருடங்களாக மட்டுமே இருமுடி கட்டி பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.
சபரிமலையில் உள்ளது போன்றே அதே வடிவிலான ஐம்பொன்னால் ஆன அய்யப்பன் விக்கிரகம் இங்கும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள 18 படிகளும் கரும் கற்களால் சபரிமலையில் உள்ளது போன்றே செங்குத்தாக அமையப்பெற்றுள்ளது. இங்கு அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட்டாலும் இருமுடி கட்டு இல்லாத எவரும் படிக்கட்டுக்கள் மீது செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இருமுடி கட்டு இல்லாதவர்கள் கோவிலின் வடக்கு பகுதி வழியாக செல்லவே அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலையில் பின்பற்றப்படும் பூஜைகளும் வழிபாட்டு முறைகளும் அபிஷேக வகைகளும் குறிப்பாக சந்தனாபிஷேகம், நெய்யபிஷேகம், பூ அபிஷேகம் போன்றவைகள் அப்படியே சற்றும் மாறாது இங்கும் கடைபிடிக்கப் படுகிறது.
சபரிமலையை போன்றே ஒவ்வொரு மலையாள மாதம் ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை பக்தர்கள் இங்கும் அய்யப்பனை வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலையை போன்றே அப்பமும் அரவணை பாயாசமும் இங்கும் பிரதான பிரசாதங்கள். தை முதல் நாளில் மகர சங்கராந்தியன்று எப்படி சபரிமலையில் மகர விளக்கு காணப்படுகிறதோ அவ்வாறே இங்கும் மகரவிளக்கு தரிசனத்தை பக்தர்கள் காணலாம். எல்லாவற்றையும் விட சபரிமலை தந்தரியாக செயல்படுபவர்களே இங்கும் தந்தரியாக செயல்படுகிறார்கள்.

யோக சிவன்

 யோக சிவன்

யோக நிலையில் அமர்ந்துள்ள சிவன். இடம் கடம்பவனேஸ்வரர் கோவில். எறும்பூர். விருத்தாச்சலம். முதலாம் பராந்தகசோழன் காலம் (கி.பி 907-953)

Tuesday, January 30, 2024

computer bytes

 1 Byte: 8 bits

1 Kilobyte: 1,024 bytes

1Megabyte: 1,024 kilobytes

1 Gigabyte: 1,024 megabytes 

1 tera byte : 1024 Gigabytes

1 Peta byte :1024 tera bytes

1 Hexa byte :1024 Peta byte

Monday, January 29, 2024

ஆதித்யா எல்1 இஸ்ரோ வெளியிட்ட சூப்பர் அப்டேட்

 வாவ்வ்வ்..! ஆதித்யா எல்1 இஸ்ரோ வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

சூரியனை ஆய்வு செய்யும் திட்டமான ஆதித்யா எல்1 விண்கலம் ஜனவரி 6 ஆம் தேதி தனது இலக்கான லெக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஆதித்யா எல்1 மேக்னடோமீட்டரின் சென்சார் பாகங்கள் வெற்றிகரமாக செயல்பட தொடங்கின என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அயோத்தி பால ராமரின் அணிகலன்கள் :

 அயோத்தி பால ராமரின் அணிகலன்கள் :

மகுடம்:

வட இந்திய பாரம்பரியத்தில் வடிவமைக்கப்பட்ட, மகுடம் தங்கத்தால் ஆனது. மாணிக்கங்கள், மரகதம் மற்றும் வைரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மகுடத்தின் மையத்தில் சூர்யா தேவ் சின்னம் உள்ளது. மகுடத்தின் வலது பக்கத்தில், முத்து இழைகள் நுணுக்கமாக நெய்யப்பட்டிருக்கும்.

குண்டல்:

மகுடத்தை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த குண்டல்களும் அதே வடிவமைப்பை பின்பற்றி மயில் உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அவை தங்கம், வைரங்கள், மாணிக்கங்கள் மற்றும் மரகதங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

காந்தா:

பகவானின் கழுத்தில் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட பிறை வடிவ நெக்லஸ் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் மலர் வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது, அதன் மையத்தில் சூர்யா தேவ் உருவம் உள்ளது. தங்கத்தால் வடிவமைக்கப்பட்டு, வைரம், மாணிக்கங்கள் மற்றும் மரகதங்களால் பதிக்கப்பட்ட இந்த நெக்லஸ் தெய்வீக மகிமையை வெளிப்படுத்துகிறது. மரகதங்களின் நேர்த்தியான இழைகள் கீழே தொங்கி, அதன் கம்பீரமான தோற்றத்தை மேம்படுத்துகின்றன.

கௌஸ்துப மணி:

பகவானின் இதயத்தில் அணியும் கௌஸ்துப மணி, பெரிய மாணிக்கம் மற்றும் வைரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பகவான் விஷ்ணுவும் அவரது அவதாரங்களும் தங்கள் இதயத்தில் கௌஸ்துப மணியை அணிந்திருப்பது ஒரு வேத மரபு, எனவே அது சேர்க்கப்பட்டுள்ளது.

தொண்டைக்குக் கீழேயும் தொப்புளுக்கு மேலேயும் அணிந்திருக்கும் நெக்லஸ், தெய்வீகத்தில் குறிப்பிடத்தக்கது. 

 வைரங்கள் மற்றும் மரகதங்களால் செய்யப்பட்ட ஐந்து இழைகள் கொண்ட bhul நெக்லஸ். இதில் ஒரு பெரியபெரிய  அலங்கரிக்கப்பட்ட பதக்கத்தைக் கொண்டுள்ளது.   வைஜயந்தி அல்லது விஜயமாலா:

இது தங்கத்தால் செய்யப்பட்ட மூன்றாவது மற்றும் நீளமான நெக்லஸ் ஆகும். வெற்றியின் அடையாளமாக அணிந்திருக்கும் இது வைஷ்ணவ மரபுக்கு மங்களகரமான சின்னங்களை சித்தரிக்கிறது.                                   சுதர்சன சக்கரம், தாமரை, சங்கு மற்றும் மங்கள கலசம். தாமரை, சம்பா, பாரிஜாதம், குந்த் மற்றும் துளசி உள்ளிட்ட தேவதாக்களுக்குப் பிரியமான மலர்களால் இது அலங்கரிக்கப்பட்டுள்ளது.

காஞ்சி/கர்தானி:

பகவானின் இடுப்பைச் சுற்றி அலங்கரிக்கப்பட்ட ரத்தினங்கள் பதிக்கப்பட்ட இடுப்புப் பட்டை, இயற்கையான நேர்த்தியுடன் தங்கத்தால் ஆனது மற்றும் வைரம், மாணிக்கங்கள், முத்துக்கள் மற்றும் மரகதங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தூய்மையைக் குறிக்கும் சிறிய மணிகள், அவற்றில் முத்துக்கள், மாணிக்கங்கள் மற்றும் மரகதங்கள் தொங்கும்.

ஆர்ம்பேண்ட்:

பகவான் தங்கம் மற்றும் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட கவசங்களை இரு கரங்களிலும் அணிந்துள்ளார்.

இரண்டு கைகளிலும் அழகான ரத்தினம் பதித்த வளையல்கள் அணிந்திருக்கும்.

ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மற்றும் தொங்கும் முத்துக்கள் கொண்ட மோதிரங்கள் இரு கைகளிலும் உள்ளன.                          சஹாடா/பைஞ்சனியா:

பகவானின் பாதங்கள் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட கணுக்கால் மற்றும் கால்விரல் மோதிரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன, வைரம் மற்றும் மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட தங்க கணுக்கால் மணிகள்.

பகவானின் இடது கையில்

முத்துக்கள், மாணிக்கங்கள் மற்றும் மரகதங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தங்க வில், வலது கையில் ஒரு தங்க அம்பு உள்ளது.

பகவானின் கழுத்தில்

ஒரு பிரத்யேக கைவினை நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட வண்ணமயமான மலர் வடிவங்களைக் கொண்ட ஒரு மாலை.

பகவானின் நெற்றி:

வைரங்கள் மற்றும் மாணிக்கங்களால் உருவாக்கப்பட்ட பாரம்பரிய மங்களகரமான திலகத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பகவானின் பாதங்கள்:

அலங்கரிக்கப்பட்ட தாமரை, அதன் கீழ் ஒரு தங்க மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பகவான் ஐந்து வயது குழந்தையின் (ஸ்ரீ ராம் லல்லா) வடிவத்தில் வணங்கப்படுகிறார்.

வெள்ளியால் செய்யப்பட்ட பாரம்பரிய பொம்மைகள் அவருக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஆரவாரம், யானை, குதிரை, ஒட்டகம், பொம்மை வண்டி, சுழலும் உச்சி ஆகியவை அடங்கும்.

பகவானின் பிரகாச ஒளிவட்டத்தின் மேல்

ஒரு ஒளிரும் தங்கக் குடை அமைக்கப்பட்டுள்ளது.    

                                      ஜெய் ஸ்ரீ ராம்

Friday, January 19, 2024

மாலத்தீவில் இருந்து இந்திய

 


மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்களை திரும்பப்

பெறுவது குறித்து ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

குறிப்பாக சமூக ஊடகங்களில், மாலத்தீவு அமைச்சர்களின்

 கருத்துக்கள் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களால் 

பரவலாகக் கண்டிக்கப்பட்டன.


வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், மாலத்தீவு வெளியுறவு

 அமைச்சர் மூசா ஜமீரை வியாழக்கிழமை சந்தித்து, இந்தியா-

மாலத்தீவு உறவுகள் குறித்து "வெளிப்படையான உரையாடல்" 

நடத்தினார்.

மார்ச் 15 ஆம் தேதிக்குள் இந்திய ராணுவ வீரர்களை தனது

 நாட்டிலிருந்து திரும்பப் பெற வேண்டும் என்று மாலத்தீவு

அதிபர் முகமது முய்ஸு விடுத்த அழைப்பைத் தொடர்ந்து இது பதற்றமடைந்தது.

மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீரை இன்று 

கம்பாலாவில் சந்தித்தேன். இந்தியா- மாலத்தீவு உறவுகள்

 பற்றிய வெளிப்படையான உரையாடல் நடந்தது. அணிசேரா 

இயக்கம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது” 

என்று ஜமீருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டர்

 பக்கத்தில் ஜெய்சங்கர் பகிர்ந்து கொண்டார்.


உகாண்டா தலைநகர் கம்பாலாவில் அணிசேரா இயக்கத்தின் (NAM) 

அமைச்சர்கள் கூட்டத்தின் போது இருவரும் சந்தித்தனர்.

ஜமீர், X பக்கத்தில் ஒரு பதிவில், "எங்கள் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும்

" இந்தியாவும் மாலத்தீவுகளும் உறுதிபூண்டுள்ளன.


இந்திய ராணுவ வீரர்களை திரும்பப் பெறுவது குறித்தும், 

மாலத்தீவில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டங்களை 

விரைவுபடுத்துவது குறித்தும், SAARC மற்றும் அணிசேரா இயக்கத்துக்குள் ஒத்துழைப்பது

 குறித்தும் நடந்து வரும் 

உயர்மட்ட விவாதங்கள் குறித்து நாங்கள் கருத்துகளைப் 

பரிமாறிக் கொண்டோம்,” என்று அவர் எழுதினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணத்தின் 

புகைப்படங்கள் தொடர்பாக மாலத்தீவு அரசாங்கத்தின் 

மூன்று துணை அமைச்சர்கள் சமூக ஊடகங்களில் அவதூறான 

கருத்துக்களை வெளியிட்டதை அடுத்து, இந்தியாவிற்கும் அதன் 

இந்தியப் பெருங்கடல் அண்டை நாடுகளுக்கும் இடையிலான 

உறவுகள் இந்த மாத தொடக்கத்தில் உறைந்தன.

இந்த அமைச்சர்களை முய்சு அரசு இடைநீக்கம் செய்தது. 

அதேநேரம் அரசாங்கம் அமைச்சர்கள் கூறிய கருத்துக்களில் 

இருந்து விலகிக் கொண்டது.

எவ்வாறாயினும், இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது, 

குறிப்பாக சமூக ஊடகங்களில், மாலத்தீவு அமைச்சர்களின் 

கருத்துக்கள் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களால்

பரவலாகக் கண்டிக்கப்பட்டன. இந்தியாவும் மாலத்தீவு தூதரை

 புதுதில்லிக்கு வரவழைத்து, இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் அதிருப்தியை மாலேவுக்கு தெளிவுபடுத்தியது.

RBI Update: 2022-23 நிதியாண்டில்,

 RBI Update: 2022-23 நிதியாண்டில், சுமார் 91 ஆயிரத்து 110 போலி 500 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது முந்தைய 2021-22 ஆண்டை விட 14.6 சதவீதம் அதிகமாகும்.

சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரூ. 500 தொடர்பான புதிய செய்தியை வெளியிட்டுள்ளது. அதன் பிறகு மக்களின் பதற்றம் அதிகரித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டு புழக்கத்திலிருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வந்தது முதல், இன்னும் பல ரூபாய் நோட்டுகள் பற்றிய பல வித செய்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக 500 ரூபாய் நோட்டு பற்றி பல வதந்திகள் கிளம்பியுள்ளன. எனினும், மக்கள் அதிகாரப்பூர்வ அமைப்புகளிலிருந்து வரும் அறிவிப்புகள் மற்றும் செய்திகளைத் தான் நம்ப வேண்டும் என்றும் ஆதாரமற்ற வதந்திகளை நம்பக்கூடாது என்றும் இந்திய அரசாங்கமும் இந்திய ரிசர்வ் வங்கியும் அவ்வப்போது மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.

palani thaipusam festival 2024

 பழனியில் தைப்பூச திருவிழா

அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. பழனி ஊர்க்கோவில் என அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை‌ 8.30 மணியளவில் கோவில் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதுமிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூசத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 6ம்நாள் திருவிழாவான ஜனவரி 24ம் தேதி மாலை நடைபெறுகிறது. 

பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று(19.01.2024) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத்தேரோட்டம் வருகிற ஜனவரி 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Thursday, January 18, 2024

Indian ocean earthquake 2024 predictions

 Indian ocean earthquake andaman and nicobar islands ,march 9 ,2024,ravanan kingdom collapsed (sri Lanka)

moving of Tectonic plates ( Tectonic plates, also known as lithospheric plates, are massive slabs of solid rock that are part of the Earth's crust and uppermost mantle. )

Reference book

korakkar siddhar chandra rekha


Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...